வெள்ளி, மார்ச் 31, 2017

குறள் எண்: 0607 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0607}

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இன்றி, சோம்பலை உடையோர்; இடித்து உரைக்கும், இகழ்ச்சியான சொற்களுக்கு ஆட்படுவர்.
(அது போல்...)
உறுதியான அரவணைப்பு இன்றி, உறவை மேற்கொள்வோர்; குடும்பத்தைப் பழிக்கும், தரமற்ற விமர்சனத்துக்கு உள்ளவர்.

வியாழன், மார்ச் 30, 2017

குறள் எண்: 0606 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0606}

படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது

விழியப்பன் விளக்கம்: நாட்டை ஆளும் ஆட்சியர்களின், அன்பைப் பெற்றவர் எனினும்; சோம்பலை உடையவர்கள், ஆகச்சிறந்த நன்மைகளை அடைவது சாத்தியமில்லை.
(அது போல்...)
வருமானம் குவியும் தொழிலதிபர்களின், பிள்ளைகளாய் பிறந்தவர் எனினும்; சுயமற்ற பிள்ளைகள், தலைசிறந்த செயல்களைச் செய்வது அரிதானது.

புதன், மார்ச் 29, 2017

குறள் எண்: 0605 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0605}

நெடுநீர் மறவி மடிதுயி நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

விழியப்பன் விளக்கம்: தாமதம்/மறதி/சோம்பல்/தூக்கம் - இவை நான்கும்; வாழ்க்கையை அழிக்கும் இயல்புடையோர், விரும்பும் மரக்கலங்களாகும்.
(அது போல்...)
பொய்/வஞ்சம்/பேராசை/புறங்கூறல் - இவை நான்கும்; குடும்பத்தைச் சிதைக்கும் குணமுடையோர், இரசிக்கும் அணிகலன்களாகும்.

செவ்வாய், மார்ச் 28, 2017

குறள் எண்: 0604 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0604}

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இல்லாமல், சோம்பலில் மூழ்கினால்; அவர்களின் குடும்பம் அழிந்து, குற்றச்செயல்கள் அதிகரிக்கும்
(அது போல்...)
புனிதமான பொதுநலம் இல்லாமல், சுயநலனில் மூழ்கினால்; அவர்களின் ஆட்சி வீழ்ந்து, தீயசிந்தனைகள் பெருகும்.

திங்கள், மார்ச் 27, 2017

குறள் எண்: 0603 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0603}

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

விழியப்பன் விளக்கம்: சோம்பலைத் தன்னுடன் இணைத்து வாழும், அறியாமை கொண்டோர் பிறந்த குடும்பம்; அவரையும் முந்திக்கொண்டு அழிந்துவிடும்.
(அது போல்...)
ஊழலைத் தம்முள்ளே புதைத்து வலம்வரும், தீயொழுக்கம் உடையோரைக் கொண்ட கட்சி; அவர்களுக்கு முன்பாகவே சிதைந்துவிடும்.

ஞாயிறு, மார்ச் 26, 2017

குறள் எண்: 0602 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0602}

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: தம் குடும்பத்தை, தலைசிறந்த குடும்பமாய் உயர்த்தும் வைராக்கியம் உடையவர்கள்; சோம்பலை, சோம்பலடையச் செய்யும் ஊக்கமுடன் வாழவேண்டும்!
(அது போல்...)
தம் சரித்திரத்தை, உலகளாவிய சரித்திரமாய் எழுதிட விரும்பும் தலைவர்கள்; தீவிரவாதத்தை, தீவிரவாதத்தால் ஒழிக்கும் உறுதியுடன் உழைக்கவேண்டும்!
*****

சனி, மார்ச் 25, 2017

குறள் எண்: 0601 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0601}

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்

விழியப்பன் விளக்கம்: சோம்பல் என்னும் தூசுத் துகள், தொடர்ந்து சேர்ந்தால்; குடும்பம் என்னும் அணையாத விளக்கு, ஒளியை இழந்து கெட்டழியும்!
(அது போல்...)
குழப்பம் என்னும் அறியாமைக் காரணி, தொடர்ந்து பெருகினால்; கல்வி என்னும் அழியாப் புகழ், புரிதலை இழந்து தடம்புரளும்!
*****

வெள்ளி, மார்ச் 24, 2017

அதிகாரம் 060: ஊக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை

0591.  உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
           உடையது உடையரோ மற்று

           விழியப்பன் விளக்கம்: 
ஊக்கமெனும் ஒழுக்கம் உடையவரே, உடையவர் ஆவர்! 
           ஊக்கத்தைத் தவிர்த்து மற்றவைகளைக் கொண்டிருப்போர், உடையவர் ஆவரோ?
(அது போல்...)
           மனிதமெனும் அடிப்படை அறிந்தோரே, சான்றோர் ஆவர்; மனிதத்தைத் தவிர்த்துப் 
           பிறவற்றை அறிந்தோர், சான்றோர் ஆவரோ?
      
0592.  உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
           நில்லாது நீங்கி விடும்

           விழியப்பன் விளக்கம்: 
ஊக்கமுடைய உள்ளத்தைக் கொள்வதே, நிலையான 
           உடைமையாகும்!மதிப்பற்ற பொருள் உடைமைகள், நிலைத்து இருக்காமல் அழிந்து விடும்!
(அது போல்...)
           உயிர்ப்புள்ள அன்பைப் பரிமாறுவதே, உண்மையான உறவாகும்! பணத்தை விரும்பும் 
           உறவுகள், உண்மை இல்லாமல் முறிந்து விடும்!
           
0593.  ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
           ஒருவந்தம் கைத்துஉடை யார்

           விழியப்பன் விளக்கம்: 
உறுதியான ஊக்கத்தைத் தம் வசம் உடையோர்; "சம்பாதித்த 
           செல்வத்தை இழந்தோம்" என புலம்பி, சோர்வடைய மாட்டார்கள்.
(அது போல்...)
           சிறப்பான திறமையைத் தம் வசம் உடையோர்; “கொடுத்த வாய்ப்பை இழந்தோம்” என 
           சொல்லி, துன்பமடைய மாட்டார்கள்.

0594.  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
           ஊக்கம் உடையான் உழை

           விழியப்பன் விளக்கம்: 
அசைக்கமுடியாத ஊக்கம் உடையவரைச் சேர்ந்திட; அவர்களின் 
           இருப்பிடத்தை அறிந்து, புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள் தாமே செல்லும்!
(அது போல்...)
           குறைவில்லாத மனிதம் கொண்டோரை அடைய; அவர்களின் சிறப்பை உணர்ந்து, கருணை/
           அறம் போன்ற குணங்கள் தாமே செல்லும்!

0595.  வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
           உள்ளத்து அனையது உயர்வு

           விழியப்பன் விளக்கம்: பூக்களின் வளர்ச்சி, நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் 
           புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள், மக்களின் ஊக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!
(அது போல்...)
           செயல்களின் அறம், சிந்தனையின் தன்மைக்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் மனிதம்/நேர்மை 
           போன்ற குணங்கள், குடும்பத்தின் ஒழுக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!

0596.  உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
           தள்ளினும் தள்ளாமை நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: 
சிந்திப்பது அனைத்தும், உயர்ந்த சிந்தனைகளாய் இருக்கவேண்டும்! 
           சில சிந்தனைகள் தவறினாலும், ஊக்கத்தைத் தவறாத வைராக்கியம் வேண்டும்!
(அது போல்...)
           உறவுகள் அனைத்தும், முறையான உறவுகளாய் இருக்கவேண்டும்! சில உறவுகள் 
           தவறானாலும், ஒழுக்கத்தைத் தவறாத முனைப்பு வேண்டும்!

0597.  சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
           பட்டுப்பாடு ஊன்றும் களிறு

           விழியப்பன் விளக்கம்: 
அம்புகள் துளைத்தாலும், யானை தன் உறுதியை நிலைநாட்டும்! 
           அதுபோல் தோல்விகள் நேர்ந்தாலும், ஊக்கமுடையோர் தம் தரத்தை இழக்க மாட்டார்கள்!
(அது போல்...)
           ஆழ்துளைகள் சிதைத்தாலும், பூமி தன் பொறுமையைப்  பேணிக்காக்கும்! அதுபோல் 
           துன்பங்கள் பெருகினாலும், அன்புடையோர் தம் குடும்பத்தைப் பிரிய மாட்டார்கள்!

0598.  உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
           வள்ளியம் என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: கொடை அளிக்கும் ஊக்கம் இல்லாதவர்; இவ்வுலகில் "வள்ளல்" 
           எனும் உயர்ந்த நிலையை அடைவது சாத்தியமில்லை!
(அது போல்...)
           பொதுநலம் காக்கும் முனைப்பு இல்லாதோர்; அரசியலில் "கர்மவீரர்" எனும் சிறந்த 
           பெருமையை அடைவது அரிதானது!

0599.  பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
           வெரூஉம் புலிதாக் குறின்

           விழியப்பன் விளக்கம்: 
பேருடம்பு மற்றும் கூர்மையான தந்தங்கள் இருந்தும், புலியின் 
           தாக்குதலுக்கு யானை அஞ்சும்! அதுபோல் ஊக்கமுடைமை, எவ்வித தடைகளையும் 
           தகர்க்கும்!
(அது போல்...)
           பீரங்கி மற்றும் வலிமையான அணுகுண்டுகள் இருந்தும், அஹிம்சையின் சக்திக்கு எதிரிகள் 
           மிரள்வர்! அதுபோல் அன்புடைமை, எவ்வித உறவுகளையும் சமாளிக்கும்!

0600.  உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்
           மரம்மக்கள் ஆதலே வேறு

           விழியப்பன் விளக்கம்: 
ஊக்கம் உடைமையே, ஒருவருக்கு உண்மையான அறிவாகும்! 
           அவ்வூக்கம் இல்லாதோர் மரங்களே; உருவத்தால், மக்களாய் இருப்பதே வேறுபாடு!
(அது போல்...)
           வாய்மை கொண்டிருப்பதே, உறவுக்கு வலிமையான அடிப்படையாகும்! அவ்வாய்மை 
           இல்லாதவை பகையே; சமூகத்திற்காக, உறவுகளாய் இருப்பதே வித்தியாசம்!
*****

குறள் எண்: 0600 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0600}

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு

விழியப்பன் விளக்கம்: ஊக்கம் உடைமையே, ஒருவருக்கு உண்மையான அறிவாகும்! அவ்வூக்கம் இல்லாதோர் மரங்களே; உருவத்தால், மக்களாய் இருப்பதே வேறுபாடு!
(அது போல்...)
வாய்மை கொண்டிருப்பதே, உறவுக்கு வலிமையான அடிப்படையாகும்! அவ்வாய்மை இல்லாதவை பகையே; சமூகத்திற்காக, உறவுகளாய் இருப்பதே வித்தியாசம்!
*****

வியாழன், மார்ச் 23, 2017

குறள் எண்: 0599 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0599}

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

விழியப்பன் விளக்கம்: பேருடம்பு மற்றும் கூர்மையான தந்தங்கள் இருந்தும், புலியின் தாக்குதலுக்கு யானை அஞ்சும்! அதுபோல் ஊக்கமுடைமை, எவ்வித தடைகளையும் தகர்க்கும்!
(அது போல்...)
பீரங்கி மற்றும் வலிமையான அணுகுண்டுகள் இருந்தும், அஹிம்சையின் சக்திக்கு எதிரிகள் மிரள்வர்! அதுபோல் அன்புடைமை, எவ்வித உறவுகளையும் சமாளிக்கும்!
*****

புதன், மார்ச் 22, 2017

குறள் எண்: 0598 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0598}

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: கொடை அளிக்கும் ஊக்கம் இல்லாதவர்; இவ்வுலகில் "வள்ளல்" எனும் உயர்ந்த நிலையை அடைவது சாத்தியமில்லை!
(அது போல்...)
பொதுநலம் காக்கும் முனைப்பு இல்லாதோர்; அரசியலில் "கர்மவீரர்" எனும் சிறந்த பெருமையை அடைவது அரிதானது!
*****

செவ்வாய், மார்ச் 21, 2017

குறள் எண்: 0597 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0597}

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு

விழியப்பன் விளக்கம்: அம்புகள் துளைத்தாலும், யானை தன் உறுதியை நிலைநாட்டும்! அதுபோல் தோல்விகள் நேர்ந்தாலும், ஊக்கமுடையோர் தம் தரத்தை இழக்க மாட்டார்கள்!
(அது போல்...)
ஆழ்துளைகள் சிதைத்தாலும், பூமி தன் பொறுமையைப்  பேணிக்காக்கும்! அதுபோல் துன்பங்கள் பெருகினாலும், அன்புடையோர் தம் குடும்பத்தைப் பிரிய மாட்டார்கள்!
*****

திங்கள், மார்ச் 20, 2017

குறள் எண்: 0596 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0596}

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

விழியப்பன் விளக்கம்: சிந்திப்பது அனைத்தும், உயர்ந்த சிந்தனைகளாய் இருக்கவேண்டும்! சில சிந்தனைகள் தவறினாலும், ஊக்கத்தைத் தவறாத வைராக்கியம் வேண்டும்!
(அது போல்...)
உறவுகள் அனைத்தும், முறையான உறவுகளாய் இருக்கவேண்டும்! சில உறவுகள் தவறானாலும், ஒழுக்கத்தைத் தவறாத முனைப்பு வேண்டும்!
*****

ஞாயிறு, மார்ச் 19, 2017

குறள் எண்: 0595 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0595}

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

விழியப்பன் விளக்கம்: பூக்களின் வளர்ச்சி, நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள், மக்களின் ஊக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!
(அது போல்...)
செயல்களின் அறம், சிந்தனையின் தன்மைக்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் மனிதம்/நேர்மை போன்ற குணங்கள், குடும்பத்தின் ஒழுக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!
*****

சனி, மார்ச் 18, 2017

குறள் எண்: 0594 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0594}

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

விழியப்பன் விளக்கம்: அசைக்கமுடியாத ஊக்கம் உடையவரைச் சேர்ந்திட; அவர்களின் இருப்பிடத்தை அறிந்து, புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள் தாமே செல்லும்!
(அது போல்...)
குறைவில்லாத மனிதம் கொண்டோரை அடைய; அவர்களின் சிறப்பை உணர்ந்து, கருணை/அறம் போன்ற குணங்கள் தாமே செல்லும்!
*****

வெள்ளி, மார்ச் 17, 2017

குறள் எண்: 0593 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0593}

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்

விழியப்பன் விளக்கம்: உறுதியான ஊக்கத்தைத் தம் வசம் உடையோர்; "சம்பாதித்த செல்வத்தை இழந்தோம்" என புலம்பி, சோர்வடைய மாட்டார்கள்.
(அது போல்...)
சிறப்பான திறமையைத் தம் வசம் உடையோர்; “கொடுத்த வாய்ப்பை இழந்தோம்” என சொல்லி, துன்பமடைய மாட்டார்கள்.
*****

வியாழன், மார்ச் 16, 2017

குறள் எண்: 0592 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0592}

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

விழியப்பன் விளக்கம்: ஊக்கமுடைய உள்ளத்தைக் கொள்வதே, நிலையான உடைமையாகும்!மதிப்பற்ற பொருள் உடைமைகள், நிலைத்து இருக்காமல் அழிந்து விடும்!
(அது போல்...)
உயிர்ப்புள்ள அன்பைப் பரிமாறுவதே, உண்மையான உறவாகும்! பணத்தை விரும்பும் உறவுகள், உண்மை இல்லாமல் முறிந்து விடும்!
*****

புதன், மார்ச் 15, 2017

குறள் எண்: 0591 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0591}

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று

விழியப்பன் விளக்கம்: ஊக்கமெனும் ஒழுக்கம் உடையவரே, உடையவர் ஆவர்! ஊக்கத்தைத் தவிர்த்து மற்றவைகளைக் கொண்டிருப்போர், உடையவர் ஆவரோ?
(அது போல்...)
மனிதமெனும் அடிப்படை அறிந்தோரே, சான்றோர் ஆவர்; மனிதத்தைத் தவிர்த்துப் பிறவற்றை அறிந்தோர், சான்றோர் ஆவரோ?
*****

செவ்வாய், மார்ச் 14, 2017

அதிகாரம் 059: ஒற்றாடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்

0581.  ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
           தெற்றுஎன்க மன்னவன் கண்

           விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் செய்திகளைச் சேகரிப்பது/புகழ் நிரம்பிய
           அறநூல்களை நிறுவுவது - இவ்விரு செயல்களும், அரசாள்பவரின் இரு கண்களென
           உணரவேண்டும்.
(அது போல்...)
           உண்மை பேசி உறவுகளைப் பேணுவது/நேர்மை மிகுந்த பிள்ளைகளை வளர்ப்பது -
           இவ்விரு விடயங்களும், இல்லறத்தின் இரு கரங்களென எண்ணவேண்டும்.
      
0582.  எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
           வல்லறிதல் வேந்தன் தொழில்

           விழியப்பன் விளக்கம்: ஆதரவாளர்/எதிர்ப்பாளர்/பொதுமக்கள் - இவர்கள் எல்லோர்க்கும்,
           நிகழ்பவை எல்லாவற்றையும்; எக்காலத்திலும், உளவுத்துறை மூலம் விரைந்து அறிவதே
           அரசாள்பவரின் கடமையாகும்.
(அது போல்...)
           உறவுகள்/பகைவர்/நட்புகள் - இவர்கள் எல்லோரின், அனைத்து இன்னல்களையும்;
           எந்நிலையிலும், கலந்துரையாடல் மூலம் அறிந்து தேற்றுவதே வாழ்வியலின்
           அடிப்படையாகும்.
           
0583.  ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
           கொற்றம் கொளக்கிடந்தது இல்

           விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் இரகசியங்களை அறிந்து, அவற்றை ஆராய்ந்து
           தெளியாத அரசாள்வோர்க்கு; நிலையான வெற்றியைப் பெற்றிட, வேறேதும் வழியில்லை.
(அது போல்...)
           இளைஞர்களை மையப்படுத்தி பிரச்சனைகளை அணுகி, அவற்றைத் தீர்க்க முயலாத
           சமூகத்திற்கு; திடமான மாற்றத்தைக் கண்டிட, மாற்று வழியில்லை.

0584.  வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு 
           அனைவரையும் ஆராய்வது ஒற்று

           விழியப்பன் விளக்கம்: தமக்கு வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி,
           அனைவரையும் நடுநிலையோடு அணுகி; உளவுத்தொழில் ஆற்றுவதே, ஒற்றரிவோரின்
           கடமையாகும்.
(அது போல்...)
           தம்மைக் கவர்ந்தவர்/கவராதவர் என்ற வித்தியாசமின்றி, அனைவரையும் தம்மியல்போடு
           நெருங்கி; ஆய்ந்தறிந்து  உணர்வதே; தேடலுள்ளோரின் அடிப்படையாகும்.

0585.  கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
           உகாஅமை வல்லதே ஒற்று

           விழியப்பன் விளக்கம்: சந்தேகம் விளைவிக்காத தோற்றத்துடன் - எவரும் சந்தேகிப்பேனும்,
           கண்ணில் அச்சமின்றி; எந்நிலையிலும் தன்னை வெளிப்படுத்தாத, வல்லமைக் கொண்டதே
           ஒற்றுத் தொழிலாகும்.
(அது போல்...)
           பகையை உருவாக்காத உறுதியுடன் - எவரும் பகைத்தாலும், பேச்சில் பொய்யின்றி;
           எக்காலத்திலும் தன்னிலை இழக்காத, வைராக்கியம் உடையதே நட்பெனும் உறவாகும்.

0586.  துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து
           என்செயினும் சோர்விலது ஒற்று

           விழியப்பன் விளக்கம்: பற்றற்றோரின் தன்மையுடன், விருப்பு/வெறுப்பு கடந்து ஆராய்ந்து;
           ஆராயப்படுவோர் என்ன துன்பம் செய்தாலும், சோர்வு அடையாததே உளவுத்துறை.
(அது போல்...)
           நடுநிலையான இயல்புடன், ஆண்/பெண் பேதமின்றி பேணிக்காத்து; குழந்தைகள்
           எவ்வகை குறை கொண்டிருந்தாலும், வெறுப்பு அடையாதோரே பெற்றோர்கள்.

0587.  மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
           ஐயப்பாடு இல்லதே ஒற்று

           விழியப்பன் விளக்கம்: இருளில் மறைவாய் நடக்கும் விடயங்களைக் கேட்டறிந்து,
           அறிந்தவற்றில்; எவ்வித ஐயப்பாடும் இல்லாத, தெளிவைக் கொண்டதே உளவுத்துறை.
(அது போல்...)
           மனதில் புதைந்து இருக்கும் உணர்வுகளைக் வெளிக்கொணர்ந்து, கொணர்ந்தவற்றில்;
           எவ்வித அவநம்பிக்கையும் கொள்ளாத, அன்பை உடையோரே உறவுகள்.

0588.  ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
           ஒற்றினால் ஒற்றிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: ஓர் உளவுக்குழு தந்த உளவுச் செய்திகளை, வேறோர்
           உளவுக்குழுவால்; உளவுபார்த்து உறுதிசெய்வது, அரசாள்பவர்க்கு சிறந்தது.
(அது போல்...)
           ஓர் உறவு சொல்லும் புரளிச் செய்திகளை, வேறோர் உறவால்; சரிபார்த்து முடிவெடுப்பது,
           உறவுசங்கிலிக்கு உகந்தது.

0589.  ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
           சொல்தொக்க தேறப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒரே விடயத்திற்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல ஒற்றர்களை
           நியமித்து ஆளவேண்டும்; மூன்று ஒற்றர்களின் கூற்று ஒத்திருப்பின், அதில் தெளிவடைய
           வேண்டும்.
(அது போல்...)
           ஒரே பிரச்சனைக்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல உறவுகளை விசாரித்து
           அறியவேண்டும்; மூன்று உறவுகளின் விளக்கம் ஒன்றினால், அதைப் பரிசீலிக்க வேண்டும்.

0590.  சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
           புறப்படுத்தான் ஆகும் மறை

           விழியப்பன் விளக்கம்: உளவுத்துறையினரைச் சிறப்பிப்பதை, ஊரறிய செய்யவேண்டாம்;
           அப்படிச் செய்தால், உளவுத்துறை இரகிசியங்களை - அரசாள்பவரே வெளிப்படுத்தியதாய்
           அமையும்.
(அது போல்...)
           புரளிப்பேசுவோரை எதிர்ப்பதை, வெளிப்படையாய் செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால்,
           தன்னைப் புரளிப்பேச - தானே வரவேற்பதாய் ஆகும்.

குறள் எண்: 0590 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0590}

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

விழியப்பன் விளக்கம்: உளவுத்துறையினரைச் சிறப்பிப்பதை, ஊரறிய செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால், உளவுத்துறை இரகிசியங்களை - அரசாள்பவரே வெளிப்படுத்தியதாய் அமையும்.
(அது போல்...)
புரளிப்பேசுவோரை எதிர்ப்பதை, வெளிப்படையாய் செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால், தன்னைப் புரளிப்பேச - தானே வரவேற்பதாய் ஆகும்.

திங்கள், மார்ச் 13, 2017

குறள் எண்: 0589 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0589}

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்

விழியப்பன் விளக்கம்: ஒரே விடயத்திற்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல ஒற்றர்களை நியமித்து ஆளவேண்டும்; மூன்று ஒற்றர்களின் கூற்று ஒத்திருப்பின், அதில் தெளிவடைய வேண்டும்.
(அது போல்...)
ஒரே பிரச்சனைக்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல உறவுகளை விசாரித்து அறியவேண்டும்; மூன்று உறவுகளின் விளக்கம் ஒன்றினால், அதைப் பரிசீலிக்க வேண்டும்.

ஞாயிறு, மார்ச் 12, 2017

குறள் எண்: 0588 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0588}

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: ஓர் உளவுக்குழு தந்த உளவுச் செய்திகளை, வேறோர் உளவுக்குழுவால்; உளவுபார்த்து உறுதிசெய்வது, அரசாள்பவர்க்கு சிறந்தது.
(அது போல்...)
ஓர் உறவு சொல்லும் புரளிச் செய்திகளை, வேறோர் உறவால்; சரிபார்த்து முடிவெடுப்பது, உறவுசங்கிலிக்கு உகந்தது.

சனி, மார்ச் 11, 2017

ஆண்டு நிறைவின் எண்ணிக்கையும், திருமண வாழ்வின் வெற்றியும்...

குறள் எண்: 0587 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0587}

மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று

விழியப்பன் விளக்கம்: இருளில் மறைவாய் நடக்கும் விடயங்களைக் கேட்டறிந்து, அறிந்தவற்றில்; எவ்வித ஐயப்பாடும் இல்லாத, தெளிவைக் கொண்டதே உளவுத்துறை.
(அது போல்...)
மனதில் புதைந்து இருக்கும் உணர்வுகளைக் வெளிக்கொணர்ந்து, கொணர்ந்தவற்றில்; எவ்வித அவநம்பிக்கையும் கொள்ளாத, அன்பை உடையோரே உறவுகள்.

வெள்ளி, மார்ச் 10, 2017

குறள் எண்: 0586 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0586}

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று

விழியப்பன் விளக்கம்: பற்றற்றோரின் தன்மையுடன், விருப்பு/வெறுப்பு கடந்து ஆராய்ந்து; ஆராயப்படுவோர் என்ன துன்பம் செய்தாலும், சோர்வு அடையாததே உளவுத்துறை.
(அது போல்...)
நடுநிலையான இயல்புடன், ஆண்/பெண் பேதமின்றி பேணிக்காத்து; குழந்தைகள் எவ்வகை குறை கொண்டிருந்தாலும், வெறுப்பு அடையாதோரே பெற்றோர்கள்.

வியாழன், மார்ச் 09, 2017

குறள் எண்: 0585 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0585}

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

விழியப்பன் விளக்கம்: சந்தேகம் விளைவிக்காத தோற்றத்துடன் - எவரும் சந்தேகிப்பேனும், கண்ணில் அச்சமின்றி; எந்நிலையிலும் தன்னை வெளிப்படுத்தாத, வல்லமைக் கொண்டதே ஒற்றுத் தொழிலாகும்.
(அது போல்...)
பகையை உருவாக்காத உறுதியுடன் - எவரும் பகைத்தாலும், பேச்சில் பொய்யின்றி; எக்காலத்திலும் தன்னிலை இழக்காத, வைராக்கியம் உடையதே நட்பெனும் உறவாகும்.

புதன், மார்ச் 08, 2017

குறள் எண்: 0584 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0584}

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

விழியப்பன் விளக்கம்: தமக்கு வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி, அனைவரையும் நடுநிலையோடு அணுகி; உளவுத்தொழில் ஆற்றுவதே, ஒற்றரிவோரின் கடமையாகும்.
(அது போல்...)
தம்மைக் கவர்ந்தவர்/கவராதவர் என்ற வித்தியாசமின்றி, அனைவரையும் தம்மியல்போடு நெருங்கி; ஆய்ந்தறிந்து  உணர்வதே; தேடலுள்ளோரின் அடிப்படையாகும்.

செவ்வாய், மார்ச் 07, 2017

குறள் எண்: 0583 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0583}

ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்

விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் இரகசியங்களை அறிந்து, அவற்றை ஆராய்ந்து தெளியாத அரசாள்வோர்க்கு; நிலையான வெற்றியைப் பெற்றிட, வேறேதும் வழியில்லை.
(அது போல்...)
இளைஞர்களை மையப்படுத்தி பிரச்சனைகளை அணுகி, அவற்றைத் தீர்க்க முயலாத சமூகத்திற்கு; திடமான மாற்றத்தைக் கண்டிட, மாற்று வழியில்லை.

திங்கள், மார்ச் 06, 2017

குறள் எண்: 0582 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0582}

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

விழியப்பன் விளக்கம்: ஆதரவாளர்/எதிர்ப்பாளர்/பொதுமக்கள் - இவர்கள் எல்லோர்க்கும், நிகழ்பவை எல்லாவற்றையும்; எக்காலத்திலும், உளவுத்துறை மூலம் விரைந்து அறிவதே அரசாள்பவரின் கடமையாகும்.
(அது போல்...)
உறவுகள்/பகைவர்/நட்புகள் - இவர்கள் எல்லோரின், அனைத்து இன்னல்களையும்; எந்நிலையிலும், கலந்துரையாடல் மூலம் அறிந்து தேற்றுவதே வாழ்வியலின் அடிப்படையாகும்.

ஞாயிறு, மார்ச் 05, 2017

குறள் எண்: 0581 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0581}

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றுஎன்க மன்னவன் கண்

விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் செய்திகளைச் சேகரிப்பது/புகழ் நிரம்பிய அறநூல்களை நிறுவுவது - இவ்விரு செயல்களும், அரசாள்பவரின் இரு கண்களென உணரவேண்டும்.
(அது போல்...)
உண்மை பேசி உறவுகளைப் பேணுவது/நேர்மை மிகுந்த பிள்ளைகளை வளர்ப்பது - இவ்விரு விடயங்களும், இல்லறத்தின் இரு கரங்களென எண்ணவேண்டும்.