வெள்ளி, நவம்பர் 11, 2011

தற்கொலை


துச்சமாய் மரணத்தையெண்ணி 
தற்கொலை செய்ய
துணிந்த உன்னால் - ஏனுன்
துன்பங்களை துறக்க முடியவில்லை?
வீரனாய் அப்பெருந்துயர் (மரணம்)
வென்ற கோழை நீ!!!

2 கருத்துகள்:

  1. இந்தியாவில் 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.
    க. தேசிங், வழக்கறிஞர் :
    அரசியல் சாசனம் அளிக்கும் சம வுரிமைக்கு எதிராக, பெண்ணுக்கு மட்டும் சில சலுகைகள் தருகிறது புதிய சட்ட திருத்தம். ஆகவே, அடிப்படையே தவறு.
    திருமணமான ஒரு ஆண் வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டால் மனைவி விவாகரத்து கேட்கலாம். அதே சமயம், மனைவி இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால், கணவன் விவாகரத்து கோர இயலாது.
    ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல், மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை. 1869ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து மண விலக்குச் சட்டம் ஆண்கள் காலில் பூட்டப்பட்ட விலங்காக உள்ளது. ஆண்களுக்கு எதிராகப் பல விதிகள் ஏற்கெனவே உள்ளபோது, புதிதாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது அரசு.
    விவாகரத்துக்குப் பிறகும் மனைவிக்கு கணவனின் சொத்தில் பங்கு உண்டு என்பது பல சிக்கல்களை உருவாக்கும்.
    ‘ஆண்டுக்கு 57,000 ஆண்களும் 30,000 பெண்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர். 12 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2001 2005 காலகட்டத்தில் 12 லட்சம் ஆண்கள் வேலை இழந்துள்ளனர். 98 சதவிகிதம் ஆண்கள் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குள் பெண்களால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். திருமணமான 80 லட்சம் ஆண்கள் பல்வேறு உண்மை மற்றும் போலியான குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர்.
    குடும்ப வன்முறை, சமுதாயத்தில் அரசியல் வன்முறை, நீதி மன்றத்தில் வழக்காடி,நீதி பெறுவதில் வன்முறை,ஏமாற்றும் சமுதாயம்,வேலை இழப்பு,விவசாயம் செய்ய முடியாத நிலை போன்ற இந்த சூழ்நிலை வாழ்வதை விட கொடுமையானது.எல்லோராலும் தான் வசிக்கும் இருபிடததை விட்டு வெளியே சென்று வாழ முடியாது.தற்கொலை தவறு என்ற போதிலும் அதுவே சிறந்த வழி என்ற முடிவை ஏற்றுக்கொள்ள இந்த சமுதாயம் வைக்கிறது.தவறு தற்கொலை செய்து கொண்டவர்கள் மேல் உள்ளது என்பது முழுவதும் ஏற்றுகொள்ள முடியாதது.

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த்,

    தங்களின் நேரத்திற்கும், தெளிவான புள்ளி-விவரம் மற்றும் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு