"அழுத்திட்டம்பா! இருங்க, 'கட்' ஆயிடும்!!" என்றாள் என் மகள். எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்; ஒன்று! அவள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் வேகம்; மற்றொண்டு அவள் கற்றவைகளை ஒப்பிடும் அறிவு. நேற்று நானும் என்மகளும் கணினி வழியே வழக்கம்போல் (சனிக்கிழமை) "ஸ்கைப்பில்" உரையாடிக்கொண்டு இருந்தோம்; அவ்வப்போது நடப்பது போல் திடீரென "ஸ்கைப்பில்" காணொளி நின்றுவிட்டது. எப்போதாவது மதியம் உறங்கும் என்னவளை - எழுப்ப சொல்லிட எனக்கு மனமில்லை; ஆயினும், என் மகளை நான் பார்க்கவேண்டும். என் மகளுக்கு ஸ்கைப்பில் என்ன செய்வதென்றே தெரியாது; ஆனால், அவள் சகலத்தையும் கவனிப்பாள் என்பது தெரியும். எனவே, என் மகளிடம் "கர்ஸரை கொண்டு வீடியோ போன்று இருப்பதை "க்ளிக் செய்" என்றேன்; அவளுக்கு சரியாய் புரியவில்லை. ஒரு ஸ்கொயர் (அவளுக்கு தெரிந்தது); அதன் பக்கத்தில் ஸ்பீக்கர் (இதுவும் அவளுக்கு தெரிந்தது) போன்று ஒன்று இருக்கும் - அதை க்ளிக் செய் என்றேன்".
அவள் செய்துவிட்டேன் என்றாள்; என்னால் நம்பமுடியவில்லை! சிறிது நேரம் கழித்து "வீடியோ" வந்தது; எனக்கு பெருத்த மகிழ்ச்சி; "சூப்பர் விழிக்குட்டி! இந்த பாப்பா எல்லாத்தையும் கரெக்டா செய்யுதே!" என்று மகிழ்ந்தேன். ஓர் அரை-மணி நேரம் கழித்து எனக்கு உறக்கம் வருவதை பார்த்து "சரி நீங்கள் போய் படுங்கள்" (நிஜமாகவே, 4 வயதா மகளே உனக்கு??!!) என்றாள். அவளிடம் "டிஸ்கனெக்ட்" செய்வது எப்படி என்று கூறி, செய்ய சொன்னேன்; அவள் "அழுத்திட்டம்பா! இருங்க, 'கட்' ஆயிடும்!!" என்றாள்; வீடியோ சிறிது தாமதித்து வந்தது போன்றே "சற்று தாமதித்து, கட் ஆகிடும்" என்பது அவளின் புரிதல். மீண்டும், சொன்னேன்; உடனே "கட்" ஆகிவிட்டது. நான், பெருத்த சந்தோசத்துடன் "சூப்பர் விழி!" என்று கத்தினேன்; பின்னர்தான் புரிந்தது - நான் சொன்னதை அவள் கேட்டிருக்க முடியாதென்று. மாலை அலைபேசியில் அழைத்து சொல்லலாம் என்றெண்ணி பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்; இதை என்மகளிடம் சொல்லாது இங்கே இப்படி எழுதுகிறேன்...

மறுப்பேதுமின்றி - இதுவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கிறது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக