புதன், பிப்ரவரி 28, 2018

குறள் எண்: 0941 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 095 - மருந்து; குறள் எண்: 0941}

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

விழியப்பன் விளக்கம்: உணவோ/உறக்கமோ, மிகுந்தாலோ/குறைந்தாலோ; மருத்துவம் கற்றோர் குறிப்பிடும், வாதத்தில் துவங்கி பித்தம்/சீதம் வரையிலான மூன்று நோயை உருவாக்கும்!
(அது போல்...)
சிந்தனையோ/செயலோ, சிதைந்தாலோ/குறைந்தாலோ; குறளெழுதிய வள்ளுவர் குறிப்பிடும், அறத்தில் துவங்கி பொருள்/இன்பம் வரையிலான மூன்று பாலைப் பாதிக்கும்!

செவ்வாய், பிப்ரவரி 27, 2018

அதிகாரம் 094: சூது (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது

0931.  வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
           தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

           விழியப்பன் விளக்கம்: வெற்றி பெற்றாலும், சூதை விரும்பவேண்டாம்! சூதில் வென்றவை 
           யாவும், தூண்டில் இரையில் மறைந்திருக்கும் இரும்புக் கொக்கியை; மீன் விழுங்கியது 
           போன்றதாகும்!
(அது போல்...)
           சொத்து குவிந்தாலும், ஊழலைச் செய்யவேண்டாம்! ஊழலில் கிடைப்பவை யாவும், 
           பொறியின் இரையில் சிக்கியிருக்கும் அடைப்புக் கதவை; எலி விடுவிப்பது போன்றதாகும்!
      
0932.  ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
           நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

           விழியப்பன் விளக்கம்: ஒன்றைப் பெற்று, நூறை இழக்கும் சூதாட்டக் காரர்களுக்கும்; 
           நல்லறம் பெற்று, பல்வளம் பெற்று வாழ்வதற்கு ஓர் வழி உண்டாகுமோ?
(அது போல்...)
           ஒன்றைக் கொடுத்து, பலதைப் பறிக்கும் அரசியல் வாதிகளுக்கும்; பொதுநலம் பழகி, 
           சுயநலம் துறந்து வாழ்வதற்கு ஓர் உறுதி தோன்றுமோ?
           
0933.  உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
           போஒய்ப் புறமே படும்

           விழியப்பன் விளக்கம்: உருட்டுக்கட்டை உருட்டி சூதாடுவதால் கிடைக்கும் வரவை, ஓயாது 
           கூறி சூதாடினால்; பொருளை முதலிடுவதால் கிடைக்கும் வரவு, விலகிப் பிறர்வசம் சேரும்.
(அது போல்...)
           பொய்சாட்சி சொல்லி ஏய்ப்பதால் கிடைக்கும் மகிழ்வை, தொடர்ந்து விரும்பி ஏய்த்தால்; 
           மெய்யை சொல்வதால் கிடைக்கும் நன்மை, பொய்த்துத் தீமையே விளையும்.  

0934.  சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
           வறுமை தருவதொன்று இல்

           விழியப்பன் விளக்கம்: பல துன்பங்களை உருவாக்கி, இருக்கும் தகுதிகளையும் 
           இழக்கவைக்கும் சூதைப் போல்; இல்லாமையை அளிப்பது வேறொன்றுமில்லை!
(அது போல்...)
           பல ஊழல்களைச் செய்து, இருக்கும் உடமைகளையும் பறித்துக்கொள்ளும் அரசைப் 
           போல்; கொடுமையைத் தருவது வேறொன்றுமில்லை!

0935.  கவறும் கழகமும் கையும் தருக்கி
           இவறியார் இல்லாகி யார்

           விழியப்பன் விளக்கம்: சூதாடும் கருவி/சூதாடும் இடம்/சூதாடும் கைத்திறம் - இவை         
           மூன்றிலும் மோகம் கொண்டு, அவற்றைக் கைவிடாதோர்; ஏதும் இல்லாதவர் 
           ஆகியிருக்கிறார்கள்!
(அது போல்...)
           பலியிடும் ஆயுதம்/பலியிடும் கோவில்/பலியிடும் உயிர் - இவை மூன்றிலும் நம்பிக்கைக் 
           கொண்டு, அவற்றை வெறுக்காதோர்; ஏதும் வெல்லாதவர் ஆகியிருக்கிறார்கள்!

0936.  அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
           முகடியான் மூடப்பட் டார்

           விழியப்பன் விளக்கம்: சூது என்னும் மூதேவியால் அடக்கியாளப் பட்டோர்; உணவை 
           இழப்பதால், வயிறு நிறையார்! நிம்மதியை இழப்பதால், துன்பத்திற்கும் ஆட்படுவர்!
(அது போல்...)
           பொய் என்னும் அரக்கனால் ஆக்கிரமிக்கப் பட்டோர்; உண்மையை இழப்பதால், மனது 
           நிறையார்! மனிதத்தை மறப்பதால், அழிவுக்கும் உள்ளாவர்!

0937.  பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
           கழகத்துக் காலை புகின்

           விழியப்பன் விளக்கம்: சூதாடும் இடத்தில், காலையிலேயே நுழைந்து காலத்தைக் கழிக்கும் 
           பழக்கம்; தலைமுறை கடந்த செல்வத்தையும், நற்பண்பையும் அழிக்கும்!
(அது போல்...)
           தீயவர் தலைமையில், இளமையிலேயே சேர்ந்து கடமையைத் தவறும் வழக்கம்; வம்சம் 
           தொடர்ந்த ஒழுக்கத்தையும், நல்லறத்தையும் அழிக்கும்!

0938.  பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
           அல்லல் உழப்பிக்கும் சூது

           விழியப்பன் விளக்கம்: தீயொழுக்கமான சூது - பொருளை அழித்து, பொய் சொல்வதை 
           வழக்கமாய் ஆக்கும்! அருளை அழித்து, துன்பத்தை விளைவிக்கும்!
(அது போல்...)
           தீப்பழக்கமான ஊழல் - பொதுநலனை அழித்து, சுயநலம் பெருக்குவதை கொள்கையாய் 
           ஆக்கும்! மனிதத்தை அழித்து, கொடுங்கோன்மையை நிலைநாட்டும்!

0939.  உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
           அடையாவாம் ஆயங் கொளின்

           விழியப்பன் விளக்கம்: சூது எனும் தீயொழுக்கத்தை விரும்பி மேற்கொள்வோரை - உடை/
           செல்வம்/உணவு/புகழ்/கல்வி என்னும் ஐந்தும் சேராது!
(அது போல்...)
           பகை எனும் தீக்குணத்தை நேசித்துப் பழகுவோரை - உண்மை/நம்பிக்கை/நட்பு/உறவு/
           பதவி என்னும் ஐந்தும் சேராது!

0940.  இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
           உழத்தொறூஉம் காதற்று உயிர்

           விழியப்பன் விளக்கம்: பொருளை இழக்கும் போதெல்லாம், சூதின் மேல் காதல் பெருகுவது 
           போல்; துன்பம் நேரும் போதெல்லாம், உயிரும் காதலிக்கப்பட வேண்டியதாகும்!
(அது போல்...)
           தோல்வியைத் தழுவும் போதெல்லாம், உழைப்பின் மேல் நம்பிக்கை உயர்வது போல்; பிரிவு 
           நிகழும் போதெல்லாம், உறவுகளும் நம்பப்பப்பட வேண்டியவராவர்!

குறள் எண்: 0940 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0940}

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்

விழியப்பன் விளக்கம்: பொருளை இழக்கும் போதெல்லாம், சூதின் மேல் காதல் பெருகுவது போல்; துன்பம் நேரும் போதெல்லாம், உயிரும் காதலிக்கப்பட வேண்டியதாகும்!
(அது போல்...)
தோல்வியைத் தழுவும் போதெல்லாம், உழைப்பின் மேல் நம்பிக்கை உயர்வது போல்; பிரிவு நிகழும் போதெல்லாம், உறவுகளும் நம்பப்பப்பட வேண்டியவராவர்!

திங்கள், பிப்ரவரி 26, 2018

குறள் எண்: 0939 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0939}

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்

விழியப்பன் விளக்கம்: சூது எனும் தீயொழுக்கத்தை விரும்பி மேற்கொள்வோரை - உடை/செல்வம்/உணவு/புகழ்/கல்வி என்னும் ஐந்தும் சேராது!
(அது போல்...)
பகை எனும் தீக்குணத்தை நேசித்துப் பழகுவோரை - உண்மை/நம்பிக்கை/நட்பு/உறவு/பதவி என்னும் ஐந்தும் சேராது!

ஞாயிறு, பிப்ரவரி 25, 2018

குறள் எண்: 0938 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0938}

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

விழியப்பன் விளக்கம்: தீயொழுக்கமான சூது - பொருளை அழித்து, பொய் சொல்வதை வழக்கமாய் ஆக்கும்! அருளை அழித்து, துன்பத்தை விளைவிக்கும்!
(அது போல்...)
தீப்பழக்கமான ஊழல் - பொதுநலனை அழித்து, சுயநலம் பெருக்குவதை கொள்கையாய் ஆக்கும்! மனிதத்தை அழித்து, கொடுங்கோன்மையை நிலைநாட்டும்!

சனி, பிப்ரவரி 24, 2018

குறள் எண்: 0937 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0937}

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்

விழியப்பன் விளக்கம்: சூதாடும் இடத்தில், காலையிலேயே நுழைந்து காலத்தைக் கழிக்கும் பழக்கம்; தலைமுறை கடந்த செல்வத்தையும், நற்பண்பையும் அழிக்கும்!
(அது போல்...)
தீயவர் தலைமையில், இளமையிலேயே சேர்ந்து கடமையைத் தவறும் வழக்கம்; வம்சம் தொடர்ந்த ஒழுக்கத்தையும், நல்லறத்தையும் அழிக்கும்!

வெள்ளி, பிப்ரவரி 23, 2018

குறள் எண்: 0936 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0936}

அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்

விழியப்பன் விளக்கம்: சூது என்னும் மூதேவியால் அடக்கியாளப் பட்டோர்; உணவை இழப்பதால், வயிறு நிறையார்! நிம்மதியை இழப்பதால், துன்பத்திற்கும் ஆட்படுவர்!
(அது போல்...)
பொய் என்னும் அரக்கனால் ஆக்கிரமிக்கப் பட்டோர்; உண்மையை இழப்பதால், மனது நிறையார்! மனிதத்தை மறப்பதால், அழிவுக்கும் உள்ளாவர்!

வியாழன், பிப்ரவரி 22, 2018

குறள் எண்: 0935 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0935}

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

விழியப்பன் விளக்கம்: சூதாடும் கருவி/சூதாடும் இடம்/சூதாடும் கைத்திறம் - இவை மூன்றிலும் மோகம் கொண்டு, அவற்றைக் கைவிடாதோர்; ஏதும் இல்லாதவர் ஆகியிருக்கிறார்கள்!
(அது போல்...)
பலியிடும் ஆயுதம்/பலியிடும் கோவில்/பலியிடும் உயிர் - இவை மூன்றிலும் நம்பிக்கைக் கொண்டு, அவற்றை வெறுக்காதோர்; ஏதும் வெல்லாதவர் ஆகியிருக்கிறார்கள்!

புதன், பிப்ரவரி 21, 2018

குறள் எண்: 0934 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0934}

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்

விழியப்பன் விளக்கம்: பல துன்பங்களை உருவாக்கி, இருக்கும் தகுதிகளையும் இழக்கவைக்கும் சூதைப் போல்; இல்லாமையை அளிப்பது வேறொன்றுமில்லை!
(அது போல்...)
பல ஊழல்களைச் செய்து, இருக்கும் உடமைகளையும் பறித்துக்கொள்ளும் அரசைப் போல்; கொடுமையைத் தருவது வேறொன்றுமில்லை!

செவ்வாய், பிப்ரவரி 20, 2018

குறள் எண்: 0933 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0933}

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்

விழியப்பன் விளக்கம்: உருட்டுக்கட்டை உருட்டி சூதாடுவதால் கிடைக்கும் வரவை, ஓயாது கூறி சூதாடினால்; பொருளை முதலிடுவதால் கிடைக்கும் வரவு, விலகிப் பிறர்வசம் சேரும்.
(அது போல்...)
பொய்சாட்சி சொல்லி ஏய்ப்பதால் கிடைக்கும் மகிழ்வை, தொடர்ந்து விரும்பி ஏய்த்தால்; மெய்யை சொல்வதால் கிடைக்கும் நன்மை, பொய்த்துத் தீமையே விளையும்.

திங்கள், பிப்ரவரி 19, 2018

குறள் எண்: 0932 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0932}

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

விழியப்பன் விளக்கம்: ஒன்றைப் பெற்று, நூறை இழக்கும் சூதாட்டக் காரர்களுக்கும்; நல்லறம் பெற்று, பல்வளம் பெற்று வாழ்வதற்கு ஓர் வழி உண்டாகுமோ?
(அது போல்...)
ஒன்றைக் கொடுத்து, பலதைப் பறிக்கும் அரசியல் வாதிகளுக்கும்; பொதுநலம் பழகி, சுயநலம் துறந்து வாழ்வதற்கு ஓர் உறுதி தோன்றுமோ?

ஞாயிறு, பிப்ரவரி 18, 2018

குறள் எண்: 0931 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0931}

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

விழியப்பன் விளக்கம்: வெற்றி பெற்றாலும், சூதை விரும்பவேண்டாம்! சூதில் வென்றவை யாவும், தூண்டில் இரையில் மறைந்திருக்கும் இரும்புக் கொக்கியை; மீன் விழுங்கியது போன்றதாகும்!
(அது போல்...)
சொத்து குவிந்தாலும், ஊழலைச் செய்யவேண்டாம்! ஊழலில் கிடைப்பவை யாவும், பொறியின் இரையில் சிக்கியிருக்கும் அடைப்புக் கதவை; எலி விடுவிப்பது போன்றதாகும்!

சனி, பிப்ரவரி 17, 2018

அதிகாரம் 093: கள்ளுண்ணாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 - கள்ளுண்ணாமை

0921.  உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
           கட்காதல் கொண்டொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைப் பொருட்களில், நாள்தோறும் விருப்பம் 
           கொள்வோர்; தம் பிறவிப்பயனை இழப்பர்! எவரும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்கள்!
(அது போல்...)
           பொய் போன்ற மனிதமற்ற காரணிகளில், எப்போதும் நம்பிக்கை உள்ளோர்; தம் சுயத்தை 
           இழப்பர்! எவரும் அவர்களோடு உறவாடமாட்டார்கள்!
      
0922.  உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
           எண்ணப் படவேண்டா தார்

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைத் திரவங்களை அருந்தாதீர்! அருந்தவேண்டும் 
           எனில்; சான்றோரால் உயர்வாய் எண்ணப்பட வேண்டாதோர், மட்டும் அருந்துக!
(அது போல்...)
           இலஞ்சம் போன்ற ஊழல் காரணிகளை  விதைக்காதீர்! விதைக்கவேண்டும் எனில், 
           சமுதாயத்தால் சிறப்பாய் மதிக்கப்பட வேண்டாதோர், மட்டும் விதைக்க!
           
0923.  ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
           சான்றோர் முகத்துக் களி

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தை அருந்தும் பிள்ளைகளைக் கானும், தாயின் 
           முகமே சோகமாகும் எனும்போது; சான்றோர் முகத்தில், மகிழ்ச்சி எப்படி மலரும்?
(அது போல்...)
           ஊழல் போன்ற செயலைச் செய்யும் கட்சிகளைக் காணும், தொண்டர்கள் மனமே 
           வெறுப்பாகும் எனும்போது; பொதுமக்கள் மனதில், விருப்பம் எப்படி எழும்?  

0924.  நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
           பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற பேணக்கூடாவற்றை அருந்தும், பெருங்குற்றம் 
           செய்வோர்க்கு; நாணமெனும் நற்பெண், முகத்தைக் காண்பிக்க அஞ்சி முதுகைக் 
           காண்பிப்பாள்!
(அது போல்...)
           மதம் போன்ற பிரிவினையை விதைக்கும், பேரழிவை நாடுவோர்க்கு; மனிதமெனும் 
           பெருதெய்வம், அருளை வழங்க மறுத்து சாபத்தை வழங்கும்!

0925.  கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
           மெய்யறி யாமை கொளல்

           விழியப்பன் விளக்கம்: பணம் போன்ற பொருளைக் கொடுத்து, கள் போன்ற திரவத்தை 
           அருந்தி; உடல் மயக்கத்தைப் பெறுவது, பிறவிப்பயனை உணராத மயக்கத்துக்கு நிகராகும்!
(அது போல்...)
           ஓட்டு போன்ற உரிமையை விற்று, தொலைக்காட்சி போன்ற இலவசத்தைப் பெற்று; சுய 
           அடையாளத்தை இழப்பது, பரிணாம வளர்ச்சியடையாத அடையாளத்தை அளிக்கும்!

0926.  துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
           நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

           விழியப்பன் விளக்கம்: கடமையைத் தவறி உறங்குவோர், இறந்தோரை விட வேறல்லர்! 
           அதுபோல் எந்நாளும் கள் போன்ற திரவம் அருந்துவோர், நஞ்சை அருந்துவோரை விட 
           வேறல்லர்!
(அது போல்...)
           உண்மையை மறைத்துப் பேசுவோர், குற்றவாளியை விட வேறல்லர்! அதுபோல் எப்போதும் 
           வஞ்சம் போன்ற தீமை செய்வோர், கொலை செய்வோரை விட வேறல்லர்!

0927.  அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
           கள்ளொற்றிக் கண்சாய் பவர்

           விழியப்பன் விளக்கம்: எந்நாளும் கள் போன்ற திரவமருந்தி, கண்ணில் மயக்கம் 
           கொள்வோர்; அம்மயக்கதை உணர்ந்த உள்ளூர் மக்களால் இழக்கப்படுவர்!
(அது போல்...)
           எந்நேரமும் வஞ்சகம் போன்ற செயலிழைத்து, குணத்தில் மூர்க்கம் கொள்வோர்; 
           அம்மூர்க்கத்தை அறிந்த சுற்றத்து உறவுகளால் விலக்கப்படுவர்!

0928.  களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
           ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவமருந்தும் பழக்கமிருந்தும், "கள்ளுண்டு அறியேன்" 
           என பொய்ப்பதைக் கைவிடுக! இல்லையேல், நெஞ்சத்தில் மறைத்தது சூழலால் 
           வெளிப்படும்!
(அது போல்...)
           ஊழல் போன்ற தீச்செயல்கள் செய்திருந்தும், "ஊழலே செய்ததில்லை" என 
           முழங்குவதைக் கைவிடுக! அன்றேல், திறமையாய் செய்தது வாய்மையால் வெளிப்படும்!

0929.  களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
           குளித்தானைத் தீத்துரீஇ அற்று

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தின் மயக்கத்தில் இருப்போரை, அறிவுரைக் கூறி 
           திருத்த முயல்வது; நீரில் மூழ்கி இருப்போரை, தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு நிகராகும்!
(அது போல்...)
           ஊழல் போன்ற தீமையின் உறவில் இருப்போரை, பதிவுகள் எழுதித் திருத்த முயல்வது; 
           மதத்தால் பிரிந்து இருப்போரை, சாதியால் இணைக்க முயல்வதற்கு இணையாகும்!

0930.  கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
           உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவம் அருந்துவோர், கள்ளருந்தாத வேளையில்; 
           கள்ளருந்தி மயங்கியோரைக் காணும்போது, தான் அருந்தியதால் விளைந்த சோர்வை     
           உணரமாட்டாரோ?
(அது போல்...)
           ஊழல் போன்ற குற்றம் செய்வோர், தண்டனை அடையாதபோது; ஊழலாடி 
           தண்டிக்கப்பட்டோரைக் காணும்போது, தான் ஊழலாடியாதல் மக்கள் இழந்ததை 
           எண்ணமாட்டாரோ?

குறள் எண்: 0930 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0930}

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவம் அருந்துவோர், கள்ளருந்தாத வேளையில்; கள்ளருந்தி மயங்கியோரைக் காணும்போது, தான் அருந்தியதால் விளைந்த சோர்வை உணரமாட்டாரோ?
(அது போல்...)
ஊழல் போன்ற குற்றம் செய்வோர், தண்டனைப்  பெறாதபோது; ஊழலாடி தண்டிக்கப்பட்டோரைக் காணும்போது, தான் ஊழலாடியாதல் மக்கள் இழந்ததை எண்ணமாட்டாரோ?

