பால்: 2 - பொருள்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது
0931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
விழியப்பன் விளக்கம்: வெற்றி பெற்றாலும், சூதை விரும்பவேண்டாம்! சூதில் வென்றவை
யாவும், தூண்டில் இரையில் மறைந்திருக்கும் இரும்புக் கொக்கியை; மீன் விழுங்கியது
போன்றதாகும்!
பொறியின் இரையில் சிக்கியிருக்கும் அடைப்புக் கதவை; எலி விடுவிப்பது போன்றதாகும்!
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
விழியப்பன் விளக்கம்: வெற்றி பெற்றாலும், சூதை விரும்பவேண்டாம்! சூதில் வென்றவை
யாவும், தூண்டில் இரையில் மறைந்திருக்கும் இரும்புக் கொக்கியை; மீன் விழுங்கியது
போன்றதாகும்!
(அது போல்...)
சொத்து குவிந்தாலும், ஊழலைச் செய்யவேண்டாம்! ஊழலில் கிடைப்பவை யாவும், பொறியின் இரையில் சிக்கியிருக்கும் அடைப்புக் கதவை; எலி விடுவிப்பது போன்றதாகும்!
0932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
விழியப்பன் விளக்கம்: ஒன்றைப் பெற்று, நூறை இழக்கும் சூதாட்டக் காரர்களுக்கும்;
நல்லறம் பெற்று, பல்வளம் பெற்று வாழ்வதற்கு ஓர் வழி உண்டாகுமோ?
சுயநலம் துறந்து வாழ்வதற்கு ஓர் உறுதி தோன்றுமோ?
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
விழியப்பன் விளக்கம்: ஒன்றைப் பெற்று, நூறை இழக்கும் சூதாட்டக் காரர்களுக்கும்;
நல்லறம் பெற்று, பல்வளம் பெற்று வாழ்வதற்கு ஓர் வழி உண்டாகுமோ?
(அது போல்...)
ஒன்றைக் கொடுத்து, பலதைப் பறிக்கும் அரசியல் வாதிகளுக்கும்; பொதுநலம் பழகி, சுயநலம் துறந்து வாழ்வதற்கு ஓர் உறுதி தோன்றுமோ?
0933. உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
விழியப்பன் விளக்கம்: உருட்டுக்கட்டை உருட்டி சூதாடுவதால் கிடைக்கும் வரவை, ஓயாது
கூறி சூதாடினால்; பொருளை முதலிடுவதால் கிடைக்கும் வரவு, விலகிப் பிறர்வசம் சேரும்.
மெய்யை சொல்வதால் கிடைக்கும் நன்மை, பொய்த்துத் தீமையே விளையும்.
போஒய்ப் புறமே படும்
விழியப்பன் விளக்கம்: உருட்டுக்கட்டை உருட்டி சூதாடுவதால் கிடைக்கும் வரவை, ஓயாது
கூறி சூதாடினால்; பொருளை முதலிடுவதால் கிடைக்கும் வரவு, விலகிப் பிறர்வசம் சேரும்.
(அது போல்...)
பொய்சாட்சி சொல்லி ஏய்ப்பதால் கிடைக்கும் மகிழ்வை, தொடர்ந்து விரும்பி ஏய்த்தால்; மெய்யை சொல்வதால் கிடைக்கும் நன்மை, பொய்த்துத் தீமையே விளையும்.
0934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
விழியப்பன் விளக்கம்: பல துன்பங்களை உருவாக்கி, இருக்கும் தகுதிகளையும்
இழக்கவைக்கும் சூதைப் போல்; இல்லாமையை அளிப்பது வேறொன்றுமில்லை!
போல்; கொடுமையைத் தருவது வேறொன்றுமில்லை!
வறுமை தருவதொன்று இல்
விழியப்பன் விளக்கம்: பல துன்பங்களை உருவாக்கி, இருக்கும் தகுதிகளையும்
இழக்கவைக்கும் சூதைப் போல்; இல்லாமையை அளிப்பது வேறொன்றுமில்லை!
(அது போல்...)
பல ஊழல்களைச் செய்து, இருக்கும் உடமைகளையும் பறித்துக்கொள்ளும் அரசைப் போல்; கொடுமையைத் தருவது வேறொன்றுமில்லை!
0935. கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
விழியப்பன் விளக்கம்: சூதாடும் கருவி/சூதாடும் இடம்/சூதாடும் கைத்திறம் - இவை
மூன்றிலும் மோகம் கொண்டு, அவற்றைக் கைவிடாதோர்; ஏதும் இல்லாதவர்
ஆகியிருக்கிறார்கள்!
கொண்டு, அவற்றை வெறுக்காதோர்; ஏதும் வெல்லாதவர் ஆகியிருக்கிறார்கள்!
இவறியார் இல்லாகி யார்
விழியப்பன் விளக்கம்: சூதாடும் கருவி/சூதாடும் இடம்/சூதாடும் கைத்திறம் - இவை
மூன்றிலும் மோகம் கொண்டு, அவற்றைக் கைவிடாதோர்; ஏதும் இல்லாதவர்
ஆகியிருக்கிறார்கள்!
(அது போல்...)
பலியிடும் ஆயுதம்/பலியிடும் கோவில்/பலியிடும் உயிர் - இவை மூன்றிலும் நம்பிக்கைக் கொண்டு, அவற்றை வெறுக்காதோர்; ஏதும் வெல்லாதவர் ஆகியிருக்கிறார்கள்!
0936. அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்
விழியப்பன் விளக்கம்: சூது என்னும் மூதேவியால் அடக்கியாளப் பட்டோர்; உணவை
இழப்பதால், வயிறு நிறையார்! நிம்மதியை இழப்பதால், துன்பத்திற்கும் ஆட்படுவர்!
நிறையார்! மனிதத்தை மறப்பதால், அழிவுக்கும் உள்ளாவர்!
முகடியான் மூடப்பட் டார்
விழியப்பன் விளக்கம்: சூது என்னும் மூதேவியால் அடக்கியாளப் பட்டோர்; உணவை
இழப்பதால், வயிறு நிறையார்! நிம்மதியை இழப்பதால், துன்பத்திற்கும் ஆட்படுவர்!
(அது போல்...)
பொய் என்னும் அரக்கனால் ஆக்கிரமிக்கப் பட்டோர்; உண்மையை இழப்பதால், மனது நிறையார்! மனிதத்தை மறப்பதால், அழிவுக்கும் உள்ளாவர்!
0937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
விழியப்பன் விளக்கம்: சூதாடும் இடத்தில், காலையிலேயே நுழைந்து காலத்தைக் கழிக்கும்
பழக்கம்; தலைமுறை கடந்த செல்வத்தையும், நற்பண்பையும் அழிக்கும்!
தொடர்ந்த ஒழுக்கத்தையும், நல்லறத்தையும் அழிக்கும்!
கழகத்துக் காலை புகின்
விழியப்பன் விளக்கம்: சூதாடும் இடத்தில், காலையிலேயே நுழைந்து காலத்தைக் கழிக்கும்
பழக்கம்; தலைமுறை கடந்த செல்வத்தையும், நற்பண்பையும் அழிக்கும்!
(அது போல்...)
தீயவர் தலைமையில், இளமையிலேயே சேர்ந்து கடமையைத் தவறும் வழக்கம்; வம்சம் தொடர்ந்த ஒழுக்கத்தையும், நல்லறத்தையும் அழிக்கும்!
0938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது
விழியப்பன் விளக்கம்: தீயொழுக்கமான சூது - பொருளை அழித்து, பொய் சொல்வதை
வழக்கமாய் ஆக்கும்! அருளை அழித்து, துன்பத்தை விளைவிக்கும்!
ஆக்கும்! மனிதத்தை அழித்து, கொடுங்கோன்மையை நிலைநாட்டும்!
அல்லல் உழப்பிக்கும் சூது
விழியப்பன் விளக்கம்: தீயொழுக்கமான சூது - பொருளை அழித்து, பொய் சொல்வதை
வழக்கமாய் ஆக்கும்! அருளை அழித்து, துன்பத்தை விளைவிக்கும்!
(அது போல்...)
தீப்பழக்கமான ஊழல் - பொதுநலனை அழித்து, சுயநலம் பெருக்குவதை கொள்கையாய் ஆக்கும்! மனிதத்தை அழித்து, கொடுங்கோன்மையை நிலைநாட்டும்!
0939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
விழியப்பன் விளக்கம்: சூது எனும் தீயொழுக்கத்தை விரும்பி மேற்கொள்வோரை - உடை/
செல்வம்/உணவு/புகழ்/கல்வி என்னும் ஐந்தும் சேராது!
பதவி என்னும் ஐந்தும் சேராது!
அடையாவாம் ஆயங் கொளின்
விழியப்பன் விளக்கம்: சூது எனும் தீயொழுக்கத்தை விரும்பி மேற்கொள்வோரை - உடை/
செல்வம்/உணவு/புகழ்/கல்வி என்னும் ஐந்தும் சேராது!
(அது போல்...)
பகை எனும் தீக்குணத்தை நேசித்துப் பழகுவோரை - உண்மை/நம்பிக்கை/நட்பு/உறவு/பதவி என்னும் ஐந்தும் சேராது!
0940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்
விழியப்பன் விளக்கம்: பொருளை இழக்கும் போதெல்லாம், சூதின் மேல் காதல் பெருகுவது
போல்; துன்பம் நேரும் போதெல்லாம், உயிரும் காதலிக்கப்பட வேண்டியதாகும்!
உழத்தொறூஉம் காதற்று உயிர்
விழியப்பன் விளக்கம்: பொருளை இழக்கும் போதெல்லாம், சூதின் மேல் காதல் பெருகுவது
போல்; துன்பம் நேரும் போதெல்லாம், உயிரும் காதலிக்கப்பட வேண்டியதாகும்!
(அது போல்...)
தோல்வியைத் தழுவும் போதெல்லாம், உழைப்பின் மேல் நம்பிக்கை உயர்வது போல்; பிரிவு
நிகழும் போதெல்லாம், உறவுகளும் நம்பப்பப்பட வேண்டியவராவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக