புதன், நவம்பர் 09, 2016

குறள் எண்: 0465 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0465}

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

விழியப்பன் விளக்கம்: முறையானத் திட்டங்களை வகுக்காமல், போரை எதிர்கொள்ளுதல்; பாத்தியில் விதையை விதைப்பது போல், பகைவரை வலிமைப்படுத்தும் வழியாகும்.
(அது போல்...)
நிலையான வருமானத்தை வரையறுக்காமல், கடனை வாங்குதல்; நெருப்பில் நெய்யை வார்ப்பது போல், துன்பத்தைப் பெருக்கும் செயலாகும்.
*****

செவ்வாய், நவம்பர் 08, 2016

குறள் எண்: 0464 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0464}

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

விழியப்பன் விளக்கம்: இகழ்ச்சியெனும் குற்றவுணர்விற்கு அஞ்சுவோர்; விளைவைப் பற்றியத் தெளிவில்லாத, செயல்களைத் துவங்க மாட்டார்கள்.
(அது போல்...)
தானெனும் கர்வத்தை வெறுப்போர்; விமர்சிப்போரின் நோக்கத்தை அறியாமல், விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்.
*****

திங்கள், நவம்பர் 07, 2016

குறள் எண்: 0463 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0463}

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், வருங்கால வரவை கணக்கிட்டு; நிகழ்காலக் கையிருப்பை இழக்கவைக்கும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
மரணத்தை உணர்ந்தோர், பிற்கால வாழ்வை நினைத்து; தற்கால அனுபவத்தை இழக்கும் வாழ்வை வாழமாட்டார்கள்.
*****

ஞாயிறு, நவம்பர் 06, 2016

குறள் எண்: 0462 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0462}

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த குழுவுடன் இணைந்து; ஆராய்ந்தறிந்து செயல்களைச் செய்வோர்க்கு, செயற்கரிய செயலென்று எதுவுமில்லை!
(அது போல்...)
நேர்மை மிகுந்த தலைவருடன் கைகோர்த்து; தேவையறிந்து அரசியல் கற்போரால், ஒழிக்கமுடியா ஊழலென்று ஏதுமில்லை!
*****

சனி, நவம்பர் 05, 2016

குறள் எண்: 0461 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0461}

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

விழியப்பன் விளக்கம்: ஓர் செயலால் விளையும் நன்மையை, அச்செயலின் அழிவு மற்றும் ஆக்கம் இரண்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு; அதன் பின் செயல்களை வகுக்கவேண்டும்.
(அது போல்...)
ஓர் சிந்தனையால் உருப்பெறும் படைப்பை, அச்சிந்தனையின் குறை மற்றும் நிறை இரண்டின் அடிப்படையிலும் மதிப்பிட்டு; அதன் பின் சிந்தனைகளை வலுப்படுத்தவேண்டும்.
*****

வெள்ளி, நவம்பர் 04, 2016

அதிகாரம் 046: சிற்றினஞ்சேராமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை

0451.  சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
           சுற்றமாச் சூழ்ந்து விடும்

           விழியப்பன் விளக்கம்: பேரின்பம் கண்ட உயர்ந்தோர், சிற்றின்பம் நாடும் தாழ்ந்தோர்க்கு 

           அஞ்சுவர்; தாழ்ந்தோரோ, சிற்றின்பம் நாடுவோரைச் சுற்றமாகச் சூழ்வர்.
(அது போல்...)
           விவசாயத்தை உயிரெனும் விவசாயிகள், விளைநிலம் அழிக்கும் வியாபாரிகளை எதிர்ப்பர்; 
           வியாபாரிகளோ, விளைநிலத்தை அழிப்போரைப் பங்காளிகளாய் சேர்ப்பர்.
        
0452.  நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
           இனத்தியல்ப தாகும் அறிவு

           விழியப்பன் விளக்கம்: 
சேரும் நிலத்தின் தன்மைக்கேற்ப, நீரின் தன்மை வேறுபடும்; 

           அதுபோல் சேரும் இனத்தின் இயல்புக்கேற்ப, மக்களின் அறிவு வேறுபடும்.
(அது போல்...)
           ஊற்றப்படும் அச்சின் உருவுக்கேற்ப; உருகிய உலோகம் உருமாறும்; அதுபோல் தத்தம் 
           தலைமையின் தன்மைக்கேற்ப, கட்சியின் செயல்பாடுகள் அமையும்.
           
0453.  மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
           இன்னான் எனப்படுஞ் சொல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவரின் உணர்ச்சி, அவரின் மனநிலையை ஒட்டி இருக்கும்; 

           அதுபோல் ஒருவர் இவ்வகையானவர் என்பது, அவரின் சுற்றத்தையொட்டி  
           வரையறுக்கப்படும்.
(அது போல்...)
           பிள்ளைகளின் செயல்பாடுகள், பெற்றோர்களின் இயல்பை ஒட்டி அமையும்; அதுபோல் 
           ஆட்சியாளர் இத்தகையானவர் என்பது, அவர்களின் தொண்டர்களால் நிர்ணயிக்கப்படும்.

0454.  மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
           இனத்துள தாகும் அறிவு

           விழியப்பன் விளக்கம்: 
அறமற்ற சுற்றத்தை உடையவரின் அறிவு, அவரின் மனதைப்  

           பிரதிபலிப்பதாய் தோற்றமளித்து; இறுதியில், அவரின் சுற்றத்தைப் பிரதிபலிப்பதாய் மாறும்.
(அது போல்...)
           நேர்மையற்ற சுயத்தை உடையவரின் வசதி, அவரின் உழைப்பை உணர்த்துவதாய் 
           பறைசாற்றி; பின்னர், அவரின் ஊழலை உணர்த்துவதாய் முடியும்.

0455.  மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
           இனந்தூய்மை தூவா வரும்

           விழியப்பன் விளக்கம்: 
சிந்தனையின் தூய்மை மற்றும் செயலின் தூய்மை - இவையிரண்டும், 

           ஒருவரின் இனத்தின் தூய்மையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
           பெற்றோரின் வாய்மை மற்றும் பிள்ளைகளின் வாய்மை - இவ்விரண்டும், அவரின் 
           முன்னோர்களின் வாய்மையைக் கொண்டு வகுக்கப்படும்.

0456.  மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
           இல்லைநன் றாகா வினை

           விழியப்பன் விளக்கம்: 
தூய்மையான மனமுடையவரின் வம்சம், நல்வழியில் பயணப்படும்; 
           தூய்மையான இனத்தைக் கொண்டவரின் செயல்கள், நன்மையளிக்காமல் இருப்பதில்லை.
(அது போல்...)
           ஊழலற்ற ஆட்சியின் நீட்சி, நல்லவர்களால் தொடரப்படும்; ஊழலற்றத் தொண்டர்களை 
           உடையோரின் கட்சி, வெற்றியடையாமல் இருப்பதில்லை.

0457.  மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
           எல்லாப் புகழும் தரும்

           விழியப்பன் விளக்கம்: 
மனதின் வலிமை, உலக உயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்; அதுபோல் 
           ஒரு இனத்தின் வலிமை, எல்லா வகையான புகழுக்கும் வித்திடும்.
(அது போல்...)
           விவசாயத்தின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார திடத்திற்கு வித்திடும்; அதுபோல் ஒரு 
           கிராமத்தின் வளர்ச்சி, வல்லரசுக்கான அனைத்து காரணிகளையும் வலுப்படுத்தும்.

0458.  மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
           இனநலம் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: 
மிகுந்த மனவலிமையை உடையவர் ஆயினும், சான்றோர்களுக்கு; 
           அவர்கள் சார்ந்த இனத்தின் வலிமை, மேலும் பாதுகாப்பை அளித்திடும்.
(அது போல்...)
           உயரிய சுயவொழுக்கம் பேணுபவர் எனினும், ஆட்சியாளர்களுக்கு; அவர்கள் ஆளும் 
           மக்களின் சுயவொழுக்கம், கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.


0459.  மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
           இனநலத்தின் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: 
மனதின் வலிமையால், ஒருவரின் பிறவிப்பயன் பெருகும்; அப்பயனும், 
           அவர் சார்ந்த இனத்தின் மிகுந்த வலிமையால் பாதுகாக்கப்படும்.
(அது போல்...)
           தொழிலாளியின் உழைப்பால், நிறுவனத்தின் வளர்ச்சி விரிவடையும்; அவ்வளர்ச்சியும், அவர் 
           சார்ந்த சங்கத்தின் அதீத உழைப்பால் நிலைத்திருக்கும்.

0460.  நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
           அல்லற் படுப்பதூஉம் இல்

           விழியப்பன் விளக்கம்: 
நல்ல இனத்தை விட, ஒருவருக்கு சிறந்த துணை ஏதுமில்லை; 
           அதுபோல் தீய இனத்தை விட, ஒருவருக்கு அதீத துன்பத்தை அளிப்பதும் ஏதுமில்லை.
(அது போல்...)
           இயற்கை உரத்தை விட, மண்வளத்திற்கு சிறந்த பாதுகாப்பு ஏதுமில்லை; அதுபோல் 
           இரசாயன உரத்தை விட, மண்வளத்திற்கு அதிக அழிவை அளிப்பதும் ஏதுமில்லை.
*****

குறள் எண்: 0460 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0460}

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

விழியப்பன் விளக்கம்: நல்ல இனத்தை விட, ஒருவருக்கு சிறந்த துணை ஏதுமில்லை; அதுபோல் தீய இனத்தை விட, ஒருவருக்கு அதீத துன்பத்தை அளிப்பதும் ஏதுமில்லை.
(அது போல்...)
இயற்கை உரத்தை விட, மண்வளத்திற்கு சிறந்த பாதுகாப்பு ஏதுமில்லை; அதுபோல் இரசாயன உரத்தை விட, மண்வளத்திற்கு அதிக அழிவை அளிப்பதும் ஏதுமில்லை.
*****

வியாழன், நவம்பர் 03, 2016

குறள் எண்: 0459 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0459}

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: மனதின் வலிமையால், ஒருவரின் பிறவிப்பயன் பெருகும்; அப்பயனும், அவர் சார்ந்த இனத்தின் மிகுந்த வலிமையால் பாதுகாக்கப்படும்.
(அது போல்...)
தொழிலாளியின் உழைப்பால், நிறுவனத்தின் வளர்ச்சி விரிவடையும்; அவ்வளர்ச்சியும், அவர் சார்ந்த சங்கத்தின் அதீத உழைப்பால் நிலைத்திருக்கும்.
*****

புதன், நவம்பர் 02, 2016

குறள் எண்: 0458 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0458}

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: மிகுந்த மனவலிமையை உடையவர் ஆயினும், சான்றோர்களுக்கு; அவர்கள் சார்ந்த இனத்தின் வலிமை, மேலும் பாதுகாப்பை அளித்திடும்.
(அது போல்...)
உயரிய சுயவொழுக்கம் பேணுபவர் எனினும், ஆட்சியாளர்களுக்கு; அவர்கள் ஆளும் மக்களின் சுயவொழுக்கம், கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.
*****

செவ்வாய், நவம்பர் 01, 2016

குறள் எண்: 0457 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0457}

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

விழியப்பன் விளக்கம்: மனதின் வலிமை, உலக உயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்; அதுபோல் ஒரு இனத்தின் வலிமை, எல்லா வகையான புகழுக்கும் வித்திடும்.
(அது போல்...)
விவசாயத்தின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார திடத்திற்கு வித்திடும்; அதுபோல் ஒரு கிராமத்தின் வளர்ச்சி, வல்லரசுக்கான அனைத்து காரணிகளையும் வலுப்படுத்தும்.
*****

திங்கள், அக்டோபர் 31, 2016

குறள் எண்: 0456 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0456}

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

விழியப்பன் விளக்கம்: தூய்மையான மனமுடையவரின் வம்சம், நல்வழியில் பயணப்படும்; தூய்மையான இனத்தைக் கொண்டவரின் செயல்கள், நன்மையளிக்காமல் இருப்பதில்லை.
(அது போல்...)
குறையற்ற ஆட்சியின் நீட்சி, நல்லவர்களால் தொடரப்படும்; குறையற்றத் தொண்டர்களை உடையோரின் கட்சி, வெற்றியடையாமல் இருப்பதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை