பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்
0481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
விழியப்பன் விளக்கம்: வலிமையானக் கோட்டானைக், காகம் பகலில் வெல்வது போல்;
எதிரியை வெல்ல, அரசரும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
விழியப்பன் விளக்கம்: வலிமையானக் கோட்டானைக், காகம் பகலில் வெல்வது போல்;
எதிரியை வெல்ல, அரசரும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(அது போல்...)
கடுமையான மழைக்காலத்திற்கு, முன்பே திட்டமிடும் எறும்பைப் போல்; முதுமையை
வெல்ல, நாமும் முறையான திட்டத்தை வகுக்க வேண்டும்.
வெல்ல, நாமும் முறையான திட்டத்தை வகுக்க வேண்டும்.
0482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
விழியப்பன் விளக்கம்: காலத்தை உணர்ந்து, காலத்தோடு இணைந்து செயல்படுவதே;
செயலால் கிடைக்கும் செல்வத்தை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும்.
தீராமை ஆர்க்குங் கயிறு
விழியப்பன் விளக்கம்: காலத்தை உணர்ந்து, காலத்தோடு இணைந்து செயல்படுவதே;
செயலால் கிடைக்கும் செல்வத்தை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
(அது போல்...)
உறவைப் புரிந்து, உறவோடுப் பிணைந்து பயணப்படுவதே; உறவால் தொடரும் சந்ததியை, துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும்.
0483. அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
விழியப்பன் விளக்கம்: செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் காலமறிந்து
செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
காலம் அறிந்து செயின்
விழியப்பன் விளக்கம்: செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் காலமறிந்து
செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
(அது போல்...)
ஈட்டும் பொருளை, நிலையான திட்டங்களுடன் அளவறிந்து சேமிக்கும் வல்லவர்களுக்கு;
சமாளிக்க முடியாத, சூழலேதும் வந்திடுமோ?
0484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
விழியப்பன் விளக்கம்: காலத்தை அறிந்து, தக்க சூழலில் செயலை மேற்கொண்டால்;
உலகையே வெல்ல நினைத்தாலும், எளிதில் நிறைவேறும்.
எண்ணினாலும், எளிதில் அடையலாம்.
கருதி இடத்தாற் செயின்
விழியப்பன் விளக்கம்: காலத்தை அறிந்து, தக்க சூழலில் செயலை மேற்கொண்டால்;
உலகையே வெல்ல நினைத்தாலும், எளிதில் நிறைவேறும்.
(அது போல்...)
சேமிப்பை உணர்ந்து, பாதுகாப்பான வழியில் முதலீடு செய்தால்; கிரகத்தையே வாங்கிட எண்ணினாலும், எளிதில் அடையலாம்.
0485. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
விழியப்பன் விளக்கம்: உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை ஏதுமின்றி;
உரிய காலத்தை எதிர்நோக்கி, பொறுமையுடன் காத்திருப்பர்.
ஞாலம் கருது பவர்
விழியப்பன் விளக்கம்: உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை ஏதுமின்றி;
உரிய காலத்தை எதிர்நோக்கி, பொறுமையுடன் காத்திருப்பர்.
(அது போல்...)
உணர்வை அடக்கியாள எண்ணுவோர், அதுகுறித்த பயம் இன்றி; தக்க பயிற்சியை
மேற்கொண்டு, வைராக்கியமுடன் செயல்படுவர்.
0486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
விழியப்பன் விளக்கம்: மனவுறுதி கொண்டோரின் காத்திருப்பு, சண்டைக்குத் தயாராகும்
ஆட்டுக்கடா; பலமாய் தாக்குவதற்காக, பின்னோக்கிச் செல்வது போன்றதாகும்.
தாக்கற்குப் பேருந் தகைத்து
விழியப்பன் விளக்கம்: மனவுறுதி கொண்டோரின் காத்திருப்பு, சண்டைக்குத் தயாராகும்
ஆட்டுக்கடா; பலமாய் தாக்குவதற்காக, பின்னோக்கிச் செல்வது போன்றதாகும்.
(அது போல்...)
அரசியல் பழகுவோரின் பொறுமை, வேட்டைக்குத் தயாராகும் புலி; துல்லியமாய்
பாய்வதற்காக, புதர்க்குள் மறைவது போன்றதாகும்.
0487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
விழியப்பன் விளக்கம்: அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு
வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள் சினத்தைக் கொண்டிருப்பர்.
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
விழியப்பன் விளக்கம்: அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு
வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள் சினத்தைக் கொண்டிருப்பர்.
(அது போல்...)
திறமுடையோர், தம்முடைய தோல்வியை உடனடியாய் அலசாமல்; மனநிலை இயல்பாகும்
வரை, இலக்கில் சிந்தனையைச் செலுத்துவர்.
0488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை
விழியப்பன் விளக்கம்: பகைவரைக் கண்டால், பகையுணர்வை வெளிப்படுத்தாமல் பொறுக்க
வேண்டும்; அவர்கள் அழிவைக் காணும்போது, நிலைமை நேர் எதிராகும்.
காணின் கிழக்காம் தலை
விழியப்பன் விளக்கம்: பகைவரைக் கண்டால், பகையுணர்வை வெளிப்படுத்தாமல் பொறுக்க
வேண்டும்; அவர்கள் அழிவைக் காணும்போது, நிலைமை நேர் எதிராகும்.
(அது போல்...)
அநீதிக்குப் பதில், அநீதியைச் செய்யாமல் தடுக்க வேண்டும்; அநீதியின் முடிவுக்காலம்
வரும்போது, நீதியின் தலை நிமிர்ந்திடும்.
0489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
விழியப்பன் விளக்கம்: கிடைப்பதற்கு அரிதான காலம் கிடைப்பின்; செய்வதற்கு அரிதான
செயல்களை, அக்கணமே செய்திடல் வேண்டும்.
தாமதமின்றிக் கற்றிடல் வேண்டும்.
செய்தற் கரிய செயல்
விழியப்பன் விளக்கம்: கிடைப்பதற்கு அரிதான காலம் கிடைப்பின்; செய்வதற்கு அரிதான
செயல்களை, அக்கணமே செய்திடல் வேண்டும்.
(அது போல்...)
சேர்வதற்கு அரிய குருவை சேர்ந்திடின்; கற்பதற்கு அரிதான அடிப்படைகளை, தாமதமின்றிக் கற்றிடல் வேண்டும்.
0490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
குத்தொக்க சீர்த்த இடத்து
விழியப்பன் விளக்கம்: சாதகமான காலத்திற்குக் காத்திருப்பது, கொக்குக்கு இணையாக
இருக்கவேண்டும்; மற்றும் சீர்மையான நேரத்தில் இறையைக் கொத்தும் அதன்
திறனைப்போல், செயல்களை முடிக்கவேண்டும்.
சரியான நேரத்தில் குஞ்சுகளை அணைக்கும் இயல்பைப்போல், உணர்ச்சிகளை
அடக்கவேண்டும்.
இருக்கவேண்டும்; மற்றும் சீர்மையான நேரத்தில் இறையைக் கொத்தும் அதன்
திறனைப்போல், செயல்களை முடிக்கவேண்டும்.
(அது போல்...)
ஆபத்தான நேரத்தைக் கணிப்பது, கோழிக்கு இணையாக இருக்கவேண்டும்; மேலும் சரியான நேரத்தில் குஞ்சுகளை அணைக்கும் இயல்பைப்போல், உணர்ச்சிகளை
அடக்கவேண்டும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக