சனி, டிசம்பர் 31, 2016

குறள் எண்: 0517 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0517}

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

விழியப்பன் விளக்கம்: குறிப்பிட்ட வினையை, குறிப்பிட்ட இயல்பால் - குறிப்பிட்ட நபர், செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து; அந்த வினையை, அவர்வசம் ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
தகுதியான உறவை, தகுதியான திறனால் - தகுதியான சுற்றத்தார், வழிநடத்திச் செல்வர் என்பதை உணர்ந்து; அந்த உறவை, அவர்களுடன் இணைத்தல் வேண்டும்.

வெள்ளி, டிசம்பர் 30, 2016

குறள் எண்: 0516 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0516}

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

விழியப்பன் விளக்கம்: வினையின் தன்மையோடு, அதைச் செய்வோரின் திறமையையும் ஆராய்ந்து; அவ்வினைக்கு சாதகமான காலத்தையும், உணர்ந்து செயல்படவேண்டும்.
(அது போல்...)
உறவின் இயல்போடு, உறவில் இணைவோரின் இயல்பையும் உணர்ந்து, அவ்வுறவு பலப்படும் காரணிகளையும், ஆராய்ந்து அணுகவேண்டும்.

வியாழன், டிசம்பர் 29, 2016

குறள் எண்: 0515 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0515}

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து, நிறைவேற்றும் திறனுடையோரைத் தவிர்த்து; சார்ந்திருக்கும் ஒருவரைச் சிறந்தவரென, வினைகளைச் செய்ய நியமித்தல் முறையன்று.
(அது போல்...)
தவறுகளை நடுநிலையோடு, தண்டிக்கும் இயல்புடையோரை விடுத்து; வேண்டியவர் ஒருவரை நியாயவாதியென, நீதியை வழங்க பதவியளித்தல் சரியல்ல.

புதன், டிசம்பர் 28, 2016

குறள் எண்: 0514 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0514}

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

விழியப்பன் விளக்கம்: அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, தெளிவடைந்தவர் ஆயினும்; வினைகளைச் செய்து முடிக்கும் திறனால், வலுவிழக்கும் மக்கள் பலருண்டு.
(அது போல்...)
அனைத்து நூல்களையும் கற்றறிந்து, உரையெழுதியவர் எனினும்; பாடங்களை ஆழ்ந்து கற்பிக்கும் வகையால், தோல்வியுறும் குருக்கள் பலருண்டு.

செவ்வாய், டிசம்பர் 27, 2016

குறள் எண்: 0513 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0513}

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

விழியப்பன் விளக்கம்: அன்பு/அறிவு/தெரிந்து தெளியும் திறன்/பேராசை இல்லாமை - இந்நான்கு நற்குணங்களையும் உடையவரைக் கண்டறிந்து, வினைகளை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
உண்மை/ஒழுக்கம்/உறவை மதிக்கும் குணம்/காழ்ப்புணர்ச்சி இல்லாமை - இந்நான்கு நற்பண்புகளை இருப்போரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைப் பேணுதல் வேண்டும்.

திங்கள், டிசம்பர் 26, 2016

குறள் எண்: 0512 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0512}

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

விழியப்பன் விளக்கம்: இடையூறுகளை ஆராய்ந்து தகர்த்து, வருவாயைப் பெருக்கி; வளத்தை மேம்படுத்தும் திறனுடையவரிடம், வினைகளை ஒப்படைத்தல் வேண்டும்.
(அது போல்...)
விளைவுகளை அறிந்து முற்காத்து, சிந்தனையை தெளிவாக்கி; கற்பித்தலை மேற்கொள்ளும் குருவிடம், நம்மை சேர்ப்பிக்க வேண்டும்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2016

குறள் எண்: 0511 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0511}

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

விழியப்பன் விளக்கம்: நன்மை/தீமை இரண்டையும் ஆராய்ந்து; நன்மையை மட்டுமே செய்யும் இயல்பினரிடம், வினைகளை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
நியாயம்/அநியாயம் இரண்டையும் உணர்ந்து; நியாயமாய் மட்டுமே வியாபாரம் செய்பவரிடம், பொருட்களை வாங்க வேண்டும்.
*****

சனி, டிசம்பர் 24, 2016

அதிகாரம் 051: தெரிந்து தெளிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்

0501.  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
           திறந்தெரிந்து தேறப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
"அறம்/உடைமை/இன்பம் மற்றும் உயிர்பயம்" - இந்நான்கு 
           காரணிகளின் திறத்தை அறிந்த பின்னரே, ஒருவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
           "அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை மற்றும் நிலையாமை" -  இந்நான்கு காரணிகளின் 
           தேவையை உணர்ந்த பின்பே, ஓருறவில் இணைதல் வேண்டும்.
        
0502.  குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
           நாணுடையான் சுட்டே தெளிவு

           விழியப்பன் விளக்கம்: 
அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து/குற்றங்களைக் களைந்து/
           பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சி நாணுவோரை  - தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
           சமமுணர்ந்த கொள்கையில் ஒன்றுபட்டு/ஊழலை எதிர்த்து/அறமழிக்கும் கூட்டணியைத் 
           தவிர்த்துப் போராடுவோரை - அறிந்து போற்ற வேண்டும்.
           
0503.  அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
           இன்மை அரிதே வெளிறு

           விழியப்பன் விளக்கம்: 
அரிதான விடயங்களைக் கற்ற, குற்றமற்ற சான்றோர்களைத் தெரிந்து
           தெளிந்தால்; அவர்களும், அறியாமை இல்லாமல் இருப்பது அரிதானது என்பது புரியும்.
(அது போல்...)
           நல்ல பழக்கங்களைப் பழகிய, தீமையற்ற நல்லோரிடம் நெருங்கிப் பழகினால்; 
           அவர்களுக்கும், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை எனத் தெரியும்.

0504.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
           மிகைநாடி மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவரின் நற்குணங்கள் மற்றும் தீயசெயல்கள் இரண்டையும் 
           ஆழமாய் ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
           ஓராட்சியின் பொதுச்சேவை மற்றும் சுயநலம் இரண்டையும் நடுநிலையோடு அலசி; 
           அவற்றுள் அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.

0505.  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
           கருமமே கட்டளைக் கல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவரின் மேன்மை குணத்திற்கும் மற்றும் சிறுமை குணத்திற்கும்; 
           அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத் தெரிந்து, பின்னர் தெளிவடைதல் 
           வேண்டும்.
(அது போல்...)
           சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் மற்றும் தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனிநபரின் 
           ஒழுக்கமே காரணி என்பதை உணர்ந்து, பிறகு விமர்சித்தல் வேண்டும்.

0506.  அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
           பற்றிலர் நாணார் பழி

           விழியப்பன் விளக்கம்: 
அறம்சார் பயமில்லாதோர், எந்தப் பற்றும் இல்லாததால் எப்பழிக்கும் 
           அஞ்சமாட்டர்! எனவே, அவர்களை நம்பித் தெளிவு கொள்ளலாகாது.
(அது போல்...)
           வாய்மையின் பலமறியாதோர், எந்த உறுதியும் இல்லாததால் எதற்கும் தயங்கமாட்டர்! 
           ஆதலால், அவர்களுடன் தொடர்ந்து உறவாடுதல் தவறானது.

0507.  காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
           பேதைமை எல்லாந் தரும்


           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும் 
           அன்பால் நம்புவது; எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
           மனித அடிப்படையை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால் தொடர்வது; 
           அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.

0508.  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
           தீரா இடும்பை தரும்
           
           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், பலர் சொல்வதை வைத்து, பிறரைத் தெளிவோரின் 
           பின்பற்றாளர்களும்; தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவிப்பர்.
(அது போல்...)
           சிந்திக்காமல், புறக் காரணிகளைப் பார்த்து ஓருறவில் இணைவோரின் சந்ததியரும்; 
           சீர்படுத்த முடியாத ஒழுங்கீனத்தைக் கொண்டிருப்பர்.

0509.  தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
           தேறுக தேறும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: 
தெரியாத எவரையும், ஆராயாமல் தெளியக்கூடாது! அப்படி 
           நேர்ந்தால்; தெளிவதற்குத் தேவையானக் காரணிகளை ஆராய்ந்து, தெளிதல் வேண்டும்!
(அது போல்...)
           முறையற்ற உறவை, உணராமல் ஏற்கக்கூடாது! அப்படி நேர்ந்திடின், ஏற்பதற்குத் 
           தேவையானத் தகுதிகளை அலசி, ஏற்றதை ஆயவேண்டும்.

0510.  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
           தீரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: 
ஆராயாமல் ஒருவரை நம்புவது மற்றும் நம்பிய ஒருவரை சந்தேகம் 
           கொள்வது - இரண்டும்,  தீர்க்கமுடியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
           யோசிக்காமல் ஓருறவில் இணைவது மற்றும் இணைந்த உறவை ஆழ்ந்து யோசிப்பதும் - 
           இரண்டும், முடிவற்ற சிக்கலை உருவாக்கும்.
*****

குறள் எண்: 0510 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0510}

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் ஒருவரை நம்புவது மற்றும் நம்பிய ஒருவரை சந்தேகம் கொள்வது - இரண்டும்,  தீர்க்கமுடியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
யோசிக்காமல் ஓருறவில் இணைவது மற்றும் இணைந்த உறவை ஆழ்ந்து யோசிப்பதும் - இரண்டும், முடிவற்ற சிக்கலை உருவாக்கும்.
*****

வெள்ளி, டிசம்பர் 23, 2016

குறள் எண்: 0509 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0509}

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

விழியப்பன் விளக்கம்: தெரியாத எவரையும், ஆராயாமல் தெளியக்கூடாது! அப்படி நேர்ந்தால்; தெளிவதற்குத் தேவையானக் காரணிகளை ஆராய்ந்து, தெளிதல் வேண்டும்!
(அது போல்...)
முறையற்ற உறவை, உணராமல் ஏற்கக்கூடாது! அப்படி நேர்ந்திடின், ஏற்பதற்குத் தேவையானத் தகுதிகளை அலசி, ஏற்றதை ஆயவேண்டும்.
*****

வியாழன், டிசம்பர் 22, 2016

குறள் எண்: 0508 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0508}

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், பலர் சொல்வதை வைத்து, பிறரைத் தெளிவோரின் பின்பற்றாளர்களும்; தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவிப்பர்.
(அது போல்...)
சிந்திக்காமல், புறக் காரணிகளைப் பார்த்து ஓருறவில் இணைவோரின் சந்ததியரும்; சீர்படுத்த முடியாத ஒழுங்கீனத்தைக் கொண்டிருப்பர்.
*****

புதன், டிசம்பர் 21, 2016

குறள் எண்: 0507 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0507}

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும் அன்பால் நம்புவது; எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
மனித அடிப்படையை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால் தொடர்வது; அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.
*****

செவ்வாய், டிசம்பர் 20, 2016

குறள் எண்: 0506 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0506}

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

விழியப்பன் விளக்கம்: அறம்சார் பயமில்லாதோர், எந்தப் பற்றும் இல்லாததால் எப்பழிக்கும் நாணமாட்டர்! எனவே, அவர்களை நம்பித் தெளிவு கொள்ளலாகாது.
(அது போல்...)
வாய்மையின் பலமறியாதோர், எந்த உறுதியும் இல்லாததால் எதற்கும் தயங்கமாட்டர்! ஆதலால், அவர்களுடன் தொடர்ந்து உறவாடுதல் தவறானது.
*****

திங்கள், டிசம்பர் 19, 2016

குறள் எண்: 0505 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0505}

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் மேன்மை குணத்திற்கும் மற்றும் சிறுமை குணத்திற்கும்; அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத் தெரிந்து, பின்னர் தெளிவடைதல் வேண்டும்.
(அது போல்...)
சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் மற்றும் தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனிநபரின் ஒழுக்கமே காரணி என்பதை உணர்ந்து, பிறகு விமர்சித்தல் வேண்டும்.
*****

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

குறள் எண்: 0504 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0504}

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் நற்குணங்கள் மற்றும் தீயசெயல்கள் இரண்டையும் ஆழமாய் ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
ஓராட்சியின் பொதுச்சேவை மற்றும் சுயநலம் இரண்டையும் நடுநிலையோடு அலசி; அவற்றுள் அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.
*****

சனி, டிசம்பர் 17, 2016

குறள் எண்: 0503 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0503}

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

விழியப்பன் விளக்கம்: அரிதான விடயங்களைக் கற்ற, குற்றமற்ற சான்றோர்களைத் தெரிந்து தெளிந்தால்; அவர்களும், அறியாமை இல்லாமல் இருப்பது அரிதானது என்பது புரியும்.
(அது போல்...)
நல்ல பழக்கங்களைப் பழகிய, தீமையற்ற நல்லோரிடம் நெருங்கிப் பழகினால்; அவர்களுக்கும், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை எனத் தெரியும்.
*****

வெள்ளி, டிசம்பர் 16, 2016

நம்மைப் பெற்றவளும்; நம்-பிள்ளைகளைப் பெற்றவளும்...


என்னைப் பெற்றவளும்
என்மகளைப் பெற்றவளும்
வெவ்வேறென முடியுமோ?
அவ்வாதம் முறையோ?

என்னுயிரும் என்மகளின்
இன்னுயிரும் ஒன்றெனில்;
என்னையும் அவளையும்
ஈன்றோரும் ஒன்றன்றோ?

உயிராலும் உடலாலும்
உறவாலும் பிரிந்திடினும்
உணர்வாலும் உரிமையாலும்
இணையானோர் இருவருமே!

நம்மைப் பெற்றவளோ
நம்-பிள்ளைகளைப் பெற்றவளோ
அம்மாவெனில் அம்மாவே
எம்மாதாவும் நம்மாதாவே!

பெற்றவள் இருபாலரும்
ஒற்றவள் என்றென்போம்!
இருவரையும் எந்நாளும்
கருத்துடனே காத்திடுவோம்!

குறள் எண்: 0502 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0502}

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு

விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து/குற்றங்களைக் களைந்து/பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சி நாணுவோரை  - தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
சமமுணர்ந்த கொள்கையில் ஒன்றுபட்டு/ஊழலை எதிர்த்து/அறமழிக்கும் கூட்டணியைத் தவிர்த்துப் போராடுவோரை - அறிந்து போற்ற வேண்டும்.
*****

வியாழன், டிசம்பர் 15, 2016

குறள் எண்: 0501 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0501}

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

விழியப்பன் விளக்கம்: "அறம்/உடைமை/இன்பம் மற்றும் உயிர்பயம்" - இந்நான்கு காரணிகளின் திறத்தை அறிந்த பின்னரே, ஒருவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
"அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை மற்றும் நிலையாமை" -  இந்நான்கு காரணிகளின் தேவையை உணர்ந்த பின்பே, ஓருறவில் இணைதல் வேண்டும்.
*****

புதன், டிசம்பர் 14, 2016

அதிகாரம் 050: இடனறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்

0491.  தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
           இடங்கண்ட பின்அல் லது

           விழியப்பன் விளக்கம்: முழுமையடையச் சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், 

           எச்செயலையும் துவங்கக்கூடாது! அதுபோல், எளிதென எண்ணி இகழ்ச்சியாகவும் 
           எண்ணக்கூடாது!
(அது போல்...)
           மக்களாட்சிக்குத் தேவையானக் காரணியை ஆழ்ந்துணராமல், எக்கட்சியையும் 
           ஏற்கக்கூடாது! அதுபோல், சரியென நினைத்து நிராகரிக்கவும் செய்யக்கூடாது!
        
0492.  முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
           ஆக்கம் பலவுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: கையைச் சேர்த்த, வலிமையான வீரர்களுக்கும்; பாதுகாப்பான 

           இடத்தைச் சேரும் திறன், பல்வகைப் பலன்களை அளிக்கும்.
(அது போல்...)
           வாழ்க்கையை இழந்த, சக்திவாய்ந்த வாக்காளர்களுக்கும்; சரியான நேரத்தில் எதிர்க்கும் 
           யுக்தி, பல்வகை மாற்றங்களை உருவாக்கும்.
           
0493.  ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
           போற்றார்கண் போற்றிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தக்க பாதுகாப்புடன் 

           பகைவர்களை எதிர்கொண்டால்; வலிமை இல்லாதவரும், வலிமை கொண்டு வெல்லமுடியும்.
(அது போல்...)
           முறையான தலைமையை ஏற்றுக்கொண்டு, வைராக்கியமான மனதுடன் ஊழலாரை 
           எதிர்த்தால்; அதிகாரம் இல்லாதோரும், அதிகாரம் கொண்டு சாதிக்கமுடியும்.

0494.  எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
           துன்னியார் துன்னிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: தகுதியுடையோர், சாதகமான இடத்தை அறிந்து, தகுதியானச் 

           செயல்களைச் செய்தால்; அவர்களை அழிக்க எண்ணியோர், தம் எண்ணத்தை மாற்றுவர்.
(அது போல்...)
           நற்குணத்தோர், ஆரோக்கியமான உடம்பை விரும்பி, நன்மையானப் பழக்கங்களைப் 
           பழகினால்; அவருள் இருக்கும் கிருமிகள், தம் செயல்திறனை இழக்கும்.

0495.  நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
           நீங்கின் அதனைப் பிற

           விழியப்பன் விளக்கம்: ஆழமான நீரில் இருப்பின், முதலை எல்லா உயிர்களையும் 

           வெல்லும்; நீரிலிருந்து வெளியே வந்தால், பிற உயிர்கள் முதலையை வெல்லும்.
(அது போல்...)
           அதீதமான ஆடம்பரமுடன் இருப்பின், ஒருவர் அனைத்து உறவுகளையும் அவமதிப்பர்; 
           ஆடம்பரம் அனைத்தையும் இழந்துவிட்டால், மற்ற உறவுகள் அவர்களை அவமதிப்பர்.

0496.  கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
           நாவாயும் ஓடா நிலத்து

           விழியப்பன் விளக்கம்: உறுதியான சக்கரங்களைக் கொண்ட உயர்ந்த தேரால், கடலில் 

           பாய்ந்து செல்லமுடியாது; கடலில் பாய்ந்து செல்லும் கப்பலாலும், நிலத்தில் 
           உருளமுடியாது.
(அது போல்...)
           திடமான உடலைக் கொண்ட மல்யுத்த வீரரால், வளைந்து யோகா செய்யமுடியாது; 
           வளைந்து யோகா செய்வோராலும், மல்யுத்தம் செய்யமுடியாது.

0497.  அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
           எண்ணி இடத்தால் செயின்

           விழியப்பன் விளக்கம்: நிலுவை வைக்காத உறுதியுடன், இடத்தைக் கணித்து 

           செயல்களைச் செய்தால்; அஞ்சாமை எனும் துணையின்றி, வேறு துணையேதும் வேண்டாம்.
(அது போல்...)
           பிரிந்து செல்லாத திடத்துடன், உரிமைகளைப் பகிர்ந்து உறவுகளைப் பேணினால்; பாசம் 
           எனும் பிணைப்பின்றி, வேறு பிணைப்பேதும் வேண்டாம்.

0498.  சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
           ஊக்கம் அழிந்து விடும்

           விழியப்பன் விளக்கம்: சிறிய படையைக் கொண்டோர், திறமையனைத்தும் வெளிப்படும் 

           இடத்தைச் சேர்ந்திடின்; பெரிய படையை உடையவரின், மனத்திடம் சிதைந்து விடும்.
(அது போல்...)
           வறுமையான நிலையில் இருப்போர், அறமனைத்தையும் பின்பற்றும் உறுதியைக் 
           கொண்டால்; அதீத பணபலம் கொண்டோரின், செல்வாக்கு மதிப்பற்று போகும்.

0499.  சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
           உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நன்மையளிக்கும் அரணும், சிறப்பான படைவீரர்களும் இல்லாது 

           இருப்பினும்; சொந்த நிலத்தில் மக்களோடு இணைந்து இருப்போரை, தாக்குதல் எளிதல்ல.
(அது போல்...)
           பரிசளிக்கும் வசதியும், வலுவான வரலாறும் இல்லாமல் இருந்தாலும்; மக்கள் நலனுக்காக 
           உண்மையைத் தொடர்ந்து பயணிப்போரை, தடுத்தல் எளிதல்ல.

0500.  காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
           வேலாள் முகத்த களிறு

           விழியப்பன் விளக்கம்: வேலேந்திய வீரர்களை கண்களில் அச்சமின்றி, தாக்கவல்ல ஆண் 

           யானையை; சேற்றில் கால் புதையுண்டு இருக்கும்போது, நரி கூட கொன்றுவிடும்.
(அது போல்...)
           பகையுள்ள உறவுகளை உணர்வுகளில் பேதமின்றி, அரவணைக்கும் திட உள்ளத்தை; 
           சூழலின் பிடியில் சிக்கி இருக்கும்போது, பொய் கூட சிதைத்துவிடும்.
*****

குறள் எண்: 0500 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0500}

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

விழியப்பன் விளக்கம்: வேலேந்திய வீரர்களை கண்களில் அச்சமின்றி, தாக்கவல்ல ஆண் யானையை; சேற்றில் கால் புதையுண்டு இருக்கும்போது, நரி கூட கொன்றுவிடும்.
(அது போல்...)
பகையுள்ள உறவுகளை உணர்வுகளில் பேதமின்றி, அரவணைக்கும் திட உள்ளத்தை; சூழலின் பிடியில் சிக்கி இருக்கும்போது, பொய் கூட சிதைத்துவிடும்.
*****

செவ்வாய், டிசம்பர் 13, 2016

குறள் எண்: 0499 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0499}

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

விழியப்பன் விளக்கம்: நன்மையளிக்கும் அரணும், சிறப்பான படைவீரர்களும் இல்லாது இருப்பினும்; சொந்த நிலத்தில் மக்களோடு இணைந்து இருப்போரை, தாக்குதல் எளிதல்ல.
(அது போல்...)
பரிசளிக்கும் வசதியும், வலுவான வரலாறும் இல்லாமல் இருந்தாலும்; மக்கள் நலனுக்காக உண்மையைத் தொடர்ந்து பயணிப்போரை, தடுத்தல் எளிதல்ல.
*****

திங்கள், டிசம்பர் 12, 2016

குறள் எண்: 0498 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0498}

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

விழியப்பன் விளக்கம்: சிறிய படையைக் கொண்டோர், திறமையனைத்தும் வெளிப்படும் இடத்தைச் சேர்ந்திடின்; பெரிய படையை உடையவரின், மனத்திடம் சிதைந்து விடும்.
(அது போல்...)
வறுமையான நிலையில் இருப்போர், அறமனைத்தையும் பின்பற்றும் உறுதியைக் கொண்டால்; அதீத பணபலம் கொண்டோரின், செல்வாக்கு மதிப்பற்று போகும்.
*****

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

குறள் எண்: 0497 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0497}

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

விழியப்பன் விளக்கம்: நிலுவை வைக்காத உறுதியுடன், இடத்தைக் கணித்து செயல்களைச் செய்தால்; அஞ்சாமை எனும் துணையின்றி, வேறு துணையேதும் வேண்டாம்.
(அது போல்...)
பிரிந்து செல்லாத திடத்துடன், உரிமைகளைப் பகிர்ந்து உறவுகளைப் பேணினால்; பாசம் எனும் பிணைப்பின்றி, வேறு பிணைப்பேதும் வேண்டாம்.
*****