சனி, செப்டம்பர் 30, 2017

அதிகாரம் 079: நட்பு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு

0781.  செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
           வினைக்கரிய யாவுள காப்பு

           விழியப்பன் விளக்கம்: நட்பை விட, செய்வதற்கு அரிய விடயங்கள் எவையுள்ளன? நட்புக்கு 
           இணையான, தீய வினைகளுக்கு அரிய பாதுகாப்பு முறைகள் எவையுள்ளன?
(அது போல்...)
           பகுத்தறிவை விட, பயில்வதற்கு சிறந்த பாடங்கள் எவையுள்ளன? பகுத்தறிவுக்கு நிகரான, 
           அறியாமை இருளுக்கு சிறந்த ஒளி மூலங்கள் எவையுள்ளன?
      
0782.  நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
           பின்நீர பேதையார் நட்பு

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் உடையோரின் நட்பு, வளர்பிறை நிலவு போல் 
           தொடர்ந்து வளரும்! மூடநம்பிக்கை உடையோரின் நட்பு, தேய்பிறை நிலவு போல் 
           தொடர்ந்து தேயும்!
(அது போல்...)
           பொதுநலம் காப்போரின் மனசாட்சி, இளமைக் காலம் போல் சுறுசுறுப்பாய் இருக்கும்! 
           சுயநலம் காப்போரின் மனசாட்சி, முதுமைக் காலம் போல் சோம்பலாய் இருக்கும்!
           
0783.  நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
           பண்புடை யாளர் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு முறை படிக்கும் போதும், நூல்கள் மகிழ்வு அளிக்கும்! 
           அதுபோல், பண்புடைய நண்பர்களின் தொடர்பு; ஒவ்வொரு முறை பழகும் போதும், மகிழ்வு 
           அளிக்கும்!
(அது போல்...)
           ஒவ்வொரு முறை கேட்கும் போதும், சொற்பொழிவு புரிதல் அளிக்கும்! அதுபோல், 
           அருளுடைய குருவின் வழிகாட்டல்; ஒவ்வொரு முறை வாய்க்கும் போதும், புரிதல் 
           வளர்க்கும்!

0784.  நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
           மேற்சென்று இடித்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: நட்பெனும் உன்னத உறவு, கூடி மகிழ்வதற்கு மட்டுமன்று! நட்பில் 
           இருப்போரின் அறமீறல் அதிகமாகும் போது, தயக்கமின்றி தாமதிக்காமல் இடித்து 
           உரைப்பதற்கும் ஆகும்!
(அது போல்...)
           பணமெனும் காகிதப் பொருள், நாம் இன்பமடைய மட்டுமன்று! உடன்பிறந்த உறவுகளின் 
           துன்பம் பெருகும் போது, காழ்ப்பின்றி ஆதாயமில்லாமல் கொடுத்து உதவுவதற்கும் ஆகும்!

0785.  புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
           நட்பாங் கிழமை தரும்

           விழியப்பன் விளக்கம்: நட்புறவு வளர்க்க, ஒன்றாக இருந்து நெருங்கிப் பழகுதல் 
           அவசியமில்லை! ஒருமித்த சிந்தனையே, நட்பின் வலிமையை நிலைநாட்டும்!
(அது போல்...)
           மக்களாட்சி நடத்த, எதிராய் இருந்து பகை வளர்த்தல் அவசியமில்லை! ஒன்றுபட்ட 
           செயல்பாடே, மக்களின் ஆட்சியைப் பாதுகாக்கும்!

0786.  முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
           அகம்நக நட்பது நட்பு

           விழியப்பன் விளக்கம்: முகத்தில் மட்டும், மகிழ்ச்சியுடன் நட்பாடுதல் நட்பன்று! உள்ளத்தின்   
           உள்ளேயும், மகிழ்ச்சியுடன் நட்பாடுவதே நட்பாகும்!
(அது போல்...)
           பேச்சில் மட்டும், பொதுநலனுடன் இருப்போர் தலைவரல்ல! செயலில் கூட, 
           பொதுநலனுடன் இருப்போரே தலைவராவர்!

0787.  அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
           அல்லல் உழப்பதாம் நட்பு

           விழியப்பன் விளக்கம்: அழிவிற்கான காரணிகளை நீக்கி, அறச் செயல்களைப் பழக்கி; 
           அழிவு நேரும்போது, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்!
(அது போல்...)
           தோல்விக்கான காரணிகளைக் களைந்து, வெற்றி விதைகளை விதைத்து; தோல்வி 
           நேரும்போது, தோள் கொடுத்துத் தாங்குவோரே பெற்றோராவர்!

0788.  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
           இடுக்கண் களைவதாம் நட்பு

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் ஆடை உடலிலிருந்து நழுவும்போது, கை தன்னிச்சையாய் 
           செயல்படும்! அதுபோல், துன்பம் நேரும்போது; உடனடியாய் களைய முற்படுவைதே 
           நட்பாகும்!
(அது போல்...)
           ஒருவரின் கண் ஆபத்தை அணுகும்போது, இமை அனிச்சையாய் செயல்படும்! அதுபோல், 
           ஊக்கம் குறையும்போது; தாமதமின்றி உற்சாகம் அளிப்போரே பெற்றோராவர்!

0789.  நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
           ஒல்லும்வாய் ஊன்று நிலை

           விழியப்பன் விளக்கம்: நட்பின் அரியணை எதுவெனில், எந்நிலையிலும் மாற்றமின்றி; 
           இயன்ற வழியில் எல்லாம், தடுமாறும் நண்பர்களைத் தாங்கும் நிலைப்பாடே ஆகும்!
(அது போல்...)
           ஆட்சியாளரின் கிரீடம் எதுவெனில், எவ்வகையிலும் ஊழலின்றி; முடிந்த வழியில் எல்லாம், 
           அடித்தட்டு மக்களை வழிநடத்தும் மேன்மையே ஆகும்!

0790.  இனையர் இவர்நமக்கு இன்னம்யாம் என்று
           புனையினும் புல்லென்னும் நட்பு

           விழியப்பன் விளக்கம்: "இவர் எமக்கு இத்தகையவர்! யாம் இவருக்கு இத்தகையவர்!" - என 
           மிகையாகப் புனைந்து பேசினாலும், நட்பின் தரம் கெடும்!
(அது போல்...)
           "தலைவர் எமக்கு உயிராவார்! யாம் தலைவருக்கு உயிராவோம்!" - என பொய்யாக 
           பிரச்சாரம் செய்தாலும், பொதுவாழ்வின் இயல்பு அழியும்!
*****

குறள் எண்: 0790 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0790}

இனையர் இவர்நமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

விழியப்பன் விளக்கம்: "இவர் எமக்கு இத்தகையவர்! யாம் இவருக்கு இத்தகையவர்!" - என மிகையாகப் புனைந்து பேசினாலும், நட்பின் தரம் கெடும்!
(அது போல்...)
"தலைவர் எமக்கு உயிராவார்! யாம் தலைவருக்கு உயிராவோம்!" - என பொய்யாக பிரச்சாரம் செய்தாலும், பொதுவாழ்வின் இயல்பு அழியும்!
*****

இன்றைய/எதிர்கால சந்ததிப் பெண்களின் நிலைமை...

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

குறள் எண்: 0789 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0789}

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்று நிலை

விழியப்பன் விளக்கம்: நட்பின் அரியணை எதுவெனில், எந்நிலையிலும் மாற்றமின்றி; இயன்ற வழியில் எல்லாம், தடுமாறும் நண்பர்களைத் தாங்கும் நிலைப்பாடே ஆகும்!
(அது போல்...)
ஆட்சியாளரின் கிரீடம் எதுவெனில், எவ்வகையிலும் ஊழலின்றி; முடிந்த வழியில் எல்லாம், அடித்தட்டு மக்களை வழிநடத்தும் மேன்மையே ஆகும்!
*****

வியாழன், செப்டம்பர் 28, 2017

குறள் எண்: 0788 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0788}

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் ஆடை உடலிலிருந்து நழுவும்போது, கை தன்னிச்சையாய் செயல்படும்! அதுபோல், துன்பம் நேரும்போது; உடனடியாய் களைய முற்படுவைதே நட்பாகும்!
(அது போல்...)
ஒருவரின் கண் ஆபத்தை அணுகும்போது, இமை அனிச்சையாய் செயல்படும்! அதுபோல், ஊக்கம் குறையும்போது; தாமதமின்றி உற்சாகம் அளிப்போரே பெற்றோராவர்!
*****

புதன், செப்டம்பர் 27, 2017

குறள் எண்: 0787 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0787}

அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

விழியப்பன் விளக்கம்: அழிவிற்கான காரணிகளை நீக்கி, அறச் செயல்களைப் பழக்கி; அழிவு நேரும்போது, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்!
(அது போல்...)
தோல்விக்கான காரணிகளைக் களைந்து, வெற்றி விதைகளை விதைத்து; தோல்வி நேரும்போது, தோள் கொடுத்துத் தாங்குவோரே பெற்றோராவர்!
*****

செவ்வாய், செப்டம்பர் 26, 2017

குறள் எண்: 0786 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0786}

முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு

விழியப்பன் விளக்கம்: முகத்தில் மட்டும், மகிழ்ச்சியுடன் நட்பாடுதல் நட்பன்று! உள்ளத்தின் உள்ளேயும், மகிழ்ச்சியுடன் நட்பாடுவதே நட்பாகும்!
(அது போல்...)
பேச்சில் மட்டும், பொதுநலனுடன் இருப்போர் தலைவரல்ல! செயலில் கூட, பொதுநலனுடன் இருப்போரே தலைவராவர்!
*****

திங்கள், செப்டம்பர் 25, 2017

குறள் எண்: 0785 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0785}

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

விழியப்பன் விளக்கம்: நட்புறவு வளர்க்க, ஒன்றாக இருந்து நெருங்கிப் பழகுதல் அவசியமில்லை! ஒருமித்த சிந்தனையே, நட்பின் வலிமையை நிலைநாட்டும்!
(அது போல்...)
மக்களாட்சி நடத்த, எதிராய் இருந்து பகை வளர்த்தல் அவசியமில்லை! ஒன்றுபட்ட செயல்பாடே, மக்களின் ஆட்சியைப் பாதுகாக்கும்!
*****

ஞாயிறு, செப்டம்பர் 24, 2017

குறள் எண்: 0784 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0784}


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

விழியப்பன் விளக்கம்: நட்பெனும் உறவு, மகிழ்வதற்கு மட்டுமன்று! நண்பர்கள் அதீதமாய் அறத்தை மீறும்போது, தாமதிக்காமல் இடித்து உரைப்பதற்கும் ஆகும்!
(அதுபோல்)
பணமெனும் காகிதம், நமக்கு மட்டுமன்று! உடன்பிறந்தோர் பொருளாதார சிக்கலில் உள்ளபோது, ஆதாயமில்லாமல் கொடுத்து உதவுவதற்கும் ஆகும்!

சனி, செப்டம்பர் 23, 2017

குறள் எண்: 0783 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0783}

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு முறை படிக்கும் போதும், நூல்கள் மகிழ்வு அளிக்கும்! அதுபோல், பண்புடைய நண்பர்களின் தொடர்பு; ஒவ்வொரு முறை பழகும் போதும், மகிழ்வு அளிக்கும்!
(அது போல்...)
ஒவ்வொரு முறை கேட்கும் போதும், சொற்பொழிவு புரிதல் அளிக்கும்! அதுபோல், அருளுடைய குருவின் வழிகாட்டல்; ஒவ்வொரு முறை வாய்க்கும் போதும், புரிதல் வளர்க்கும்!
*****

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

குறள் எண்: 0782 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0782}

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவு உடையோரின் நட்பு, வளர்பிறை நிலவு போல் தொடர்ந்து வளரும்! மூடநம்பிக்கை உடையோரின் நட்பு, தேய்பிறை நிலவு போல் தொடர்ந்து தேயும்!
(அது போல்...)
பொதுநலம் காப்போரின் மனசாட்சி, இளமைக் காலம் போல் சுறுசுறுப்பாய் இருக்கும்! சுயநலம் காப்போரின் மனசாட்சி, முதுமைக் காலம் போல் சோம்பலாய் இருக்கும்!
*****

வியாழன், செப்டம்பர் 21, 2017

குறள் எண்: 0781 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0781}

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

விழியப்பன் விளக்கம்: நட்பை விட, செய்வதற்கு அரிய விடயங்கள் எவையுள்ளன? நட்புக்கு இணையான, தீய வினைகளுக்கு அரிய பாதுகாப்பு முறைகள் எவையுள்ளன?
(அது போல்...)
பகுத்தறிவை விட, பயில்வதற்கு சிறந்த பாடங்கள் எவையுள்ளன? பகுத்தறிவுக்கு நிகரான, அறியாமை இருளுக்கு சிறந்த ஒளி மூலங்கள் எவையுள்ளன?
*****

புதன், செப்டம்பர் 20, 2017

அதிகாரம் 078: படைச்செருக்கு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு

0771.  என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
           முன்நின்று கல்நின் றவர்

           விழியப்பன் விளக்கம்: “எதிரிகளே! எம் தலைவரை எதிர்த்து, அவர்முன் போர்க்களத்தில் 
           நிற்காதீர்! எம் தலைவரின் முன் நின்று, பலரும் கற்சிலைகளாக உள்ளனர்!” - என 
           எச்சரிக்கை செய்வதே, படைச்செருக்கு ஆகும்.
(அது போல்...)
           “துரோகிகளே! என் அப்பனை புறம்பேசி, அவர்முன் புகழ்ச்சி பேசாதீர்! என் அப்பனை 
           புறத்தே பேசி, பலரும் வாழ்விழந்து இருக்கின்றனர்!” - என வீரமுடன் பேசுவதே, 
           மகளதிகாரம் ஆகும்.
      
0772.  கான முயல்எய்த அம்பினில் யானை
           பிழைத்தவேல் ஏந்தல் இனிது

           விழியப்பன் விளக்கம்: கண்டதும் அஞ்சும் காட்டு முயலை, கொன்ற அம்பை விட; பாயும் 
           படையை எதிர்க்கும் யானையைக் கொல்லத் தவறிய, வேலைக் கையிலேந்தி இருப்பது 
           சிறப்பாகும்.
(அது போல்...)
           பார்த்ததும் அஞ்சும் அப்பாவி மனிதரை, வீழ்த்திய காவலரை விட; போக்கிரிக் கும்பலை 
           வளர்க்கும் வீரனை வெல்லத் தவறிய, காவலரை உடன் வைத்திருப்பது உயர்ந்ததாகும்.
           
0773.  பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
           ஊராண்மை மற்றதன் எஃகு

           விழியப்பன் விளக்கம்: எதிரிகளைத் தாக்குவதில், இரக்கமின்றி இருப்பதை; அதீத வலிமை 
           என்பர்! மற்றும், அதே எதிரிகள் இன்னல் படும்போது உதவுவதை; “வலிமையின் கூர்முனை” 
           என்பர்!
(அது போல்...)
           குழந்தைகளை வளர்ப்பதில், மன்னிப்பின்றி இருப்பதை; சிறந்த வளர்ப்புமுறை என்பர்! 
           மற்றும், அதே குழந்தைகள் தோல்வி அடையும்போது அரவணைப்பதை; "வளர்ப்பின் 
           உச்சம்" என்பர்!

0774.  கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
           மெய்வேல் பறியா நகும்

           விழியப்பன் விளக்கம்: கையிலிருந்த வேலை, யானை மீது எறிந்து துரத்திய ஆயுதமில்லா 
           வீரன்; தன் மார்பைத் துளைத்து நிற்கும் வேலை மகிழ்ந்து பறித்து, செருக்குடன் 
           முன்னேறுவான்! 
(அது போல்...)
           வாங்கிய சம்பளத்தில், வீட்டு செலவுகளை நிறைவு செய்த பணமில்லா தலைவன்; தன் 
           சேமிப்பில் இருக்கும் பணத்தை மகிழ்வுடன் எண்ணிப் பார்த்து, அமைதியாய் உறங்குவான்!

0775.  விழித்தகண் வேல்கொண்டி எறிய அழித்துஇமைப்பின்
           ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வெற்றிக்காக விழித்திருக்கும் படைவீரரின் கண், எதிரி வேல் 
           எறியும்போது; ஒருமுறை இமைத்தாலும், செருக்குடைய படைக்கு புறங்காட்டுதல் அன்றோ?
(அது போல்...)
           வாய்ப்புக்காகக் காத்திருக்கும் உறுப்பினரின் நேர்மை, சூழல் அழுத்தம் தரும்போது; 
           ஒருமுறை தவறினாலும்; ஒழுக்கமுடைய குடும்பத்துக்கு தேசக்குற்றம் தானே?

0776.  விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
           வைக்கும்தன் நாளை எடுத்து

           விழியப்பன் விளக்கம்: செருக்குடைய படைவீரர்கள் தம் வாழ்நாட்களைக் கணக்கிட்டு, 
           விழுப்புண் படாத நாட்கள் அனைத்தையும்; இறந்த நாட்களாய் கருதி, அவற்றைக் 
           கழித்திடுவர்!
(அது போல்...)
           சுயமுடைய தலைவர்கள் தம் செயல்களை மதிப்பிட்டு, அறவுணர்வு சேராத செயல்கள் 
           யாவையும்; குற்றச் செயல்களாய் கருதி, அவற்றை நீக்கிடுவர்!

0777.  சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
           கழல்யாப்புக் காரிகை நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: உலகெங்கும் பரவும் புகழுக்காக, தம் உயிரையும் விரும்பாத  
           செருக்கான படைவீரரின் காலில்; வீரக்கழல் கட்டப்படும் போது, அது பேரழகை அடையும்!
(அது போல்...)
           நாடெங்கும் பரவும் நன்மைக்காக, தம் சுயத்தையும் பேணாத ஒழுக்கமான தலைவரின் 
           பார்வையில்; அரசியல்கட்சி வளரும் போது, அது மக்களாட்சிக்கு செய்யும்!

0778.  உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
           செறினும்சீர் குன்றல் இலர்

           விழியப்பன் விளக்கம்: போரில் அழிவு நேரும்போது, அரசாள்பவர் சினந்து தடுத்தாலும்; 
           உயிருக்கு அஞ்சாத செருக்குடைய போர்வீரர், தன் சிறப்பியல்பில் இருந்து விலகமாட்டார்!
(அதுபோல்...)
           குடும்பத்தில் சிக்கல் நேரும்போது, குடும்பத்தினர் குழப்பம் விதைத்தாலும்; சூழலுக்கு 
           பலியாகாத திட்பமுடைய குடும்பத்தலைவர், தன் உயர்குணத்தில் இருந்து மாறமாட்டார்!

0779.  இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
           பிழைத்தது ஒறுக்கிற் பவர்

           விழியப்பன் விளக்கம்: உரைத்த சூளுரையைக் காக்க, போரில் சாகவல்ல செருக்கான 
           வீரரை; ஒரு பிழை செய்ததற்காய், எவரேனும் இகழ்வரோ?
(அது போல்...)
           அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, தேர்தலில் தோற்கவல்ல செறிவான தலைவரை; கால 
           தாமதம் செய்ததற்காய், எவரேனும் விமர்சிப்பரோ?

0780.  புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
           இரந்துகோள் தக்கது உடைத்து

           விழியப்பன் விளக்கம்: செருக்கான ஒரு படைவீரனின் இறப்பு, ஆட்சியாளரின் கண்களில் 
           நீரை நிரப்பினால்; அந்த இறப்பு, யாசகமாய் கேட்டும் பெறும் மகிமை உடையதாகும்!
(அது போல்...)
           திறமையான ஒரு தொழிலாளியின் ஓய்வு, முதலாளியின் கவனத்தை திசை திருப்பினால்; 
           அந்த ஓய்வு, எதனை இழந்தும் அடையும் புகழும் உடையதாகும்!
*****

குறள் எண்: 0780 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0780}

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

விழியப்பன் விளக்கம்: செருக்கான ஒரு படைவீரனின் இறப்பு, ஆட்சியாளரின் கண்களில் நீரை நிரப்பினால்; அந்த இறப்பு, யாசகமாய் கேட்டும் பெறும் மகிமை உடையதாகும்!
(அது போல்...)
திறமையான ஒரு தொழிலாளியின் ஓய்வு, முதலாளியின் கவனத்தை திசை திருப்பினால்; அந்த ஓய்வு, எதனை இழந்தும் அடையும் புகழும் உடையதாகும்!
*****

செவ்வாய், செப்டம்பர் 19, 2017

கடன் வாங்கத் தேவையானத் தகுதி...

