(பாவேந்தரின் "குடும்ப விளக்கு" ஏற்றிவைத்தது, என்னுள் "விருத்தப்பா" எனும் "சுடர்விளக்கு"!
என்னப்பனின் தமிழறிவு-எண்ணெய்க்கிணறால்; ஆகிடுமிது "அணையா விளக்கு"!!
தெளிந்திடுங்கள் யாரும் - வேந்தரது யார்க்கும் "பொது விளக்கு"!!!)
*******
(என்னப்பனிடம் இலக்கணம் பயின்று, நான் "பலமுறை" மாற்றி எழுதியது!)
என்னப்பனின் தமிழறிவு-எண்ணெய்க்கிணறால்; ஆகிடுமிது "அணையா விளக்கு"!!
தெளிந்திடுங்கள் யாரும் - வேந்தரது யார்க்கும் "பொது விளக்கு"!!!)
*******
(என்னப்பனிடம் இலக்கணம் பயின்று, நான் "பலமுறை" மாற்றி எழுதியது!)
பாவேந்தர் தம்புகழ்சேர் விளக்கு; நீத்த
பல்இருளும் புரிந்தோரே நிசமாய் மேதை;
பாவலர்க்கோ அம்மாபெரும் விளக்கு - கீதை!
பேரிருளின் போர்வையில் இருக்கும் இந்நாள்
பாவையரோ?! இல்வழியால்; தமிழர் மாண்பாம்
பெருவிளக்கை இருள்சூழஓர் வழிசெய் கின்றார்!!
பாவலாண்டார் ஏற்றிவைத்த விளக்கு; ஆர்க்கும்
"பொதுவாம்"என் பதைமறத்தல், தகுமோ? சொல்வீர்!!!
*******
(என்னப்பன் உருமாற்றியது....)
பைந்தமிழர் பண்புதனை உணர்ந்தோர் கோடி!
பாவலரின் பொதுவிளக்கால் வெளிச்சம் பெற்ற
பாத்திறனை உணராதோர் இணைத்து இந்நாள்
பாவையரும்; குடும்பத்தை புரிந்தார் இல்லை!
பாரிடையில் விதிவிலக்காய் வாழ்ந்தே நாளும்
பாவத்தைச் செய்கின்றார்; பயன்தான் உண்டோ?
பாமரராய் வாழ்ந்திடுதல் முறையோ? சொல்வீர்!!!
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக