வியாழன், ஜூன் 30, 2016

குறள் எண்: 0333 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0333}

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல்

விழியப்பன் விளக்கம்: நிலையற்ற தன்மை கொண்டது செல்வம்; எனவே, செல்வத்தைப் பெற்றால் - அது நிலைக்கும் வண்ணம், அறச்செயல்களைச் செய்யவேண்டும்.
(அது போல்...)
அலைபாயும் இயல்பு உடையது சிந்தனை; எனவே, சிந்தனைகள் தோன்றினால் - அவை அலையாய் ஓயாமல், எழுத்துவடிவில் உருமாறவேண்டும்.

புதன், ஜூன் 29, 2016

குறள் எண்: 0332 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0332}

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று

விழியப்பன் விளக்கம்: பெருமளவில் சேர்ந்திடும் செல்வம், அரங்கில் நிறைந்திடும் மக்கள் போல்; எந்நேரத்திலும் விலகிவிடும் என்ற நிலையாமையை உணரவேண்டும்.
(அது போல்...)
மனதளவில் இருந்திடும் செயல்கள், ஊதற்பையில் அடைத்திடும் காற்று போல்; எந்நிலையிலும் விடுபட்டிடும் என்ற புரிதலை அறியவேண்டும்.

செவ்வாய், ஜூன் 28, 2016

குறள் எண்: 0331 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0331}

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை

விழியப்பன் விளக்கம்: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று, மாயையாய் நம்பும்; அனுபவம் இல்லாத, தவறான-அறிவு இழிவானதாகும்.
(அது போல்...)
உண்மையில்லாததை உண்மையானது என்று, மூர்க்கமாய் நம்பும்; புரிதல் இல்லாத, நிறைவற்ற-உறவு அழிவானதாகும்.

திங்கள், ஜூன் 27, 2016

அதிகாரம் 033: கொல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 033 -  கொல்லாமை

0321.  அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
           பிறவினை எல்லாந் தரும்

           ஓருயிரைக் கொல்லாததே நல்வினையாகும்; கொல்லுதல், நல்லவைத் தவிர்த்த தீவினைகள் 
           எல்லாவற்றையும் விளைவிக்கும்.
(அது போல்...)
           ஓருறவை முறிக்காததே மனிதமாகும்; முறித்தல், மனிதத்தை நீக்கிய உணர்வுகள் 
           அனைத்தையும் கொடுக்கும்.

0322.  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
           தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

           இருப்பதைப் பகிர்ந்தளித்து, சுற்றத்தாரை வாழ்விக்கும் தன்மை; அறம்சார்ந்த 
           எழுத்தாளர்கள் கையாண்ட, அறங்களில் முதன்மையாகும்.
(அது போல்...)
           தம்தேவையை நிராகரித்து, குடும்பத்தை உயர்விக்கும் பெற்றோர்; துறவுபூண்ட ஞானிகள் 
           பெற்ற, குருவைவிட உயர்ந்தவராவர்.
           
0323.  ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
           பின்சாரப் பொய்யாமை நன்று

           ஓருயிரைக் கொல்லாதது, இணையற்ற தனித்த நல்லறமாகும்; பொய் சொல்லாதது, 
           அதையடுத்து தொடரும் நல்லறமாகும்.
(அது போல்...)
           இனவெறி இல்லாதது, ஒப்பற்ற மனித அடிப்படையாகும்; மொழிவெறி இல்லாதது,  அதன்பின் 
           தொடரும் அடிப்படையாகும்.

0324.  நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
           கொல்லாமை சூழும் நெறி

           நல்ல நெறி என்பது என்னவென்றால் - எந்த உயிரையும் கொல்லக்கூடாது, என்பதை
           மையப்படுத்திய நெறியே ஆகும்.
(அது போல்...)
           தரமான விமர்சனம் என்பதன் அடிப்படை - எந்நிலையிலும் படைப்பாளியை விமர்சிக்காத,
           அறத்தை ஒட்டிய விமர்சனமே ஆகும்.

0325.  நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் 
           கொல்லாமை சூழ்வான் தலை

           இல்லற வாழ்வுக்கஞ்சி, துறவறம் பூண்டோரைவிட; கொலையெனும் பாவத்துக்கஞ்சி,
           கொல்வதைத் தவிர்த்தோர் உயர்ந்தவராவர்.
(அது போல்...)
           சட்டத்தின் தண்டனைக்கஞ்சி, செயலைத் தவிர்த்தோரைவிட; மனசாட்சியின்
           தண்டனைக்கஞ்சி, எண்ணத்தைத் துறந்தோர் சிறந்தவராவர்.

0326.  கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் 
           செல்லாது உயிருண்ணுங் கூற்று

           ஓருயிரைக் கொல்லாத அறத்தைக், கடைபிடித்து வாழ்வோரின் வாழ்வில்; உயிரைப் பறிக்கும் 
           மரணமும் குறுக்கிடாது.
(அது போல்...)
           போட்டியாளரை ஏமாற்றாத திடத்தைக், கொண்ட திறமையாளரின் வெற்றியில்; 
           நம்பிக்கையைச் சிதைக்கும் தோல்வியும் ஊடுருவாது.

0327.  தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது 
           இன்னுயிர் நீக்கும் வினை

           நம்முயிரை இழக்கும் நிலையிலும், அதைக் காப்பதற்காக; வேறொரு உன்னத-உயிரைப் 
           பறிக்கும் தீவினையை, நாம் செய்யக்கூடாது.
(அது போல்...)
           நம்-பதவி பறிபோகும் சூழலிலும், அதைத் தக்கவைக்க; பிறருக்கு உரிமையான-பதவியைப் 
           பறிக்கும் இழிசெயலை, நாம் செய்தலாகாது.

0328.  நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் 
           கொன்றாகும் ஆக்கங் கடை

           ஓருயிரைக் கொல்வதால், நன்மையாய் கிடைப்பது - பெரிய வெகுமதியே எனினும்; 
           பகுத்தறிந்தோர்க்கு, அந்த வெகுமதி இழிவானதே ஆகும். 
(அது போல்...)
           ஊடகத்தில் கிசுகிசுக்க, பலனாய் கிடைப்பது - உயர் பதவியே ஆயினும்; தர்மம்-
           உணர்ந்தோர்க்கு, அந்த பதவி கீழ்த்தரமானதே ஆகும்.

0329.  கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
           புன்மை தெரிவா ரகத்து

           கொலையைத் தொழிலாகக் கொண்ட, மனிதம் அற்றவர்கள்; அத்தொழிலின் விளைவை
           உணர்ந்தோர்க்கு, இழிதொழில் செய்வோரே ஆவர்.
(அது போல்...)
           பொய்யை வழக்கமாய் கொண்ட, மனக்குறை உடையவர்கள்; பொய்யின் தீமையை
           அறிந்தோர்க்கு, குணக்குறை கொண்டோரே ஆவர்.

0330.  உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
           செல்லாத்தீ வாழ்க்கை யவர்

           நிகழ்காலத்தில் வறுமையுடன், முற்றிய நோயும் கொண்டு வாழ்பவர்கள்; கடந்தகாலத்தில், 
           உடம்பிலிருந்து உயிரைப் பிரித்தவர் ஆவர்.
(அது போல்...)
           முதுமையில் இயலாமையுடன், அதீத மறதியும் கொண்டு அல்லாடுவோர்; இளமையில்,
           உறவுகளின் மனதைச் சிதைத்தவர் ஆவர்.

குறள் எண்: 0330 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0330}

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

விழியப்பன் விளக்கம்: கடந்தகாலத்தில், உயிரை உடம்பிலிருந்து பிரித்தவர்கள்; நிகழ்காலத்தில் வறுமையுடன், முற்றிய நோயும் கொண்டு வாழ்வர்.
(அது போல்...)
இளமையில், தேடலிலிருந்து தன்னை விலக்கியவர்கள்; முதுமையில் நிம்மதியற்று, அதீத மறதியும் கொண்டு அல்லாடுவர்.

எம்மதமும் எ(னக்குச)ம்மதமே!


"எம்மதம்!" என்றெவரும்
எ(ன்ச)ம்மதம் "மறுத்து"
என்சுயம்ம(தத்)தைச் சீண்டாதவரை...

எம்மதமும் எ(னக்குச)ம்மதமே!

ஞாயிறு, ஜூன் 26, 2016

குறள் எண்: 0329 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0329}

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவா ரகத்து

விழியப்பன் விளக்கம்: கொலையைத் தொழிலாகக் கொண்ட, மனிதம் அற்றவர்கள்; அத்தொழிலின் விளைவை உணர்ந்தோர்க்கு, இழிதொழில் செய்வோரே ஆவர்.
(அது போல்...)
பொய்யை வழக்கமாய் கொண்ட, மனக்குறை உடையவர்கள்; பொய்யின் தீமையை அறிந்தோர்க்கு, குணக்குறை கொண்டோரே ஆவர்.

சனி, ஜூன் 25, 2016

குறள் எண்: 0328 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0328}

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்வதால், நன்மையாய் கிடைப்பது - பெரிய வெகுமதியே எனினும்; பகுத்தறிந்தோர்க்கு, அந்த வெகுமதி இழிவானதே ஆகும்.
(அது போல்...)
ஊடகத்தில் கிசுகிசுக்க, பலனாய் கிடைப்பது - உயர் பதவியே ஆயினும்; தர்மம்-உணர்ந்தோர்க்கு, அந்த பதவி கீழ்த்தரமானதே ஆகும்.

வெள்ளி, ஜூன் 24, 2016

குறள் எண்: 0327 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0327}

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

விழியப்பன் விளக்கம்: நம்முயிரை இழக்கும் நிலையிலும், அதைக் காப்பதற்காக; வேறொரு உன்னத-உயிரைப் பறிக்கும் தீவினையை, நாம் செய்யக்கூடாது.
(அது போல்...)
நம்-பதவி பறிபோகும் சூழலிலும், அதைத் தக்கவைக்க; பிறருக்கு உரிமையான-பதவியைப் பறிக்கும் இழிசெயலை, நாம் செய்தலாகாது.

வியாழன், ஜூன் 23, 2016

குறள் எண்: 0326 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0321}

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாத அறத்தைக், கடைபிடித்து வாழ்வோரின் வாழ்வில்; உயிரைப் பறிக்கும் மரணமும் குறுக்கிடாது.
(அது போல்...)
போட்டியாளரை ஏமாற்றாத திடத்தைக், கொண்ட திறமையாளரின் வெற்றியில்; நம்பிக்கையைச் சிதைக்கும் தோல்வியும் ஊடுருவாது.

தொடர்பொய்களும் - அவற்றின் பாதிப்பும்...


புதன், ஜூன் 22, 2016

குறள் எண்: 0325 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0325}

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

விழியப்பன் விளக்கம்: இல்லற வாழ்வுக்கஞ்சி, துறவறம் பூண்டோரைவிட; கொலையெனும் பாவத்துக்கஞ்சி, கொல்வதைத் தவிர்த்தோர் உயர்ந்தவராவர்.
(அது போல்...)
சட்டத்தின் தண்டனைக்கஞ்சி, செயலைத் தவிர்த்தோரைவிட; மனசாட்சியின் தண்டனைக்கஞ்சி, எண்ணத்தைத் துறந்தோர் சிறந்தவராவர்.

செவ்வாய், ஜூன் 21, 2016

குறள் எண்: 0324 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0321}

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

விழியப்பன் விளக்கம்: நல்ல நெறி என்பது என்னவென்றால் - எந்த உயிரையும் கொல்லக்கூடாது, என்பதை மையப்படுத்திய நெறியே ஆகும்.
(அது போல்...)
தரமான விமர்சனம் என்பதன் அடிப்படை - எந்நிலையிலும் படைப்பாளியை விமர்சிக்காத, அறத்தை ஒட்டிய விமர்சனமே ஆகும்.

திங்கள், ஜூன் 20, 2016

குறள் எண்: 0323 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0323}

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதது, இணையற்ற தனித்த நல்லறமாகும்; பொய் சொல்லாதது, அதையடுத்து தொடரும் நல்லறமாகும்.
(அது போல்...)
இனவெறி இல்லாதது, ஒப்பற்ற மனித அடிப்படையாகும்; மொழிவெறி இல்லாதது,  அதன்பின் தொடரும் அடிப்படையாகும்.

ஞாயிறு, ஜூன் 19, 2016

குறள் எண்: 0322 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0322}

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்ந்தளித்து, சுற்றத்தாரை வாழ்விக்கும் தன்மை; அறம்சார்ந்த எழுத்தாளர்கள் கையாண்ட, அறங்களில் முதன்மையாகும்.
(அது போல்...)
தம்தேவையை நிராகரித்து, குடும்பத்தை உயர்விக்கும் பெற்றோர்; துறவுபூண்ட ஞானிகள் பெற்ற, குருவைவிட உயர்ந்தவராவர்.

சனி, ஜூன் 18, 2016

குறள் எண்: 0321 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0321}

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாததே நல்வினையாகும்; கொல்லுதல், நல்லவைத் தவிர்த்த தீவினைகள் எல்லாவற்றையும் விளைவிக்கும்.
(அது போல்...)
ஓருறவை முறிக்காததே மனிதமாகும்; முறித்தல், மனிதத்தை நீக்கிய உணர்வுகள் அனைத்தையும் கொடுக்கும்.

வெள்ளி, ஜூன் 17, 2016

அதிகாரம் 032: இன்னா செய்யாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 032 - இன்னா செய்யாமை

0311.  சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
           செய்யாமை மாசற்றார் கோள்

           விழியப்பன் விளக்கம்: சிறப்பளிக்கும் செல்வமே கிடைப்பதாயினும்; மற்றவர்க்கு கெடுதல் 
           செய்ய மறுப்பதே, மனதில் குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
           மதிப்பளிக்கும் பதவியே கொடுப்பினும்; பிறரின் பதவியைப் பறிக்க புறங்கூறாததே, 
           சுயத்தை நம்புவோரின் அடிப்படையாகும்.

0312.  கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
           செய்யாமை மாசற்றார் கோள்

           விழியப்பன் விளக்கம்: காழ்ப்புணர்வுடன் தமக்கு கெடுதலைச் செய்தோர்க்கும்; 
           பழியுணர்வுடன் கெடுதலைச் செய்யாத நிலைப்பாடே, குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
           கல்நெஞ்சுடன் தன்னை அனாதையாக்கிய பிள்ளைக்கும்; பித்துமனதுடன் அன்பைப் 
           பொழியும் தன்மையே, தாய்மையின் சிறப்பாகும்.
           
0313.  செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
           உய்யா விழுமந் தரும்

           விழியப்பன் விளக்கம்: நாம் கெடுதல் செய்யாத போது,  நமக்கொருவர் கெடுதல் செய்யினும்; 
           அதற்கு பழிவாங்க செய்யும் கெடுதல், நமக்கு மீளமுடியாத துன்பத்தையே விளைவிக்கும்.
(அது போல்...)
           நாம் சட்டவிரோதமாய் செயல்படாத போது, நம்மீது குற்றச்சாட்டு எழுந்தாலும்; அதைச் 
           சரிசெய்ய சட்டவிரோதமாய் செயல்பட்டால், நமக்கு தீராத மனவுளைச்சலையே தரும்.

0314.  இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
           நன்னயஞ் செய்து விடல்

           விழியப்பன் விளக்கம்: நமக்கு தீமைச் செய்தவரைத், தண்டிப்பதற்கு சிறந்த வழி; அவர் மனம் 
           வருந்தும் வண்ணம், அவருக்கு நல்லதைச் செய்வதாகும்.
(அது போல்...)
           மனிதம் இல்லாமால் வாழ்வோரைத், திருத்துவதற்கு உகந்த வழி; அவரின் துன்பத்தைப் 
           போக்கும் வண்ணம், அவருக்கு துணை நிற்பதாகும்.

0315.  அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
           தந்நோய்போல் போற்றாக் கடை

           விழியப்பன் விளக்கம்: பிறரின் துன்பத்தை, நம் துன்பம்போல் பாவிக்காவிட்டால்; பகுத்தாயும் 
           அறிவினால், என்ன பயன் விளையமுடியும்?
(அது போல்...)
           மக்களின் இயலாமையை, தம் இயலாமையாய் உணராவிட்டால்; பார்போற்றும் 
           மக்களாட்சியில், என்ன சிறப்பு இருக்கமுடியும்?

0316.  இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
           வேண்டும் பிறன்கண் செயல்

           விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிப்பவை என, நாம் உணர்ந்தவற்றைப்; பிறருக்கு 
           செய்யாத திண்ணம் வேண்டும்.
(அது போல்...)
           தவறான பழக்கங்கள் என, நாம் பகுத்தாய்ந்தவற்றைப்; பிறருக்குப் பழக்கிவிடாத உறுதி 
           வேண்டும்.

0317.  எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
           மாணாசெய் யாமை தலை

           விழியப்பன் விளக்கம்: எவ்வளவு சிறிதெனினும், எவர் ஒருவருக்கும்; எந்தவொரு சமயத்திலும், 
           மனதாலும் தீமை செய்யாதது உயர்ந்தது.
(அது போல்...)
           எந்தவொரு உரிமையெனினும், எந்தவொரு உறவையும்; எவரின் முன்பும், கேலியாகவும் 
           அவமரியாதை செய்யாதது நன்று.

0318.  தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ 
           மன்னுயிர்க்கு இன்னா செயல்

           விழியப்பன் விளக்கம்: தனக்கு துன்பமானவை எவையென உணர்ந்தோர்; பிற உயிர்களுக்கு, 
           அதே தீமைகளைச் செய்வது, என்ன காரணத்தினாலோ?
(அது போல்...)
           தன்-சுயம் இழப்பதன் வலியை உணர்ந்தோர்; பிறரின் சுயத்தை, அதுபோல் இழக்கச் 
           செய்தல், எந்த அடிப்படையிலோ?

0319.  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 
           பிற்பகல் தாமே வரும்

           விழியப்பன் விளக்கம்: முற்பகலில் - பிறர்க்குத் தீமையைச் செய்தால்; பிற்பகலில் - நமக்குத்
           தீமை, தானாகவே வந்தடையும்.
(அது போல்...)
           இளமையில் - முதியோரைப் போற்றிட மறுத்தால்; முதுமையில் - நம்மைப் போற்றுவதும்,
           தானாக மறுக்கப்படும்.

0320.  நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
           நோயின்மை வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு துன்பம் செய்பவரையே, துன்பமெல்லாம் சென்றடையும்; 
           எனவே, துன்பம் வேண்டாதவர் - பிறர்க்கு துன்பம் செய்யமாட்டார்.
(அது போல்...)
           பிறரைப் புரளிப் பேசுபவரையே, புரளிகள் வந்தடையும்; எனவே, புரளியை விரும்பாதோர் - 
           பிறரைப் புரளிப் பேசமாட்டார்.

குறள் எண்: 0320 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0320}

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு துன்பம் செய்பவரையே, துன்பமெல்லாம் சென்றடையும்; எனவே, துன்பம் வேண்டாதவர் - பிறர்க்கு துன்பம் செய்யமாட்டார்.
(அது போல்...)
பிறரைப் புரளிப் பேசுபவரையே, புரளிகள் வந்தடையும்; எனவே, புரளியை விரும்பாதோர் - பிறரைப் புரளிப் பேசமாட்டார்.

வியாழன், ஜூன் 16, 2016

குறள் எண்: 0319 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0319}

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

விழியப்பன் விளக்கம்: முற்பகலில் - பிறர்க்குத் தீமையைச் செய்தால்; பிற்பகலில் - நமக்குத் தீமை, தானாகவே வந்தடையும்.
(அது போல்...)
இளமையில் - முதியோரைப் போற்றிட மறுத்தால்; முதுமையில் - நம்மைப் போற்றுவதும், எளிதாக மறுக்கப்படும்.

புதன், ஜூன் 15, 2016

குறள் எண்: 0318 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0318}

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்

விழியப்பன் விளக்கம்: தனக்கு துன்பமானவை எவையென உணர்ந்தோர்; பிற உயிர்களுக்கு, அதே தீமைகளைச் செய்வது, என்ன காரணத்தினாலோ?
(அது போல்...)
தன்-சுயம் இழப்பதன் வலியை உணர்ந்தோர்; பிறரின் சுயத்தை, அதுபோல் இழக்கச் செய்தல், எந்த அடிப்படையிலோ?

செவ்வாய், ஜூன் 14, 2016

குறள் எண்: 0317 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0317}

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

விழியப்பன் விளக்கம்: எவ்வளவு சிறிதெனினும், எவர் ஒருவருக்கும்; எந்தவொரு சமயத்திலும், மனதாலும் தீமை செய்யாதது உயர்ந்தது.
(அது போல்...)
எந்தவொரு உரிமையெனினும், எந்தவொரு உறவையும்; எவரின் முன்பும், கேலியாகவும் அவமரியாதை செய்யாதது நன்று.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஜூன் 13, 2016

குறள் எண்: 0316 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0316}

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிப்பவை என, நாம் உணர்ந்தவற்றைப்; பிறருக்கு செய்யாத திண்ணம் வேண்டும்.
(அது போல்...)
தவறான பழக்கங்கள் என, நாம் பகுத்தாய்ந்தவற்றைப்; பிறருக்குப் பழக்கிவிடாத உறுதி வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஜூன் 12, 2016

குறள் எண்: 0315 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0315}

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

விழியப்பன் விளக்கம்: பிறரின் துன்பத்தை, நம் துன்பம்போல் பாவிக்காவிட்டால்; பகுத்தாயும் அறிவினால், என்ன பயன் விளையமுடியும்?
(அது போல்...)
மக்களின் இயலாமையை, தம் இயலாமையாய் உணராவிட்டால்; பார்போற்றும் மக்களாட்சியில், என்ன சிறப்பு இருக்கமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஜூன் 11, 2016

குறள் எண்: 0314 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0314}

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

விழியப்பன் விளக்கம்: நமக்கு தீமைச் செய்தவரைத், தண்டிப்பதற்கு சிறந்த வழி; அவர் மனம் வருந்தும் வண்ணம், அவருக்கு நல்லதைச் செய்வதாகும்.
(அது போல்...)
மனிதம் இல்லாமால் வாழ்வோரைத், திருத்துவதற்கு உகந்த வழி; அவரின் துன்பத்தைப் போக்கும் வண்ணம், அவருக்கு துணை நிற்பதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஜூன் 10, 2016

குறள் எண்: 0313 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0313}

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

விழியப்பன் விளக்கம்: நாம் கெடுதல் செய்யாத போது,  நமக்கொருவர் கெடுதல் செய்யினும்; அதற்கு பழிவாங்க செய்யும் கெடுதல், நமக்கு மீளமுடியாத துன்பத்தையே விளைவிக்கும்.
(அது போல்...)
நாம் சட்டவிரோதமாய் செயல்படாத போது, நம்மீது குற்றச்சாட்டு எழுந்தாலும்; அதைச் சரிசெய்ய சட்டவிரோதமாய் செயல்பட்டால், நமக்கு தீராத மனவுளைச்சலையே தரும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஜூன் 09, 2016

குறள் எண்: 0312 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0312}

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விழியப்பன் விளக்கம்: காழ்ப்புணர்வுடன் தமக்கு கெடுதலைச் செய்தோர்க்கும்; பழியுணர்வுடன் கெடுதலைச் செய்யாத நிலைப்பாடே, குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
கல்நெஞ்சுடன் தன்னை அனாதையாக்கிய பிள்ளைக்கும்; பித்துமனதுடன் அன்பைப் பொழியும் தன்மையே, தாய்மையின் சிறப்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஜூன் 08, 2016

குறள் எண்: 0311 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0311}

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விழியப்பன் விளக்கம்: சிறப்பளிக்கும் செல்வமே கிடைப்பதாயினும்; மற்றவர்க்கு கெடுதல் செய்ய மறுப்பதே, மனதில் குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
மதிப்பளிக்கும் பதவியே கொடுப்பினும்; பிறரின் பதவியைப் பறிக்க புறங்கூறாததே, சுயத்தை நம்புவோரின் அடிப்படையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஜூன் 07, 2016

அதிகாரம் 031: வெகுளாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 031 - வெகுளாமை

0301.  செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
           காக்கின்என் காவாக்கா லென்

           விழியப்பன் விளக்கம்: அதிகாரம் உள்ள இடத்தில் சினத்தைக் காப்போரே, சினங்காப்பவர் 
           ஆவர்;  அதிகாரம் இல்லாத இடத்தில், சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் 
           என்ன??
(அது போல்...)
           பசியால் துடிக்கும் உயிர்கட்கு உணவை அளிப்பதே, அன்னதானம் ஆகும்; பசி இல்லாத
           உயிர்கட்கு, உணவை அளித்தால் என்ன? அளிக்காவிட்டால் என்ன??

0302.  செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் 
           இல்அதனின் தீய பிற

           விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் வெளிப்படும் சினம், தீமையானது; 
           அதிகாரமுள்ள இடத்தில் வெளிப்பட்டாலும், சினத்தை விட தீயது வேறேதுமில்லை.
(அது போல்...)
           நியாயமற்ற விதத்தில் நடக்கும் அடக்குமுறை, அழிவானது; நியாயமான விதத்தில் 
           நடந்தாலும்,  அடக்குமுறையை விட அழிவானது வேறில்லை.
           
0303.  மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
           பிறத்தல் அதனான் வரும்

           விழியப்பன் விளக்கம்: சினம் கொள்வதால், தீய பின்விளைவுகள் விளையும் என்பதால்; 
           எவரிடத்திலும் சினம் கொள்ளாமல், மறப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
           கடன் பெறுவதால், அதீத மனவழுத்தம் உருவாகும் என்பதால்; எதற்காகவும் கடன் 
           பெறாமல், வாழ்வது உயர்ந்ததாகும்.

0304.  நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
           பகையும் உளவோ பிற

           விழியப்பன் விளக்கம்: முகத்தில் புன்னகையையும், அகத்தில் மனநிறைவையும் அழிக்கும் - 
           சினத்தை விட; கடுமையான பகை வேறெதுவும் உண்டோ?
(அது போல்...)
           எண்ணத்தில் பிரிவினையையும், செயலில் சூழ்ச்சியையும் விதைக்கும் - இனவெறியை
           விட; அதீத தீவிரவாதம் வேறெதுவும் உள்ளதோ?

0305.  தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
           தன்னையே கொல்லுஞ் சினம்

           விழியப்பன் விளக்கம்: நம்மையே நாம் காத்திட விரும்பினால், சினத்தைக் காக்க 
           வேண்டும்; அப்படி காக்காவிட்டால், அந்த சினமே நம்மை அழித்துவிடும்.
(அது போல்...)
           நம்மையே நாம் மதித்திட எண்ணினால், அந்தரங்கத்தை ஒழிக்க வேண்டும்; அப்படி 
           ஒழிக்கவிட்டால், அந்த அந்தரங்கமே நம்-மதிப்பை சிதைக்கும்.

0306.  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
           ஏமப் புணையைச் சுடும்

           விழியப்பன் விளக்கம்: நெருப்பைப் போன்று, சேர்ந்தவரை அழிக்கும் சினமானது; நம்மை 
           மட்டுமன்றி, நம் நலம் விரும்பும் சுற்றத்தையும் அழிக்கும்.
(அது போல்...)
           போதையைப் போன்று, பழகியவரைச் சிதைக்கும் கள்ள-உறவானது; உடலை மட்டுமன்றி, 
           நம் சுயம் காக்கும் மனதையும் சிதைக்கும்.

0307.  சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
           நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

           விழியப்பன் விளக்கம்: சினத்தைப் பொருட்டாய் எண்ணி, அதைக் கையாள்பவரின் அழிவு; 
           நிலத்தை அறைந்தவரின் கைவலியைப் போன்று, தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
(அது போல்...)
           பணத்தை உயர்வாய் எண்ணி, அதைத் தொடர்பவரின் வீழ்ச்சி, உறவைப் பிரித்தவரின் 
           மனவலியைப் போன்று, தடுக்கமுடியாத ஒன்றாகும்.

0308.  இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
           புணரின் வெகுளாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: அதீத சக்திகொண்ட நெருப்பில் தள்ளியது போன்ற, தீமையைச் 
           செய்தவர் மேலும்; சினம்கொள்ளாமல் இருக்கமுடிந்தால் நன்மையே.
(அது போல்...)
           கூரிய நஞ்சுகலந்த ஈட்டியால் குத்தியது போன்ற, மனவலியைக் கொடுத்தவர் மேலும், 
           பகையின்றி பழகமுடிந்தால் நன்மையே.

0309.  உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
           உள்ளான் வெகுளி எனின்

           விழியப்பன் விளக்கம்: மனதளவிலும், சினம் கொள்ளாமல் இருக்கமுடியும் எனில்; அவர்கள் 
           நினைப்பவை எல்லாம், நினைத்தவுடன் சாத்தியமாகும்.
(அது போல்...)
           நகைச்சுவையிலும், அறம் தவறாமல் எழுதமுடியும் எனில்; அவர்கள் படைப்புகள்
           அனைத்தும், விரைந்து பாராட்டப்படும்.

0310.  இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
           துறந்தார் துறந்தார் துணை

           விழியப்பன் விளக்கம்: சினத்தின் எல்லையைக் கடந்தவர், இறந்தவருக்கு இணையாவர்; 
           சினத்தைத் துறந்தவரோ, தவத்தில் சிறந்த  துறவிகளுக்கு இணையாவர்.
(அது போல்...)
           காமத்தின் வரையறையை மீறுதல், கற்பழிப்புக்கு இணையாகும்; காமத்தைக் கடத்தல், 
           அறம் விதைக்கும் நற்செயலுக்கு இணையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0310 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0310}

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

விழியப்பன் விளக்கம்: சினத்தின் எல்லையைக் கடந்தவர், இறந்தவருக்கு இணையாவர்; சினத்தைத் துறந்தவரோ, தவத்தில் சிறந்த  துறவிகளுக்கு இணையாவர்.
(அது போல்...)
காமத்தின் வரையறையை மீறுதல், கற்பழிப்புக்கு இணையாகும்; காமத்தைக் கடத்தல், அறம் விதைக்கும் நற்செயலுக்கு இணையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஜூன் 06, 2016

குறள் எண்: 0309 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0309}

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

விழியப்பன் விளக்கம்: மனதளவிலும், சினம் கொள்ளாமல் இருக்கமுடியும் எனில்; அவர்கள் நினைப்பவை எல்லாம், நினைத்தவுடன் சாத்தியமாகும்.
(அது போல்...)
நகைச்சுவையிலும், அறம் தவறாமல் எழுதமுடியும் எனில்; அவர்கள் படைப்புகள் அனைத்தும், விரைந்து பாராட்டப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஜூன் 05, 2016

குறள் எண்: 0308 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0308}

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

விழியப்பன் விளக்கம்: அதீத சக்திகொண்ட நெருப்பில் தள்ளியது போன்ற, தீமையைச் செய்தவர் மேலும்; சினம்கொள்ளாமல் இருக்கமுடிந்தால் நன்மையே.
(அது போல்...)
கூரிய நஞ்சுகலந்த ஈட்டியால் குத்தியது போன்ற, மனவலியைக் கொடுத்தவர் மேலும், பகையின்றி பழகமுடிந்தால் நன்மையே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஆனந்தம் சார்ந்த வியாபாரமும்/அரசியலும்...


சனி, ஜூன் 04, 2016

குறள் எண்: 0307 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0307}

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

விழியப்பன் விளக்கம்: சினத்தைப் பொருட்டாய் எண்ணி, அதைக் கையாள்பவரின் அழிவு; நிலத்தை அறைந்தவரின் கைவலியைப் போன்று, தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
(அது போல்...)
பணத்தை உயர்வாய் எண்ணி, அதைத் தொடர்பவரின் வீழ்ச்சி, உறவைப் பிரித்தவரின் மனவலியைப் போன்று, தடுக்கமுடியாத ஒன்றாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

அன்பளிப்பு என்றால் என்ன?



        சில நாட்களுக்கு முன், ஒரு அரசியல்வாதியின் சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பை எல்லோரும் அறிவோம். அந்த நேரத்தில் முகநூலில் பல பதிவுகள் "பொதுவாழ்வில் உள்ளோர், அன்பளிப்பு பெறுவதே தவறு!" என்ற அடிப்படையில் இருந்ததைக் காண நேர்ந்தது. என்னுள் பெருத்த ஆச்சர்யம்! பெரிய குழப்பமும் கூட. ஒரு தனிமனிதன் "அன்பளிப்பு" எனும் பெயரில் "வரதட்சணை/மொய் போன்று" வாங்கினால் தவறில்லை! என்று இந்த சமூகம் பார்க்கிறது. சட்டமும் கூட, வரதட்சனை என்ற பெயரில் கொடுமைகள் நடந்து - சம்பந்தப்பட்டோர் நீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே அதில் தலையிடுகிறது. ஒரு பிரச்சனை எழும் வரையில், வரதட்சணை (போன்ற பலவும்) கொடுப்பவரும்/பெறுபவரும் - அதைத் தவறென்றே உணர்வதில்லை! அதுபற்றி வாதிடுவதும் இல்லை. அதைவிட இழிவாய், கொடுப்பவரும்/பெறுபவரும் அதை "சமூக கெளரவமாய்" தான் பார்க்கிறார்கள். இப்படி, அன்பளிப்பு என்ற பெயரில்...

      ஒரு தனிமனித அளவில் - நடக்கும்போது, தவறுகள் அல்லது குற்றங்கள் என்ற அளவில் அனுகப்படுவதே இல்லை! ஆனால், பொதுவாழ்வில் உள்ளவர் "சொத்து போன்று" ஒன்றை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கினால் அது "பெரிய குற்றமாய்" பார்க்கப்படுகிறது. இதில் விந்தை  என்னவென்றால், இந்த குற்றச்சாட்டில் "வரதட்சனைப் போன்று" அன்பளிப்பு பெற்ற தனிமனிதனும் கலந்து கொள்வதுதான்.  "பொதுவாழ்வில் உள்ளோர் நேர்மையாய் இருக்கவேண்டும்!!!" என்ற வாதத்தில் எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அன்பளிப்பு என்பது "சுயவாழ்வு/பொதுவாழ்வு" என்ற அளவில் மாறுபடும் - என்பதை மறுக்காமல் இருக்கமுடியவில்லை! அன்பின் வெளிப்பாட்டிற்கு இந்த பாகுபாடு இருத்தல் முறையோ? "அவ்வகை அன்பளிப்புகள் ஏற்கப்படாமல், மறுக்கப்பட்டால்" எனக்கும் சந்தோசமே! ஆனால், அது தனிமனிதன் விருப்பம்/செயல்பாடு - நாம் செய்வதைப் போல். பொதுவாழ்வில் உள்ளதாலேயே "ஒரு தனிமனிதன்" எனும்...

      அடையாளத்தை அவர்கள் இழந்துவிட வேண்டுமா? பின்னர் ஏன், நமக்கு தேவை எனில்; அவர்கள் ஒரு "தனிமனிதன் போல்" முன்வந்து நின்று, உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? அவர் தனிமனிதனாய் வந்தால் என்ன? அல்லது அவரது நிர்வாகம் வந்தால் என்ன? செயல்பாடு தானே முக்கியம். இது இரட்டை-நிலைப்பாடு அல்லவா? சரி, இதை விட்டுவிட்டு அன்பளிப்பு விசயத்திற்குத் திரும்புவோம். இங்கே, அன்பளிப்பு கொடுத்தவர் மேல்கூட எனக்கு கேள்வி இருக்கிறது! அந்த அடிப்படையில் கூட ஒரு தொலைக்காட்சி விவாதம் நடந்தது. கொடுத்தவர் கூட - அவர் வருமானத்திற்கு அதிகமான ஒரு மதிப்பீட்டில் தான் பொருள்/பணம் கொடுத்ததாய் தெரிகிறது. அதையும் நான் மறுக்கவில்லை! வெறும் "100 ரூபாய்" மதிப்பீட்டில் பொருளாய்/பணமாய் ஒரு அன்பளிப்பு கொடுக்க முடியாமல் - அவமானப்படும் மனிதர்களை நாம் சந்தித்து இல்லையா? அப்படிப்பட்ட அன்பளிப்பை - "தாலி" போன்ற பொருளைக் கூட...

       அடமானம் வைத்தோ/விற்றோ - கொடுப்போரை அறியாதவரா நாம்? ஆனால், அதையும் சிறிதும் மனசாட்சி இன்றி "முகமெல்லாம் சிரிப்பாய்" நாம் வாங்கிக்கொண்டு தானே இருக்கிறோம்? ஏன், நம் மனதில் "வேண்டாம்! இத்தனைச் சிரமப்பட்டு, ஓர் அன்பளிப்பு கொடுக்காதீர்!" என்ற எண்ணம் எழுவதில்லை? மாறாய், அப்படி அடமானம் வைத்தோ/விற்றோ கொடுத்திருக்க வேண்டியதுதானே?! என்று சண்டையிடும் உறவு/நட்பு வட்டத்தில் தானே நாமும் உழன்று கொண்டிருக்கிறோம்? பின் எப்படி, இங்கே மட்டும் "வாயும்/மனமும் கூசாமல்" இப்படி வாதிடுகிறோம்?! சில நாட்கள் முன்பு, நான் சந்தித்த ஓர் அனுபவத்தின் அடிப்படையில் "நினைவுப்பரிசின் குறிக்கோள்"  எனும் தலைப்பில் "என்னுள் உதித்தது" என்ற பிரிவில் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டேன். அதே அடிப்படையில், இந்த நிகழ்வையும் என்னால் பார்க்க இயலும். ஆனால், அதற்கு முன் - "அன்பளிப்பு என்றால் என்ன?" மற்றும்

        "அன்பளி ப்பு - சரியா? தவறா?" என்பதில், "தனிமனிதனாய்" ஒரு முடிவுக்கு வரவேண்டும்! அன்பளிப்பு என்பது, ஒருவரின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்தும் எண்ணம்/செயல் என்றால் - அது எல்லோருக்கும் பொதுவாய் இருக்கவேண்டும். இல்லை... அன்பளிப்பு எனபதே தவறு! அது ஒருவிதமான கையூட்டு; அதுவொரு குற்றம் என்றால் - அதுவாவது, பொதுவாய் இருக்கவேண்டும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் - நம் பிரதிநிதிகள், அவ்வளவே! அவர்க"ளும்" நம்மில் ஒருவர்! நம்மில் இருந்து - நம்மைப்போல் ஒரு தனிமனிதனாய் இருந்து - பொதுவாழ்வில் நுழைந்தவர்! அவர்கள் "பல தனிமனிதர்களின் பிரதிநிதிகள்!" ஆயினும், அவர்களும் "ஒவ்வொரு தனிமனிதர்களே!" - நமக்கு இந்த உண்மை விளங்குவதே இல்லை! நல்லது நடந்தால் - நம் போராட்டத்தின் வெற்றி! என்று கூக்குரல் இடுகிறோம். கெட்டது என்றால் - அவர்களின் தவறு! என்று கூக்குரல் இடுகிறோம்.அவர்களும் ஒரு தனிமனிதன் என்பதை எளிதில் மறந்துவிடுகிறோம்.

            அரசியல்வாதி மட்டுமல்ல! திரைப்பட நடிகர்/நடிகையர்களைக் கூட - ஒரு தனிமனிதனாய்/ஒரு சாமான்யனாய் நாம் பார்க்க விரும்புவதே இல்லை! நமக்கு பிடிக்கும் எனில் - கொண்டாடுகிறோம்! "கோவில் கூட" கட்டுகிறோம். பிடிக்கவில்லை என்றால் "கூத்தாடிகள்!" என்று இழிவு படுத்துகிறோம். அவர்களை "ஒரு மாபெரும் சக்தியாய்" பார்ப்போரே இங்கதிகம். பெரும்பான்மையான மக்களுக்கு "அது நிஜம் அல்ல! அது வெறும் நிழல்!!" என்பது புரிவதே இல்லை! அதில் "எல்லை தாண்டிய, அதிகப்படுத்தி காட்டுதல்" நிகழ்ந்தாலும் - அதை நாம் கவனித்து, ஒதுக்குவதில்லை! அதனால் தான் இன்று "ஒரு நடிகன் எந்த சிரமமும் இன்றி - 100 பேரை அடிக்கிறான்! காலால் எட்டி உதைத்ததும், உதைபட்டவர் 20/30 அடி தாண்டி சென்று விழுகிறார்!". இதையெல்லாம் நாம் கவனிப்பதே இல்லை - அவர்களும் நம்மைப் போன்றவனே! எனும் உண்மை விளங்குவதே இல்லை. அந்த அளவிற்கு அதீதமாய் "முகச்சாயம் பூசி...

           அழகு சாதனங்களை" உபயோகிக்கப் படுத்தினால் - நாம் நிஜத்தில் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் அழகானவளே! எனும் உண்மை விளங்குவதே இல்லை. இந்த அதிசயத்தில் - அதிலுள்ள யதார்த்த மீறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதே இல்லை! அதனால் தான், நான் விமர்சிக்கும் திரைப்படத்தைக் கூட - மிகக் கவனமாய் தேர்ந்தெடுக்கிறேன். என் நேரத்தை செலவிட்டு, விமர்சிக்கத் தகுதி இல்லாதப் படங்களை - விமர்சிக்கும் எண்ணம்கூட எழுவதில்லை. இதே, அதிசயத்தைத் தான் நாம் - அரசியல்வாதிகள் மேலும் கொள்கிறோம். அதனால் தான், திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் நம்மை எளிதில் ஈர்க்கிறார்கள். அதை முழுவதுமாய் தவறெனவில்லை! ஆனால், அந்த அதிசயத்தில் "மட்டும்" மயங்காமல் - யதார்த்த உலகுக்கு வரவேண்டும் என்கிறேன். நடிகர்/நடிகைக்காக - வெட்கமே இன்றி, சண்டையிட்டுக் கொள்வது போல் - "உன் கட்சி/என் கட்சி" என்று சண்டையிட்டுக் கொள்கிறோம். அவர்கள் நமக்காக - நம் பிரதிநிதிகளாய்...

     சென்ற தனிமனிதர்கள்! என்ற உணர்வே எழுவதில்லை! அதனால் தான், அவர்களைத் தனிமனிதர்கள் என்ற அடிப்படையில் இருந்தே பிரித்து "வெகுதூரம்" வைத்துப் பார்க்கிறோம். அதுதான் வசதியென, அவர்களும் "தூரமாகவே" விலகி நின்று கொள்கிறார்கள். அதனால் தான், அவர்கள் அன்பளிப்பு வாங்கலாமா?! கூக்குரல் இடுகிறோம். அன்பளிப்பு தவறெனில் - அன்பளிப்பின் மதிப்பு "100 ரூபாய் என்றாலும் தவறு! 100 கோடி என்றாலும் தவறு!!". தவறில்லை எனில், இரண்டுமே தவறில்லை! இப்படி அவர்களை விலக்கிவைத்தே பழக்கப்பட்டதால் தான் "நாமும் ஒரு அரசியல்வாதியாய் ஆகலாம்! அப்படி உருவெடுத்து - மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற எண்ணம் வருவதே இல்லை!" நாம் அதிலிருந்து விலகி இருப்பதால் தான் - ஒரு கட்சி "குடும்ப கட்சி"ஆய் (அல்லது) "உடன்பிறவாதோர் கட்சி"ஆய் உருவெடுக்கிறது! அவர்களையும், நம்மையும் போல் - ஒரு தனிமனிதனாய் உணரும் வரை, அன்பளிப்பு பற்றியே...         

பேசிக்கொண்டு இருப்போம்! மாற்றத்தை உருவாக்க முயலமாட்டோம்!!