என் கருத்துக்களை (பிழை பொறுத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!
செவ்வாய், மே 26, 2015
புதன், மே 06, 2015
உத்தம வில்லன் (2015)
முதன்முதலாய், கமலின் திரைப்படம் பற்றி என் பார்வையை எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஸ்வரூபம் வெளிவந்தபோது வலைப்பதிவு எழுதிக்கொண்டிருப்பினும்; திரைப்படங்கள் பற்றி எழுதக்கூடாது என்ற வரைமுரையால், அதைப்பற்றி எழுதமுடியவில்லை. இருப்பினும், "ராஜா ராணி" திரைப்படம், அந்த படத்தைப் பற்றிய என் புரிதலை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தால் - என் வரைமுறை தளர்க்கப்பட்டது. எனவே, முதன் முதலில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பிது! கமல் மேல் எனக்கிருக்கும் அபிமானம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்; எனவே, முயன்ற அளவில் "நடுநிலையோடு"தான் இந்த பார்வையை பதிந்திருக்கிறேன். என்னையும் அறியாமல், என் அபிமானம் எங்கேனும் நடுநிலை தவற வைத்திருப்பின் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். சரி! இப்போது "உத்தம வில்லன்" திரைப்படம் பற்றி...
- கமலை உற்று கவனிப்போருக்கு, கமலின் திரைப்படம் ஒவ்வொன்றிலும் "உணர்வும்/உணர்ச்சியும் {எந்த உணர்ச்சியும்! ;) }" தவறாமல் இடம்பெறுவது தெரிந்திருக்கும். என்னளவில், மகாநதி திரைப்படத்திற்கு பின் முழுக்க-முழுக்க "உணர்வையும்/உணர்ச்சியையும்" படம் நெடுகிலும் கலந்திருக்கும் படம்.
- மகாநதி திரைப்படத்தை எப்போது பார்த்தாலும், 3 காட்சிகளின் போது என்னால் கண்கலங்காமல் இருக்கமுடியாது. கிட்டத்திட்ட 30 முறைகளுக்கு மேல் பார்த்தும், என்னால் அந்த காட்சிகளின் போது கண்கலங்காமல் இருக்கமுடிவதில்லை! சமீப காலமாய், என்மகள் குறிப்பிட்ட வயது வந்தபின் அவளுடன் பார்க்கவேண்டும் என்பதால், அந்த படத்தை பார்த்து நாட்கள் பலவாயிற்று! :(
- உத்தமவில்லன் திரைப்படத்தை பார்த்தபோது, எத்தனை முறை கண்கலங்கினேன் என்று எனக்கு நினைவில்லை! "என்-எண்ண அலைகளின்" ஊடே, அதை எண்ணிடவும் முடியவில்லை. அத்தனை காட்சிகள்; பல காட்சிகள் "அண்மையில் (Close-up)" இருக்கும். இயல்பாகவே, இப்படி அண்மை-காட்சிகள் எந்த திரைப்படத்திலும் குறைவாகவே இருக்கும். அதிலும், இப்படிப்பட்ட "உணர்வும்/உணர்ச்சியும்" பின்னிப்பிணைந்த கதைக்களம் கொண்ட படம் எனில், அண்மை-காட்சிகள் அபூர்வமாய் தான் இருக்கும்.
- ஆயின், உத்தமவில்லனில் எண்ணற்ற அண்மை-காட்சிகள் இருப்பது தனி சிறப்பு. கமலின் நடிப்பை பற்றி நானும் ஒருமுறை கூறத்தான் வேண்டுமோ?! ஆனால், மற்ற நடிகர்களின் நடிப்பு-திறன் "வெகுவாய்" பாராட்டப்பட வேண்டும். அவர்களும் சிறப்பாய் நடித்ததால் தான், எண்ணற்ற அப்படிப்பட்ட காட்சிகள் சாத்தியாமாகி இருக்கிறது. அங்கு தான், கமலின் நடிகர்/நடிகையர் தேர்வின் திறன் மேலோங்குகிறது.
- ஒரு மனிதனின் மூன்று-வெவ்வேறு காலகட்டத்தில் சங்கமிக்கும் மூன்று-வெவ்வேறு காதல்களே படத்தின் மையக்கரு. வெகு நிச்சயமாய், ஒவ்வொரு மனிதனும் (ஆண்/பெண் இருபாலரும்); இந்த 3-இல் இரண்டு காதல்களை கடந்து வந்திருக்க வேண்டும். இல்லையென்போர், சந்தேகத்து உரியவர்கள்! கண்டிப்பாக - வழக்கம்போல் - விதிவிலக்குகள் இங்குண்டு என்பதில் எனக்கு எந்த "விதிவிலக்கும்" இல்லை.
- அதனாலேயே, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் - அடடே! நம் வாழ்க்கை போலே உள்ளதே?! என்ற ஆச்சர்யம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதுதான், இந்த படத்தின் மையக்கருவின் மிகப்பெரிய பலம்.
- படம் சொல்லப்பட்டிருக்கும் விதம், பலருக்கும் சற்று-சலிப்பை தரக்கூடும். "மன்மதன் அன்பு"வை சிலருக்கு நினைவு படுத்தி இருக்கும்! ஆனால், இவ்விரண்டு படங்களும் - நாம் இழந்த சுயங்களுள் ஒன்றை நம்மிடம் மீட்டுத்தர நடக்கும் முயற்சியே! என்பதாய் எனக்கு படுகிறது. ஆம்! அது, கதை சொல்லும் (அல்லது) கதை கேட்கும் - நாம் அறவே மறந்துபோன அந்த வழக்கம். திரைப்படம் என்றால், எல்லாவற்றையும் காட்சிகளாய் காண்பித்தால் மட்டுமே நிறைவு என்ற நம் "மாயை"!
- அல்ல! காட்சிகளற்று கதையாய் சொல்வது ஒரு வித்தை; பலருக்கும், இது சாத்தியப்படுவதில்லை - சொல்லவும்/கேட்கவும்! அது தான் இந்த படமும், மேற்குறிப்பிட்ட படமும் செய்திருக்கிறது என்று நான் முழுதும் நம்புக்கிறேன்.
- அதேபோல், பாடல்களாய் கதையை சொல்வதும் நம் பழைய இயல்பு. அதையும், இந்த திரைப்படத்தில் காணலாம். பெரும்பான்மையான கதை பாடல்களாலேயே சொல்லப்பட்டு இருக்கிறது.
- 3-இல் ஒரு-காதலை; 2 கடிதங்களைக் கொண்டு - அதிலும், அதை அப்படியே படிக்க வைத்து விளக்கி இருப்பது மிகச்சிறப்பு! இது காண்போருக்கு பலவிதமான கற்பனைகளை/பலவிதமான சிந்தனைகளை/ பல்வேறு விதமான (தம் சொந்த)நினைவு கூறல்களை உண்டாக்கும். அது தான், இந்த விதமாய் கதை சொல்வதில் உள்ள சிறப்பு. அவ்விரண்டு கடிதங்களை - கதையோடு நெருங்கிய-சம்பந்தப்பட்ட வேறிரு கதாபாத்திரங்களை படிக்க செய்திருப்பது அழகு!
- இப்படிப்பட்ட அழுத்தமான "உணர்வுகளும்/உணர்ச்சிகளும்" கொண்ட திரைப்படத்தை அப்படியே சொல்வது - குறைந்தது இந்த காலக்கட்டத்திலாவது, பரவலாய் ஏற்றுக் கொள்ளப்படாது எனபதை நன்குணர்ந்த கமல் - அதற்காய், கதையின் நாயகனை ஒரு "திரைப்பட நாயகன்" ஆகவே செதுக்கி இருப்பது மிகப்பெரிய பலம்! அதனால், திரைக்கதையில் கதியின் இறுக்கத்தை தவிர்க்க; நாம் படத்தோடு ஒன்றிட "நகைச்சுவை" காட்சிகளால் நிரப்பி இருப்பது - தேர்ந்த திரைக்கதை யுக்தி!
- "கமலின் மகன் - கமலின் மகளை, அக்கா" என்றழைக்கும் அத்தருணம் {குழப்பம் இருப்போர், படத்தை பார்த்து தெளியவும்! ;) } மிக-அருமையாய் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது. அதிலும், அந்த தருணத்தில் கமல் "பெருத்த மகிழ்ச்சியுடன்; சிறு துள்ளலுடன்" செல்லும் காட்சி "மணிமகுடம்"!
- படத்தின் ஆரம்பத்தில் - ஆண்ட்ரியா "கள்ளக்காதலா! செல்லுங்கள்!!" என்பது போன்ற ஒரு வசனம் பேசுவார். இம்மாதிரியான உறவை "உன்னதமாய்/உண்மையாய்" சொல்லிய காட்சி என்று எனக்கு தோன்றியது. இம்மாதிரியான உறவுகள் "யதார்த்த" வார்த்தைகள் கொண்டே அழைக்கப்படவேண்டும். ஆங்கே, விதிகளுக்குட்பட்ட உறவுமுறைகள் சொல்லி "பொய்யாய்" அழைத்துக்கொள்ளுதல் அபத்தம் என்பது என் கருத்து!
- விஸ்வரூபம்-1 பார்த்த பின்; இதிலுமா பூஜா-குமார்? என்று உங்களில் பலர் போல் நானும் நினைத்ததுண்டு. ஆனால், என்னை பொய்த்து ஏமாற்றியது அவரின் "நடிப்பும், அழகும்". அதே போலே, ஆண்டிரியாவும்.
- மீண்டும் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த உருவமாய் ஊர்வசி! படத்தின் இறுதிக்கு முன் வரும் ஒரு காட்சியில் "பிங்க்"-வர்ண சேலையில் கொள்ளை-அழகு!
சில குறைகள்/வருத்தங்கள்:
- படம் வெளியாவதற்கு முன் சர்ச்சையை சொல்லப்பட்ட "இரணியன்" கதை பற்றிய பாடலில் வரும் எந்த வரியும் - "பன்றியும் தான் தானென சொல்பவனா, கடவுள்" என்ற வரி உட்பட - எனக்கு தவறாய் படவில்லை! ஆனால், அந்த பாடலை படமாக்கிய விதத்தில் சில "கேலிக்கூத்துகள்" பாடலின் இறுதியில் வருவது போல் இல்லாமல் பார்த்துகொண்டிருக்கலாம் என்று தோன்றியது! எவரேனும், இதை கமலின் பார்வைக்கு இட்டுச்செல்வாரோ?!
- படம் வெளிவரும் வரையாவது திரு. பாலச்சந்தர் உயிருடன் இருந்திருக்கலாம் என்றோர் ஆவல் எழுந்தது. குரு-சிஷ்யன் உறவை மிக அற்புதமாய் சொல்லியிருக்கும் அற்புதமான (ப/பா)டம்!
- இடைவேளையின் போது, சிலர் படத்தின் கதை புரியவில்லை என்று புலம்புவதை கேட்க முடிந்தது! படம் முடிந்த பின்னரும் அவ்வாறே!! "அன்பே சிவம்" போன்று காலம் கடந்து தான் கமலின் (அ/இ)ம்மாதிரியான படங்கள் போற்றப்படவேண்டும் என்று "விதி" இருப்பின்; நம் "மதி"யால் அதை நினைத்து வருந்துவதில் எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை!
என் பரிந்துரை: படத்தை பார்த்து - மீண்டும் ஒருமுறை உங்கள் பழைய-வாழ்க்கையை "நினைவில்" வாழ்ந்து பாருங்கள் நண்பர்/நண்பி-களே!!!
*****
பதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
நாள்: 06.05.2015
ஞாயிறு, மார்ச் 29, 2015
செல்வ-மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samridhi Account)
உங்களில் பலருக்கும் செல்வ-மகள் சேமிப்பு திட்டம் எனும் மத்திய அரசின் Sukanya Samridhi Account பற்றி தெரிந்திருக்கும். இது இந்த ஆண்டு சனவரி 22-ஆம் தேதி துவங்கப்பட்டது. இது தபால்-துறை மூலம் இயக்கப்படும் ஒரு திட்டம். சில தினங்களுக்கு முன்னர் இத்திட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் இது துவங்கப்பட்டது; இத்திட்டத்தை பற்றிய பல கேள்விகள்/சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. இது சம்பந்தமாய், மார்ச்சு 28-ஆம் தேதியன்று "தந்தி டி.வி." யில் இந்திய நேரப்படி 15:00 மணியளவில் சென்னை மண்டல "போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்" திரு. மேர்வின் அலெக்சாண்டர் அவர்களுடன் ஒரு நேர்காணல் நடந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நான் அறிந்த விசயங்களை இப்படியொரு தலையங்கமாய் எழுதினால், பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று எண்ணினேன். எந்தவொரு தவறான தகவலோ/விளக்கமோ இங்கே கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாய் இருக்கிறேன். இருப்பினும்... அப்படி ஏதேனும் தகவல் அறிந்தால், அது என் புரியாமையால் என்பதை அருள்கூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் இருப்பின், எனக்கு தெரிவிக்கவும்.
நிபந்தனைகளும்/ விதிமுறைகளும்:
- செல்வ-மகள் சேமிப்பு திட்டம் (சுருக்கமாய்: செமசேதி) கண்டிப்பாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமானது; ஒரு குறிப்பிட்ட குழந்தையின் பெயரில் ஒரேயொரு கணக்கு மட்டுமே துவங்கமுடியும்; ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருப்பது தெரியவந்தால் - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், எவ்விதமான நடவடிக்கைகள் என்பது பற்றிய அறிதல் எனக்கில்லை.
- ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். இருப்பினும், 2-ஆவது பிரசவத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்கைகள் பிறப்பின், அவர்கள் அனைவரும் முன்பே ஒரு பெண் குழந்தை இருப்பினும், அக்குழந்தையோடு சேர்த்தே தகுதி ஆகிறார்கள். ஆயினும், முதல் பிரசவத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறப்பின்; அதன் பின்னர் பிறக்கும் பெண் குழந்தைகள் இத்திட்டத்திற்கு தகுதியாவதில்லை.
- "செமசேதி" கணக்கில் ஆண்டொன்றுக்கு குறைந்தது 1000 இந்திய-உரூபாய்கள் செலுத்தப்படலாம்; அதிகபட்சமாய், 1,50,000 இந்திய-உரூபாய்கள் வரை ஆண்டொன்றுக்கு செலுத்தப்படலாம். "செமசேதி"யோடு சம்பந்தப்பட்ட ஆண்டென்பது "நிதி ஆண்டை" குறிக்கிறது; அதாவது ஏப்ரல் மாதம் முதல் மார்ச்சு மாதம் வரை. இன்று மார்ச்சு 29 என்பதால், இந்த நிதியாண்டு முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. ஒருவர் விரும்பினால், அதிக பட்ச தொகையை கூட இந்த 2 நாட்களில் முதலாண்டு தொகையாய் செலுத்திக்கொள்ளலாம்.
- அதிகபட்ச காலமாய் 14 ஆண்டுகள் வரை வைப்பு தொகை செலுத்தப்படலாம். அதன் பின்னர், 7 ஆண்டுகள் எதுவும் செலுத்தாமல், இந்த கணக்கு நிலுவையில் இருக்கவேண்டும். அதாவது, இந்த "செமசேதி" திட்டத்தின் மொத்த ஆயுட்காலம் 21 ஆண்டுகள். இருப்பினும், தேவையிருப்பின், எந்த ஒரு நிலையிலும், இக்கணக்கை முடித்துக்கொள்ளலாம்; "முதிர்வு" தொகை அந்த காலத்திற்கு ஏற்ப கணக்கிடப்படும்.
- ஆண்டொன்றுக்கு இவ்வளவு கட்டவேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை! அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் கட்டப்படும் தொகையும் "நிலையானதாய்" இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. ஒவ்வொரு ஆண்டுக்கும், கட்டப்படும் தொகை வேறுபடலாம்; ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாய் 1,50,000 இந்திய-உரூபாய்கள் தான் செலுத்தப்படவேண்டும் என்பதே ஒரேயொரு நிபந்தனை. வைப்பு தொகை மொத்தமாகவும் கட்டப்படலாம்; 12 தவணைகளிலும் கட்டப்படலாம்.
- "செமசேதி" கணக்கு துவங்கியதில் இருந்து, வைப்பு தொகை அதிகபட்சமாய் 14 ஆண்டுகள் வரை செலுத்தப்படலாம். அல்லது அந்த பெண் குழந்தை திருமணம் ஆகும் வரை வைப்பு தொகை செலுத்தப்படலாம்; முதலில் எது நிகழ்கிறதோ அது கணக்கில் கொள்ளப்படும். 14 ஆண்டுகள் நிறைவுற்ற பின்னர், மேற்கொண்டு எத்தொகையும் செலுத்த முடியாது.
- பெண்ணிற்கு திருமணமாகும் பட்சத்தில், மேற்கொண்டு எந்த வைப்பு தொகையும் செலுத்த முடியாது. இருபினும், அந்த கணக்கை முழு ஆயுட்காலம் வரையில் (அதாவது, 21 ஆண்டுகள்) நிலுவையில் வைத்து; கட்டிய தொகைக்கு ஏற்ப "முதிர்வு"தொகை பெறமுடியும்.
- ஏதேனும் ஒரு காரணத்திற்காய், ஒன்று அல்லது மேற்பட்ட ஆண்டுகள் வைப்பு தொகை செலுத்த முடியாது போனால், ஆண்டுக்கு 50 இந்திய-உரூபாய்கள் வீதம் விடுபட்ட ஆண்டுகளுக்கு அபராதம் செலுத்தி புதுப்பித்துகொள்ளலாம். ஆனால், இப்படிப்பட்ட குறைவான அபராதம் மக்களை மெத்தனமாய் இருக்க வைக்கும் என்பதால், இந்த வழிமுறையில் எனக்கு உடன்பாடில்லை; இருப்பினும், இது என் கருத்து மட்டுமே.
