களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் "தேடித் தேடிப் பார்க்கிறேன்! அவன் ஓடி, ஓடி ஒளியிறான்!!" என்ற பாடலை இதுவரைக் கேட்காதவர்கள்; ஒருமுறை(யேனும்) கேளுங்கள்!! அதில் வரும் அனைத்து வரிகளும் மிகப்பிரம்மாதம் எனினும்...
"ஒருவனுக்கு ஒருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!
அஞ்சு பேருக்கொருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!!"
என்ற வரி எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை! புரிதல்களை!! தேடல்களை!!! உருவாக்கியது; இன்னமும் அதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறேன். கிராமிய மனம் மிதக்கும் இன்னிசை-குரல்! இயல்பான பேச்சு தமிழ்!! ஆழ்ந்த சொற்களும்; கருத்துகளும்!!! "வியப்பானவை" என்ற என் பாடல் தொகுப்பில் சமீபத்தில் இடம் பெற்ற பாடல். இதுவரை எத்தனை முறைகள் அப்பாடலை கேட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை!
தங்கர்பச்சான் எனும் கலைஞனின் எல்லாப் படங்களும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை! இந்த படமும் அதற்கு விதிவிலக்காய் இருக்காது என்று திடமாய் நம்புகிறேன். வாய்ப்பு கிடைப்போர், இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுகிறேன், நட்புகளே! இம்மாதிரியான கலைஞன் மென்மேலும் பல படைப்புகள் படைத்திட அது கண்டிப்பாய் உதவிடும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக