சனி, டிசம்பர் 10, 2016

குறள் எண்: 0496 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0496}

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

விழியப்பன் விளக்கம்: உறுதியான சக்கரங்களைக் கொண்ட உயர்ந்த தேரால், கடலில் பாய்ந்து செல்லமுடியாது; கடலில் பாய்ந்து செல்லும் கப்பலாலும், நிலத்தில் உருளமுடியாது.
(அது போல்...)
திடமான உடலைக் கொண்ட மல்யுத்த வீரரால், வளைந்து யோகா செய்யமுடியாது; வளைந்து யோகா செய்வோராலும், மல்யுத்தம் செய்யமுடியாது.
*****

வெள்ளி, டிசம்பர் 09, 2016

குறள் எண்: 0495 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0495}

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

விழியப்பன் விளக்கம்: ஆழமான நீரில் இருப்பின், முதலை எல்லா உயிர்களையும் வெல்லும்; நீரிலிருந்து வெளியே வந்தால், பிற உயிர்கள் முதலையை வெல்லும்.
(அது போல்...)
அதீதமான ஆடம்பரமுடன் இருப்பின், ஒருவர் அனைத்து உறவுகளையும் அவமதிப்பர்; ஆடம்பரம் அனைத்தையும் இழந்துவிட்டால், மற்ற உறவுகள் அவர்களை அவமதிப்பர்.
*****

வியாழன், டிசம்பர் 08, 2016

குறள் எண்: 0494 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0494}

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

விழியப்பன் விளக்கம்: தகுதியுடையோர், சாதகமான இடத்தை அறிந்து, தகுதியானச் செயல்களைச் செய்தால்; அவர்களை அழிக்க எண்ணியோர், தம் எண்ணத்தை மாற்றுவர்.
(அது போல்...)
நற்குணத்தோர், ஆரோக்கியமான உடம்பை விரும்பி, நன்மையானப் பழக்கங்களைப் பழகினால்; அவருள் இருக்கும் கிருமிகள், தம் செயல்திறனை இழக்கும்.
*****

புதன், டிசம்பர் 07, 2016

குறள் எண்: 0493 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0493}

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

விழியப்பன் விளக்கம்: தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தக்க பாதுகாப்புடன் பகைவர்களை எதிர்கொண்டால்; வலிமை இல்லாதவரும், வலிமை கொண்டு வெல்லமுடியும்.
(அது போல்...)
முறையான தலைமையை ஏற்றுக்கொண்டு, வைராக்கியமான மனதுடன் ஊழலாரை எதிர்த்தால்; அதிகாரம் இல்லாதோரும், அதிகாரம் கொண்டு சாதிக்கமுடியும்.
*****

செவ்வாய், டிசம்பர் 06, 2016

குறள் எண்: 0492 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0492}

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

விழியப்பன் விளக்கம்: பகையைச் சேர்த்த, வலிமையான வீரர்களுக்கும்; பாதுகாப்பான இடத்தைச் சேரும் திறன், பல்வகைப் பலன்களை அளிக்கும்.
(அது போல்...)
வாழ்க்கையை இழந்த, சக்திவாய்ந்த வாக்காளர்களுக்கும்; சரியான நேரத்தில் எதிர்க்கும் யுக்தி, பல்வகை மாற்றங்களை உருவாக்கும்.
*****

திங்கள், டிசம்பர் 05, 2016

குறள் எண்: 0491 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0491}

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

விழியப்பன் விளக்கம்: முழுமையடையச் சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், எச்செயலையும் துவங்கக்கூடாது! அதுபோல், எளிதென எண்ணி இகழ்ச்சியாகவும் எண்ணக்கூடாது!
(அது போல்...)
மக்களாட்சிக்குத் தேவையானக் காரணியை ஆழ்ந்துணராமல், எக்கட்சியையும் ஏற்கக்கூடாது! அதுபோல், சரியென நினைத்து நிராகரிக்கவும் செய்யக்கூடாது!
*****

ஞாயிறு, டிசம்பர் 04, 2016

அதிகாரம் 049: காலமறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்

0481.  பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
           வேந்தர்க்கு வேண்டும் பொழுது

           விழியப்பன் விளக்கம்: 
வலிமையானக் கோட்டானைக், காகம் பகலில் வெல்வது போல்; 

           எதிரியை வெல்ல, அரசரும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(அது போல்...)
           கடுமையான மழைக்காலத்திற்கு, முன்பே திட்டமிடும் எறும்பைப் போல்; முதுமையை 
           வெல்ல, நாமும் முறையான திட்டத்தை வகுக்க வேண்டும்.
        
0482.  பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
           தீராமை ஆர்க்குங் கயிறு

           விழியப்பன் விளக்கம்: 
காலத்தை உணர்ந்து, காலத்தோடு இணைந்து செயல்படுவதே;   

           செயலால் கிடைக்கும் செல்வத்தை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
(அது போல்...)
           உறவைப் புரிந்து, உறவோடுப் பிணைந்து பயணப்படுவதே; உறவால் தொடரும் சந்ததியை, 
           துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும். 
           
0483.  அருவினை யென்ப உளவோ கருவியான்
           காலம் அறிந்து செயின்

           விழியப்பன் விளக்கம்: 
செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் காலமறிந்து 

           செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
(அது போல்...)
           ஈட்டும் பொருளை, நிலையான திட்டங்களுடன் அளவறிந்து சேமிக்கும் வல்லவர்களுக்கு; 
           சமாளிக்க முடியாத, சூழலேதும் வந்திடுமோ?

0484.  ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
           கருதி இடத்தாற் செயின்

           விழியப்பன் விளக்கம்: 
காலத்தை அறிந்து, தக்க சூழலில் செயலை மேற்கொண்டால்; 

           உலகையே வெல்ல நினைத்தாலும், எளிதில் நிறைவேறும்.
(அது போல்...)
           சேமிப்பை உணர்ந்து, பாதுகாப்பான வழியில் முதலீடு செய்தால்; கிரகத்தையே வாங்கிட 
           எண்ணினாலும், எளிதில் அடையலாம்.

0485.  காலம் கருதி இருப்பர் கலங்காது
           ஞாலம் கருது பவர்

           விழியப்பன் விளக்கம்: 
உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை ஏதுமின்றி; 

           உரிய காலத்தை எதிர்நோக்கி, பொறுமையுடன் காத்திருப்பர்.
(அது போல்...)
           உணர்வை அடக்கியாள எண்ணுவோர், அதுகுறித்த பயம் இன்றி; தக்க பயிற்சியை  
           மேற்கொண்டு, வைராக்கியமுடன் செயல்படுவர்.

0486.  ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
           தாக்கற்குப் பேருந் தகைத்து

           விழியப்பன் விளக்கம்: 
மனவுறுதி கொண்டோரின் காத்திருப்பு, சண்டைக்குத் தயாராகும் 

           ஆட்டுக்கடா; பலமாய் தாக்குவதற்காக, பின்னோக்கிச் செல்வது போன்றதாகும்.
(அது போல்...)
           அரசியல் பழகுவோரின் பொறுமை, வேட்டைக்குத் தயாராகும் புலி; துல்லியமாய் 
           பாய்வதற்காக, புதர்க்குள் மறைவது போன்றதாகும்.

0487.  பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
           உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

           விழியப்பன் விளக்கம்: 
அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு 

           வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள் சினத்தைக் கொண்டிருப்பர்.
(அது போல்...)
           திறமுடையோர், தம்முடைய தோல்வியை உடனடியாய் அலசாமல்; மனநிலை இயல்பாகும் 
           வரை, இலக்கில் சிந்தனையைச் செலுத்துவர்.

0488.  செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
           காணின் கிழக்காம் தலை

           விழியப்பன் விளக்கம்: 
பகைவரைக் கண்டால், பகையுணர்வை வெளிப்படுத்தாமல் பொறுக்க 

           வேண்டும்; அவர்கள் அழிவைக் காணும்போது, நிலைமை நேர் எதிராகும்.
(அது போல்...)
           அநீதிக்குப் பதில், அநீதியைச் செய்யாமல் தடுக்க வேண்டும்; அநீதியின் முடிவுக்காலம் 
           வரும்போது, நீதியின் தலை நிமிர்ந்திடும்.


0489.  எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
           செய்தற் கரிய செயல்

           விழியப்பன் விளக்கம்: 
கிடைப்பதற்கு அரிதான காலம் கிடைப்பின்; செய்வதற்கு அரிதான 

           செயல்களை, அக்கணமே செய்திடல் வேண்டும்.
(அது போல்...)
           சேர்வதற்கு அரிய குருவை சேர்ந்திடின்; கற்பதற்கு அரிதான அடிப்படைகளை, 
           தாமதமின்றிக் கற்றிடல் வேண்டும்.

0490.  கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
           குத்தொக்க சீர்த்த இடத்து


           விழியப்பன் விளக்கம்: சாதகமான காலத்திற்குக் காத்திருப்பது, கொக்குக்கு இணையாக 
           இருக்கவேண்டும்;  மற்றும் சீர்மையான நேரத்தில் இறையைக் கொத்தும் அதன் 
           திறனைப்போல், செயல்களை முடிக்கவேண்டும்.
(அது போல்...)
           ஆபத்தான நேரத்தைக் கணிப்பது, கோழிக்கு இணையாக இருக்கவேண்டும்; மேலும் 
           சரியான நேரத்தில் குஞ்சுகளை அணைக்கும் இயல்பைப்போல், உணர்ச்சிகளை 
           அடக்கவேண்டும்.
*****

குறள் எண்: 0490 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0490}

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

விழியப்பன் விளக்கம்: சாதகமான காலத்திற்குக் காத்திருப்பது, கொக்குக்கு இணையாக இருக்கவேண்டும்;  மற்றும் சீர்மையான நேரத்தில் இறையைக் கொத்தும் அதன் திறனைப்போல், செயல்களை முடிக்கவேண்டும்.
(அது போல்...)
ஆபத்தான நேரத்தைக் கணிப்பது, கோழிக்கு இணையாக இருக்கவேண்டும்; மேலும் சரியான நேரத்தில் குஞ்சுகளை அணைக்கும் இயல்பைப்போல், உணர்ச்சிகளை அடக்கவேண்டும்.
*****

சனி, டிசம்பர் 03, 2016

குறள் எண்: 0489 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0489}

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

விழியப்பன் விளக்கம்: கிடைப்பதற்கு அரிதான காலம் கிடைப்பின்; செய்வதற்கு அரிதான செயல்களை, அக்கணமே செய்திடல் வேண்டும்.
(அது போல்...)
சேர்வதற்கு அரிய குருவை சேர்ந்திடின்; கற்பதற்கு அரிதான அடிப்படைகளை, தாமதமின்றிக் கற்றிடல் வேண்டும்.
*****

வெள்ளி, டிசம்பர் 02, 2016

குறள் எண்: 0488 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0488}

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

விழியப்பன் விளக்கம்: பகைவரைக் கண்டால், பகையுணர்வை வெளிப்படுத்தாமல் பொறுக்க வேண்டும்; அவர்கள் அழிவைக் காணும்போது, நிலைமை நேர் எதிராகும்.
(அது போல்...)
அநீதிக்குப் பதில், அநீதியைச் செய்யாமல் தடுக்க வேண்டும்; அநீதியின் முடிவுக்காலம் வரும்போது, நீதியின் தலை நிமிர்ந்திடும்.
*****

வியாழன், டிசம்பர் 01, 2016

குறள் எண்: 0487 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0487}

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

விழியப்பன் விளக்கம்: அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள் சினத்தைக் கொண்டிருப்பர்.
(அது போல்...)
திறமுடையோர், தம்முடைய தோல்வியை உடனடியாய் அலசாமல்; மனநிலை இயல்பாகும் வரை, இலக்கில் சிந்தனையைச் செலுத்துவர்.
*****