தேவையான தகுதி:
- தற்போது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு ("செமசேதி" கணக்கு துவங்கும் நாளன்று) உட்பட்ட எந்த ஒரு பெண் குழந்தையும் "செமசேதி" திட்டத்திற்கு தகுதியானவர்கள். இருப்பினும், அறிமுக-ஆண்டு என்ற முறையில், ஓராண்டு உச்ச-வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2 திசம்பர் 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் 11 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது! அப்படி இருக்கும் எந்த பெண் குழந்தையும் தகுதி அடைகிறார்கள். குறைந்தது, இப்போதிருக்கும் நிலையிலாவது, அடுத்த ஆண்டிற்கு இந்த வயது நீட்டிப்பு செல்லாது என்றே தெரிகிறது.
பயன்களும்/ முதிர்வும்:
- இத்திட்டத்தில் செலுத்தப்படும் எந்த தொகைக்கும் "வருமான வரி" விலக்கு உண்டு. மேலும் விவரங்கள் "வருமான வரி துறை" மூலம் பெறப்படலாம்.
- அதிக பட்ச தொகையான 1,50,000 இந்திய-உரூபாய்கள் 14 ஆண்டுகள் செலுத்தப்பட்டு, மேலும் 7 ஆண்டுகளுக்கு அந்த கணக்கு நிலுவையில் வைக்கப்பட்டால் - மொத்த "முதிர்வு"தொகையாய் 79,00,000 இந்திய-உரூபாய்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதாவது, "செமசேதி" கணக்கு துவங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு.
- அதிகபட்ச தொகைக்கு கீழே செலுத்தப்படும் தொகைக்கு, செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப "முதிர்வு" தொகை கிடைக்கும்.
- 21 ஆண்டுகள் நிறைவு பெரும் முன்னர், செலுத்தப்பட்ட தொகையில் 50 விழுக்காடு வரை பெண் குழந்தையின் உயர்கல்வி/திருமணம் இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்திற்காய் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. இருப்பினும், இந்த 50 விழுக்காடு மொத்த "முதிர்வு" தொகையில் சரிபாதியா? என்பது தெளிவாய் விளக்கப்படவில்லை.
"செமசேதி" கணக்கு துவங்குதலும், பராமரிப்பும்:
- பெற்றோர்/இயற்கையான பாதுகாப்பாளர்/சட்டபூர்வமான பாதுகாப்பாளர் - இவர்களில் எவரேனும் ஒருவர் சம்பந்தப்பட்ட பெண் குழந்தைக்காய் "செமசேதி" கணக்கை துவங்க முடியும். பெற்றோர்/இயற்கையான பாதுகாப்பாளர்/சட்டபூர்வமான பாதுகாப்பாளர் - இவர்களில் கணக்கை துவங்குவோரது புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய "ஆதார்" போன்ற ஆவணத்துடன் "செமசேதி" கணக்கை துவங்க முடியும். சில தபால் அலுவலகங்கள் பெண் குழந்தையின் புகைப்படத்தை கேட்பதாய் தெரிகிறது; ஆனால், இது கட்டாயம் அல்ல!
- கணக்கு துவங்கிய பின்னர், எவர் வேண்டுமானாலும் அதில் வைப்பு தொகையை செலுத்தலாம்.
- 10 வயது நிரம்பிய பெண் குழந்தை, தபால் அலுவலத்திற்கு சென்று தன் கையொப்பத்தை இட்டு தானே வைப்பு தொகையை செலுத்திக் கொள்ள இயலும்.
- ஆயினும் 18 வயது நிரம்பிய பின்னர், சம்பந்தப்பட்ட பெண் குழந்தையே "செமசேதி" கணக்கை பராமரிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. அதேபோல், 18 வயது நிரம்பிய பின்னர், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படமும், முகவரியுடன் கூடிய ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.
எங்கே விண்ணப்பிப்பது?:
- தற்போதைய நிலையில், "செமசேதி" கணக்குகள் தபால் அலுவலகங்களில் மட்டுமே துவங்குதல் சாத்தியம். இருப்பினும், பிற்காலத்தில் இந்த கணக்குகள் வங்கிகள் அல்லது இணையதளம் மூலம் துவங்கப்படுதல் சாத்தியம் ஆகக்கூடும்.
- வைப்பு தொகையை கூட்டுதலும் தற்போதைய நிலையில் தபால் அலுவலகங்களில் மட்டுமே செய்தல் சாத்தியம். இருப்பினும், இணையதளம் மூலம் செலுத்துதல் போன்ற பல வழிவகைகள் பிற்காலத்தில் சத்தியமாகக்கூடும் என்று தெரிகிறது.
தொடர்புகள்:
- மேலும் பல விபரங்கள் கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் மூலம் பெறப்படலாம்: +91 44 28594745 and +91 94430 48028. இரண்டு எண்களும் சென்னை மண்டலத்தோடு தொடர்புடையவை; மற்ற தொடர்புகள் என்னிடம் இல்லை.
- இந்த http://www.indiapost.gov.in/SukanyaSamriddhi.aspx இணைப்பு மூலம் மேலும் பல தகவல்களை அறியலாம்.
ஆண் குழந்தை:
- ஆண் குழந்தைகளுக்கு ஏதும் இல்லையா? என்று எவரும் வியப்பின் - ஏற்கனவே "Public Provident Fund (PPF)" என்ற திட்டம் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் நடைமுறையில் உள்ளது என்பதை அறிக. "செமசேதி" திட்டம் 9.1 விழுக்காடு வட்டி கொடுக்கிறது; மாறாய், PPF திட்டம் 8.7 விழுக்காடு மட்டுமே வட்டி கொடுக்கிறது. எந்த ஒரு நாட்டுக்கும் பெண் குழந்தைகளே விளைமதிப்பற்றவர்கள் என்பதால் மட்டுமே, இந்த 0.4 விழுக்காடு அதிக வட்டி கொடுக்கப்படுகிறது.
பின்குறிப்பு: இத்தலையங்கம் பயனுள்ளதாய் நீங்கள் உணர்ந்தால், அருள்கூர்ந்து இதை உங்கள் சுற்றத்தில் பகிரவும். அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தால் பயனடையட்டும்.
ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/sukanya-samridhi-account.html
ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/sukanya-samridhi-account.html
ஞாயிறு, மார்ச் 08, 2015
மனித-தொடர்பு (Human Interaction) என்றால் என்ன?
மேலுள்ள புகைப்படம் Whatsapp-இல் என்னுடைய குழு ஒன்றில் பகிரப்பட்டது. இதைப் பார்த்தவுடன் என்னுள் பல கருத்துகள்/விவாதங்கள். உடனே அதை ஒரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று தோன்றியது; அதனால், இதை அங்கே விவாதிக்கவில்லை, பின்னர் இணைப்பை அங்கே கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. உள்-புகைப்படங்களில் சொல்லி இருப்பது போல், இன்று பலரும் உடனிருப்போருடன் உரையாடாமல் தத்தம் நவீன-அலைபேசியில் வேறொருவருடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அப்படி செய்திருப்போம்! எனவே, அப்படி நடக்கவில்லை என்பதல்ல என் வாதம். ஆனால், மேதகு ஐன்ஸ்டீன் சொன்னதாய் ஊகிக்கப்பட்ட "மனித-தொடர்புகளை ஒருநாள் தொழில்நுட்பம் கடந்து நிற்கும். இவ்வுலகம் அறிவிலிகளை கொண்டிருக்கும்" சொற்றொடருடன் ஒப்பிடுவதைத் தான் மறுக்கிறேன்.
இத்தலையங்கத்தின் ஆங்கில வடிவத்தை என் நண்பனுக்கு பிழை-திருத்துவதற்காய் அனுப்பிய போது, அவன் ஐன்ஸ்டீனின் கருத்துதானா என்று பரிசோதிக்க சொன்னான். என்ன அதிசயம்?! அப்படி முயன்றபோது, இது உலகின் புகழ்பெற்ற 7 "பொய்யான" சொற்றோடர்களுள் ஒன்றானது என்ற தகவல் கிடைத்தது. மேலும், பல தகவல்களை கூகுளில் தேடுவதன் மூலம் அறியலாம். முதலில், என்னால் நம் நட்பு/சுற்றம்/உறவு இப்படி எவருடனும் இணைந்திருப்பதை "மனித-தொடர்பு (Human Interaction)" என்றே அழைக்கமுடிவில்லை. அப்படியெனில், அந்த உள்-புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொருவரும் இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்றே அர்த்தம். நவீன-அலைபேசி கொண்டு அவர்கள் Whatsapp/Facebook மூலம் உரையாடுகிறார்கள் என்பதால் மட்டும், அவர்கள் மனித-தொடர்புகளை அறுத்துவிட்டார்கள் என்பதில் எந்த நியாயமும் இல்லை!
மேலும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே "மனித-தொடர்பு" என்றால், மேலுள்ளவர்கள் தொழில்நுட்பம் மூலம் அப்படி செய்வதும் மனித-தொடர்பே, அல்லவா? மேலுள்ள புகைப்படங்களில் இருக்கும் ஒரு குழு ஒரே நிறுவனத்திற்கு/ஒரே துறையில்/ஒரே-நிலையில் பணிபுரிவோர் என்று வைத்துக்கொள்வோம். மனதில் இருந்து சொல்லுங்கள்: அவர்களுள் ஒரு ஆத்மார்த்தமான மனித-தொடர்பு இருக்குமா? நிச்சயமாய், உங்கள் பதில் இல்லையென்றே இருக்கும் அல்லவா?! ஏனெனில், நம்மில் எவரும் அப்படி நாம் சார்ந்த நிறுவனத்திற்காய் ஒன்றுபட்டு செயல்பட விரும்புவதில்லை. அதை நான் தவறென்றும் சொல்லவில்லை; இங்கே, வலியதே எஞ்சும்! எனவே, நாம் கூடியிருக்கும்போது பொழுதுபோக்கு/விளையாட்டு/அரசியல் அல்லது அதுபோன்ற பொதுத்துறை பற்றியே உரையாடல் இருக்கும். நாம் சார்ந்த நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வேண்டுமானால் ஒன்றுபட்டு பேசுவோம்/போராடுவோம்!
ஆனால், நிறுவனத்தின் முன்னேற்றம் என்று வந்துவிட்டால், ஒவ்வொருவரும் நம்மால் அது நடக்கவேண்டும் என்றே நினைப்போம். மேலுள்ள புகைப்படங்களில் உள்ளோர் அன்பெனும் உயர்ந்த பண்பை கூட பரிமாறிக் கொண்டிருக்கலாம். எனவே, மேலுள்ள உதாரணங்கள் மனித-தொடர்பே அல்ல. பின், மனித-தொடர்பு என்றால் என்ன? என்ற கேள்வி எழும்; என்னுள்ளும் எழுந்தது. என்னளவில் மனித-தொடர்பு என்பது அறிவு/அனுபவம் இவை போன்றவற்றின் பரிமாற்றமாய்; சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருக்கவேண்டும். தெரியாத மனிதர்களிடையேயும் நடக்கலாம். நிச்சயமாய், கடற்கரையில் அமர்ந்து கூத்தடிப்பது/உணவகங்களில் குடிப்பது/சாப்பிடுவது இதுபோன்ற கேளிக்கைகளில் இல்லை! இந்த உதாரணத்தை கவனியுங்கள்: எங்கள் விவசாய நிலத்தில் பலர் பல்வேறு வேலைகளை செய்வதை கண்டவன் நான்; அவர்களுடன் நானும் தொடர்புகொண்டு சில நுணுக்கமான விசயங்களை கற்றவன்.
