நான் முன்பொரு முறை கூறியிருந்த வண்ணம், அபுதாபி வந்ததும் ஒரு மகிழ்வுந்து வாங்கினேன். கண்டிப்பாக என்னுடைய வசதிக்காய் அல்ல! என்மகளும், என்னவளும் இங்கு வந்து இருப்பதாய் ஒரு திட்டம் இருந்தது; அதுதான் முதற்காரணம். இருப்பினும், விடுமுறையில் வரும்போது அவர்களை வசதியாய் அழைத்து செல்லவேண்டும் என்ற ஓர் எண்ணம். இவை தவிர; நான் இதை ஒரு சேமிப்பாய் பார்த்ததும் ஒரு காரணம். ஆம்! மாதந்தோறும் வங்கிக்கு சிறு தொகை தான் கட்டி வருகிறேன். இன்னும் சில மாதங்களில் அக்கடன் முழுதும் அடைந்து; வண்டி என்னுடையதாகும். பின்னர், என்ன விலைக்கு அது விற்கப்பட்டாலும் அது ஒரு சேமிப்பே! ஆனால், உண்மையில் மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தந்ததா?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்னதான் நான் சௌகர்யமாய் சென்று வந்திடினும்; என்மகளும்/என்னவளும் இங்கு வரும்போது அவர்களை அதில் அழைத்து சென்று மகிழ்ந்தினும் - மகிழ்வுந்து எனக்கு பெரிய மகிழ்வு-தந்திருக்கிறதா என்பதில் ஐயம் இருக்கிறது!
அதற்கு காரணம் - என்மகளும்/என்னவளும்; இந்தியாவில் வெய்யிலில் இருசக்கர வாகனத்தில் செல்வதே! என்மருதந்தை மகிழ்வுந்து வைத்திருப்பினும்; என்னவள் அதை உபயோகிப்பதில்லை. வேறொன்று வாங்கவும் ஒப்புக்கொள்ளவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்வதே; நடைமுறையில் எளிதென்பதால் மறுத்து விட்டாள். ஆனாலும், அவர்கள் வெய்யிலில் செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதுபோலவே, இன்னமும் எங்கு சென்றாலும் பேருந்தில் பயணிக்கும் என் பெற்றோர்! அதிலும், விசேட நாட்களில் கூட்டத்தினூடே பயணிக்கும் கொடுமை. அதிக செலவு என்பதால்; வாடகை-மகிழ்வுந்திலும் பயணிப்பதில்லை. அவர்களுக்கு ஒரு மகிழ்வுந்து வாங்கிக் கொடுக்கும் வசதியும் வாய்க்கவில்லை; மேலும், எவர் அதை பராமரிப்பது என்ற கவலை. இந்த வெய்யில் தன்மையில்; எவரேனும், பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை/அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்தால் - எனக்கு, இவர்கள் நால்வரின் நினைவுதான் வரும். என் கலங்கும்; எனவே...
மனதளவில்; மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தரவில்லை!!!
மகிழுந்து அதை விடுங்கள்.............. உங்களைவளையும் உங்கள் குழந்தையையும் விட்டு அபுதாவியில் பணிபுரிந்தது உங்களுக்கு மகிழ்ச்சி தந்ததா
பதிலளிநீக்குநல்ல கேள்வி! ஓ "ஒற்றை ரோசா"வா இது? இப்போது தான் தகவல் அறிந்தேன். நன்றி.
நீக்குகண்டிப்பாக என்னவளையும், என்மகளையும் பிரிந்து எங்கு பணி புரிந்தாலும் அது மகிழ்வைத் தராது! அதைத்தான் "என்ன வாழ்க்கை இது???" என்று தலையங்கம் துவங்கி பல வடிவங்களில்/பதிவுகளில் வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதன் இன்னுமொரு பரிமாணமே இது!!
இப்போது மேலும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.