பால்: 3 - காமம்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச்
செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?
யாதுசெய் வேன்கொல் விருந்து
விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச்
செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
(அது போல்...)
பேரிடரால் வாடும் எமக்கு உறுதியாக, மீள்வாழ்வின் ஆரம்ப உதவியோடு வந்த புது தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?
1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்
விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்;
கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை
எடுத்துரைப்பேன்!
ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!
உயலுண்மை சாற்றுவேன் மன்
விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்;
கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை
எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!
1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது
காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?
காண்டலின் உண்டென் உயிர்
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது
காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?
1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்;
கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?
நல்காரை நாடித் தரற்கு
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்;
கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?
1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே;
கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!
கண்ட பொழுதே இனிது
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே;
கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!
1216. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது
இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!
காதலர் நீங்கலர் மன்
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது
இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!
1217. நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன
காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?
என்எம்மைப் பீழிப் பது
விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன
காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?
1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும்
போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும்
போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!
1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்
விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்;
நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!
காதலர்க் காணா தவர்
விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்;
நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!
1220. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்
விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும்
இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?
காணார்கொல் இவ்வூ ரவர்
விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும்
இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?