குறள் எண்: 0779 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0779}

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

விழியப்பன் விளக்கம்: உரைத்த சூளுரையைக் காக்க, போரில் சாகவல்ல செருக்கான வீரரை; ஒரு  பிழை செய்ததற்காய், எவரேனும் இகழ்வரோ?
(அது போல்...)
அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, தேர்தலில் தோற்கவல்ல செறிவான தலைவரை; கால தாமதம் செய்ததற்காய், எவரேனும் விமர்சிப்பரோ?
*****

திங்கள், செப்டம்பர் 18, 2017

குறள் எண்: 0778 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0778}

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்

விழியப்பன் விளக்கம்: போரில் அழிவு நேரும்போது, அரசாள்பவர் சினந்து தடுத்தாலும்; உயிருக்கு அஞ்சாத செருக்குடைய போர்வீரர், தன் சிறப்பியல்பில் இருந்து விலகமாட்டார்!
(அதுபோல்...)
குடும்பத்தில் சிக்கல் நேரும்போது, குடும்பத்தினர் குழப்பம் விதைத்தாலும்; சூழலுக்கு பலியாகாத திட்பமுடைய குடும்பத்தலைவர், தன் உயர்குணத்தில் இருந்து மாறமாட்டார்!
*****

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

குறள் எண்: 0777 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0777}

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

விழியப்பன் விளக்கம்: உலகெங்கும் பரவும் புகழுக்காக, தம் உயிரையும் விரும்பாத செருக்கான படைவீரரின் காலில்; வீரக்கழல் கட்டப்படும் போது, அது பேரழகை அடையும்!
(அது போல்...)
நாடெங்கும் பரவும் நன்மைக்காக, தம் சுயத்தையும் பேணாத ஒழுக்கமான தலைவரின் பார்வையில்; அரசியல்கட்சி வளரும் போது, அது மக்களாட்சிக்கு செய்யும்!
*****

சனி, செப்டம்பர் 16, 2017

குறள் எண்: 0776 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0776}

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

விழியப்பன் விளக்கம்: செருக்குடைய படைவீரர்கள் தம் வாழ்நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்கள் அனைத்தையும்; இறந்த நாட்களாய் கருதி, அவற்றைக் கழித்திடுவர்!
(அது போல்...)
சுயமுடைய தலைவர்கள் தம் செயல்களை மதிப்பிட்டு, அறவுணர்வு சேராத செயல்கள் யாவையும்; குற்றச் செயல்களாய் கருதி, அவற்றை நீக்கிடுவர்!
*****

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

மனைவியும் மகளும்...

குறள் எண்: 0775 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0775}

விழித்தகண் வேல்கொண்டி எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வெற்றிக்காக விழித்திருக்கும் படைவீரரின் கண், எதிரி வேல் எறியும்போது; ஒருமுறை இமைத்தாலும், செருக்குடைய படைக்கு புறங்காட்டுதல் அன்றோ?
(அது போல்...)
வாய்ப்புக்காகக் காத்திருக்கும் உறுப்பினரின் நேர்மை, சூழல் அழுத்தம் தரும்போது; ஒருமுறை தவறினாலும்; ஒழுக்கமுடைய குடும்பத்துக்கு தேசக்குற்றம் தானே?
*****

வியாழன், செப்டம்பர் 14, 2017

குறள் எண்: 0774 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0774}

கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

விழியப்பன் விளக்கம்: கையிலிருந்த வேலை, யானை மீது எறிந்து துரத்திய ஆயுதமில்லா வீரன்; தன் மார்பைத் துளைத்து நிற்கும் வேலை மகிழ்ந்து பறித்து, செருக்குடன் முன்னேறுவான்! 
(அது போல்...)
வாங்கிய சம்பளத்தில், வீட்டு செலவுகளை நிறைவு செய்த பணமில்லா தலைவன்; தன் சேமிப்பில் இருக்கும் பணத்தை மகிழ்வுடன் எண்ணிப் பார்த்து, அமைதியாய் உறங்குவான்!
*****