புதன், மே 31, 2017

குறள் எண்: 0668 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0668}

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

விழியப்பன் விளக்கம்: குழப்பம் இல்லாமல், தெளிவான சிந்தனையோடு திட்டமிட்ட வினைகளை; மனச்சோர்வும்/உடற்சோர்வும் இல்லாமல், விரைந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
அறவழியை மீறாமல், உண்மையான உழைப்பால் பெற்ற வருமானத்தை; பேராசையும்/பொறாமையும் இல்லாமல், மனமுவந்து பகிரவேண்டும்.

செவ்வாய், மே 30, 2017

குறள் எண்: 0667 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0667}

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்வோரின், உருவத்தை இகழாமல் இருக்கவேண்டும்; அவர்கள் உருண்டோடும் பெரியத் தேரைத் தாங்கும், அச்சாணிக்கு இணையானவர்கள்.
(அது போல்...)
உறவுகளில் இருப்போரின், ஏழ்மையை அவமதிக்காமல் இருக்கவேண்டும்; அவர்கள் சீறிப்பாயும் சொகுசு விமானத்தைத் தரையிறக்கும், சக்கரத்திற்கு ஒப்பாவர்.

திங்கள், மே 29, 2017

குறள் எண்: 0666 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0666}

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நினைப்போர், தேவையான மனவுறுதியை அடையப் பெற்றால்; செய்ய நினைத்த வினைகளை, நினைத்தபடியே செய்து முடிப்பர்.
(அது போல்...)
சமுதாயத்தை மாற்ற எண்ணுவோர், உறுதியான கொள்கையை வகுத்து இருப்பின்; செய்ய எண்ணிய மாற்றத்தை, எண்ணியபடியே மாற்றி முடிப்பர்.

ஞாயிறு, மே 28, 2017

குறள் எண்: 0665 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0665}

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

விழியப்பன் விளக்கம்: சிந்தனைத் திறனால், வினைத் திறனை வளர்த்து புகழ்பெற்ற அமைச்சர்கள்; அரசாள்பவரின் கவனத்திற்கு உள்ளாகி, எல்லோராலும் பாராட்டப்படுவர்.
(அது போல்...)
உறவுப் பகிர்வால், உடைமைப் பகிர்வை செய்து வாழ்ந்திடும் அன்பர்கள், சமுதாயத்தின் சான்றாக மாறி, அனைவராலும் தொடரப்படுவர்.

சனி, மே 27, 2017

குறள் எண்: 0664 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0664}

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

விழியப்பன் விளக்கம்: "கொடுக்கப்பட்ட வினையை, எவ்வாறு செய்வதென" வாயால் சொல்வது எல்லோர்க்கும் எளிதாகும்; ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செய்தல் அரிதானது!
(அது போல்...)
"நிச்சயிக்கப்பட்ட உறவை, எப்படி தொடர்வதென" அறிவுரையாய் சொல்வது எவர்க்கும் எளிதாகும்; ஆனால், அப்படி அறிவுறுத்திய வண்ணம் வாழ்வது சிரமமானது!

வெள்ளி, மே 26, 2017

குறள் எண்: 0663 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0663}


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினையை முடித்து, இறுதியில் வெளிப்படுத்துவதே ஆளுமை ஆகும்; இடையில் வெளிப்படுத்துவது, சரிசெய்ய முடியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
பெறப்பட்ட பிறப்பை வாழ்ந்து, செயற்கையாய் மரணிப்பதே பிறவி ஆகும்; செயற்கையாய் முடிப்பது, பரிகாரம் இல்லாத பாவத்தை அளிக்கும்.

வியாழன், மே 25, 2017

குறள் எண்: 0662 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0662}

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

விழியப்பன் விளக்கம்: வினைகளைத் தடையில்லாமல் செய்வது மற்றும் தடைபட்டாலும் மனம் தளராதது - இவ்விரண்டின் வழி நடப்பதே, பகுத்தறிந்தோரின் கோட்பாடு என்பர்.
(அது போல்...)
உறவுகளைப் பிரியாமல் தொடர்வது மற்றும் பிரிந்தாலும் பகையுணர்வு கொள்ளாதது - இவ்விரண்டு உறுதிகளைக் கடைப்பிடிப்பதே, சமுதாயத்தின் அடிப்படை என்பர்.

புதன், மே 24, 2017

குறள் எண்: 0661 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0661}

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற

விழியப்பன் விளக்கம்: செயல்களைச் செய்யும் வைராக்கியம் என்பது, ஒருவரின் மனதின் வைராக்கியமாகும்; மற்றவை எல்லாம் வேறானவை ஆகும்.
(அது போல்...)
ஊழல்களை ஒழிக்கும் அடிப்படை என்பது, ஆட்சியாளரின் நேர்மையின் அடிப்படையாகும்; மற்றவை எல்லாம் போலியானவை ஆகும்.

செவ்வாய், மே 23, 2017

அதிகாரம் 066: வினைத்தூய்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை

0651.  துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
           வேண்டிய எல்லாம் தரும்

           விழியப்பன் விளக்கம்: உடனிருப்போரின் தூய்மையான துணை, செல்வத்தை அளிப்பது
           போல்; அமைச்சர்களின் தூய்மையான வினைகள், வேண்டியவை அனைத்தையும்
           அளிக்கும்.
(அது போல்...)
           அன்பிருப்போரின் வலிமையான வாழ்த்து, வாழ்வை வலுப்படுத்துவது போல்;
           குடும்பத்தினரின் வலிமையான உறவுகள், நற்சிந்தனைகள் அனைத்தையும் வளர்க்கும்.
      
0652.  என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
           நன்றி பயவா வினை

           விழியப்பன் விளக்கம்: புகழோடு இணைந்து நன்மையையும் அளிக்காத வினைகளை; எந்த
           சூழ்நிலையிலும், தவிர்த்தல் வேண்டும்.
(அது போல்...)
           அன்போடு சேர்த்து பொருளையும் பகிராத உறவுகளை; எல்லா வகையிலும், பரிசீலிக்க
           வேண்டும்.
           
0653.  ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
           ஆஅதும் என்னு மவர்

           விழியப்பன் விளக்கம்: தொடர்ந்து வளரவேண்டும் என்ற முனைப்புடையோர்; தமது புகழ்
           அழிவதற்கு காரணமான, செயல்களைச் செய்வதைக் கைவிட வேண்டும்.
(அது போல்...)
           உயர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணமுடையோர்; தமது சுற்றம் தாழ்வதற்கு வழிவகுக்கும்,
           பிரிவினைகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

0654.  இடுக்கண் உடினும் இளிவந்த செய்யார்
          நடுக்கற்ற காட்சி யவர்

           விழியப்பன் விளக்கம்: குழப்பமில்லாமல் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்; தமக்கு இன்னல்
           நேர்ந்தாலும், தரக்குறைவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
(அது போல்...)
           குறையில்லாமல் உரிமையைப் பகிரும் தலைவர்கள்; தமக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும்,
           குடிமக்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.

0655.  எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
           மற்றுஅன்ன செய்யாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: “அய்யகோ… இப்படி செய்துவிட்டோமே!” என்று கவலையடையச்
           செய்யும் செயல்களைச் செய்யக்கூடாது; அப்படி செய்ய நேர்ந்தாலும், மீண்டும்
           அப்படியோர் செயலைச் செய்யாதது நன்று.
(அது போல்...)
           “அடடே… தேவையின்றி பிரிந்துவிட்டோமே!” என்று ஏக்கமடைய வைக்கும் உறவுகளைப்
           பிரியக்கூடாது; அப்படி பிரிய நேர்ந்தாலும், மீண்டும் அப்படியோர் உறவைப் பிரியாதது
           சிறப்பு.

0656.  ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
           சான்றோர் பழிக்கும் வினை

           விழியப்பன் விளக்கம்: நம்மைப் பெற்றவள், பசியின் கொடுமையை அனுபவிக்க
           நேர்ந்தாலும்; சான்றோர்கள் தூற்றும், பழியை அளிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
(அது போல்...)
           நமக்குப் பிறந்தவர்கள், கல்லாமையின் விளைவை சந்திக்க நேர்ந்தாலும்; கற்றவர்கள்
           வெறுக்கும், இலஞ்சத்தால் கல்வியைப் பெறுவதைச் செய்யக்கூடாது.

0657.  பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
           கழிநல் குரவே தலை

           விழியப்பன் விளக்கம்: பழி தரும் வினைகளைச் செய்து, அடையும் செல்வத்தை விட;
           தூய்மையான வினைகளைச் செய்து, அடையும் சான்றோர்களின் கொடிய வறுமையே
           உயர்ந்ததாகும்.
(அது போல்...)
           அறவழி மீறிய உறவுகள் மூலம், கிடைக்கும் மகிழ்ச்சியை விட; முறையான உறவுகள் மூலம்,
           கிடைக்கும் இல்லறத்தின் சிக்கலான வாழ்வியலே சிறந்ததாகும்.

0658.  கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
           முடிந்தாலும் பீழை தரும்

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் ஒதுக்கிய தீய வினைகளை, ஒதுக்கி வாழத்
           தவறியோர்க்கு; அவ்வினைகள் முடிவுற்றாலும், தீமையையே அளிக்கும்.
(அது போல்...)
           முன்னோர்கள் தவிர்த்த தகாத உறவுகளை, தவிர்த்து வாழ முயலாதோர்க்கு; அவ்வுறவுகள்
           கைகூடினாலும், மனவுளைச்சலையே தரும்.

0659.  அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
           பிற்பயக்கும் நற்பா லவை

           விழியப்பன் விளக்கம்: பிறர் கண்ணீர் சிந்த பெற்றவற்றை, நாம் கண்ணீர் சிந்த இழப்போம்;
           தூய்மையான வினைகளால் பெற்றவற்றை இழப்பினும், அவை மீண்டும் பலனளிக்கும்.
(அது போல்...)
           பிறர் உரிமையை அழித்து வெல்வதை, நம் உரிமை அழிய தோற்போம்; உண்மையான
           உரிமைப்பகிர்வால் வெல்வதைத் தோற்பினும், அவை மீண்டும் வந்தடையும்.

0660.  சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
           கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று

           விழியப்பன் விளக்கம்: வஞ்சம் நிறைந்த தீவினைகளால், பொருட்களைச் சேர்த்துப்
           பாதுகாப்பது; ஈரமண்ணால் செய்த பாத்திரத்தில், நீரை நிரப்பி சேமிக்க எண்ணுவதைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           குழப்பம் நிறைந்த மனதில், சிந்தனைகளைக் கோர்க்கத் திட்டமிடுவது; கற்பனையால்
           வரைந்த ஓவியத்தில், ஆன்மாவைப் புகுத்தி உயிர்ப்பிக்க நினைப்பதைப் போன்றதாகும்.

குறள் எண்: 0660 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0660}

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று

விழியப்பன் விளக்கம்: வஞ்சம் நிறைந்த தீவினைகளால், பொருட்களைச் சேர்த்துப் பாதுகாப்பது; ஈரமண்ணால் செய்த பாத்திரத்தில், நீரை நிரப்பி சேமிக்க எண்ணுவதைப் போன்றதாகும்.
(அது போல்...)
குழப்பம் நிறைந்த மனதில், சிந்தனைகளைக் கோர்க்கத் திட்டமிடுவது; கற்பனையால் வரைந்த ஓவியத்தில், ஆன்மாவைப் புகுத்தி உயிர்ப்பிக்க நினைப்பதைப் போன்றதாகும்.

திங்கள், மே 22, 2017

குறள் எண்: 0659 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0659}


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

விழியப்பன் விளக்கம்: பிறர் கண்ணீர் சிந்த பெற்றவற்றை, நாம் கண்ணீர் சிந்த இழப்போம்; தூய்மையான வினைகளால் பெற்றவற்றை இழப்பினும், அவை மீண்டும் பலனளிக்கும்.
(அது போல்...)
பிறர் உரிமையை அழித்து வெல்வதை, நம் உரிமை அழிய தோற்போம்; உண்மையான உரிமைப்பகிர்வால் வெல்வதைத் தோற்பினும், அவை மீண்டும் வந்தடையும்.

ஞாயிறு, மே 21, 2017

குறள் எண்: 0658 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0658}

கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் ஒதுக்கிய தீய வினைகளை, ஒதுக்கி வாழத் தவறியோர்க்கு; அவ்வினைகள் முடிவுற்றாலும், தீமையையே அளிக்கும்.
(அது போல்...)
முன்னோர்கள் தவிர்த்த தகாத உறவுகளை, தவிர்த்து வாழ முயலாதோர்க்கு; அவ்வுறவுகள் கைகூடினாலும், மனவுளைச்சலையே தரும்.

சனி, மே 20, 2017

குறள் எண்: 0657 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0657}

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை

விழியப்பன் விளக்கம்: பழி தரும் வினைகளைச் செய்து, அடையும் செல்வத்தை விட; தூய்மையான வினைகளைச் செய்து, அடையும் சான்றோர்களின் கொடிய வறுமையே உயர்ந்ததாகும்.
(அது போல்...)
அறவழி மீறிய உறவுகள் மூலம், கிடைக்கும் மகிழ்ச்சியை விட; முறையான உறவுகள் மூலம், கிடைக்கும் இல்லறத்தின் சிக்கலான வாழ்வியலே சிறந்ததாகும்.

வெள்ளி, மே 19, 2017

குறள் எண்: 0656 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0656}

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

விழியப்பன் விளக்கம்: நம்மைப் பெற்றவள், பசியின் கொடுமையை அனுபவிக்க நேர்ந்தாலும்; சான்றோர்கள் தூற்றும், பழியை அளிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
(அது போல்...)
நமக்குப் பிறந்தவர்கள், கல்லாமையின் விளைவை சந்திக்க நேர்ந்தாலும்; கற்றவர்கள் வெறுக்கும், இலஞ்சத்தால் கல்வியைப் பெறுவதைச் செய்யக்கூடாது.

வியாழன், மே 18, 2017

குறள் எண்: 0655 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0655}

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: “அய்யகோ… இப்படி செய்துவிட்டோமே!” என்று கவலையடையச் செய்யும் செயல்களைச் செய்யக்கூடாது; அப்படி செய்ய நேர்ந்தாலும், மீண்டும் அப்படியோர் செயலைச் செய்யாதது நன்று.
(அது போல்...)
“அடடே… தேவையின்றி பிரிந்துவிட்டோமே!” என்று ஏக்கமடைய வைக்கும் உறவுகளைப் பிரியக்கூடாது; அப்படி பிரிய நேர்ந்தாலும், மீண்டும் அப்படியோர் உறவைப் பிரியாதது சிறப்பு.

புதன், மே 17, 2017

குறள் எண்: 0654 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0654}

இடுக்கண் உடினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

விழியப்பன் விளக்கம்: குழப்பமில்லாமல் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்; தமக்கு இன்னல் நேர்ந்தாலும், தரக்குறைவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
(அது போல்...)
குறையில்லாமல் உரிமையைப் பகிரும் தலைவர்கள்; தமக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், குடிமக்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.

செவ்வாய், மே 16, 2017

குறள் எண்: 0653 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0653}

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

விழியப்பன் விளக்கம்: தொடர்ந்து வளரவேண்டும் என்ற முனைப்புடையோர்; தமது புகழ் அழிவதற்கு காரணமான, செயல்களைச் செய்வதைக் கைவிட வேண்டும்.
(அது போல்...)
உயர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணமுடையோர்; தமது சுற்றம் தாழ்வதற்கு வழிவகுக்கும், பிரிவினைகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

திங்கள், மே 15, 2017

குறள் எண்: 0652 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0652}

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

விழியப்பன் விளக்கம்: புகழோடு இணைந்து நன்மையையும் அளிக்காத வினைகளை; எந்த சூழ்நிலையிலும், தவிர்த்தல் வேண்டும்.
(அது போல்...)
அன்போடு சேர்த்து பொருளையும் பகிராத உறவுகளை; எல்லா வகையிலும், பரிசீலிக்க வேண்டும்.

ஞாயிறு, மே 14, 2017

குறள் எண்: 0651 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0651}

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்

விழியப்பன் விளக்கம்: உடனிருப்போரின் தூய்மையான துணை, செல்வத்தை அளிப்பது போல்; அமைச்சர்களின் தூய்மையான வினைகள், வேண்டியவை அனைத்தையும் அளிக்கும்.
(அது போல்...)
அன்பிருப்போரின் வலிமையான வாழ்த்து, வாழ்வை வலுப்படுத்துவது போல்; குடும்பத்தினரின் வலிமையான உறவுகள், நற்சிந்தனைகள் அனைத்தையும் வளர்க்கும்.

சனி, மே 13, 2017

அதிகாரம் 065: சொல்வன்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை

0641.  நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
           யாநலத்து உள்ளதூஉம் அன்று

           விழியப்பன் விளக்கம்: சொற்களை கையாளும் சொல்வன்மை எனும் வளம், ஒருவகை
           உடைமையாகும்; அந்த சொல்வளம், வேறெவ்வகை வளங்களிலும் இருப்பது அல்ல!
(அது போல்...)
           உறவுகளைப் பேணும் விருந்தோம்பல் எனும் ஒழுக்கம், ஒருவகை அறமாகும்; அந்த
           அறவொழுக்கம் வேறெவ்வகை ஒழுக்கங்களிலும் இருப்பது அல்ல!
      
0642.  ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
           காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: வளர்ச்சியும்/அழிவும், பேசும் சொற்களில் விளைவதால்;
           உணர்ச்சியால் உந்தப்படாமல், பேசும் சொற்களில் நிதானத்தைக் கடைப்பிடித்துப்
           பழகவேண்டும்.
(அது போல்...)
           உறவும்/பகையும், இருப்பதைப் பகிர்வதில் விளைவதால்; தனதென்ற கர்வமில்லாமல்,
           பகிரும் உடைமைகளில் தர்மத்தை நிலைநாட்டி வாழவேண்டும்.
           
0643.  கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
           வேட்ப மொழிவதாம் சொல்

           விழியப்பன் விளக்கம்: கேட்டவர் மகிழும் வண்ணமும், கேட்காதவர் கேட்க விரும்பும்
           வண்ணமும்; தன்மையுடன் பேசுவதே, சொல்வன்மை எனப்படும்.
(அது போல்...)
           உறவிலிருப்போர் பெருமிதம் கொள்ளவும், இல்லாதோர் உறவில் இணைய விரும்பவும்;
           அன்புடன் உறவாடுவதே, உறவுப்பாலம் ஆகும்.

0644.  திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
           பொருளும் அதனினூஉங்கு இல்

           விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களின் திறனறிந்து, சொல்வன்மை கொண்டு
           பேசவேண்டும்; அதனை விட உயரிய, அறமும்/செல்வமும் வேறேதும் இல்லை!
(அது போல்...)
           செய்யும் உதவிகளின் பலனுணர்ந்து, உதவிக்கரம் நீட்டி வாழவேண்டும்; அதை விட சிறந்த,
           நட்பும்/உறவும் வேறொன்றும் இல்லை!

0645.  சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
           வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

           விழியப்பன் விளக்கம்: நாம் சொல்லும் சொல்லை விட, வேறொரு சிறந்த  சொல் இல்லை
           என்பதை உறுதியாய் அறிந்த பின்பே; அச்சொல்லை சொல்ல வேண்டும்.
(அது போல்...)
           நாம் சிந்திக்கும் சிந்தனையை விட, வேறொரு உயர்ந்த சிந்தனை இல்லை என்பதை
           ஆழமாய் உணர்ந்த பின்னரே; அச்சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்.

0646.  வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
           மாட்சியின் மாசற்றார் கோள்

           விழியப்பன் விளக்கம்: கேட்போர் விரும்பும் வண்ணம் தாம் பேசுவதும், பிறர் பேசும்
           சொற்களிலுள்ள நன்மைகளை ஆராய்வதும் - பகுத்தறிந்த சான்றோர்களின் சிறந்த
           கோட்பாடாகும்.
(அது போல்...)
           மக்கள் ஆதரிக்கும் வண்ணம் தாம் அரசாள்வதும், எதிர்கட்சிகள் செய்யும் செயல்களிலுள்ள
           பொதுநலத்தை வரவேற்பதும் - கர்மமுணர்ந்த தலைவர்களின் உன்னத இயல்பாகும்.

0647.  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
           இகல்வெல்லல் யார்க்கும் அரிது

           விழியப்பன் விளக்கம்: சொல்வன்மை உடையோர், சோர்வின்றியும்/அச்சமின்றியும்
           இருப்பர்; அவர்களை எதிர்த்து வெல்லுதல், எவர்க்கும் அரிதானது ஆகும்!
(அது போல்...)
           குடும்பத்தைக் காதலிப்போர், சுயநலமின்றியும்/பொறாமையின்றியும் இருப்பர்; அவர்களை
           வெறுத்து ஒதுக்குதல், எவர்க்கும் எளிதானது அன்று!

0648.  விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
           சொல்லுதல் வல்லார்ப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: பணிகளை முறையாய் பட்டியலிட்டு, சொல்வன்மையுடன்
           இனிமையாய் எடுத்துரைக்கும்; திறமையுடைய அமைச்சர்கள் சொல்வதை, இவ்வுலகம்
           உடனடியாய் ஏற்கும்.
(அது போல்...)
           உரிமைகளை முறையாய் வரையறுத்து, அறநெறியுடன் நேர்மையாய் பகிர்ந்தளிக்கும்;
           முனைப்புடைய உறவுகள் சொல்வதை, இச்சமூகம் முழுமையாய் நம்பும்.

0649.  பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
           சிலசொல்லல் தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: சொல்ல வேண்டியதை, பொருத்தமான சில சொற்களால்;
           தெளிவாகவும்/பிழையில்லாமலும் சொல்லும் திறனில்லாதோர், பல சொற்களால் விளக்க
           விரும்புவர்.
(அது போல்...)
           செய்ய வேண்டியதை, தகுதியான சில ஊழியர்களுடன்; நேர்த்தியாகவும்/ஊழலில்லாமலும்
           செய்யும் வலிமையில்லாதோர், அதிக ஊழியர்களுடன் செய்ய முனைவர்.

0650.  இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
           உணர விரித்துரையா தார்

           விழியப்பன் விளக்கம்: தாம் கற்றவற்றைப் பிறர்க்குப் புரியும் வண்ணம், விவரித்து
           சொல்லாதோர்; கொத்தாகப் பூத்தும், மணக்காத மலர்களுக்கு ஒப்பாவர்.
(அது போல்...)
           தாம் பெற்றவற்றைப் பிறர்க்கு உதவும் வண்ணம், பகிர்ந்து அளிக்காதோர்; முழுதாய்
           பழுத்தும், இனிக்காத பழங்களுக்கு இணையாவர்.

குறள் எண்: 0650 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0650}


இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

விழியப்பன் விளக்கம்: தாம் கற்றவற்றைப் பிறர்க்குப் புரியும் வண்ணம், விவரித்து சொல்லாதோர்; கொத்தாகப் பூத்தும், மணக்காத மலர்களுக்கு ஒப்பாவர்.
(அது போல்...)
தாம் பெற்றவற்றைப் பிறர்க்கு உதவும் வண்ணம், பகிர்ந்து அளிக்காதோர்; முழுதாய் பழுத்தும், இனிக்காத பழங்களுக்கு இணையாவர்.

வெள்ளி, மே 12, 2017

குறள் எண்: 0649 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0649}

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: சொல்ல வேண்டியதை, பொருத்தமான சில சொற்களால்; தெளிவாகவும்/பிழையில்லாமலும் சொல்லும் திறனில்லாதோர், பல சொற்களால் விளக்க விரும்புவர்.
(அது போல்...)
செய்ய வேண்டியதை, தகுதியான சில ஊழியர்களுடன்; நேர்த்தியாகவும்/ஊழலில்லாமலும் செய்யும் வலிமையில்லாதோர், அதிக ஊழியர்களுடன் செய்ய முனைவர்.

"மாணாக்கர்களின் தரவரிசையில்" என்ன இருக்கிறது???

 

      மேனிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில், முதலிடம் பெற்ற மாணாக்கர்களின் தரவரிசைப் பற்றிய விபரங்களை வெளியிடக் கூடாதென பள்ளிகளுக்கும், ஊடகங்களுக்கும் அரசு ஆணையொன்று வெளியிட்டிருப்பதாய் தெரிகிறது. சில மாணவர்கள், இந்த ஆணை வருத்தம் அளிப்பதாய் ஊடகத்தில் தெரிவிக்கிறார்கள். இந்த ஆணை பெரிதாய் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. வருடா வருடம் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது, தரவரிசைப் பட்டியலிட்டு; முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டாடுவது வழக்கம். முன்பொரு பதிவில், இந்தக் கொண்டாட்டத்தைக் குறிப்பிட்டு; அப்படி வருடா வருடம் முதலிடம் பெற்றவர்களில், எவரேனும் பிற்காலத்தில் சாதித்தது என்னவென்று கேட்டிருந்தேன்! என்னறிவுக்கு எட்டிய வகையில், அப்படி முதலிடம் பெற்றவர்களில் எவரும்; பெரியதாய் சாதித்ததாய் தெரியவில்லை! தெரிந்தவர் எவரும் இருப்பின் தெரிவியுங்கள். "அவர்கள் எதையும் சாதிக்கமாட்டார்கள்!"...

      என்பதல்ல வாதம்; மாறாய், அத்தகையப் பாராட்டுகளும்/கொண்டாட்டமும் அவசியமில்லை என்பதே வாதம்! படிப்பதை முழுவதுமாய் புரிந்து படிக்காமல், வெறுமனே மனனம் செய்யும் இந்த கல்விமுறையே தவறானது! இதில், இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் தேவையா? இந்த தரவரிசைப் பட்டியல்கள்; தனியார் பள்ளிகள் தங்கள் வணிகத்தைப் பெருக்கவே பெரிதும் பயன்படுகின்றன! முதலிடம் பெறுவதில், அதீத போட்டி நிலவி; மாணவர்களைப் பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாக்குகிறது! அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் பெற்றோர்களும் மனவுளைச்சலுக்கு ஆளாகி; தத்தம் வாழ்வியலைத் தொலைக்கிறார்கள்! மாணவர்களும்/பெற்றோர்களும் வாழ்வியலையே தொலைத்து; அப்படியோர் போட்டியில் கலந்துகொள்ளதான் வேண்டுமா? இம்மாதிரியான பட்டியல்கள் தேவையற்றது என்பதே உண்மை. இதிலும், சில கட்சிகள் அரசியல் ஆதாரம் தேட முனையலாம்! எதிர்க்கட்சி தலைவர் கூட, இது கல்வித் தரத்தை உயர்த்த உதவிடாது...

    என்று பேட்டி அளித்திருக்கிறார்! கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்பதில், அவரின் கருத்துக்கு எவருக்கும் மறுப்பில்லை! ஆனால், இப்படியான போட்டி எதுவும் இல்லாமல் படிக்கும்போது; மாணாக்கர்களுக்கு, படிக்கும் பாடத்தில் சந்தேகங்கள் எழும்; சந்தேகங்கள் அவர்களின் புரிதலை அதிகரிக்கும். மொத்தத்தில், மறைமுகமாய்; இது ஓரளவிற்கு கல்வித்தரத்தை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! அப்படியே இல்லையெனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியளுக்கு உள்ளாகி; உடலளவிலும் பாதிப்படைவதில்லை இருந்து தடுக்கப்படுவது வெகு நிச்சயம்! அதற்காகவாது, எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற ஆணைக்கு ஆதரவு அளிக்கவேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் ஆதாரத்தைத் தேடுவது முறையானது அல்ல! இனிவரும் காலங்களிலாவது, மாணாக்கர்கள்; அவர்களின் இயல்பான இளமைப்பருவத்தை அனுபவிக்கட்டும். எனவே, அரசின் இந்த ஆணையை அனைவரும் ஏற்கவேண்டும்...

       என்பதே என் விருப்பம். இந்நிகழ்விலும், ஊடகங்கள் வியாபாரப் புத்தியை வெளிப்படுத்துவது வருத்தமளிக்கிறது! ஆம்... மாணவர்களின் தவரிசைப் பட்டியல் கிடைக்காத நிலையில் (அல்லது) அது மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில்; "மாவட்டங்களின் அடிப்படையில்" தரவரிசையை வெளியிட்டு, தங்கள் திறமையை நிரூபிக்க முயல்கிறார்கள். முடிவுகள் வெளிவந்த நேரத்தில் இருந்து தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். சில மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொண்டு, அவர்களிடம் பேட்டி எடுத்து; அதையும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள். இவர்களை என்ன செய்வது? அதெப்படி சிறிதளவும் ஊடக தர்மமும்/சமுதாயக் கடமையும் இல்லாமல் இவர்களால் செயல்பட முடிகிறது? "சில மாணவர்கள், தரவரிசையை வெளியிடாதது தவறு என்று சொல்கிறார்கள்!"; அதையும், ஊடகங்கள் காண்பிப்பது ஆறுதல். ஆனால், அவர்களின் முனைப்பு மாவட்ட வாரியான தரவரிசையைத் திணிப்பதிலேயே இருக்கிறது.

        மாவட்டங்களின் அடிப்படையில் மட்டுமல்ல...! ஊர்/வட்டம்/பள்ளி/பாலினம்/பயில்வழி - இப்படி எப்பட்டியலும் தேவையில்லை! ஒட்டுமொத்த தமிழகத்தில், எத்தனை விழுக்காடு மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்ற ஒரேயொரு செய்தி மட்டும் போதுமே?! அதையும், சாதாரண செய்தியாய் சொல்லிவிட்டு கடந்துவிடலாம்! மற்றபடி... மாணாக்கர்கள் எடுத்த மதிப்பெண்கள் கூட; அவர்கள் அடுத்து சேரவிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்! இந்த ஆர்ப்பாட்டங்களால் எப்பலனும் இல்லை! முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கும்; அவர்களின் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில்; எவருக்கும் எந்த மறுப்பும் இல்லை! ஆனால், எத்தனை இலட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் - அந்த 10 இலக்கத்தோடு போட்டி போட்டு; மனவுளைச்சலுக்கு ஆளாகி; வாழ்வியலைத் தொலைத்தார்கள்?! என்பதே இங்கு முக்கியம். எனவே, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து...

மாணாக்கர்களையும்; அவர்களின் பெற்றோர்களையும்... 
தத்தம் வாழ்வியலை, இயல்பாய் வாழ்ந்திட வழிவகுப்போம்!!!

வியாழன், மே 11, 2017

குறள் எண்: 0648 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0648}

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: பணிகளை முறையாய் பட்டியலிட்டு, சொல்வன்மையுடன் இனிமையாய் எடுத்துரைக்கும்; திறமையுடைய அமைச்சர்கள் சொல்வதை, இவ்வுலகம் உடனடியாய் ஏற்கும்.
(அது போல்...)
உரிமைகளை முறையாய் வரையறுத்து, அறநெறியுடன் நேர்மையாய் பகிர்ந்தளிக்கும்; முனைப்புடைய உறவுகள் சொல்வதை, இச்சமூகம் முழுமையாய் நம்பும்.

புதன், மே 10, 2017

குறள் எண்: 0647 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0647}

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

விழியப்பன் விளக்கம்: சொல்வன்மை உடையோர், சோர்வின்றியும்/அச்சமின்றியும் இருப்பர்; அவர்களை எதிர்த்து வெல்லுதல், எவர்க்கும் அரிதானது ஆகும்!
(அது போல்...)
குடும்பத்தைக் காதலிப்போர், சுயநலமின்றியும்/பொறாமையின்றியும் இருப்பர்; அவர்களை வெறுத்து ஒதுக்குதல், எவர்க்கும் எளிதானது அன்று!

செவ்வாய், மே 09, 2017

குறள் எண்: 0646 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0646}

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

விழியப்பன் விளக்கம்: கேட்போர் விரும்பும் வண்ணம் தாம் பேசுவதும், பிறர் பேசும் சொற்களிலுள்ள நன்மைகளை ஆராய்வதும் - பகுத்தறிந்த சான்றோர்களின் சிறந்த கோட்பாடாகும்.
(அது போல்...)
மக்கள் ஆதரிக்கும் வண்ணம் தாம் அரசாள்வதும், எதிர்கட்சிகள் செய்யும் செயல்களிலுள்ள பொதுநலத்தை வரவேற்பதும் - கர்மமுணர்ந்த தலைவர்களின் உன்னத இயல்பாகும்.

திங்கள், மே 08, 2017

குறள் எண்: 0645 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0645}

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

விழியப்பன் விளக்கம்: நாம் சொல்லும் சொல்லை விட, வேறொரு சிறந்த  சொல் இல்லை என்பதை உறுதியாய் அறிந்த பின்பே; அச்சொல்லை சொல்ல வேண்டும்.
(அது போல்...)
நாம் சிந்திக்கும் சிந்தனையை விட, வேறொரு உயர்ந்த சிந்தனை இல்லை என்பதை ஆழமாய் உணர்ந்த பின்னரே; அச்சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, மே 07, 2017

குறள் எண்: 0644 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0644}

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்

விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களின் திறனறிந்து, சொல்வன்மை கொண்டு பேசவேண்டும்; அதனை விட உயரிய, அறமும்/செல்வமும் வேறேதும் இல்லை!
(அது போல்...)
செய்யும் உதவிகளின் பலனுணர்ந்து, உதவிக்கரம் நீட்டி வாழவேண்டும்; அதை விட சிறந்த, நட்பும்/உறவும் வேறொன்றும் இல்லை!

சனி, மே 06, 2017

குறள் எண்: 0643 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0643}

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

விழியப்பன் விளக்கம்: கேட்டவர் மகிழும் வண்ணமும், கேட்காதவர் கேட்க விரும்பும் வண்ணமும்; தன்மையுடன் பேசுவதே, சொல்வன்மை எனப்படும்.
(அது போல்...)
உறவிலிருப்போர் பெருமிதம் கொள்ளவும், இல்லாதோர் உறவில் இணைய விரும்பவும்; அன்புடன் உறவாடுவதே, உறவுப்பாலம் ஆகும்.

வெள்ளி, மே 05, 2017

குறள் எண்: 0642 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0642}

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

விழியப்பன் விளக்கம்: வளர்ச்சியும்/அழிவும், பேசும் சொற்களில் விளைவதால்; உணர்ச்சியால் உந்தப்படாமல், பேசும் சொற்களில் நிதானத்தைக் கடைப்பிடித்துப் பழகவேண்டும்.
(அது போல்...)
உறவும்/பகையும், இருப்பதைப் பகிர்வதில் விளைவதால்; தனதென்ற கர்வமில்லாமல், பகிரும் உடைமைகளில் தர்மத்தை நிலைநாட்டி வாழவேண்டும்.

வியாழன், மே 04, 2017

குறள் எண்: 0641 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0641}

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

விழியப்பன் விளக்கம்: சொற்களை கையாளும் சொல்வன்மை எனும் வளம்ஒருவகை உடைமையாகும்அந்த சொல்வளம்வேறெவ்வகை வளங்களிலும் இருப்பது அல்ல!
(அது போல்...)
உறவுகளைப் பேணும் விருந்தோம்பல் எனும் ஒழுக்கம்ஒருவகை அறமாகும்அந்த அறவொழுக்கம் வேறெவ்வகை ஒழுக்கங்களிலும் இருப்பது அல்ல!

புதன், மே 03, 2017

அதிகாரம் 064: அமைச்சு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு

0631.  கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
           அருவினையும் ஆண்டது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: செய்தற்கரிய செயல்கள் அனைத்திலும் - முக்கிய கருவிகளுடன்,
           சரியான நேரத்தில், நேர்த்தியான செயல்முறையுடன் - ஆள்வதே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           கிடைக்கற்கரிய உறவுகள் எல்லாவற்றிலும் - பரஸ்பர புரிதலுடன், சரியான விகிதத்தில்,
           முறையான ஒழுக்கத்துடன் - அன்பைப் பரிமாறுவதே வாழ்வியல் ஆகும்.
      
0632.  வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
           ஐந்துடன் மாண்டது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: அச்சமற்ற கண்கள், குடிமக்களைக் காத்தல், அறம் கற்றல்,
           கற்றவற்றை ஆய்ந்தறிதல், வினைகளை முடித்தல் - ஆகிய ஐவகை காரணிகளுடன்
           இருப்பதே அமைச்சரவை ஆகும்.
 (அது போல்...)
           குற்றமற்ற எண்ணங்கள், பிள்ளைகளை வளர்த்தல், பெற்றோரைப் போற்றுதல்,
           போற்றியவரைப் பேணுதல், பாரம்பரியம் காத்தல் - ஆகிய ஐந்து இயல்புகளுடன் வாழ்வதே
           இல்லறம் ஆகும்.
           
0633.  பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
           பொருத்தலும் வல்லது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: படைகளைப் பிரித்தாள்வது, பெரியோரைப் பேணித்
           துணைக்கொள்வது மற்றும் பிரிந்து சென்றோரைப் பொருத்தருளி ஏற்பது - இவற்றில்
           சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           உரிமைகளைப் பகிர்ந்தளிப்பது, முதியோரிடம் பயின்று கற்றுக்கொள்வது மற்றும் பிரிந்த
           உறவுகளைப் புறங்கூறாமல் இருப்பது - இவற்றில் உயர்ந்ததே இல்லறம் ஆகும்.

0634.  தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
           சொல்லலும் வல்லது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து அறிவது/வினைகளைத் தெளிவுடன்
           செய்வது/ இரட்டைச் சாத்தியங்களை ஒதுக்கி; வினைகளை ஒருமுகமாய் விவரித்தல் -
           இவை அனைத்திலும் சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           விதிகளை அறிந்து ஏற்பது/அறமுடன் விதிகளை மேற்கொள்வது/அதிகார
           முறைகேடுகளைத் தவிர்த்து; விதிகளை சமமாய் பகிர்வது - இவை அனைத்திலும் சிறந்ததே
           சமுதாயம் ஆகும்.

0635.  அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
           திறனறிந்தான் தேர்ச்சித் துணை

           விழியப்பன் விளக்கம்: அறவினைகளை அறிந்து, அறிவார்ந்து பேசும் இயல்போடு;
           எக்காலத்திலும் செயல்திறனும் உடையவரின் பண்புகள் - அமைச்சர்களுக்கு
           துணையாகும்.
(அது போல்...)
           நல்லுறவுகளைக் கொண்டு, அன்பைப் பகிரும் அடிப்படையோடு; எந்நிலையிலும் உறவைக்
           கைவிடாதோரின் இயல்புகள் - சந்ததியர்க்கு சிறப்பாகும்.

0636.  மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
           யாவுள முன்னிற் பவை

           விழியப்பன் விளக்கம்: நூல்களின் மூலம் கற்பதுடன், நுண்ணிய சிந்தனை அறிவையும்
           உடைய அமைச்சர்களை; எதிர்த்து நின்று வீழ்த்தும், நுண்ணிய சூழ்ச்சிகள் எவை
           உள்ளன?
(அது போல்...)
           உறவுகளின் அடிப்படையில் உதவுவதுடன், வலிமையான மனிதமெனும் உணர்வையும்
           கொண்டு உதவிடுவோரை; விலகிச் சென்று அழிக்கும், வலிமையான எதிரிகள் எவர்
           உள்ளனர்?

0637.  செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
           இயற்கை அறிந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: நூல்களின் வழியே, செயல்களை செய்யும் செய்முறைகளை
           அறிந்திருப்பினும்; குடிமக்களின் இயல்பை அறிந்து செய்வதே, அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           உறவுகளின் வழியே, இல்லறத்தை நடத்தும் நடைமுறையை அறிந்திருப்பினும்;
           குடும்பத்தாரின் இயல்பை அறிந்து வாழ்வதே, குடும்பம் ஆகும்.

0638.  அறிகொன்று அறியான் எனினும் உறுதி
           உழையிருந்தான் கூறல் கடன்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், அமைச்சர்கள் அறிந்தவைகளை அறியமாட்டார்கள்
           எனினும்; அவைகளை உறுதியாய் எடுத்துரைப்பது, அருகிலிருக்கும் அமைச்சரின்
           கடமையாகும்.
(அது போல்...)
           முதியவர்கள், இளைஞர்களின் வேகத்தோடு வரமாட்டார்கள் எனினும்;
           தொழில்நுட்பங்களை பொறுமையாய் கற்பிப்பது, உறவிலிருக்கும் இளைஞர்களின்
           கடமையாகும்.

0639.  பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
           எழுபது கோடி உறும்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லாத விடயங்களைச் சிந்திக்கும், அமைச்சரவை
           அருகிலிருப்பது; எழுபது கோடி பகைவர்கள், பக்கத்தில் இருப்பதற்கு ஒப்பானதாகும்.
(அது போல்...)
           முறையில்லாத உறவுகளைக் கொண்டிருக்கும், மனிதர்கள் நட்பிலிருப்பது; எழுபது கோடி
           துன்பங்கள், வாழ்க்கையில் இருப்பதற்கு இணையாகும்.

0640.  முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
           திறப்பாடு இலாஅ தவர்

           விழியப்பன் விளக்கம்: செயல்திட்டங்களை, முறையான வகையில் வகுத்திருப்பினும்;
           தேவையான செயல்திறம் இல்லாத அமைச்சர்கள், முழுமையாகாத செயல்களையே
           செய்வர்.
(அது போல்...)
           தொழில்நுட்பங்களை, பயனுள்ள வகையில் உருவாக்கியிருப்பினும்; இயல்பான
           சிந்தனைத்திறன் இல்லாத மனிதர்கள், தர்மமில்லாத வழியிலேயே உபயோகிப்பர்.

குறள் எண்: 0640 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0640}

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

விழியப்பன் விளக்கம்: செயல்திட்டங்களை, முறையான வகையில் வகுத்திருப்பினும்; தேவையான செயல்திறம் இல்லாத அமைச்சர்கள், முழுமையாகாத செயல்களையே செய்வர்.
(அது போல்...)
தொழில்நுட்பங்களை, பயனுள்ள வகையில் உருவாக்கியிருப்பினும்; இயல்பான சிந்தனைத்திறன் இல்லாத மனிதர்கள், தர்மமில்லாத வழியிலேயே உபயோகிப்பர்.

செவ்வாய், மே 02, 2017

குறள் எண்: 0639 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0639}

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

விழியப்பன் விளக்கம்: அறமல்லாத விடயங்களைச் சிந்திக்கும், அமைச்சரவை அருகிலிருப்பது; எழுபது கோடி பகைவர்கள், பக்கத்தில் இருப்பதற்கு ஒப்பானதாகும்.
(அது போல்...)
முறையில்லாத உறவுகளைக் கொண்டிருக்கும், மனிதர்கள் நட்பிலிருப்பது; எழுபது கோடி துன்பங்கள், வாழ்க்கையில் இருப்பதற்கு இணையாகும்.

திங்கள், மே 01, 2017

குறள் எண்: 0638 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0638}


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், அமைச்சர்கள் அறிந்தவைகளை அறியமாட்டார்கள் எனினும்; அவைகளை உறுதியாய் எடுத்துரைப்பது, அருகிலிருக்கும் அமைச்சரின் கடமையாகும்.
(அது போல்...)
முதியவர்கள், இளைஞர்களின் வேகத்தோடு வரமாட்டார்கள் எனினும்; தொழில்நுட்பங்களை பொறுமையாய் கற்பிப்பது, உறவிலிருக்கும் இளைஞர்களின் கடமையாகும்.