செவ்வாய், மே 10, 2016

குறள் எண்: 0282 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0282}

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

விழியப்பன் விளக்கம்: களவு எண்ணத்துடன், பிறர் பொருளை அபகரிக்கலாம் என மனதால் நினைப்பதும்; தீயொழுக்கமே ஆகும்.
(அது போல்...)
பகை உணர்வுடன், பிறர் அந்தரங்கத்தை புறங்கூறலாம் என வாய்மொழியால் திட்டமிடுவதும்; அறமற்றதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மே 09, 2016

குறள் எண்: 0281 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0281}

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விழியப்பன் விளக்கம்: பிறரால் இகழப்படாத நிலையில் வாழ்ந்திட நினைப்போர்; எந்த பொருளையும், களவாட எண்ணாத நிலையில் தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
(அது போல்...)
பிறரால் வெல்லமுடியாத நிலையில் இருக்கும் விருப்பமுடையோர்; எவர் ஒருவரையும், வஞ்சிக்க முயலாத வகையில் தன் செயலை நிர்ணயிக்க வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மே 08, 2016

அதிகாரம் 028: கூடாவொழுக்கம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 028 - கூடாவொழுக்கம்

0271.  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
           ஐந்தும் அகத்தே நகும்

           விழியப்பன் விளக்கம்: வஞ்சக மனதுடையோரின், பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு; 
           அவரின் உடம்பிலுள்ள ஐவகை பூதங்களும், தம்முள்ளே சிரிக்கும்.
(அது போல்...)
           காழ்ப்புணர்வு உடையோரின், போலியான உறவைக் கண்டு; அவரின் பிணைப்பிலுள்ள 
           ஐவகை உறவுகளும், மனதுள்ளே இகழும்.

0272.  வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
           தான்அறி குற்றப் படின்

           விழியப்பன் விளக்கம்: மனசாட்சிக்குத் தெரிந்தே, குற்றச்செயல்களைச் செய்வாராயின்; 
           ஒருவரின்  விண்ணளவு தவத்தால் என்ன பயன்?
(அது போல்...)
           குடிமக்களுக்குத் தெரிந்தே, ஊழல்களைச் செய்கிறதெனின்; ஓர்கட்சியின் கண்டமளவு 
           ஆதரவாளர்களால் என்ன நன்மை?
           
0273.  வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
           புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

           விழியப்பன் விளக்கம்: மனதை ஒருமுகப்படுத்தும் வலிமையற்றோரின், வலிய தவக்கோலம்; 
           வலுவற்ற பசு, வலிமையான புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு மேய்வது போன்றதாகும்.
(அது போல்...)
           ஊழலைக் களையெடுக்கும் திராணியற்றோரின், புரட்சிப் பிரச்சாரம்; இளம் குழந்தை, 
           முதிய வயதினரின் வேடத்தை அணிந்துகொண்டு மிரட்டுவது போன்றதாகும்.

0274.  தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
           வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

           விழியப்பன் விளக்கம்: தவக்கோலம் கொண்டும், தீவினைகளைச் செய்வது; வேடர்கள் புதரில்
           மறைந்து, பறவைகளைக் கண்ணிவைத்து பிடிப்பது போன்றதாகும்.
(அது போல்...)
           எல்லா-வளமும் இருந்தும், பிறர்பொருளை அபகரிப்பது; கோழைகள் பிறரின் ஆதரவுடன்,
           எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது போன்றதாகும்.

0275.  பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
           ஏதம் பலவுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: "ஆசைகளைத் துறந்துவிட்டோம்!" என்போரின் பொய்யொழுக்கம்; 
           "என்ன செய்தோம்? என்ன செய்தோம்?" என வருந்தும் பல துன்பங்களைக் கொடுக்கும்.
(அது போல்...)
           "ஊழல்களை ஒழித்துவிட்டோம்!" என்போரின் பொய்ப்பிரச்சாரம்; "ஏன் தோற்றோம்? ஏன்
           தோற்றோம்?" என வருந்தும் பல நிகழ்வுகளை உருவாக்கும்.

0276.  நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
           வாழ்வாரின் வன்கணார் இல்

           விழியப்பன் விளக்கம்: மனதளவில் ஆசைகளைத் துறவாமல், வெளியில் துறந்தவர் போல்; 
           ஏமாற்றி வாழ்வோரை விட, இரக்கமற்றோர் வேறெவருமில்லை.
(அது போல்...)
           நடைமுறையில் ஊழல்களை ஒழிக்காமல், மேடையில் ஒழித்தது போல்; ஏமாற்றி
           ஓட்டுகேட்போரை விட, இழிவானோர் வேறெவருமில்லை.

0277.  புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி 
           மூக்கிற் கரியார் உடைத்து

           விழியப்பன் விளக்கம்: புறத்தில் - குன்றிமணியின் அகன்ற செம்மையாய் தோன்றிடினும்; 
           அகத்தில் - குன்றிமணியின் குறுகிய கருமையைக் கொண்டவரை உடையது இவ்வுலகம்.
(அது போல்...)
           பேச்சில் - இயற்கையின் பரந்த கருணையாய் பொழிவதும்; செயலில் - இயற்கைசீற்றத்தின்
           கொடிய சீரழிவுமான இரட்டையரைக் கொண்டது சமூகம்.

0278.  மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
           மறைந்தொழுகு மாந்தர் பலர்

           விழியப்பன் விளக்கம்: மனதில் தீய-எண்ணங்கள் நிறைந்திருக்க, தவமிருப்போர் இயல்புடன்;
           புனிதநீரில் குளித்து, பொய்யான ஒழுக்கத்துடன் வாழ்வோர் பலருண்டு.
(அது போல்...)
           செயலில் ஒழுங்கீனங்கள் பலவிருக்க, மாமனிதர் இயல்புடன்; மேடைப்பேச்சில் கவர்ந்து,
           போலியான தோற்றத்துடன் வலம்வருவோர் பலருண்டு.

0279.  கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
           வினைபடு பாலால் கொளல்

           விழியப்பன் விளக்கம்: நேரான அம்பு கொடியது செய்யும்! வளைவான யாழ், இனிமையான 
           இசைதரும்! அதுபோல், ஒருவரை - பேச்சால் அல்லாது செயலால் வரையறுத்தல் வேண்டும்.
(அது போல்...)
           முரடான பலாப்பழம் அமிழ்தாய் இனிக்கும்! வழவழப்பான எட்டிப்பழம் உயிரை அழிக்கும்! 
           அதுபோல், ஓர்-உறவை - அழகால் அல்லாது அன்பால் நிர்ணயிக்க வேண்டும்.

0280.  மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
           பழித்தது ஒழித்து விடின்

           விழியப்பன் விளக்கம்: உலகத்தார் விமர்சிக்கும் கூடாவொழுக்கத்தை ஒழித்துவிட்டால்; 
           முடியை மழிப்பதோ அல்லது நீளமாய் வளர்ப்பதோ தேவையில்லை.

(அது போல்...)
           பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளித்துவிட்டால்; சூறாவளிப் பிரச்சாரமோ 
           அல்லது மிகையான வாக்குறுதியோ தேவையில்லை.

குறள் எண்: 0280 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0280}

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

விழியப்பன் விளக்கம்: உலகத்தார் விமர்சிக்கும் கூடாவொழுக்கத்தை ஒழித்துவிட்டால்; முடியை மழிப்பதோ அல்லது நீளமாய் வளர்ப்பதோ தேவையில்லை.
(அது போல்...)
பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளித்துவிட்டால்; சூறாவளிப் பிரச்சாரமோ அல்லது மிகையான வாக்குறுதியோ தேவையில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மே 07, 2016

குறள் எண்: 0279 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0279}

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேரான அம்பு கொடியது செய்யும்! வளைவான யாழ், இனிமையான இசைதரும்! அதுபோல், ஒருவரை - பேச்சால் அல்லாது செயலால் வரையறுத்தல் வேண்டும்.
(அது போல்...)
முரடான பலாப்பழம் அமிழ்தாய் இனிக்கும்! வழவழப்பான எட்டிப்பழம் உயிரை அழிக்கும்! அதுபோல், ஓர்-உறவை - அழகால் அல்லாது அன்பால் நிர்ணயிக்க வேண்டும்.

வெள்ளி, மே 06, 2016

குறள் எண்: 0278 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0278}

மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்

விழியப்பன் விளக்கம்: மனதில் தீய-எண்ணங்கள் நிறைந்திருக்க, தவமிருப்போர் இயல்புடன்; புனிதநீரில் குளித்து, பொய்யான ஒழுக்கத்துடன் வாழ்வோர் பலருண்டு.
(அது போல்...)
செயலில் ஒழுங்கீனங்கள் பலவிருக்க, மாமனிதர் இயல்புடன்; சொற்பொழிவில் கவர்ந்து, போலியான தோற்றத்துடன் வலம்வருவோர் பலருண்டு.

வியாழன், மே 05, 2016

குறள் எண்: 0277 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0277}

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து

விழியப்பன் விளக்கம்: புறத்தில் - குன்றிமணியின் அகன்ற செம்மையாய் தோன்றிடினும்; அகத்தில் - குன்றிமணியின் குறுகிய கருமையைக் கொண்டவரை உடையது இவ்வுலகம்.
(அது போல்...)
பேச்சில் - இயற்கையின் பரந்த கருணையாய் பொழிவதும்; செயலில் - இயற்கைசீற்றத்தின் கொடிய சீரழிவுமான இரட்டையரைக் கொண்டது சமூகம்.

புதன், மே 04, 2016

குறள் எண்: 0276 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0276}

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்

விழியப்பன் விளக்கம்: மனதளவில் ஆசைகளைத் துறவாமல், வெளியில் துறந்தவர் போல்; ஏமாற்றி வாழ்வோரை விட, இரக்கமற்றோர் வேறெவருமில்லை.
(அது போல்...)
நடைமுறையில் ஊழல்களை ஒழிக்காமல், மேடையில் ஒழித்தது போல்; ஏமாற்றி ஓட்டுகேட்போரை விட, இழிவானோர் வேறெவருமில்லை.

செவ்வாய், மே 03, 2016

குறள் எண்: 0275 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0275}

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவுந் தரும்

விழியப்பன் விளக்கம்: "ஆசைகளைத் துறந்துவிட்டோம்!" என்போரின் பொய்யொழுக்கம்; "என்ன செய்தோம்? என்ன செய்தோம்?" என வருந்தும் பல துன்பங்களைக் கொடுக்கும்.
(அது போல்...)
"ஊழல்களை ஒழித்துவிட்டோம்!" என்போரின் பொய்ப்பிரச்சாரம்; "ஏன் தோற்றோம்? ஏன் தோற்றோம்?" என வருந்தும் பல நிகழ்வுகளை உருவாக்கும்.

திங்கள், மே 02, 2016

குறள் எண்: 0274 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0274}

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

விழியப்பன் விளக்கம்: தவக்கோலம் கொண்டும், தீவினைகளைச் செய்வது; வேடர்கள் புதரில் மறைந்து, பறவைகளைக் கண்ணிவைத்து பிடிப்பது போன்றதாகும்.
(அது போல்...)
எல்லா-வளமும் இருந்தும், பிறர்பொருளை அபகரிப்பது; கோழைகள் பிறரின் ஆதரவுடன், எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது போன்றதாகும்.

ஞாயிறு, மே 01, 2016

குறள் எண்: 0273 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0273}

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

விழியப்பன் விளக்கம்: மனதை ஒருமுகப்படுத்தும் வலிமையற்றோரின், வலிய தவக்கோலம்; வலுவற்ற பசு, வலிமையான புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு மேய்வது போன்றதாகும்.
(அது போல்...)
ஊழலைக் களையெடுக்கும் திராணியற்றோரின், புரட்சிப் பிரச்சாரம்; இளம் குழந்தை, முதிய வயதினரின் வேடத்தை அணிந்துகொண்டு மிரட்டுவது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை