பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்
0081.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
விழியப்பன் விளக்கம்: இருப்பவற்றைப் பேணி, இல்வாழ்க்கை வாழ்வதெல்லாம்;
விருந்தினர்களைப் பேணி, அவர்களுக்கு தேவையானதைச் செய்வதற்காகவே .
(அது போல்...)
உடம்பைப் பேணி, உயிர்த்திருக்கும் காலமெல்லாம்; மனிதத்தைப் பேணி,
மனிதகுலத்தைத் தழைத்திட வைப்பதற்காகவே.
0082.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
விழியப்பன் விளக்கம்: விருந்தினர்கள் வெளியே காத்திருக்க; சாகா-மருந்தே ஆயினும் -
தனித்து உண்பது, விரும்பத்தக்க முறையன்று.
(அது போல்...)
மக்கள் குடிசையும் இல்லாதிருக்க; வைர-மாளிகையே எனினும் - தனியே அனுபவிப்பது,
ஆட்சியாளரின் மாண்பன்று.
0083.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
விழியப்பன் விளக்கம்: நாள்தோறும் - விருந்தினர்களை, புன்னகையுடன் பேணுவோரின்
வாழ்க்கை; ஒருநாளும் துன்பப்பட்டு கெட்டுப்போவதில்லை.
(அது போல்...)
எந்நிலையிலும் - எல்லாவற்றிலும், சமசரமில்லாத அறநெறிப் பழகுவோரை;
தோல்வியெதுவும் நிலைகுலைக்கச் செய்வதில்லை.
0084.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
விழியப்பன் விளக்கம்: முகம்-மலர்ந்து, சிறப்பாக விருந்தினரைப் பேணுவோரின் வீட்டில்;
நெஞ்ச-அகம் மலர்ந்து, திருமகள் வாழ்வாள்.
(அது போல்...)
தேடல்-வளர்க்கும், சிறந்த சிந்தனைகளைப் பரப்புவோரின் படைப்புகளில்; படைப்பு-திறம்
வளர்க்க, பிரம்மா அருள்புரிவார்.
0085.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணியபின், எஞ்சியதை உண்பவனின் வயலில்;
விதையை விதைக்கவும் வேண்டுமோ?
(அது போல்...)
குடும்பத்தினர் தேவை பூர்த்தியானபின், சுயத்தேவையைப் பற்றி எண்ணுவோர்க்கு;
அறநெறியைப் போதிக்கவும் வேண்டுமோ?
0086.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு
விழியப்பன் விளக்கம்: வந்த விருந்தினர்களைப் பேணி அனுப்பிவிட்டு, வரும்
விருந்தினர்களுக்கு காத்திருப்பவன்; விண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல
விருந்தினனாவான்.
(அது போல்...)
வந்த நோயைக் குணப்படுத்திவிட்டு, வரவிருக்கும் நோய்களைத் தடுக்க முனைபவன்;
மண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல முன்னோடியாவன்.
0087.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
விழியப்பன் விளக்கம்: விருந்தோம்பல் எனும் வேள்வியின் பயன், இத்தனை அளவு
என்றேதுமில்லை; அது, விருந்தினரின் தன்மையைச் சார்ந்தது.
(அது போல்...)
வாய்மை எனும் அறத்தின் பயன், இவ்வளவுவென்ற வரையறை ஏதுமில்லை; அது,
கடைப்பிடிப்பவரின் வைராக்கியத்தைப் பொறுத்தது.
0088.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணும் வேள்வியைச் செய்யாதவர்கள்; வருந்தி
சேர்த்த செல்வத்தின் மீதான பற்றை, இழந்தோம் என்பர்.
(அது போல்...)
மனிதத்தைப் பேணும் செயல்களைச் செய்யாதவர்கள்; விரும்பி வாழ்ந்த வாழ்க்கையின்
மீதான பிணைப்பை, இழந்தோம் என்பர்.
0089.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
விழியப்பன் விளக்கம்: செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத
அறிவிலிகளிடம்; அறியாமை எனும் "வறுமை" உண்டு.
(அது போல்...)
0090.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
விழியப்பன் விளக்கம்: முகர்வதால் சுருங்கும் அனிச்சம் பூவைப்போல்; உபசரிப்பவரின்
முகமாற்றத்தைக் கண்டு, விருந்தினரின் முகம் சுருங்கும்.
(அது போல்...)
பசியினால் வாடும் குழந்தையின் முகம்போல்; பொய்யானவரின் செயல்மாற்றத்தைக்
கண்டு, உண்மையானவரின் மனம் துன்புறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை