என் கருத்துக்களை (பிழை பொறுத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!
ஞாயிறு, பிப்ரவரி 16, 2014
லைக்குகளின் எண்ணிக்கையா? பிரபலம்??
லைக்குகளின் எண்ணிக்கையா? பிரபலம்??
சில நாட்கள் முன்பு ஒருவரின் பதிவு வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன்! அந்த பதிவு "A4" அளவு தாளில் ஒரு "ஒன்றரை" பக்கம் இருக்கும்!! நான் 5 வரிகள் படித்திருந்த போது பதிவிட்டு "1 நிமிடம்" ஆவதாய் "பதிவின்-குறிப்பு" காட்டியது; ஆனால், அதற்குள் 11 "லைக்குகள்" விழுந்திருந்தது!! "ரோபோ ரஜினி" யால் கூட அவ்வளவு-வேகமாய் படித்திருக்க வாய்ப்பில்லை!
சிலநேரங்களில் "20 நிமிடத்துளிகளில் - 5/6 லைக்குகள்" என்றும் பார்ப்பதுண்டு! இவர்களில் யார் ஏமாற்றப்படுகிறார்கள்? பதிவிடுபவரா?? அல்லது "லைக்"குகிறவர்களா???
"லைக்" என்பது ஒருவரின் பதிவை "புகைப்படம் எனின் பார்த்தோ/கட்டுரை எனின் படித்தோ" அதை முழுதும்-உணர்ந்து பாராட்டும் "ஓர் அங்கீகாரம்" என்பதை எவர் உணர்த்துவது?
குறிப்பு: 300/400 "லைக்குகள்" வாங்கவேண்டும் என்ற என்-ஆசை; இப்போது "3/4" பேர்கள் நான் சொல்லவருவதை முழுதுமாய் உணர்ந்து "லைக்"கிட்டால் போதும் என்று தோன்றுகிறது!
ஞாயிறு, பிப்ரவரி 09, 2014
உறவுகளின் பலம்...
சென்றமுறை இந்தியா சென்றபோது ஓர் நிகழ்வு நடந்தது! என்மகளுக்காய் என் உறவுகளில் ஒன்று செய்த விசயம்! அந்த செயல் திரும்ப-திரும்ப நடைபெற்றதன் விளைவாய்; ஓர் பெரிய-நன்றி என்னுள் ஊற்றெடுத்தது. எப்போதும் உறவுகளின்பால் பெருமதிப்பு கொண்ட என்னுள்; அச்செயல் உறவுகளின்-பலம் பற்றிய எண்ணத்தை பன்மடங்கு உயர்த்தியது. அதை இப்படியொரு தலையங்கமாய் எழுதி என்நன்றியை மீண்டும் ஓர்முறை மிக-திண்மையாய் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது; அது என்கடமையும் கூட! செய்தி இதுதான்: கடந்த விடுமுறையில் என்மகளுடன் என்தமக்கை வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது என்மகளுக்கு; என்மருதமையனின் தம்பி-மனைவி பல-வேளைகள் சோறு-ஊட்டினார். அவர் வாழ்க்கைப்பட்டிருக்கும் விதத்தில் மட்டுமல்ல; உறவிலும் - அவர் என் சித்தப்பா-மகள்; எனக்கு தங்கை. அந்த சோறு-ஊட்டிய நிகழ்வு தான் என்னை அப்படி நெகிழ வைத்தது! அதற்காய் தான் இந்த நன்றி-தெரிவிக்கும் செயல்.
இதில் என்ன பெரிய-விசயம் என்று பலரும் வினவலாம்? பல உறவுகளும் இப்படித்தான் செய்யும் என்று எதிர்-வாதம் செய்யலாம். ஒரு தாய் செய்யாததா?! எனலாம்; ஓர்தாய் தன் குழந்தைக்கு செய்வது கடமை ஆகிறது. அது செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் விளைவது! அதற்காய், தாயின் செயலை நான் குறைத்து மதிப்பிடுவதாய் அர்த்தமன்று! தாயும், தந்தையும் செய்வது கடமை; அதில் மற்ற பெற்றோர்களைக் காட்டிலும் அதிகம் செய்கிறோம் என்று சிலருக்கு ஆனந்தம் இருக்கலாம்! ஆனாலும், அது அவர்களின் கடமை; என்தமக்கை அப்படி பலமுறை என்மகளுக்கு செய்திருக்கிறார். அது என்தமக்கையின் கடமை எனப்பொருள் கொள்ளலாம்; என் சிறுவயதில், என்தாயைப் போல் எனக்கு அதிகம்/பலதும் செய்தவர், என்தமக்கை! அதே அன்புதான் அவர் என்மகளிடம் காட்டுவதும்; அந்த செயலும் நன்றி சொல்லுதலுக்கு உரியதே! ஆனாலும், அப்படி சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றியதில்லை! மாறாய், அது அவசியமில்லை என்று தோன்றும்.
18-மாத குழந்தையாய் என்மகளை நான் தனியாய் 13-மணி நேரம் விமானப்பயணம் செய்து இந்தியா கொண்டுசென்றேன் என்பதை முன்பே கூறியுள்ளேன். அவள் "லிஸ்பன் விமான நிலையத்தில்" இருந்து நாங்கள் கிளம்பும் முன்-வரை "தாய்ப்பால்" அருந்தியவள் என்பதையும் அங்கே குறிப்பிட்டிருந்தேன். முதல் ஒருவாரம், என்மகள் "மாற்றுப்பாலை" குடிக்க பட்ட-பாடிருக்கிறதே! இன்னும் எனக்கு அந்த நிகழ்வுகள் பசுமையாய் நினைவிருக்கிறது. அந்த நாட்களில் - எனக்கு பலமுறை "எந்த நெருடலும்" இன்றி ஓர்-தாயை போன்ற அன்புடனே எனக்கும் சமைத்து/பல நாட்களில் என்நண்பர்களுக்கும் சமைத்து கொடுத்த என் மருதமக்கை(அண்ணி) - என்மகளுக்காய் செய்த செயல்கள் மேலும்-பசுமையாய் நினைவில் இருக்கிறது. என்மகளுக்கும் ஓர்தாயாய் இருந்து என் மருதமக்கை - அவளை பால்-குடிக்க பழகச்செய்ய செய்திட்ட செயல்களை நான் வாழ்நாளில் என்றும் மறத்தல் சாத்தியம் அன்று.
என் மருதமக்கைக்கு கூட நான் அப்படி நன்றி சொன்னதில்லை! அது தேவையற்றது என்று எனக்கு தோன்ரம்; அதை அவர் தன் கடமையாய் செய்தார். என்னதான், நான் மேற்கூறிய என்தங்கை அதே-போன்ற அன்புடனும்/அடிப்படையுடனும் செய்திடினும் நான் அங்கிருத்து கிளம்பும்போது "ரொம்ப த்தேங்க்ஸ்"மா! என்று முழுமனதாய் சொன்னேன்; "அட! இதில் என்னண்ணா? இருக்கு??" என்று அன்புடன் கேட்டார். ஆனால், சிறுகண்கலங்களோடு "இல்லைமா! நீ செய்த செயல் அப்படி என்றேன்!" ஆம்! அவர் சோறூட்டும்போது அதில் மிகப்பெரிய நேர்த்தி இருந்தது {இந்த வரியை நெகிழ்வோடு தட்டச்சு செய்யும்போது ஓர்-நண்பர் "விழியமுதினிக்கு எனது ஆசீர்வாதங்கள்" என்று "வாட்ஸ்-ஆப்"பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் (மேலே, வலது படம்)! ஆம், என்மகள் ஆசிர்வதிக்கப்பட்டவள்!!}; எந்த விரக்தியோ/வெறுப்போ இல்லாமல் செய்தார்! இதை-முழுதும் உணர்ந்தவளாய் என்மகள் "கவிதா அத்தை!" என்று மிக-அன்போடு அழைப்பாள்! "என்மகளின் நன்றியாய்" அதைப் பார்க்கிறேன்.
இந்த உறவுகள்தான் மிகப்பெரிய பலம் கொண்டு நம் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றன! உண்மையில், என் மருதமையனும் அவரின் 4 சகோதரர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!! அவர்கள் வீட்டிற்கு வாய்த்த 5-மருமகள்களும் அப்படியோர் குணம் படைத்தவர்கள்; அவர்களின் குடும்பத்தை பற்றி முன்பே ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். விசேச-நாட்களில் ஒன்றுகூடி அவர்கள் மகிழும் அந்த வாழ்க்கையை பார்க்கும்போது "அவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் எவரும் இருக்கமுடியாது!" என்று தோன்றும். அந்த அன்பு-இல்லத்தின் சாராம்சமே மேற்கூறிய நிகழ்வு. இப்படிப்பட்ட உறவுமுறைகள் கிடைப்பதற்கு நானும், என்மகளும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனால், என்மகள் தனியாய் வளரும் அந்த சூழல் எனக்கு மிகுந்த பாரத்தை அளிக்கிறது! அவளுக்காவது என்தமையன்/என்தமக்கை மூலம் உறவுகள் கிடைக்கும்; நாளை, அவளுக்கும் ஒரேயொரு குழந்தை பிறந்தால் இந்த உறவுகளின் பலம் எப்படி புரிபடும்? என்னைப்பொருத்த அளவில்...
உறவுகளின் பலம் இல்லாதோர் எத்தனை இருந்தும் பலகீனமானவர்களே!!!
இரங்கல் வருத்தம்...
என் முக-நூல் நண்பர் திரு. ராமச்சந்திரன் புதுமனப்பள்ளி அவர்களின் தந்தை சமீபத்தில் இயற்கை எய்தினார். அவ்வப்போது பிரிவின் துயரை பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; அவர் கடைசியாய் இட்டிருந்த பதிவு என்னை மிகவும் பாத்தித்துவிட்டது; பலரும் அப்படியே கருத்திட்டிருந்தனர். அவரின் பதிவுகளின் மூலம்-மட்டுமே; அவர்களின் குடும்பம் எத்தனை "உறவு-வலிமை" மிகுந்த ஒன்று என்பதை யூகிக்க முடிகிறது. அவருக்கு ஆறுதலாய், சரியான முறையில் என் மன-அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாய் சொல்லவேண்டும் என்று மிகவும் முயன்றேன்; பலதும் எழுதி பின் "டெலிட்"செய்து விட்டேன். பின், வெறுமனே ஒரு "லைக்" மட்டும் இட்டேன். அப்போது தான் ஒரு கேள்வி எழுந்தது என்னுள்! இதுபோல், பலரும் பல சமயங்களில் கண்டிப்பாய் நினைத்திருத்தல் கூடும். என்னுள் எழுந்த அந்த கேள்வி: ஏன் நம்மால் உடனடியாய் (spontaneously) ஒரு "இரங்கல் வருத்தம்" தெரிவிக்க முடிவதில்லை?! என்பதே.
எத்தனையோ விதமான சந்தோசமான-நிகழ்வுகளின் போது நம்மால் வெகு-இயல்பாய்/பல-விதமாய்
எத்தனையோ விதமான சந்தோசமான-நிகழ்வுகளின் போது நம்மால் வெகு-இயல்பாய்/பல-விதமாய்
மற்றவர்களின் "சந்தோசமான உணர்வுகளோடு/நிகழ்வுகளோடு" கலக்க-முடிகிறது! ஆனால், நமக்கு தெரிந்தவரின் உறவின் மரணத்தின்போது - உடனடியாய் ஒரு இரங்கல்-வருத்தம் தருவது (குறிப்பாய், எழுத்து மூலம்) அசாத்தியமான காரியமாய்தான் இருக்கிறது. இறந்தவரோடு நமக்கு ஓரளவிற்காவது பரிச்சயம் இருப்பின், இந்த காரியம் கொஞ்சம் எளிதாகும்! இறந்தவர்-சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளோடு சிறிது பங்குகொள்ள முடியும்! அப்படி எந்த பரிச்சியமும் இல்லை எனில், அந்த காரியம் இன்னமும் சிரமாமாய் போகிறது. மேலும், ஓர் ஒப்பிடுதலின் அடிப்படையில், சோகமான நிகழ்வுகளுக்கு "மரணம்" மட்டுமே பிரதான ஒன்றாய் இருக்கிறது; ஆனால், சந்தோசமான நிகழ்வுக்கு பல காரணிகள் இருக்கின்றன. அதனால், நமக்கு பெருமளவில் வாய்ப்பு கிட்டாதது கூட - இந்த இயலாமைக்கு காரணமாய் இருக்கலாம். இம்மனதங்கத்தை...
நண்பரின் தந்தைக்கு "ஆழ்ந்த இரங்கலோடு" அர்ப்பணிக்கிறேன்!!!
"அவித்த" மணிலாக்கொட்டை...
நேற்று-முன்தினம், சில மாதங்களுக்கு முன் ஊரிலிருந்து; இங்கே அபுதாபிக்கு கொண்டுவந்த "காய்ந்த மணிலாக்கொட்டை" கண்ணில் பட்டது! காய்ந்ததை அதிகம் தின்னவும் முடியாது; தின்பது நல்லதும் அல்ல! (தாய் சொல்வ"தாயும்" காதில் கேட்டது!). காய்ந்ததை ஏன் நாம் மீண்டும் பச்சையாய் ஆக்கக்கூடாது?! என்ற கேள்வி வந்தது (Reverse Process). உடனே, அதை தண்ணீரில் ஊற-வைத்துவிட்டேன்; பின் வழக்கம்போல் என்தமக்கைக்கு அலைபேசி-செய்து "அவிக்கும்" (வேகவைக்கும்) விதத்தை கேட்டேன்! எதிர்பார்த்தது போலவே "என்தமக்கை உடனடியாய் கேட்ட கேள்வி: அங்க பச்சை-மல்லாட்டெல்லாம் கெடைக்குதாடா?" என்பதே. என் யோசனையை சொன்னேன்; சரிடா! நல்லா ஊறட்டும் என்றார். நானும், அடுத்த நாள் மாலை வரை ஊறவைத்து, பின்னர் அவித்தேன். என்-தமக்கையும், என்-தாயும்; திறந்த-பாத்திரத்தில் அவிப்பது போல் அவிக்கவேண்டும் என்றெண்ணி, பின்னர் என்-தமக்கை சொனனது போல் "குக்கரில்" அவித்தேன்.
அவித்தது அருமையான பதத்தில் இருந்தது; அடுத்த முறை நான் அலைபேசி-செய்யும்போது என்-தமக்கை முதலில் கேட்கும் கேள்வி "மல்லாட்டையை அவிச்சியா? எப்படி இருந்தது??" என்பதாய்தான் இருக்கும். நான் (என்தமக்கையின் வழிகாட்டுதலின் படி) பொங்கல் முதல் - பிரியாணி வரை செய்வேன் என்பதால், மணிலாக்கொட்டையை அவிப்பது பெரிய விசயம் என்றில்லை என்றிருந்தேன்! ஆனால், அது அத்தனை எளிதல்ல; அதில் இருக்கும் மண்ணை-கழுவி களைவதில் இருந்து, அளவான உப்பிடுதல் வரை - பல சிரமங்கள் இருந்தன. உப்பின் அளவு - மாறுபட்டால், மற்ற உணவு-வகைகள் போன்று "பெரிதாய்" எந்த மாற்றமும் செய்யமுடியாது. சென்ற முறை இந்தியா சென்றபோது கூட 3-படி மணிலாக்கொட்டை வாங்கிக்கொடுத்து என்-தமக்கையும்/என்-தாயும் சேர்ந்தே அவித்தது நினைவுக்கு வந்தது. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? நம் வீட்டு பெண்கள் எத்தனை படி மணிலாக்கொட்டை அவித்தாலும்; அவிக்கும்போது "ஒன்றிரண்டாய்" சுவை பார்ப்பதை தவிர...

அவித்த பின் (பெரும்பான்மையில்)அவர்கள்; ஒன்றைக்கூட தின்பதில்லை!!!
"ஆட்கொல்லி"யை வென்ற ஆட்கொள்ளி!!!
(திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களுக்கு சமர்ப்பனம்!)
**********
அண்ணாச்சி!
சில-பூச்சிகள் "ஆட்கொல்லி" விலங்கொன்றை கொன்றதற்காய்;
பல-விதங்கள் ஆய்-உன்மீது களங்கமொன்றை சொல்கின்றன!
ஆனால், நானோ?!....உன்னையே "ஆட்கொள்ளி" என்பேன்!
ஆம்!
என்போன்ற பலரின் உள்ளங்களை;
அன்போடு "கொள்ளையடித்து; ஆண்டு"
கொண்டிருப்பதால்; கண்டிப்பாய் நீயொரு
"ஆட்கொள்ளி"
விழுப்புண்ணை கூட "வீரத்தோடு
முழங்காமல்"; அச்சிறார்கள் "நாவினாற்-சுட்டதோடு"
அழகியலாய் ஒப்பிட்ட; நீயொரு
"ஆட்கொள்ளி"
வனத்தையே காக்கும் உன்போன்றோர்
இனத்தையே; பழிப்போர் அவர்மீது(ம்)!
சினத்தையே கொள்ளாத; நீயொரு
"ஆட்கொள்ளி"
என்போன்றோர் உன்னை உள்ளத்தாலும்;
உன்போன்றோர் அவர்தம் உழைப்பாலும்;
பன்"ஆட்கொள்ளிகள்" சூழ்ந்திருக்கும்; நீயொரு-(மா)
"ஆட்கொள்ளி"
இந்த(பே/போ)ர் "ஆட்கொள்ளி(கள்)"
சந்தர்ப்பம் மீண்டு(ம்)-வந்தால்;
இன்னும்-சில "ஆட்கொல்லிகளை"
கொன்றுபோட தயங்கார்(கள்)!
என்றே-எச்சரிக்க தயங்கார்;
என்போன்ற "ஆட்கொள்ளிகள்"!
வாழ்க "ஆட்கொள்ளிகள்"; வீழ்க "ஆட்கொல்லிகள்"
ஞாயிறு, பிப்ரவரி 02, 2014
திருமண-நாள் வாழ்த்து எவர்களுக்கு பொருந்தும்???
"இவ்வாண்டு திருமண-நாள் வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா??" என்று(கவலையுடன்) கேட்டார் என் நண்பர்! கவலை இடம்பெயர்ந்து என்னுள் குடிகொண்டது; ஏனெனில், அந்த-திருமண பந்தத்தின் சமீபத்திய நிலை எனக்கு நன்றாய் தெரியும்! என் நண்பர் என்னைக் கேட்டதின் பின்னணியும், எனக்கு அது பற்றி அதிகம்-தெரியும் என்பதே. நான் தீர்க்கமாய் "இந்த வருஷம் நீ சொல்ல வேண்டாம்டா!" என்றேன். என்னடா?! இப்படி தடால்னு சொல்லிட்ட? என்றார் நண்பர்; "வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற?"என்றேன் நான். "போன வருஷம் கூட; உன் பெண்டாட்டிக்கு புடவை வாங்கி வச்சுக்கிட்டு" சாய்ந்தரம் வரைக்கும் அவள் ஒரு-தடவையாவது(முதலில்) "வாழ்த்து சொல்வாளான்னு" காத்துக்கிட்டு இருந்த! என்ன ஆச்சு?! சாய்ந்தரம் அவள் போன் பண்ணி "ஏன் ஒரு வாழ்த்து கூட சொல்லக்கூடாதா?! அந்த அளவுக்கு என்னை பிடிக்கலையான்னு?!" கேக்கலை?! அப்புறம் என்ன வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற? என்றேன் மீண்டும்.
எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம்?! இது சரியான திருமண-பந்தம் தானா??!! என்பது பற்றியெல்லாம் - இங்கே பலருக்கும் "அக்கறையில்லை. குறிப்பாய், வேலைக்கு-செல்லும் "வசதி-படைத்த பெண்களுக்கு"! கணவனை பிரிந்து, குழந்தைகளுடன் தன்னப்பன் வீட்டில் இருந்துகொண்டு கணவன்-வேண்டுமானால் இங்கு வந்து இருக்கட்டும் என்போரும் உண்டு. எல்லா செலவிற்கும் கணவன் பணம் கொடுக்கவேண்டும்; ஆனால், கணவன் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை. என் நண்பரின் வாழ்க்கையும் அவ்வாறே! தமிழக தலைநகரில் அவர் தனியாய் வசிக்கிறார்...இல்லை கஷ்டப்படுகிறார்! 2 பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவர்-மனைவி மத்திய-தமிழகத்தில் அவரப்பன் வீட்டில் இருக்கிறார். எத்தனை முயன்றும், கணவனுடன் சென்று-சேர்ந்து இருக்க சம்மதிக்கவில்லை! என்ன விதமான வாழ்க்கை இது?! கணவன்/மனைவி இருவரும் சேர்ந்திருந்தால் தானே பிரச்சனைகளை ஆராய்ந்து/ அல்லது மறந்து உறவை தொடர்ந்திடுதல் சாத்தியம்?!
எது-எப்படி இருப்பினும், திருமண-நாள் வாழ்த்து(மட்டும்) வேண்டும் என்பது என்ன விதமான நியாயம்?! அதிலும், பெரும்பான்மையில் மனைவி விரும்புவது - வாழ்த்தை முதலில் கணவன் சொல்லவேண்டும் என்பதே! "அந்த-நாளே" நினைவில் இல்லாதவரும் உண்டு! பிறந்த-நாள் என்றால் அடுத்தவர் முதலில் சொல்லவேண்டும் என்பது நியாயம்! திருமண-நாள் இருவருக்கு(ம்) பொதுவானது அல்லவா? சரி, ஓர் ஆண்டு கணவன் (முதலில்)சொல்லவில்லை எனில் ஏன் பிரச்சனை? உடனே, மேற்கூறியது போல் "என்னை பிடிக்கலையா?" என்று சண்டை போடுவது! மற்ற எல்லா நாட்களிலும், கணவன்-மனைவி என்ற பந்தம் "துளியும் இல்லாது" இருந்துவிட்டு அந்த நாளில் மட்டும் "வாழ்த்தையும், பரிசையும்" பெறுவதா வாழ்க்கை??!! அதில் ஓர் அபத்தம் இருப்பதாய் படுகிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் சண்டை எழலாம்! திருமண-நாளில் வாழ்த்து சொல்லவில்லை என்று சண்டையிடுதல் எந்த விதத்தில் நியாயம்; மனைவிக்கும் அது "திருமண-நாள்" தானே??!!
இப்படி வருடம் முழுவதும், கணவன் என்ற அடிப்படையில் எதுவும் செய்யாது; திருமண-நாளில் வாழ்த்தை மட்டும் எதிர்பார்த்தல் சரியா? நம் முந்தைய-சந்ததியர் பலருக்கு அவர்களின் திருமண-நாள் நியாபகம் இருக்காது! அவர்களுக்குள்ளும் (நம்மை-விடவும்)பெரிய பிரச்சனைகள் இருந்தன; ஆனால், அவர்களுக்கு திருமணம் என்ற பந்தத்தின் அடிப்படை புரிந்திருந்தது!! தன் குடும்பத்திற்காய்/ சமுதாயத்திற்காய் என்று வாழ்க்கையை நடத்தியவர்கள் அவர்கள்! அதுதான் இயல்பு; திருமணமான புதிதில் "கணவன்-மனைவி" இடையே பிரச்சனை ஏற்படுவது இயற்கை; அது நியதியும் கூட! ஆனால், அந்த சில-ஆண்டுகளை கடந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்பமே! அதைத்தான் முந்தைய தலைமுறையினர் செய்தனர்; அதனால் தான், நாம் இந்த தலைமுறையாய் தலை-நிமிர்ந்து நடக்கிறோம்! எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்த அப்படிப்பட்ட கணவனும்/மனைவியும்தான் "அப்பாவும்/ அம்மாவுமாய்" - நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றனர்!
இப்போது, எதற்கெடுத்தாலும் விவாகரத்து பெறுவது சர்வ-சாதாரணமாய் ஆகிவிட்டது; அந்த விரக்தியினால்தான், நண்பரிடம் அப்படி தீர்மானமாய் சொன்னேன்! பின், அவரின் திருமண நாளன்று "மரணத்திற்கு பிறகு என்ன???" எழுதிய நானே அப்படி சொல்லி இருக்கக்கூடாது என்று தோன்றியது! "திருமண-நிகழ்ச்சியின் மகத்துவம் என்ன???" என்ற மனதங்கம் நினைவுக்கு வந்தது! "விவாகரத்து என்ற ஓர்-நிகழ்வு நடக்கும் வரை, திருமணம் எனும் உறவு" இருப்பதாய் தானே அர்த்தம்??!! என்ற உண்மை விளங்கியது. உடனே, நண்பரை அலைபேசியில் அழைத்து "சொல்லிடுடா"! என்றேன்; "காலைலேயே"வாழ்த்து சொல்லிட்டன்டா! என்றான். எனக்கு பெருத்த-மகிழ்ச்சி! என்ன நடந்தாலும், குடும்பம் எனும் அமைப்பை இயன்றவரை அழியாமல் காப்பது நம் கடமை என்று தோன்றியது. நம் தாயும்/ தந்தையும் எல்லாவற்றையும் மறந்து/மறைத்து நமக்காய் வாழ்ந்திட்ட வாழ்க்கையில் ஒரு குறைந்த சதவிகிதமாவது நாம் - நம் சந்ததியருக்காய் செய்யவேண்டாமா??? அதனால் (அதுவரையாவது)...

திருமண-நாள் வாழ்த்தென்பது அனைவருக்கும் பொருந்தும்!!!
என்மகளின் உறக்கம்...
மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது போல் என்மகள் உறங்குவது எப்போதாவது நடக்கும் விசயம்; அது ஓர் அபூர்வமான/அழகான விசயம்! முதன்முதலில் அவள் அவ்வாறு உறங்கியது அவள் பிறந்து 1-வாரம் ஆனபோது! அந்த நிகழ்வை படம்பிடிக்க இயலாமல் போய்விட்டது; ஆனால், அதேபோல் அவளின் 23-ஆம் நாள்-வயதில் உறங்கியபோது - படம்பிடித்துவிட்டேன் (அதுதான் இடது படத்தில் இருப்பது). சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது அவள் அவ்வாறு உறங்குவதை காண முடிந்தது! உடனே, எடுத்த புகைப்படம்தான் வலது பக்கம் உள்ளது! ஏறக்குறைய, ஒரேவிதமான உறக்கநிலை; ஆனால், சுமார் 4.5 ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. குழந்தைகள் உறங்கும்போது புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்பார்கள்; ஆனால், நான் என்மகள் உறங்கும்போது நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். உண்மையில், அவள் உறங்கும்போதுதான் அதிக-அழகுடன்/ அதிக உடல்-மொழிகளுடன் இருப்பதாய் எனக்கு படுகிறது.
இப்படியாய், புகைப்படங்கள் எடுத்து சேகரிப்பது என்பது ஓர் சுவராஸ்யமான அனுபவம் என்பது என் எண்ணம்; குறிப்பாய், வளர்ந்தபின் என் மகளுக்கு. இதுமாதிரி, எவரேனும் எந்த உறவுகளுக்காகவும் செய்யலாம். என்னுடைய மகளின் 4-வயது பிறந்தநாளின் போது அவளின் ஆசிரியையை அழைத்து அதை புகைப்படமாய் ஆக்கியதை முன்பே கூறி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, என் மகள் அந்த நிகழ்வை சென்றமுறை இந்தியா சென்றபோதே மிக-மகிழ்வாய் இப்படி கூறினாள்: அப்பா "என் பர்த்-டே க்கு எங்க மிஸ் வந்திருந்தாங்கப்பா! என்னை "டைட்டா" கட்டிப்பிடிச்சாங்கப்பா!!" என்று என்னிடமே கூறினாள். "நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்; அதை புகைப்படமாகவும் பிடித்து வைத்தேன்" என்று என்மகளிடம் கூறவில்லை; அது அவசியமும் இல்லை! அவளுக்கு தெரிந்திருக்கும்; இல்லையெனில், பின்னாளில் தெரியப்போகிறது. அவளின் சந்தோசம்தான் முக்கியம்; அதற்காகத்தான் அதை செய்தேன் என்பதையும் முன்பே கூறியிருந்தேன். என்னால் இயன்ற அளவிற்கு...
இதுபோன்ற நிகழ்வுகளை ஆதாரங்களாய் என்மகளுக்கு கொடுப்பதே என் எண்ணம்!!!
இரத்த தானம்...
கடந்த வியாழன் அன்று இங்கே அபுதாபியில் "இரத்த தானம்" செய்ய சென்றிருந்தேன். அன்று இராகவேந்திரர்-விரதம் இருக்கும் வழக்கம்; தானம்-செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் விரதத்தை முறித்துவிட்டு சென்றிருந்தேன். படிவங்கள் பூர்த்தி செய்து, இரத்த-மாதிரி, இரத்த அழுத்தம் எல்லாம் முடிந்தபின் - இரத்தம் எடுக்கவிருந்த நிலையில், என்னுடைய இரத்தத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். காரணம், நான் 1980 முதல் இப்போது வரை உள்ள காலகட்டத்தில் - 5 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பா-கண்டத்தில் வசித்திருந்தால் "இரத்த-தானம்" செய்யமுடியாதாம்! அங்கிருக்கும் ஓர்-நோய் தான் அதற்கு காரணமாம்; அதை சரியாய் இரத்தத்தில்-கண்டறியும் செயல்முறைகள் இன்னமும் நடைமுறையில் வரவில்லையாம்! எனவே, முன்னெச்சரிக்கை-நடவடிக்கையாய் இரத்தம் எடுப்பதில்லையாம். நான், அங்கே 8 ஆண்டுகள் வசித்து ஓராண்டுக்கு முன்னர் தான் அங்கிருந்து இங்கு-வந்தேன்.
"போர்ச்சுகல்"லில் இருந்தபோது எத்தனையோ முறை இரத்த-தானம் செய்யசென்று எனக்கு அவர்களின் மொழி தெரியாது என்பதால் எடுக்க மறுத்துவிட்டனர்! காரணம்; மருத்துவர் "போர்ச்சுகீசு" மொழியில் கேட்கும் கேள்விகளை நான் புரிந்துகொண்ட அதற்கு சரியாய் பதில் சொல்லவேண்டுமாம்! ஒவ்வொரு முறையும் மிக-விரக்தியாய் இருக்கும்; ஆத்திரத்தில் இனிமேல் அவர்களே கேட்டாலும், கொடுக்கமாட்டேன் என்பேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் சென்று முயற்சிப்பேன். ஒருவாறாய், அங்கிருந்து கிளம்புவதற்கு ஓராண்டுக்கு முன் "அந்த மொழியில் சரியாய்" பேசி - இரத்ததானம் செய்தேன். அடுத்த முறை (இந்தியா சென்று-திரும்பிய 2 மாதத்திற்குள்), இந்தியாவில் "பன்றி-காய்ச்சல்" அதிகமாய் பரவிய-நேரம் என்பதால் எடுத்துக்கொள்ள முடியாது என்றார்கள்; மீண்டும் கோபம் தலைக்கேறியது. ஆனால், இந்த முறை எனக்கு எந்த கோபமும் வரவில்லை; அவர்கள் தரப்பு நியாயம் புரிந்தது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கலாம் என்று வந்துவிட்டேன்...
ஏனெனில், இரத்ததானம் செய்யவேண்டும் எண்ணம்தான் முக்கியம்!!!
பின்குறிப்பு: 2004-ஆம் ஆண்டு வரை போர்ச்சுக்கல் செல்லும் முன் சில ஆண்டுகள் அவ்வப்போது இரத்ததானம் செய்வது வழக்கம். அந்த எண்ணம் இன்னமும் இருக்கிறது; ஆயினும், பல காரணங்களுக்காய் என்னால் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. பார்ப்போம்! மீண்டும் எப்போது முன்போல் அவ்வப்போது தானம் செய்ய இயலுகிறதென்று!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)