(தலையங்கத்தின் "நீளம்" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்)
கடந்த வார தலையங்கத்தை தொடர்ந்து, இந்த வாரமும் நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்று என்னை நிலைகுலைத்து விட்டது; இந்த செய்தி சார்ந்த என் பார்வையை எழுதவேண்டும் என முடிவெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இது தான் சரியான சந்தர்ப்பம்! கடந்த வாரம் குறிப்பிட்ட தந்தைக்கு நேரெதிர் துருவம்; இரண்டு எல்லையில் இருக்கும் எந்த உறவும் சங்கடம் தான். கடந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்ட தந்தை "சிறுபான்மையில்" ஓர் மிகப்பெரிய கொடியன்; இந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தந்தை "பெரும்பான்மையில்" தன்னிலை தவறியவர். செய்தி இது தான்; "குழந்தையை யார் வளர்ப்பது?" என்ற விவாதத்தின் அடிப்படையில் எழுந்த பிரச்சனையில் ஓர் தந்தை, தன்னிலை தவறி தன்னுடைய மனைவியை (குழந்தையின் தாயை) கொன்றுவிட்டார். இந்த பிரச்சனையின் அடிப்படையையும் அது சார்ந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் கலந்தாயும் முன், படித்த செய்தியின் கரு; மனைவியை கொன்றதற்காய் கணவன் (தந்தை) சிறைச்சாலைக்கு செல்லும் முன் - அந்த பாச மிகு தந்தையும், மகளும், ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து அழுது தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்துடன், செய்தி வெளியாகி இருந்தது. அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன? உறவுகள் ஆயிரம் இருப்பினும், அது குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் பலன் தரக்கூடும். ஆறு வயது துவங்கி வாழ்க்கை முழுதும் அவ்வாறெனின் அந்த குழந்தையின் வாழ்க்கை என்னாவது? என்று என்னும்போது நம் மனம் பதறுகிறது தானே??
ஓர் குழந்தை சரியாய் வளர அக்குழந்தை ஒரு குறிப்பிட்ட வயது வரை தாயுடன் தான் வளரவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆணாதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, ஆண் என்பவன் குடும்ப-வேலைகள் எதுவும் செய்யாது (செய்யவும் தெரியாது), அனைத்தும் பெண் தான் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்த காலகட்டத்தில் வேண்டுமானால், இது சரியாய் இருந்திருக்கலாம். குழந்தை வளர்ப்பது, தாயின் (பெண்) வேலை; பொருளீட்டுவது தந்தையின் (ஆண்) வேலையாய் இருந்திருக்கலாம். இன்று சூழல் வேறு என்பதை என்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் கூட விளக்கமாய் எழுதி இருந்தேன். இங்கே, வேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு, வீட்டு வேலைகள் பகிர்ந்துகொள்ளப்படாத போது அதை ஒரு குறையாய்/ பிரச்சனையாய் இல்லத்தரசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னமும் குழந்தை வளர்ப்பதில் மட்டும் - அதிலும் குறிப்பாய், கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வந்த பின் - ஏன் தாய் மட்டுமே (வயது நிர்ணயம் இருப்பினும்) வளர்க்க வேண்டும் என்று சட்டமும் சொல்கிறது?; இல்லத்தரசிகளும் வாதாடுகின்றனர்? இதில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கவேண்டும். ஒன்று, எந்த சூழ்நிலையிலும் குழந்தை வளர்ப்பது பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்று இருக்கவேண்டும்! ஒரு செய்கையில் இருக்கும் இரண்டு விதமான சாத்தியக்கூறுகளையும் (பெண் சூழலுக்கு தக்கவாறு) எடுத்துக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
இது கண்டிப்பாய் மாறவேண்டும்; எப்படி இன்றைய கணவன்மார்கள் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்களோ, அது மாதிரி பிரச்சனை எழுந்த பின் அல்லது "விவாகரத்து" பெற்றபின் "குழந்தை வளர்க்கும் உரிமை" அந்த தந்தைக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்; அது தான் நியாயம். குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் பருவத்தை கடக்கவில்லை எனில், நிச்சயம் அது தாயுடன் தான் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்டிப்பாய் எந்த கணவனும் பிரச்சனை செய்யப்போவதில்லை; அதற்கும் காரணம், கணவனுக்கு இயற்கை அல்லது இறைவன் அந்த சக்தியை கொடுக்கவில்லை என்பது தான். நான், இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் வாதம் அப்பருவம் கடந்த குழந்தைகளைப் பற்றித்தான் என்று தயைகூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தை தாயுடன் தான் வளரவேண்டும் என்பதற்கு பலநாட்களாய் சொல்லப்பட்டு வந்த காரணங்களுள் முக்கியமான ஒன்று, ஆணுக்கு அந்த பொறுமை இல்லை என்பது. ஆனால், இன்று உண்மை நிலை வேறு; ஆணின் பொறுமை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் தான் "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?" என்ற தலையங்கம் எழுதவேண்டி வந்தது. எப்படி, ஆணாதிக்கத்தம் உச்சத்தில் இருந்தபோது கூட, குடும்பம் என்பது சிதறாமல் இருந்ததற்கு பெரும்-காரணம் பெண்ணின் பக்குவமும்/ பொறுமையும் தான் என்பது உண்மையோ!, அது போல் இப்போது சிறிய பிரச்னைக்கு கூட குடும்பம் சிதறுவதற்கு காரணமும் பெண்ணின் பக்குவமின்மை மற்றும் பொறுமையின்மை தான் கரணம் என்பதும் உண்மை.
இதற்கு முழு காரணம், குடும்பம் என்பது இன்னமும் பெண்ணை முதன்மைப் படுத்தி துவங்குவதால் தான்; இந்த முதன்மையை முழுதுமாய்-முறையாய் உணராத போது தான் அன்றும் பிரச்சனை, இன்னமும் பிரச்சனை. இந்த பொறுமை மற்றும் பக்குவத்திற்கு கண்டிப்பாய் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வரமான "தாய்மை" அடையும் நிலையை சிறந்த உதாரணமாய் கொள்ளலாம். ஆண்கள், அதை ஏற்கத் தயாரில்லை என்று அர்த்தம் இல்லை; இயற்கையோ அல்லது இறைவனோ ஆண்களுக்கு அந்த சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அடுத்து சொல்லப்படும் காரணம், வீட்டு வேலைகளை - குறிப்பாய் சமைப்பது - ஆணுக்கு செய்யத்தெரியாது என்பது தான். இப்போது நிலைமையே வேறு! வேலையை சரியாய் செய்யவில்லை என்பதற்காய் இப்போது பிரச்சனைகள் எழுகின்றன!! இது தான் காலச்சுழற்சி; எதுவும் செய்வதில்லை என்பது மாறி "சரியாய்" செய்வதில்லை என்று மாறி இருக்கிறது. எனவே, இக்காரணத்திற்காகவும் குழந்தை தந்தையுடன் வளரக்கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது. இது மாதிரி, எந்த விசயத்தை எடுத்துக்கொண்டாலும், பெண்கள் தங்கள் உரிமைகளை போராடி பெரும் அதே வேலையில், இந்த வேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வலியுறுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. அது கூட ஓர் காரணமாய் இருக்கலாம், ஆண்களின் இந்த மாற்றத்திற்கு! காரணம் எதுவாயினும், வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை!!
இதில், குழந்தை பெண்ணெனும் போது, கேவலமான ஓர் வாதம் வரும் பாருங்கள்!; அது தான் என்னை மிகவும் காயப்படுத்துவது. "அவள் பருவம் அடைந்தால்" நீ என்ன செய்வாய் என்பது தான் அந்த கேள்வி! பெண்களும், சமுதாயமும் - ஆண்களை - அந்த நிகழ்வுகளில் சேர்ப்பதே இல்லை; அக்குழந்தையின் தந்தை உட்பட! இதே நிகழ்வு, ஆணுக்கும் இயற்கையாய் நடக்கிறது; ஆனால், அது நடைபெறும் விதம் சாதாரணம் என்பது உண்மையாயினும் அவனுக்கும் நடக்கிறது என்பதே உண்மை; பின் ஏன் அதை ஆண் புரிந்து கொள்ளமாட்டான் என்று எண்ணப்பட்டது? இதை ஏன், குறைந்தது அவன் மகளுக்கு நிகழும் போதாவது விளக்கப்படவில்லை? அந்தக் குழந்தை அவன் இரத்தம் அல்லாவா?? எத்தனையோ பெண்கள் இதனை சார்ந்தும் மற்ற பிரச்சனைகளின் அடிப்படையிலும் "ஆண் மருத்துவரை" சந்தித்து விளக்குகிறார்கள் தானே?? என்னதான் தொழிலின் அடிப்படையில் என்றாலும், அவர் ஓர் ஆண்; அவருக்கு அது சார்ந்த விளக்கங்களும், வேதனைகளும், வலிகளும் தெரிந்திருக்கிறது என்பதற்கு மேலாயும், அவருக்கு கற்றுத்தரப்பட்டிருக்கிறது. அது ஏன், ஓர் கணவனுக்கு/ சகோதரனுக்கு அல்லது தந்தைக்கு சொல்லித்தரப்படவில்லை? பின், ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் ஏன் அதனை சுட்டிக்காட்டி அது ஆணின் தவறு என்பது போல் ஏன் விவரிக்கப்படுகிறது?? இதுவும் நான் மேற்கூறிய வண்ணம், இரண்டு சாத்தியக்கூறுகளையும் ஒருவரே, தங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போல் எடுத்துக் கொள்வது அன்றி வேறென்ன???
எனவே, குழந்தை தாயுடன் தான் வளரவேண்டும் என்ற கட்டுப்பாட்டில் எந்த வரைமுறையும் இருப்பதாய் எனக்கு படவில்லை; கண்டிப்பாய் இந்த விதியும் தளர்த்தப்பட வேண்டும். நான் முன்பே கூறியிருந்தவாறு, என்ன தான் பாசத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை பார்ப்பினும், ஒரு கணவனாய் அவர் செய்ததில் சிறிதும் நியாயம் இல்லை. எனினும், அவர்களிடையிலான உண்மை நிலையை கண்டிப்பாய் ஆராய வேண்டும். மேலும், நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில் அக்குழந்தை எட்டு மாதத்தில் இருந்தே தன் தந்தையுடன் வளர்ந்ததாய் தெரிகிறது. திடீரென, அந்த மனைவி வந்து பிரச்சனை செய்திருக்க வாய்ப்பேயில்லை; அப்படி இருப்பின் அது(வும்) தவறு கூட. அதனால், அந்த பிரச்சனையின் விதத்தை - அதன் ஆழத்தை கண்டிப்பாய் ஆராய்ந்தறிய வேண்டும். அந்த மனைவியை கொலை செய்யும் அளவிற்கு அந்த தந்தையை கொண்டு செல்ல இந்த இடைவெளியில் நடந்த நிகழ்வுகள் தான் முக்கிய காரணமாய் இருக்கும். எனவே, இந்த அடிப்படையில் அந்த தந்தையின் நிலை என்ன என்பதை கண்டறிய வேண்டும். இது கண்டிப்பாய், அந்த தந்தையை ஆதரிக்கும் எண்ணத்தில் இல்லை; ஆனால், அந்த குழந்தையின் எதிர்காலத்தை முக்கியமாய் கருத வேண்டும். மேலும், அந்த குழந்தை தந்தையுடன் மிகுந்த பற்றுடன் இருப்பதை நாளிதழில் வந்த புகைப்படமும் அந்த பாசத்தை அவர்கள் (காவலர்கள் உட்பட) விவரித்த விதத்திலும் புரிந்து கொள்ளமுடிகிறது.
கண்டிப்பாய், ஒரு நல்ல தந்தையாய் திகழ்ந்திருக்கிறார்; அவர் நல்ல கணவனாய் இராததற்கு நான் என்னுடைய மற்றுமொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் விதிவிலக்கான காரணம் உண்டா என்பதை ஆராய வேண்டும். அது கண்டிப்பாய் அக்குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவும். சென்ற வாரம், மனித நேயமே இல்லாத ஓர் தந்தை தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த வாரம், பாசம் மிகுந்த ஓர் தந்தை தன்னிலை தவறிய காரணத்தை அறிந்து அவரின் மகளின் எதிர்காலம் கருதி அதிகம் தண்டிக்கப்படக்கூடாது என்று எழுதி இருக்கிறேன். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது; முதல் நிகழ்வில், அக்கொடிய தந்தை பலநாட்களாய் அக்குழந்தையை தொடர்ந்து சித்தரவதை செய்து அந்த செய்கையால் அக்குழந்தை இறந்துவிட்டது. ஆனால், இந்த நிகழ்வில் - ஓரிரு நிமிடத்துளிகள் தன்னிலை தவறியதன் விளைவால் அந்த மனைவி கொலைசெய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாய், அந்த கணவன் தன்னுடைய மனைவியை கொன்றதை நினைத்து - தன்னுடைய "மகளின்" என்திர்காலம் கருதியாவது - இப்போதே கவலை கொள்ள நினைத்திருக்கக்கூடும். இந்த "உணர்தலை" விட மிகப்பெரிய தண்டனை எதுவும் இருக்கமுடியாது. இந்த "உணர்தல்" வரவேண்டும் என்பதால் தான் கடந்த வார தலையங்கத்தில் தண்டனை வேண்டும் என்றேன்; இந்த நிகழ்வில் "உணர்தல்" இப்போதே வந்திருக்கும் என்பதால், தண்டனை வேண்டாம் என்கிறேன்.
சமீபத்தில் தந்தை-மகள் பாசத்தை உணர்த்தி, அந்த மகளை தன்னிடம் வைத்துக்கொள்ள போராடும் "மனநிலை பாதிக்கப்பட்ட" ஓர் தந்தையின் நிலையை உணர்த்தும் ஓர் தமிழ்த்திரைப்படம் வந்து அனைவரின் ஆதரவுடன் வெற்றியும் பெற்றது. மனநிலை சரியாக உள்ள ஓர் தந்தைக்கு இந்த உரிமை மறுக்கப்படும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும். உண்மையில், அந்த இயக்குனர் பெருமளவில் பாராட்டப்பட வேண்டியவர்; எனினும், அந்த தீர்ப்பையும் மீறி தந்தையே அம்மகளை பெண் வீட்டாரிடம் கொடுப்பது போல் முடிவு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியாயின், அத்தந்தை அந்த மனநிலையிலும் அக்குழந்தையை அந்த தருணம் வரை சிறப்பாய் வளர்த்ததாய் கான்பித்திருக்கத் தேவையில்லை; அந்த தந்தை பின் எதற்காய் - எந்த பிடிமானத்திற்காய் வாழ்வான்?. மேலும், அது மனநிலை தவறிய தந்தை (அல்லது தாய்) வளர்க்கும் குழந்தை சரியாய் வளராது என்ற தவறான கண்ணோட்டத்தை(கூட) கொடுக்கக்கூடும்; பெரும்பான்மையான "மனநிலை தவறியவர்கள்", மனநிலை கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது தான் கசப்பான உண்மை. கண்டிப்பாய், அந்த இயக்குனர் சமுதாயத்தின் விமர்சனம் கருதியோ அல்லது பெண்களையும் பெண் வீட்டாரையும் சமாதானப்படுத்துவதற்காகவோ அவ்வாறு செய்திருக்கக் கூடும். இல்லையேல், நீதிமன்றத்தின் தீர்ப்பையே முடிவாய் விட்டிருக்கவேண்டும்.
ஒரு வேலை, அந்த இயக்குனர் அத்தந்தையின் உயரிய குணத்தை உணர்த்தக்கூட அப்படியொரு முடிவை அளித்திருக்கக் கூடும். ஆனால், நீதிமன்றத்தோடு விட்டிருப்பின் சரியான மனநிலையுடன் போராடும் தந்தைகளுக்கு அது மிகப்பெரிய ஊக்கமாய் இருந்திருக்கும். ஆனால், இந்த முடிவிலும் நான் ஒரு பெரிய சமுதாயப் பார்வையை பார்க்கிறேன். அது! என் மகள் நன்றாய் இருக்கவேண்டும் என்று மனநிலை சரியில்லாத தந்தை கூட விரும்புவதை உணர்த்துவதாய் பார்க்கிறேன். இங்கே மிக முக்கியமான ஒன்று! இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட தம்பதியர் "இந்தியர்" அல்ல; தமிழகத்தில் வாழும் வேறு நாட்டவர் என்பது தான். இங்கே இன்னுமொன்று புலப்படுகிறது; "தந்தை-மகள்(மகன்)" உறவிற்கு மொழி, மதம் மட்டுமல்ல எந்த நாட்டவர் என்பதும் முக்கியம் இல்லை; இதில் பாசம் தான் அடிப்படை. எனவே, இந்த பிரச்னையை கணவனும் - மனைவியும் தங்களுடைய காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாது, அக்குழந்தியின் எதிர்காலத்தை முன்னிறுத்தி அணுகவேண்டும். ஏனெனில், தன் குழந்தை யாரிடம் "சரியாய்" வளரும் என்பதில் அக்குழந்தையின் பெற்றோர் தவிர, வேறு யார் தெளிவாய் முடிவெடுத்து விட முடியும்? எனவே, குழந்தை யாருடன் வளர வேண்டும் என்பதில் எந்த கட்டுப்பாடும் இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. தேவை எனில், பெற்றோர் பிரிந்திருக்கும் வேலையில் கண்டிப்பாய் (தாய்ப்பால் அருந்துவதை தவிர்த்த) குழந்தை...

தந்தையுடன் தாராளமாய் வளரலாம்!!!