விழியதுவில் உலகம் தெரியுமே!
விழியதுவே உலகாய் மாறுமோ?
மாறித்தான் போனதே எனக்குமே;
என்மகள் “விழி”யும் தானிங்குமே,
என்உலகாய் மாறிப் போனளே!
ஈரேழு உலகையும் மறைத்துமே;
என்மகளும் ஓர்உலகாய் தனித்தளே!
ஏழேழு ஜென்மமதை கடந்துமே,
எம்பந்தமும் உறுதியாய் தொடருமே!
என்உயிராய் என்றுமே தொடர்வளே!
என்உயிர் மகளுக்கு ஜூலை-இரண்டுமே;
இப்புவியில் புகுந்தநாள் ஆகுமே!
எப்படி சொல்லுவேன் வாழ்த்துமே?
சொல்லெலாம் செல்லாமல் போகுதே!
சொல்லெதும் தேவையோ வாழ்த்தவே?…
நானின்னும் உயிர்ப்புடன் இருப்பதே,
என்மகளை அனுதினமும் வாழ்த்தவே!
தனிவாழ்த்து எதற்கிங்கே இன்றுமே?
என்வாழ்வே அவளுக்கு வாழ்த்தாகுமே!
வாழ்வாங்கு வாழ்வாய் விழியமுதினியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக