திங்கள், பிப்ரவரி 23, 2015

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!



       கடந்த 19-ஆம் தேதி முதன்முதலாய் A9Radio என்ற இணைய-வானொலியில் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!" என்ற பாடலைக்  கேட்டேன். கேட்க ஆரம்பித்தபோதே பிடித்துவிட்ட அந்த பாடல்,  2010-இல் வெளியான "தென்மேற்கு பருவக்காற்று" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது என்பதை உடனே இணையத்தின் உதவியால் தெரிந்துகொண்டேன். அந்த பாடலை உடனே பதிவிறக்கமும் செய்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்/இருக்கிறேன்.

   அம்மாவின் உயர்வையும்/தியாகத்தையும் எளிமையான வரிகளில் உணர்த்தும் அருமையான பாடல்! 

   அந்த பாடலை வாட்ஸ்-ஆப்பில் சில நட்புகளுக்கும் பகிர்ந்திருந்தேன்! என்ன அதிசயம்? அவர்களில் ஒருவர் தவிர வேறெவரும் அந்த பாடலை இதுவரை கேட்டதில்லை என்று அறிந்தேன். இம்மாதிரியான ஒரு பாடல்; இன்னமும் தெரியாமல் இருக்கும் பலரையும் சென்ற சேரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இங்கே பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் பிடித்திருப்பின்; பகிருங்கள் உங்கள் நெருங்கிய வட்டத்திலும்!

பின்குறிப்பு: முன்பே கேட்டிருப்போர், இதைப் பொருட்படுத்தவேண்டாம்! 

சிறிய வார்த்தைகளுள் பெரிய வலி...



  "என்னை அறிந்தால்" என்ற தமிழ் திரைப்படத்தில் "ஈஷாவுக்கு அப்புறம் நமக்கு வேற குழந்தைகளே வேண்டாம்! என்ன... மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி போகவேண்டி வரும்!" என்ற வசனம் ஒன்று வரும். பலருக்கும், இது சாதாரணமான வசனமாய் தோன்றியிருக்கும்! அந்த சிறிய வார்த்தைகளுள் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய வலியை/அந்த வசனம் தரும் புரிதலை; எத்தனை பேர் யோசித்திருப்பர் என்று எனக்கு தெரியவில்லை! அதை, இப்படியொரு பதிவாய் பதியவேண்டும் என்று தோன்றியது. 

   அஜித் மாதிரி ஒரு நடிகர் இதை "ஒப்புக்கொண்டு" பேசியிருப்பது தனிச்சிறப்பு! அதுபோலவே, த்ரிஷா போன்ற நடிகை அந்த காட்சியில் இடம்பெற்று இருப்பதும்!!

    தமிழ் திரைப்படவேண்டும் இதுபோன்ற கூறிய வசனங்களை மேலும் கையாளவேண்டும் என்பது என் ஆவல்! காதல்/காமம் இவற்றின் மேலிருக்கும் நம் புரிதல் மென்மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அதுபோலவே, காதலும் காமமும் எப்படி இயல்பாய் கலக்கவேண்டும் என்று நான் எழுதியதும் இன்னும் பலரை சென்றடையும் என்றும் நம்புகிறேன்.