பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவைகூறல்
0091.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
விழியப்பன் விளக்கம்: அறம் அறிந்தவரின் வாயிலிருந்து, வெளிப்படும் சொற்கள்; அன்பு
கலந்த, வஞ்சனையில்லாத - இனிய மொழியாய் இருக்கும்.
(அது போல்...)
மனிதம் கடைப்பிடிப்போர் மூலமாய், உருவாகும் செயல்கள்; அறம் சேர்ந்து, சுயமற்று -
சமூகப் பொறுப்புடன் இருக்கும்.
0092.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
விழியப்பன் விளக்கம்: உள்ளம் மலர்ந்து, தானம் செய்வதை விட; முகம் மலர்ந்து,
நேயத்துடன் பேசுபவராய் இருப்பது - அதீத நன்றானது.
(அது போல்...)
ஊழல் செய்து, செல்வந்தர் ஆவதை விட; அறம் உணர்ந்து, நேர்மையுடன் நடப்பவராய்
இருப்பது - பெரும் சிறப்பானது.
0093.
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
விழியப்பன் விளக்கம்: முகம் மலர்ந்து, மகிழ்ச்சியுடன் பிறரைப் பார்த்து; உள்ளத்தில்
இருந்து நேயத்துடன் பேசுவதே, அறம் எனப்படும்.
(அது போல்...)
கடமை உணர்ந்து, பொறுப்புடன் மக்களைக் காத்து; வாய்மையில் பயணித்து
அறத்துடன் நடப்பதே, அரசாட்சி எனப்படும்.
0094.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
விழியப்பன் விளக்கம்: எவரிடமும் இன்பத்தை மிகுவிக்கும் வண்ணம், நேயத்துடன்
பேசுபவர்க்கு; துன்பத்தை மிகுவிக்கும், வெறுப்பு இல்லாமல் போகும்.
(அது போல்...)
பிறரின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்கில், அறமுடன் நடப்போர்க்கு; நிம்மதியைக்
குலைக்கும், பொறாமை இல்லாமல் போகும்.
0095.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருப்பதும், நேயத்துடன் பேசுவதுமே - மனிதரை
அலங்கரிக்கும் அணிகலன்கள்; மற்றவை அல்ல.
(அது போல்...)
பொருளை ஈட்டுவதும், குடும்பத்தைப் பேணுதலுமே - பெற்றோரைத் தரப்படுத்தும்
காரணிகள்; மற்றவை அல்ல.
0096.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
விழியப்பன் விளக்கம்: நன்மை பயப்பவற்றைப் பழகி, நேயத்துடன் பேசினால்; நல்வினை
அல்லாதவை குறைந்து, நல்வினைகள் பெருகும்.
(அது போல்...)
வலிமை சேர்ப்பவைகளை உணர்ந்து, உறுதியுடன் கடைப்பிடித்தால்; வலிமை
அல்லாதவை விலகி, வலிமை மிகுந்திடும்.
0097.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு பலனை விளைவிக்கும் எண்ணத்திலிருந்து, மாறுபடாத
பேச்சு; நல்வினைகளை விளைவித்து, அறத்தை நிலைநாட்டும்.
(அது போல்...)
பிறரின் வாழ்வை உயர்விக்கும் வைராக்கியத்திலிருந்து, விலகிடாத முனைப்பு;
மனிதத்தைப் பெருக்கி, சமூகத்தைத் திடப்படுத்தும்.
0098.
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
விழியப்பன் விளக்கம்: சிறுமை தன்மையை அகற்றிய, நேயம் நிறைந்த பேச்சு; இப்பிறப்பு
மட்டுமல்லாமல், மறுபிறப்புக்கும் நன்மையை வழங்கும்.
(அது போல்...)
பகைமை உணர்வை நீக்கிய, நேர்மை மிகுந்த ஆட்சி; நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல்,
எதிர்காலத்திலும் மக்களாட்சியைக் காக்கும்.
0099. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
விழியப்பன் விளக்கம்: நேயம்மிக்க சொற்கள் விளைவிக்கும் நற்பயன்களை அனுபவித்தவர்;
என்ன பயனுக்காக, கொடிய வார்த்தைகளை உதிர்க்கமுடியும்?
(அது போல்...)
நேர்மையான ஆட்சி விளைவிக்கும் அழியாப்புகழை உணர்ந்தவர்; என்ன புகழுக்காக,
அறமற்ற ஆட்சியை வழங்கமுடியும்?
0100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
விழியப்பன் விளக்கம்: நன்மை விளைவிக்கும் சொற்கள் பலவிருக்க, தீயவற்றைப் பேசுவது;
கனிந்தது இருக்க, காயைக் கொய்வது போன்றதாகும்.
(அது போல்...)
வாழ்வை உயர்வுக்கும் அறவழிகள் பலவிருக்க, தீயவழியில் பயணிப்பது; மனைவி