“எண்பது” என்பது
எம்பலருக்கும் எட்டாதது!
“எண்பதை” என்புஅதை
எச்சிதைவும் இன்றியே
எட்டியிருக்கும் என்னப்பனே!
ஒன்பது - நவம்பரின்று
"எண்பது" முடிந்தது
என்பது, எம்யார்க்கும்
எண்ணிலடங்கா பெருமையே!
எண்ணிக்கை தொடரட்டும்!
எமைப்பெற்ற எம்மப்பனே
எஞ்சியிருக்கும் எந்நாளும்
எக்கவலையும் இன்றியே
எழுச்சியுடன் வாழ்வீர்!
எழுபிறப்பிலும் எம்மப்பனாவீர்!