சில மணித்துளிகளே எனினும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கு இடையேயும் பல தொடர்புகள் இருந்தன; அவர்கள் எல்லோரும் விவசாய முன்னேற்றம் என்ற ஒன்றை நோக்கி ஒருங்கிணைந்து பணியாற்றினார். பின்னர் தொழில்நுட்பம் "Tractor" என்ற ஒன்றின் மூலம் வந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் அனைவரும் வேலையற்று; பல்வேறு இடங்களில் பிரிந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுள், ஒரு சிறு-உரையாடல் கூட இல்லாமல் போனது. இன்று பயிரிடுவது துவங்கி அறுவடை வரை அனைத்திற்கும் தொழில்நுட்பம் வழி செய்துவிட்டது; ஆனால், மனித-தொடர்பு? என்னளவில், இது ஒரு சிறந்த உதாரணம். மேலும் சொல்லவேண்டுமானால்: மாணாக்கர்-ஆசிரியர் தொடர்பு அறுபட்டதற்கு முதற்காரணம் தொழில்நுட்பம். இன்று, மேலாண்மைக்கும் - பணியாளர்களுக்கும் நேரடித் தொடர்பு அறவேயில்லை. எல்லாம், மின்னணு-கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன.
அந்த கோப்பைகளால் மனித உணர்வு/தொடர்பு போன்றவற்றை பரிமாற்ற முடியாது. சமீபத்தில், அமெரிக்காவின் அலபாமா மாகானத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூருங்கள். அந்த காவலர்க்கு அறிமுகமற்ற ஒரு மனிதருடன் தொடர்பு கொள்ளவே தெரியவில்லை. அது, அவரின் பாதுகாப்பு உணர்வினால் விளைந்தது என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம்; ஆனால், அங்கே மனித-தொடர்பே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. அது அந்த காவலரின் தவறில்லை! அல்லது அவரின் தவறு மட்டுமில்லை! தன்னைத்தானே உலகின் வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாடு அணு/உயிரியல் ஆயுதங்களுக்காய் மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்கிறது. என்னவொரு அவலம்? அவர்கள் "போர்க்களத்தில்" கூட நேரடியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை! இம்மாதிரியான அவலமான/அதீதமான மனித-தொடர்பு மீறல்களைப் பற்றி நாம் உணர்வதே இல்லை.
மேலும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே "மனித-தொடர்பு" என்றால், மேலுள்ளவர்கள் தொழில்நுட்பம் மூலம் அப்படி செய்வதும் மனித-தொடர்பே, அல்லவா? மேலுள்ள புகைப்படங்களில் இருக்கும் ஒரு குழு ஒரே நிறுவனத்திற்கு/ஒரே துறையில்/ஒரே-நிலையில் பணிபுரிவோர் என்று வைத்துக்கொள்வோம். மனதில் இருந்து சொல்லுங்கள்: அவர்களுள் ஒரு ஆத்மார்த்தமான மனித-தொடர்பு இருக்குமா? நிச்சயமாய், உங்கள் பதில் இல்லையென்றே இருக்கும் அல்லவா?! ஏனெனில், நம்மில் எவரும் அப்படி நாம் சார்ந்த நிறுவனத்திற்காய் ஒன்றுபட்டு செயல்பட விரும்புவதில்லை. அதை நான் தவறென்றும் சொல்லவில்லை; இங்கே, வலியதே எஞ்சும்! எனவே, நாம் கூடியிருக்கும்போது பொழுதுபோக்கு/விளையாட்டு/அரசியல் அல்லது அதுபோன்ற பொதுத்துறை பற்றியே உரையாடல் இருக்கும். நாம் சார்ந்த நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வேண்டுமானால் ஒன்றுபட்டு பேசுவோம்/போராடுவோம்!
ஆனால், நிறுவனத்தின் முன்னேற்றம் என்று வந்துவிட்டால், ஒவ்வொருவரும் நம்மால் அது நடக்கவேண்டும் என்றே நினைப்போம். மேலுள்ள புகைப்படங்களில் உள்ளோர் அன்பெனும் உயர்ந்த பண்பை கூட பரிமாறிக் கொண்டிருக்கலாம். எனவே, மேலுள்ள உதாரணங்கள் மனித-தொடர்பே அல்ல. பின், மனித-தொடர்பு என்றால் என்ன? என்ற கேள்வி எழும்; என்னுள்ளும் எழுந்தது. என்னளவில் மனித-தொடர்பு என்பது அறிவு/அனுபவம் இவை போன்றவற்றின் பரிமாற்றமாய்; சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருக்கவேண்டும். தெரியாத மனிதர்களிடையேயும் நடக்கலாம். நிச்சயமாய், கடற்கரையில் அமர்ந்து கூத்தடிப்பது/உணவகங்களில் குடிப்பது/சாப்பிடுவது இதுபோன்ற கேளிக்கைகளில் இல்லை! இந்த உதாரணத்தை கவனியுங்கள்: எங்கள் விவசாய நிலத்தில் பலர் பல்வேறு வேலைகளை செய்வதை கண்டவன் நான்; அவர்களுடன் நானும் தொடர்புகொண்டு சில நுணுக்கமான விசயங்களை கற்றவன்.
சில மணித்துளிகளே எனினும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கு இடையேயும் பல தொடர்புகள் இருந்தன; அவர்கள் எல்லோரும் விவசாய முன்னேற்றம் என்ற ஒன்றை நோக்கி ஒருங்கிணைந்து பணியாற்றினார். பின்னர் தொழில்நுட்பம் "Tractor" என்ற ஒன்றின் மூலம் வந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் அனைவரும் வேலையற்று; பல்வேறு இடங்களில் பிரிந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுள், ஒரு சிறு-உரையாடல் கூட இல்லாமல் போனது. இன்று பயிரிடுவது துவங்கி அறுவடை வரை அனைத்திற்கும் தொழில்நுட்பம் வழி செய்துவிட்டது; ஆனால், மனித-தொடர்பு? என்னளவில், இது ஒரு சிறந்த உதாரணம். மேலும் சொல்லவேண்டுமானால்: மாணாக்கர்-ஆசிரியர் தொடர்பு அறுபட்டதற்கு முதற்காரணம் தொழில்நுட்பம். இன்று, மேலாண்மைக்கும் - பணியாளர்களுக்கும் நேரடித் தொடர்பு அறவேயில்லை. எல்லாம், மின்னணு-கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன.
அந்த கோப்பைகளால் மனித உணர்வு/தொடர்பு போன்றவற்றை பரிமாற்ற முடியாது. சமீபத்தில், அமெரிக்காவின் அலபாமா மாகானத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூருங்கள். அந்த காவலர்க்கு அறிமுகமற்ற ஒரு மனிதருடன் தொடர்பு கொள்ளவே தெரியவில்லை. அது, அவரின் பாதுகாப்பு உணர்வினால் விளைந்தது என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம்; ஆனால், அங்கே மனித-தொடர்பே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. அது அந்த காவலரின் தவறில்லை! அல்லது அவரின் தவறு மட்டுமில்லை! தன்னைத்தானே உலகின் வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாடு அணு/உயிரியல் ஆயுதங்களுக்காய் மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்கிறது. என்னவொரு அவலம்? அவர்கள் "போர்க்களத்தில்" கூட நேரடியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை! இம்மாதிரியான அவலமான/அதீதமான மனித-தொடர்பு மீறல்களைப் பற்றி நாம் உணர்வதே இல்லை.
ஆனால், மேலுள்ளது போல் நகைச்சுவையான புகைப்படங்களை மட்டும் வைத்துக்கொண்டு மனித-தொடர்புகள் மீறப்படுகின்றன/அழிக்கப்பட்டுவிட்டன என்று வாதிட்டுக்கொண்டு இருப்போம். உண்மையான மனித-தொடர்பு மீறல்கள்/அழித்தல்கள் ஆயிரமாயிரம் நடந்தேரிக்கொண்டே இருக்கின்றன. இப்புகைப்படங்களில் இருப்பது தான் உண்மையான மனித-தொடர்புகள் எனில், பல காலங்களாய் பேச்சு கூட இல்லாத நம் நட்பு/சுற்றம்/உறவு இவைகளை மீண்டும் நம்முடன் கொண்டு வந்து சேர்த்ததற்கு தொழில்நுட்பத்தை (நவீன அலைபேசி) நாம் பாராட்டிட வேண்டாமா? இருப்பினும், இதை நான் மனித-தொடர்பு என்பதாய் கருதவே இல்லை. அதனால் தான், என்னுடைய வாதங்களில் நான் திடமாய் இருக்கிறேன்; அதனால் தான், மனித-தொடர்பு என்பது இதுவல்ல என்று ஆணித்தரமாய் கூறமுடிகிறது. கண்டிப்பாக என்னுடைய புரிதல்கள், உங்களை உடன்பட செய்திருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
பின்குறிப்பு: ஐன்ஸ்டீன் அவர்களின் ஊகிக்கப்பட்ட கருத்தாக இருப்பினும், அவருடன் ஒப்பிடுகையில் "மிகச்சிறு" இயற்பியலாளன் என்ற முறையில், அவருடன் தொடர்பு படுத்தி இத்தலையங்கத்தை எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்காய் பெருமிதம் கொள்கிறேன்.
ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/what-is-human-interaction.html
முதலில் மனித-தொடர்பு என்றால் என்னவென்று நாம் தெளிவாய் உணரவேண்டும்!!!
பின்குறிப்பு: ஐன்ஸ்டீன் அவர்களின் ஊகிக்கப்பட்ட கருத்தாக இருப்பினும், அவருடன் ஒப்பிடுகையில் "மிகச்சிறு" இயற்பியலாளன் என்ற முறையில், அவருடன் தொடர்பு படுத்தி இத்தலையங்கத்தை எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்காய் பெருமிதம் கொள்கிறேன்.
ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/what-is-human-interaction.html
மனைவிக்கு பின் மகள் - முன்னுரை
"தாய்க்கு பின் தாரம்" என்ற வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அது சரியாய் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறதா? தாயும்/தாரமும் அதை ஒருமனதாய் சரியாய் புரிந்துகொண்டார்களா? என்பதில் பல விவாதங்கள் இருக்கலாம். ஆனால், அப்படியொரு வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அதை மேலும் புரிந்து கொள்ளவே "தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம்???" என்றொரு தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன். மேலும், ஆண் எப்போதும் ஏதேனும் ஒரு பெண் உறவை சார்ந்தே இருப்பவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிட்டும் இருக்கிறேன். அம்மா எனும் உன்னத-உறவில் ஆரம்பிக்கும் அந்த சார்ந்திருத்தல் தங்கை/தமக்கை என்று மாறி பின்னர் காதலி/மனைவி என்று உருமாறுகிறது. அதனால் தான் "தாய்க்கு பின் தாரம்" என்று சொல்லப்பட்டது. தாய் என்ற உறவில் துவங்கி தாரம் வரை குறிப்பிடப்பட்ட இந்த சார்ந்திருத்தல், அதன் பின்னர் எவர்? என்று திடமாய் சொல்லப்பட்டு இருப்பதாய் தெரியவில்லை.
என்னளவில் "மனைவிக்கு பின் மகள்" என்பதே சரியான ஒன்று! மகள் பற்றியும் தந்தை-மகள் உறவைப் பற்றியும் பலமுறை எழுதி இருக்கிறேன் எனினும், "மனைவிக்கு பின் மகள்" என்ற தலைப்பில் பல பாகங்களாய் மனதங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இது மிகப்பெரிய உறவுப்பாலம்; மிக அழுத்தமான/ஆழமான உறவு என்பதால் - இந்த தலைப்பிற்கே ஒரு முன்னுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. "மனைவிக்கு பின் மகள்" என்பதை உணர்த்தும் பல நிகழ்வுகளை நான் சந்தித்திருக்கிறேன். அவைகளை, ஓரிரு வரிகளாய் ஆங்காங்கே குறிப்பிட்டு இருப்பினும் - இப்படி விவரித்து எழுதியதில்லை. அப்படி எழுதுவது அவசியம் என்று தோன்றியது; அதனால் தான் இந்த மனதங்க தொடர். இதை சிறப்பாய் செய்திட என் மகளின் பல செயல்கள் பேருதவியாய் இருக்கும். விருப்பமிருப்போர், உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாய் அனுப்பலாம். வாருங்கள்! நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து...
"மனைவிக்கு பின் மகள்" என்பதை வலியுறுத்துவோம்!!!
திங்கள், பிப்ரவரி 23, 2015
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!
கடந்த 19-ஆம் தேதி முதன்முதலாய் A9Radio என்ற இணைய-வானொலியில் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே!" என்ற பாடலைக் கேட்டேன். கேட்க ஆரம்பித்தபோதே பிடித்துவிட்ட அந்த பாடல், 2010-இல் வெளியான "தென்மேற்கு பருவக்காற்று" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது என்பதை உடனே இணையத்தின் உதவியால் தெரிந்துகொண்டேன். அந்த பாடலை உடனே பதிவிறக்கமும் செய்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்/இருக்கிறேன்.
அம்மாவின் உயர்வையும்/தியாகத்தையும் எளிமையான வரிகளில் உணர்த்தும் அருமையான பாடல்!
அந்த பாடலை வாட்ஸ்-ஆப்பில் சில நட்புகளுக்கும் பகிர்ந்திருந்தேன்! என்ன அதிசயம்? அவர்களில் ஒருவர் தவிர வேறெவரும் அந்த பாடலை இதுவரை கேட்டதில்லை என்று அறிந்தேன். இம்மாதிரியான ஒரு பாடல்; இன்னமும் தெரியாமல் இருக்கும் பலரையும் சென்ற சேரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இங்கே பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் பிடித்திருப்பின்; பகிருங்கள் உங்கள் நெருங்கிய வட்டத்திலும்!
பின்குறிப்பு: முன்பே கேட்டிருப்போர், இதைப் பொருட்படுத்தவேண்டாம்!
சிறிய வார்த்தைகளுள் பெரிய வலி...
"என்னை அறிந்தால்" என்ற தமிழ் திரைப்படத்தில் "ஈஷாவுக்கு அப்புறம் நமக்கு வேற குழந்தைகளே வேண்டாம்! என்ன... மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி போகவேண்டி வரும்!" என்ற வசனம் ஒன்று வரும். பலருக்கும், இது சாதாரணமான வசனமாய் தோன்றியிருக்கும்! அந்த சிறிய வார்த்தைகளுள் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய வலியை/அந்த வசனம் தரும் புரிதலை; எத்தனை பேர் யோசித்திருப்பர் என்று எனக்கு தெரியவில்லை! அதை, இப்படியொரு பதிவாய் பதியவேண்டும் என்று தோன்றியது.
அஜித் மாதிரி ஒரு நடிகர் இதை "ஒப்புக்கொண்டு" பேசியிருப்பது தனிச்சிறப்பு! அதுபோலவே, த்ரிஷா போன்ற நடிகை அந்த காட்சியில் இடம்பெற்று இருப்பதும்!!
தமிழ் திரைப்படவேண்டும் இதுபோன்ற கூறிய வசனங்களை மேலும் கையாளவேண்டும் என்பது என் ஆவல்! காதல்/காமம் இவற்றின் மேலிருக்கும் நம் புரிதல் மென்மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அதுபோலவே, காதலும் காமமும் எப்படி இயல்பாய் கலக்கவேண்டும் என்று நான் எழுதியதும் இன்னும் பலரை சென்றடையும் என்றும் நம்புகிறேன்.
புதன், டிசம்பர் 24, 2014
உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா...
என்மகளுக்கு நேற்று (திசம்பர் 23) முதல் அரையாண்டு விடுமுறை. வழக்கம்போல், நேற்று மாலை ஆவலுடன் அலைபேசியில் அலவலாவிக்கொண்டு இருந்தபோது அவள் "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்றாள். எனக்கு மிகப்பெரிய ஆனந்த-அதிர்ச்சி. 5-வயது மகளா இவள்? என்ற கேள்வி (மீண்டும்) எழுந்தது. இந்த தலைமுறை குழந்தைகள் இம்மாதிரியான முதிர்ச்சியான கேள்விகளால்/பார்வைகளால் நம்மை திகைக்க வைப்பதை பலரும் அறிந்ததே! நானும், அம்மாதிரியான பதிவுகள் பலவும் இட்டிருக்கிறேன். இத்தனை நாள் அவள் பள்ளி/படிப்பு என்ற தன் கடமையை சரிவர செய்து வந்தாள்; என்னைப்பற்றிய நினைப்பு அதிகம் இருப்பதாய் கூட அவள் காட்டியதில்லை! ஏன்... பல நேரங்களில் அலைபேசியில் உரையாடக் கூட அவள் மறுத்ததுண்டு. ஆனால்... நேற்று?! பின்னர் தான் அவளின் நியாயம் புரிந்தது. நான் என் கடமையை சரியாய் செய்திருக்கிறேன். இப்போது, நான் அவளுடன் இருப்பது என் கடமையல்லவா?!
ஒருவேளை "டே! அப்பா!!" உன் கடமையை தவறி விட்டாயே! என்பதைத்தான் அப்படி நாகரீகமாய் சுட்டிக்காட்டி இருப்பாளோ?! என்று யோசித்தேன். ஆம்... நான் நேற்றைய முன்தினமே அவளை சென்று சேர்ந்திருக்க வேண்டும்; இனியொரு முறை இத்தவறை செய்யக்கூடாது என்ற உறுதி கொண்டேன். மன்னித்து விடு... மகளே! இனியொரு முறை, இத்தவறு நிகழாது; நானும் என் கடமையை சரிவர செய்வேன். "ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்ற அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன! ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புரிதலை விதைக்கிறது. கண்டிப்பாக... அவை அவளின் அடிமனதில் இருந்து வந்தவை! இன்று காலை பேசும்போது கூட மீண்டும், மீண்டும் "இன்னைக்கே வாங்கப்பா!" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்; என்னால், மீண்டும், மீண்டும் அவளுக்கு ஏமாற்றும் தரும் அந்த பதிலைக் கூற தயங்கியபோது, நல்லவேளையாய் அலைபேசியை துண்டித்துவிட்டது; நானும் அப்படியே விட்டுவிட்டேன்.
நானும் "உன்னை ரொம்ப மிஸ் பண்ட்றேன், மகளே!"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




-1.jpg)






