துணுக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துணுக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 24, 2016

"சாதி" பிரச்சனையும்; "மத" பிரச்சனையும்...


   நம்மில் பலரும், சாதிப்பிரச்சனையும்/மதப்பிரச்சனையும் - தொடர்பற்றவை என்றே புரிந்து கொள்கிறோம். ஆனால், இரண்டிற்கும் தொடர்புண்டு என்றே தோன்றுகிறது. இவ்விரண்டையும் - "மாமியார்/மருமகள்" போன்ற உறவுச்சண்டையுடன் தொடர்பு படுத்தலாம் என்றும் தோன்றுகிறது. எப்படி என்கிறீர்களா?!
  • "மாமியார்/மருமகள்" போன்ற உறவுச்சிக்கலில் - பிரச்சனையின் வீரியம் சம்பந்தப்பட்ட "மாமியார் (அல்லது) மருமகள்" என்ற தனிநபரோடு நின்றுவிட்டால் - அது "சாதி"ப் பிரச்சனை போன்றது.
  • தனிநபரையும் தாண்டி, பிரச்சனையின் வீரியும் - "மாமியார் (அல்லது) மருமகள்" சார்ந்த சொந்த/பந்தம் வரை தொடர்ந்தால் - அது "மத"ப் பிரச்சனை போன்றது.
பிரச்சனை (எதுவா/எப்படியா)யினும் - இதற்கு தீர்வு; 
தனிமனிதரின் "ஒழுக்கம்/புரிதல்" போன்றவற்றில்தான் இருக்கின்றது!!!

வியாழன், ஆகஸ்ட் 06, 2015

சுய-இன்பம்; சுய-ஒழுக்கமா???



      சுய-இன்பம் என்ற ஒன்று மட்டும் நடைமுறையில் இல்லையானால், கள்ளத்தொடர்புகளும் (ஆண்/பெண் இரண்டு வகை) விபச்சாரங்களும் இப்போது இருப்பதைக் காட்டிலும்; பெருமளவில் பெருகி இருக்கும் என்று தோன்றுகிறது. வெகுநிச்சயமாய்... விவாகரத்து/வேலை-நிமித்தம் போன்ற காரணங்களுக்காய் "கட்டாய தனிக்கட்டை"ஆய் இருக்கும் நபர்கள் விசயத்தில் இது பேருண்மையாகிறது. எனவே...

சுய-இன்பம் என்பது சுய-ஒழுக்கமா??? 

சனி, ஆகஸ்ட் 01, 2015

யோவ் கவிஞரே!

யோவ் கவிஞரே!
வார்த்தைகளற்று, வெறுப்புற்று - வெறுமையில் இருக்கிறேன்.
இயல்பாய் என் மனதை பிரதிபலிக்கிறேன்: எத்தனை பேர் உம்மை தூற்றினாலும்; உம் தமிழ் புலன் மறுக்க முடியாதது. அருமையான/எளிமையான வார்த்தைகள்! ஆனால் ஆழமான/சிந்தனை-மயமான உவமானங்கள்!
பல்லாண்டுகள், வாழ்க வளமுடன் கவிஞரே!!



திங்கள், ஜூலை 27, 2015

முக்கிய கட்சிகளின் பெயர்கள்...


இதை கவனித்து இருக்கிறீர்களா?!

      இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான கட்சிகளின் தமிழ் பெயர்கள் "கழகம்/கட்சி" என்ற பெயரில் தான் முடிகின்றன! இவற்றின் "சுருக்கெழுத்து" பெயர்கள் "க" என்ற குரிளுடன் தான் முடிகின்றன. அதாவது "பாஜக/திக/திமுக/அதிமுக/மதிமுக/தேமுதிக/..." என்பன போன்று.

ஆனால்...

பேச்சு வழக்கில் பாஜ"கா"/தி"கா"/திமு"கா"/அதிமு"கா"/... என்று "கா" என்ற நெடிலோடு தான் "சொல்லவோ/கேட்கவோ" செய்கிறோம்.

இதை "எவரேனும்" கவனித்து இருக்கிறீர்களா?!   

வியாழன், ஜூலை 16, 2015

எளிய முறையில் "அயர்ன்" செய்ய...



    எளியமுறையில் துணிகளை "அயர்ன்" செய்யவேண்டுமா?! இதோ... ஒரு உபயோகமான/வெற்றிகரமான வழிமுறை. முதல் படத்தில் காட்டியுள்ளது போல்; முதலில், துணிகளை ஒழுங்காய் மடித்து உங்கள் படுக்கையின் மேல் சரியாய் அடுக்குங்கள். பின்னர், இரண்டாவது படத்தில் உள்ளது போல், படுக்கை-விரிப்பை அதன் மீது சரியாய் விரித்து; வழக்கம்போல் உறங்குங்கள். ஓரிரு தினங்களில் துணிகள் நன்றாக "அயர்ன்"  செய்யப்பட்டிருக்கும். உடல் எடையைப் பொறுத்து "அயர்ன்" செய்யப்படும் நேரம் மாறுபடும் (சிரிக்காமல்... சிந்தியுங்கள்!). 

கவனிக்க வேண்டியவை: 
  1. மின்சார செலவு மிச்சம்.
  2. நிறைய துணிகளை அடுக்கக்கூடாது; முதுகு-வலி ஏற்படும்.
  3. அயர்ன்-மூலம் ஏற்படும் வெப்பம் இல்லாததால், துணிகள் விரைவில் வீணாகாது.
  4. இலவச முதுகு-மஸ்ஸாஜ் கிடைக்கும். மனைவியையோ அல்லது வேறோருவரையோ நாடத் தேவையில்லை (நோ சிரிப்பு! சிந்தனை...!).
  5. ப்ளானிங் ரொம்ப முக்கியம்! சோம்பல் கூடாது (ஹா... ஹா... ஹா...); 2 நாட்களுக்கு பின் அணியவேண்டிய துணிகளை இன்றிரவே படுக்கையில் அடுக்கவேண்டும்.

புதன், ஜூலை 15, 2015

சென்ற தலைமுறை அப்பாக்கள்...

 


    சவாலான-சம்பளத்துடன், வாழ்க்கை ஓட்டத்தில் "மிக வேகமாய்/மிக விவேகமாய்/மிக சிரத்தையாய்" ஓடிய சென்ற-தலைமுறை அப்பாக்கள் - வாழ்க்கை சூழலால் தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய-மறந்த/செய்ய-முடியாத பலவற்றை; தங்களின் "பெயரன்/பெயர்த்தி" இவர்களுக்கு செய்வதன் மூலமாய் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.

இந்த விசயத்தில்; சென்ற-தலைமுறை அப்பாக்கள் பேரதிஷ்ட்டக்காரர்கள்!!!

செவ்வாய், ஜூலை 14, 2015

ரோமியோ ஜூலியட்...



          நேற்றிரவு இணையத்தில் "ரோமியோ  ஜூலியட்" தமிழ் திரைப்படம் பார்த்தேன். அருமையான கரு கொண்ட கதைக்களம். என்னளவில்... விட்டுவிட்டுப்போன-அந்த காதலியை; "உண்மையாகவே" காதலன் வெறுத்து அவளை ஏற்றுக்கொள்ளாமல் முடித்திருக்க வேண்டிய படம். ஆனால்... "காமடி"; மற்றும் எவர் வகுத்தது என்றே தெரியாத "கமர்ஷியல்" படமாகவேண்டும் என்ற கோட்பாடு - இவையிரண்டும் பின்பாதியை வீணடித்து கருவையும் "அபார்ஷன்" செய்துவிட்டார்கள். இறுதியில்... கமர்ஷியலாகவும் அந்த படம் எதையும் சாதிக்கவில்லை! மட்டமான படங்களின் பட்டியலில்; இணைந்திருக்கும் இன்னுமொரு படம் என்ற சாதனையைத்தவிர!!

பொதுக்குறிப்பு: கமர்ஷியலாக படமெடுக்கிறேன் என்ற டுபாக்கூர்-கோட்பாட்டுடன் இப்படி அருமையான "கருவை" அபார்ஷன் செய்யும் அபத்தத்தை இன்னும் எத்தனை நாளைக்கு தான் கடைபிடிக்கப் போகிறார்களோ?!

ஞாயிறு, ஜூலை 12, 2015

இறுதி-துளி நம்பிக்கை...



     ஒரு உறவின் மீதோ (அல்லது) ஒரு பொருளின் மீதோ - நாம் வைத்த "இறுதி-துளி நம்பிக்கை"யும் பொய்த்து போன பின்; ஒரு வீரமும்/புரிதலும் வரும் பாருங்கள்... அதுதான் வாழ்வை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடித்தளம்!!! 

புதன், ஜூலை 08, 2015

சந்தோஷம்னா...?!



"சந்தோஷம்னா... என்னன்னு அதை அனுபவிக்கறப்போ தெரியறதில்லை"!

- விருமாண்டி திரைப்படத்தில் வரும் வசனம் இது! வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை சொற்ப வார்த்தைகளைக் கொண்டு "ஒரே வரியில்" விளக்கும் வசனம். இதுபோன்ற "அனுபவம் பொதிந்த" வசனங்களும் ஒரு காரணம்; கமல் என்னும் அந்த அனுபவஸ்த்தனின் "அபிமானி" என்று என்னை சொல்லிக்கொள்ள!!

புதன், ஜூன் 03, 2015

"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??



"சாகாவரம் போல் ஒரு" என்று துவங்கும் "உத்தமவில்லன்" படப்பாடலில்...

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!

என்றோர் வரி வரும். சரி...
"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??

குறிப்பு: "நல்ல புரிதலை" கொடுக்கும் கருத்துகளை(மட்டும்) எதிர்பார்க்கிறேன்! :)

வியாழன், மே 28, 2015

கமலின் கவி, மெய், விஞ் = ஞானங்கள் - 2



மாலா-ஒளியாம்; ஞாயிறும் கூட மற்றோர் யுகத்தில்... போகும் கரிந்தே....ஏஏஏ!
கரிந்தே, கரிந்தே...ஏஏஏ!!
கரிந்து எரிந்தும், வெடித்த பின்னும்; உதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்!!
முளைத்து முறிந்தும், துளிர்க்கும் வாழை; தன் மரணம்-குள்ளே விட்டது விதையை!...
கேளாய் மன்னா... ஓ ஓ ஓ ! கேளாய் மன்னா...!!

விதைத்திடும்-மெய், போல்-ஒரு உயிரை; உயிர்த்து விளங்கும்...
என் கவிதை விளங்கும்!
கவிதை விளங்கும்... ஓ ஓ ஓ !

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!
காதல் வேண்டும்....
"செய்யுள் போல்" ஒரு... காதல் வேண்டும்!
"செய்யுள் போல்" ஒரு...
ஹேய்...

"வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்" சாவையும் வேண்டி; செத்த கதைகள்...
"ஆயிரம் உண்டு"!
கேளாய் மன்னா...!
"ஆயிரம் உண்டு"!
ஓ ஓ ஓ !
கேளாய் மன்னா...!

கமலின் கவி, மெய், விஞ் = ஞானங்கள் - 1



சாகாவரம் போல், சோகம் உண்டோ?... கேளாய் மன்னா!
கேளாய் மன்னா!...
தீராக் கதையை, கேட்போர் உண்டோ?... கேளாய் மன்னா!!
கேளாய் மன்னா!!...

கணியர் கணித்த கணக்குபடி நாம்; காணும் உலகிது, வட்டப்பந்தாம்!
வட்டப்பந்தாம்... ஓ ஓ ஓ ! வட்டப்பந்தாம்... ஓ ஓ ஓ !!
வட்டப்பந்தை வட்டம...டிக்கும் மற்ற பந்தும்; போகும் மாண்டே!
போகும் மாண்டே... ஓ ஓ ஓ ! போகும் மாண்டே... ஓ ஓ ஓ !!

புதன், மே 27, 2015

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 5



கேள்வி: முத்தத்தின்... ஆசானே! முனிவராய், செய்தாயோ?! லவ்வா...? லவ்வா...?

(அட்டகாசமான) பதில்:

புதிதான...!
புதிதான - வேலைக்கு "பிள்ளையார் சுழி"தான்...
முத்தம்! வாடி லவ்வா...!!

செவ்வாய், மே 26, 2015

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 4



பிரிந்தவர் கூடினால்... பேசவும் வேண்டுமா?!
மோகத்தை சொல்லிட... மொழியும் ஓர்-தடை ஆகுமோ?!
"இசையின் காலம்" கணிக்கும்-தாளம், போல... என்னுடன் கலக்க வா!
இன்ப-மலையின் சிகரம் சேர்க்க; கொஞ்சி, கொஞ்சி "என் செவியில்" பேசிடும்...

காதலாம்... கடவுள்-முன்!
கண்களாம்... கோவில்-இல்!
தேகத்தின் தாகமே...
ஆராதனை! ஆராதனை!!

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 3



காமமாம் கடும்புனல்... கடந்திடும் படகிது!
ஆசையாம் பாய்மரம்... அமைந்ததோர் படகிது!!
கரையைத் தேடி அலையும் நேரம்; உயிரும் மெழுகாய் உருகுதே!!!
வீணையை மீட்டும் விரல்கள் போலே - சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழ்திடும்...

காதலாம்! ம்ம்ம்ஹாம்... கண்களாம்!! ம்ம்ம்ஹாம்...

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 2



அரசியல்வாதியவன் உண்மையை சொன்னார்ப்போல்...

"அதிசயம்" நானும் கண்டேன்!

"உத்தம வில்லனின்" தத்துவ சொல்லல் - 1



"வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்" சாவையும் வேண்டி; செத்த கதைகள்...

"ஆயிரம் உண்டு"!

திங்கள், பிப்ரவரி 23, 2015

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!



       கடந்த 19-ஆம் தேதி முதன்முதலாய் A9Radio என்ற இணைய-வானொலியில் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!" என்ற பாடலைக்  கேட்டேன். கேட்க ஆரம்பித்தபோதே பிடித்துவிட்ட அந்த பாடல்,  2010-இல் வெளியான "தென்மேற்கு பருவக்காற்று" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது என்பதை உடனே இணையத்தின் உதவியால் தெரிந்துகொண்டேன். அந்த பாடலை உடனே பதிவிறக்கமும் செய்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்/இருக்கிறேன்.

   அம்மாவின் உயர்வையும்/தியாகத்தையும் எளிமையான வரிகளில் உணர்த்தும் அருமையான பாடல்! 

   அந்த பாடலை வாட்ஸ்-ஆப்பில் சில நட்புகளுக்கும் பகிர்ந்திருந்தேன்! என்ன அதிசயம்? அவர்களில் ஒருவர் தவிர வேறெவரும் அந்த பாடலை இதுவரை கேட்டதில்லை என்று அறிந்தேன். இம்மாதிரியான ஒரு பாடல்; இன்னமும் தெரியாமல் இருக்கும் பலரையும் சென்ற சேரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இங்கே பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் பிடித்திருப்பின்; பகிருங்கள் உங்கள் நெருங்கிய வட்டத்திலும்!

பின்குறிப்பு: முன்பே கேட்டிருப்போர், இதைப் பொருட்படுத்தவேண்டாம்! 

சிறிய வார்த்தைகளுள் பெரிய வலி...



  "என்னை அறிந்தால்" என்ற தமிழ் திரைப்படத்தில் "ஈஷாவுக்கு அப்புறம் நமக்கு வேற குழந்தைகளே வேண்டாம்! என்ன... மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி போகவேண்டி வரும்!" என்ற வசனம் ஒன்று வரும். பலருக்கும், இது சாதாரணமான வசனமாய் தோன்றியிருக்கும்! அந்த சிறிய வார்த்தைகளுள் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய வலியை/அந்த வசனம் தரும் புரிதலை; எத்தனை பேர் யோசித்திருப்பர் என்று எனக்கு தெரியவில்லை! அதை, இப்படியொரு பதிவாய் பதியவேண்டும் என்று தோன்றியது. 

   அஜித் மாதிரி ஒரு நடிகர் இதை "ஒப்புக்கொண்டு" பேசியிருப்பது தனிச்சிறப்பு! அதுபோலவே, த்ரிஷா போன்ற நடிகை அந்த காட்சியில் இடம்பெற்று இருப்பதும்!!

    தமிழ் திரைப்படவேண்டும் இதுபோன்ற கூறிய வசனங்களை மேலும் கையாளவேண்டும் என்பது என் ஆவல்! காதல்/காமம் இவற்றின் மேலிருக்கும் நம் புரிதல் மென்மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அதுபோலவே, காதலும் காமமும் எப்படி இயல்பாய் கலக்கவேண்டும் என்று நான் எழுதியதும் இன்னும் பலரை சென்றடையும் என்றும் நம்புகிறேன்.   

வெள்ளி, டிசம்பர் 12, 2014

லிங்கா - சிங்கமும்; சிங்கிள்-உம்...


{லிங்கா படம் பார்க்கும் முன்னேயே; விமர்சனம் கேட்டே, என்னுள் எழுந்த பஞ்ச்!!!}

சிங்கிளா வர்றது எல்லாம் சிங்கமும் இல்லை!
சிங்கம் சிங்கிளாத்தான் வர்றனம்னு அவசியமும் இல்லை!!

ஏன்னா... 

"லிங்கா"வுல சிங்கம் "டபுளா(வும்)" வந்திருக்கு!!!