ஞாயிறு, மார்ச் 31, 2019

வாட்ஸ்ஆப் வாழ்க்கை...



“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென சொல்வோர்க்கு தெரியுமா,
வெளிநாட்டு வாழ்க்கையின் சிரமங்கள்?

இந்தியாவில் மட்டுமல்ல! இங்கேயும்
பணம் மரத்தில் காய்ப்பதில்லை!
பணத்திற்காக இரத்தமே காய்கிறது!

தோசையோ சோறோ, குடும்பத்துடன்
உண்பதே இன்பம்! பீட்ஸாவும்
பாஸ்த்தாவும் தனிமையில் கொடுமையே!

கேட்கமுடியா  சொல்லும்; மகிழ்வில்லா
வேலையும்; கேவலம் இப்பணத்திற்காக
அல்லவா, மனமுவந்து ஏற்கிறோம்?

இதையெல்லாம் தாண்டியேன் இங்கே
இருக்கிறோம் என்கிறீரா? இதுவோர்,
புலிவால் பிடித்த கதையே!

பிடித்த காரணத்தை விடவும்,
விடுக்கும் காரணம் முக்கியமானது!
விடுக்கும் வழிதெரியாது விழிக்கிறோம்!

பணமா வாழ்க்கை? இல்லையே!
பணத்துடன் குடும்பமும் இருப்பதுதானே
வாழ்க்கை? புலிவாலை விடமுடியாமல்;

வாட்ஸ்ஆப்பில் வாழ்கிறோம் இப்பாவிகள்!
குழந்தையுடன் கொஞ்சலும் பேச்சும்;
பொண்டாட்டியுடன் ஊடலும் சாடலும்;

பெற்றோரின் பாசமும் நேசமும்;
பிறந்தாரின் அன்பும் ஆதரவும்;
சுற்றத்தாரின் உறவும் நட்பும்;

எல்லாம் வாட்ஸ்ஆப் வாழ்க்கையே!
வாட்ஸ்ஆப் இல்லாத தருணமெல்லாம்;
வாழ்வை இழந்த தருணங்களே!

“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென அடுத்தமுறை சொல்லும்முன்,
இப்பதிவை நினைத்திடுங்கள் மனங்களே!

“அவனுக்கேன் இப்பரிதாப வாழ்க்கை?”
அப்படியென ஒருவர் பேசினாலும்,
அப்படி வாழ்வோர்க்கு அருமருந்தாகும்!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 

செவ்வாய், டிசம்பர் 04, 2018

அதிகாரம் 122: கனவுநிலை உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்

1211.  காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
           யாதுசெய் வேன்கொல் விருந்து

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச் 
           செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
(அது போல்...)
           பேரிடரால் வாடும் எமக்கு உறுதியாக, மீள்வாழ்வின் ஆரம்ப உதவியோடு வந்த புது 
           தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?
      
1212.  கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
           உயலுண்மை சாற்றுவேன் மன்

           விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்; 
           கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை 
           எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
           யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை 
           ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!
           
1213.  நனவினால் நல்கா தவரைக் கனவினால்
           காண்டலின் உண்டென் உயிர்

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது 
           காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
           ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் 
           தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?

1214.  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
           நல்காரை நாடித் தரற்கு

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்; 
           கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
           நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் 
           காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?

1215.  நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
           கண்ட பொழுதே இனிது

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே; 
           கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
           நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு 
           வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!

1216.  நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
           காதலர் நீங்கலர் மன்

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது 
           இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
           நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் 
           நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!

1217.  நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
           என்எம்மைப் பீழிப் பது

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன 
           காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
           அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் 
           பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?

1218.  துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
           நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

           விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும் 
           போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
           தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக 
           மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!

1219.  நனவினால் நல்காரை நோவர் கனவினால்
           காதலர்க் காணா தவர்

           விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்; 
           நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
           தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் 
           குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!

1220.  நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
           காணார்கொல் இவ்வூ ரவர்

           விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும் 
           இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
           கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே 
           பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?

குறள் எண்: 1220 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1220}

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்

விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும் இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?

திங்கள், டிசம்பர் 03, 2018

குறள் எண்: 1219 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1219}

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்; நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!

ஞாயிறு, டிசம்பர் 02, 2018

குறள் எண்: 1218 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1218}

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும் போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!

சனி, டிசம்பர் 01, 2018

குறள் எண்: 1217 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1217}

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?

வெள்ளி, நவம்பர் 30, 2018

குறள் எண்: 1216 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1216}

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!

வியாழன், நவம்பர் 29, 2018

குறள் எண்: 1215 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1215}

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே; கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!

புதன், நவம்பர் 28, 2018

குறள் எண்: 1214 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1214}

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்; கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?

செவ்வாய், நவம்பர் 27, 2018

குறள் எண்: 1213 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1213}

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?

திங்கள், நவம்பர் 26, 2018

குறள் எண்: 1212 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1212}

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்

விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்; கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!