விழியப்பனோடு விவாதிப்போம் (25102013):
ஓர்நாள் - என்னுடன் வேலை செய்யும் நண்பி ஒருவர் தான் "விவாகரத்து" செய்யவிருப்பதை கூறினார். நான் உட்பட பலரும் அதிர்ந்தோம்; அவளுக்காய் வருந்தினோம்! அந்த அளவிற்கு நல்ல-பெண் அவள். பின்னொரு நாள் - விவாகரத்து ஆகிவிட்டது என்றாள்; அனைவரின் இதயமும் கனத்தது!! அதன்பின் அவளை இயல்பாய் பார்ப்பதே அரிதாய் இருந்தது.
சிலமாதங்கள் சென்றபின் - ஓர் நாள், மீண்டும் தன் கணவனோடு இருப்பதாய் கூறினாள். எனக்கு மிகுந்த சந்தோசம்! நம் நாட்டில் - விவாகரத்து பெற்றவர் விவாகரத்துக்கு பின்னும் நிம்மதியில்லாமல் இருக்கும் (அல்லது) இருக்கவிடாது செய்யும் சூழ்நிலை/சமூகத்தால் - நான் "விவாகரத்து ஆகிவிட்டது, என்றாயே?!"என்றேன். அதற்கு அவள் கூறிய அந்த பதில் "சொற்ப வார்த்தைகளையே" கொண்டிருந்தாலும் என்னுள் பல-புரிதல்களை விதைத்தது.
அந்த பெண் சொன்ன பதில் மிகச்சரியாய் இதுதான்: "Elan! It is just a paper"!
இதைக் கேட்ட பின் நான் விக்கித்து போனேன்! பின் என்னுள் நானே "It is just a paper" என்று சொல்லிப் பார்த்தேன். ம்ம்ம்... PAPER; அடேய், இளங்கோ! அது வெறும்-பேப்பர்(காகிதம்)டா என்று என் மனம் சொன்னது.
விவாகரத்து என்பது - ஒன்றுமேயில்லை என்பதை இதைவிட வேறு எவர்/எப்படி தெளிவாய் விளக்கிட முடியும்???
குறிப்பு: "ஒவ்வொரு மணமுறிவுக்கு(விவாகரத்துக்கு)" பின்னும் "பல கரங்கள்" ஒலியெழுப்பி மகிழ்ந்தாலும் - அதன் பின் வாழ்நாள் முழுதும் "இரண்டு மனங்கள்" (மட்டும்)தொடர்ந்து அழுதுகொண்டே தான் இருக்கின்றன.
*******
*******
சரி, இப்போது விவாதம்! எல்லாவற்றையும் மீறி - பலரும் விவாகரத்து தான் இறுதி என்று ஏன் முடிவு செய்கின்றனர்? அல்லது அதுதான் முடிவென வேகுபலரும் மனதிலாவது நினைத்திட என்ன காரணம்?? விவாகரத்துகள் ஏன் அதிகமாகிக் கொண்டே போகின்றன???