வெள்ளி, பிப்ரவரி 16, 2018

குறள் எண்: 0929 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0929}

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தின் மயக்கத்தில் இருப்போரை, அறிவுரைக் கூறி திருத்த முயல்வது; நீரில் மூழ்கி இருப்போரை, தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு நிகராகும்!
(அது போல்...)
ஊழல் போன்ற தீமையின் உறவில் இருப்போரை, பதிவுகள் எழுதித் திருத்த முயல்வது; மதத்தால் பிரிந்து இருப்போரை, சாதியால் இணைக்க முயல்வதற்கு இணையாகும்!

வியாழன், பிப்ரவரி 15, 2018

குறள் எண்: 0928 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0928}

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவமருந்தும் பழக்கமிருந்தும், "கள்ளுண்டு அறியேன்" என பொய்ப்பதைக் கைவிடுக! இல்லையேல், நெஞ்சத்தில் மறைத்தது சூழலால் வெளிப்படும்!
(அது போல்...)
ஊழல் போன்ற தீச்செயல்கள் செய்திருந்தும், "ஊழலே செய்ததில்லை" என முழங்குவதைக் கைவிடுக! அன்றேல், திறமையாய் செய்தது வாய்மையால் வெளிப்படும்!

புதன், பிப்ரவரி 14, 2018

குறள் எண்: 0927 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0927}

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்

விழியப்பன் விளக்கம்: எந்நாளும் கள் போன்ற திரவமருந்தி, கண்ணில் மயக்கம் கொள்வோர்; அம்மயக்கதை உணர்ந்த உள்ளூர் மக்களால் இழக்கப்படுவர்!
(அது போல்...)
எந்நேரமும் வஞ்சகம் போன்ற செயலிழைத்து, குணத்தில் மூர்க்கம் கொள்வோர்; அம்மூர்க்கத்தை அறிந்த சுற்றத்து உறவுகளால் விலக்கப்படுவர்!

செவ்வாய், பிப்ரவரி 13, 2018

குறள் எண்: 0926 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0926}

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

விழியப்பன் விளக்கம்: கடமையைத் தவறி உறங்குவோர், இறந்தோரை விட வேறல்லர்! அதுபோல் எந்நாளும் கள் போன்ற திரவம் அருந்துவோர், நஞ்சை அருந்துவோரை விட வேறல்லர்!
(அது போல்...)
உண்மையை மறைத்துப் பேசுவோர், குற்றவாளியை விட வேறல்லர்! அதுபோல் எப்போதும் வஞ்சம் போன்ற தீமை செய்வோர், கொலை செய்வோரை விட வேறல்லர்!

திங்கள், பிப்ரவரி 12, 2018

குறள் எண்: 0925 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0925}

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்

விழியப்பன் விளக்கம்: பணம் போன்ற பொருளைக் கொடுத்து, கள் போன்ற திரவத்தை அருந்தி; உடல் மயக்கத்தைப் பெறுவது, பிறவிப்பயனை உணராத மயக்கத்துக்கு நிகராகும்!
(அது போல்...)
ஓட்டு போன்ற உரிமையை விற்று, தொலைக்காட்சி போன்ற இலவசத்தைப் பெற்று; சுய அடையாளத்தை இழப்பது, பரிணாம வளர்ச்சியடையாத அடையாளத்தை அளிக்கும்!

ஞாயிறு, பிப்ரவரி 11, 2018

குறள் எண்: 0924 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0924}

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற பேணக்கூடாவற்றை அருந்தும், பெருங்குற்றம் செய்வோர்க்கு; நாணமெனும் நற்பெண், முகத்தைக் காண்பிக்க அஞ்சி முதுகைக் காண்பிப்பாள்!
(அது போல்...)
மதம் போன்ற பிரிவினையை விதைக்கும், பேரழிவை நாடுவோர்க்கு; மனிதமெனும் பெருதெய்வம், அருளை வழங்க மறுத்து சாபத்தை வழங்கும்!

சனி, பிப்ரவரி 10, 2018

குறள் எண்: 0923 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0923}

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தை அருந்தும் பிள்ளைகளைக் கானும், தாயின் முகமே சோகமாகும் எனும்போது; சான்றோர் முகத்தில், மகிழ்ச்சி எப்படி மலரும்?
(அது போல்...)
ஊழல் போன்ற செயலைச் செய்யும் கட்சிகளைக் காணும், தொண்டர்கள் மனமே வெறுப்பாகும் எனும்போது; பொதுமக்கள் மனதில், விருப்பம் எப்படி எழும்?

வெள்ளி, பிப்ரவரி 09, 2018

குறள் எண்: 0922 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0922}

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைத் திரவங்களை அருந்தாதீர்! அருந்தவேண்டும் எனில்; சான்றோரால் உயர்வாய் எண்ணப்பட வேண்டாதோர், மட்டும் அருந்துக!
(அது போல்...)
இலஞ்சம் போன்ற ஊழல் காரணிகளை  விதைக்காதீர்! விதைக்கவேண்டும் எனில், சமுதாயத்தால் சிறப்பாய் மதிக்கப்பட வேண்டாதோர், மட்டும் விதைக்க!

வியாழன், பிப்ரவரி 08, 2018

குறள் எண்: 0921 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0921}

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைப் பொருட்களில், நாள்தோறும் விருப்பம் கொள்வோர்; தம் பிறவிப்பயனை இழப்பர்! எவரும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்கள்!
(அது போல்...)
பொய் போன்ற மனிதமற்ற காரணிகளில், எப்போதும் நம்பிக்கை உள்ளோர்; தம் சுயத்தை இழப்பர்! எவரும் அவர்களோடு உறவாடமாட்டார்கள்!

புதன், பிப்ரவரி 07, 2018

அதிகாரம் 092: வரைவின் மகளிர் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 - வரைவின் மகளிர்

0911.  அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
           இன்சொல் இழுக்குத் தரும்

           விழியப்பன் விளக்கம்: அன்பு சார்ந்த உணர்வுகளை நாடாமல், பணம் சார்ந்த 
           உடைமைகளை நாடும் விலை-மகளிரின்; இனிமையான சொற்கள், கெடுதலையே 
           விளைவிக்கும்!
(அது போல்...)
           அறம் சார்ந்த கொள்கைகளைத் தொடராமல், ஊழல் சார்ந்த கட்சிகளைத் தொடரும் 
           அரசியல்-வியாபாரிகளின்; எழுச்சியான உரைகள், ஏமாற்றத்தையே அளிக்கும்!
      
0912.  பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
           நயன்தூக்கி நள்ளா விடல்

           விழியப்பன் விளக்கம்: பயனை அளவிட்டு, பொய்யாய் பண்புடன் பேசும்; பண்பற்ற 
           விலைமகளரின் தரத்தை அளவிட்டு, அவர்களைச் சேராது விலகவேண்டும்!
(அது போல்...)
           பதவியை மதிப்பிட்டு, பொய்யாய் பொதுநலம் பேசும்; பொதுநலமற்ற அரசியலாரின் 
           சுயத்தை மதிப்பிட்டு, அவர்களைத் தொடராது ஒதுக்கவேண்டும்!
           
0913.  பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
           ஏதில் பிணந்தழீஇ அற்று

           விழியப்பன் விளக்கம்: பொருளைப் பொருட்படுத்தும் விலைமகளிரோடு, கொள்ளும் 
           பொய்யானத் தழுவல்; இருட்டறையில், உணர்வேதும் இல்லாதப் பிணத்தைத் தழுவுவதற்கு 
           இணையாகும்!
(அது போல்...)
           ஊழலை வளர்த்திடும் அரசியலரோடு, கைகோர்க்கும் ஆபத்தான வளர்ச்சி; வயற்பரப்பில், 
           பயனேதும் இல்லாத முற்செடியை வளர்ப்பதற்கு ஒப்பாகும்!  

0914.  பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
           ஆயும் அறிவி னவர்

           விழியப்பன் விளக்கம்: பொருளை மட்டும் பொருட்படுத்தும் விலைமகளிரின், அற்ப 
           சுகத்தை; அருளை மட்டும் பொருளாக உணரும் பகுத்தறிவுவாதிகள், தீண்டமாட்டார்கள்!
(அது போல்...)
           சுயநலத்தை மட்டும் மேம்படுத்தும் அரசியலாரின், குடும்ப அரசியலை; பொதுநலத்தை 
           மட்டும் சுயநலமாக உணரும் தொடர்கள், ஆதரிக்கமாட்டார்கள்!

0915.  பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
           மாண்ட அறிவி னவர்

           விழியப்பன் விளக்கம்: மதியின் தன்மையால், புகழ்பெற்ற அறிவினைப் பெற்றவர்; 
           பொருளளிக்கும் யார்க்கும் பொதுவாகும் தன்மையுடைய விலைமகளிரின், அற்ப சுகத்தைத்  
           தீண்டார்!
(அது போல்...)
           அன்பின் அடிப்படையால், உயர்ந்த வாழ்வியலைக் கற்றவர்; பதவியளிக்கும் எவர்க்கும் 
           அடிபணியும் அடிப்படையுடைய அரசியலாரின், தீய ஒழுக்கத்தை விரும்பார்!

0916.  தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
           புன்னலம் பாரிப்பார் தோள்

           விழியப்பன் விளக்கம்: அழகு போன்ற விடயங்களால் செருக்கடைந்து, அற்ப சுகத்தைப் 
           பரப்பும் விலைமகளிரின் தோளை; தன்நலனை பொதுநலனாய் பரப்புவோர், 
           தீண்டமாட்டார்கள்!
(அது போல்...)
           சொத்து போன்ற விடயங்களால் ஆணவமுற்று, அற்ப செயலைச் செய்யும் சிறுமக்களின் 
           உறவை; தன்சொத்தைப் பொதுசொத்தாய் எண்ணுவோர், ஏற்கமாட்டார்கள்!

0917.  நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
           பேணிப் புணர்பவர் தோள்

           விழியப்பன் விளக்கம்: அறவழிக்குப் புறம்பானவற்றை மனதில் விரும்பி, பலருடன் உடலால் 
           உறவாடும் விலைமகளிரின் தோளை; வைராக்கியமான மனதில்லாதவரே தீண்டுவர்!
(அது போல்...)
           மக்களாட்சிக்கு எதிராய் இயங்கும் கட்சிகளோடு, மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் 
           சாதிக்கட்சிகளின் வேட்பாளரை; ஊழலழிக்கும் கடமையறியாரே ஏற்பர்!

0918.  ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
           மாய மகளிர் முயக்கு

           விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையை ஆய்ந்தறியும் அறிவுடையவர் அல்லாதவர்க்கு; 
           மாயை நிறைந்த விலைமகளிரின் தழுவலைத் தேடுமளவு, மோகினியின் தாக்கமுண்டு 
           என்பர்!
(அது போல்...)
           மக்களாட்சியை வெளிப்படுத்தும் வைராக்கியம் இல்லாதவர்க்கு; தீமை மிகுந்த 
           குண்டர்களின் ஆதரவை நாடுமளவு, பேராசையின் ஆதிக்கமுண்டு என்பர்!

0919.  வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
           பூரியர்கள் ஆழும் அளறு

           விழியப்பன் விளக்கம்: வரையறையின்றி, பொருளளிக்கும் யாருடனும் உறவாடும் 
           விலைமகளிரின் மெல்லிய தோள்; சிறப்படையும் தகுதியற்ற மக்கள் புதையும், நரகம் ஆகும்!
(அது போல்...)
           கொள்கையின்றி, பதவியளிக்கும் எவருடனும் கூடும் சாதிவெறியரின் சிறிய கட்சி; 
           அறமுணரும் தகுதியற்றத் தொண்டர்கள் தஞ்சமடையும், கல்லறை ஆகும்!

0920.  இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
           திருநீக்கப் பட்டார் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: எவருடனும் உறவாடும் இருமனம் கொண்ட விலைமகளிர், கள் 
           மற்றும் சூது - இவை மூன்றும், திருமகளால் கைவிடப் பட்டவருக்குத் தொடர்புடையவை 
           ஆகும்!
(அது போல்...)
           எவரையும் எதிர்க்கும் மூர்க்கம் நிறைந்த அடியாட்கள், பொய் மற்றும் ஊழல் - இவை 
           மூன்றும், மக்களால் நிராகரிக்கப் பட்டவருக்குத் தேவையானவை ஆகும்!