குவாட்டர் கூட பிரியாணிய
கேக்கறது யாரு குத்தம்?
தேர்தலிலே ஓட்ட வித்து
தோக்கறதும் யாரு குத்தம்? (பல்லவி)
ஓட்டவித்து வாழ்க்கை ஓடத்த
ஒடைச்சுப் போட்டுட்ட!
நெலத்தவித்த வெவசாயி போல
நொடிஞ்சுப் போயிட்ட!
கேட்டா… வாழ்வே போராட்டம்ங்கற!
கிராமசபைல ஊர்த் தலைவர
ஏலத்துல விட்டுட்ட!
ஒன்னை நீயும் அடிச்சுதானே
ஒலையிலப் போட்டுட்ட!
கேட்டா… சிஸ்ட்டம் சரியில்லைங்கற!
கடிவாளம் போட்டு, ரெண்டே
கட்சியப் பாத்து பழகிட்ட!
சைடுல இருக்கற நல்ல
கட்சியப் பாக்க மறந்துட்ட!
கேட்டா… தெரிஞ்ச பிசாசுங்கற!
ஒருநாள் கூத்துக்கு அஞ்சுவருஷத்த
அடமானம் வைக்கற!
பொன்முட்ட இடும் வாத்தநீயும்
பேராசைக்கு விக்கற!
கேட்டா… சமுதாயம் கெட்டதுங்கற! (சரணம் 1)
குவாட்டர் கூட பிரியாணிய
கேக்கறது யாரு குத்தம்?
தேர்தலிலே ஓட்ட வித்து
தோக்கறதும் யாரு குத்தம்? (பல்லவி)
ஓட்டுப்பேப்பர பணப் பேப்பரால
வாங்கிப் பழகிட்டான்!
காப்பருக்கு வித்து, காவலவச்சு
தோட்டாவப் பாய்ச்சிட்டான்!
கேட்டா… வியாபாரத் தந்திரம்ங்கறான்!
சாதிஒழிக்க கட்சி தொடங்கி
சாதிவெதய தூவிட்டான்!
சாதிச் சண்டையத் தூண்டிவிட்டு
சாதிவெறிய வளத்துட்டான்!
கேட்டா… அரசியல்ல சகஜம்ங்கறான்!
லாக்டவுனுல பெட்ரோல் வெலய
ஏத்தி உட்டுட்டான்!
கொரானோ காலத்துல டாஸ்மாக்குல
கூட்டத்த கூட்டிட்டான்!
கேட்டா… வருவாய் முக்கியம்ங்கறான்!
ஆளாளுக்கு ஓசிப் பணத்த
கூட்டி கூவுறான்!
வரி கட்டறவன் வயித்துலதான்
ஏறி மிதிக்கிறான்!
கேட்டா… அரசியல் சாணக்கியன்ங்கறான்! (சரணம் 2)
குவாட்டர் கூட பிரியாணிய
கேக்கறது யாரு குத்தம்?
தேர்தலிலே ஓட்ட வித்து
தோக்கறதும் யாரு குத்தம்? (பல்லவி)
- விழியப்பன் (Vizhiyappan)


