சென்ற வாரம் "இரமதான்-விடுமுறையில்" என் தம்பியை காண கத்தார் நாட்டிலுள்ள "தோஹா" நகரத்திற்கு செல்ல விமான-சீட்டு எல்லாம் வாங்கிக்கொண்டு துபாய்-விமான நிலையம் சென்றடைந்தேன்! விமானத்தில் ஏற நுழை-வாயிலை நெருங்கிய போது - தடுத்து நிறுத்தப்பட்டேன் - "விசா" இல்லை என்பதற்காய்!! அவசரப்படாதீர்; நான், முன்பே "கத்தார்-தூதரகத்தை" தொடர்பு கொண்டு கேட்ட போது - நான், விண்ணப்பிக்க வேண்டாம்; இறங்கிய பின் விசா (Visa on Landing) கிடைக்கும் என்று ஓர் அலுவலர் கூறினார்! அதனால்தான், விமானச்-சீட்டு வாங்கி நுழை-வாயில் வரை சென்றேன்; என்ன செய்வதென்றே புரியவில்லை - பெருத்த ஆற்றாமை! அவர்கள் முடியவே-முடியாது என்று சொல்லிவிட்டனர்; விமானமும் புறப்பட்டுவிட்டது. பின்னர், என்னை நானே தேற்றிக்கொண்டு சரி வெளியே செல்கிறேன் என்றேன்; அவர்கள், விமானம் சேரும்-இடத்தில் தரையிறங்கும் வரை என்னை வெளியில் அனுப்பமுடியாது என்று கூறிவிட்டனர் - " வெந்த புண்ணில் வேல்???!!!"
ஒருவாறாய், 4 மணி நேரத்திற்கு பின்னர் - என்னை அவர்கள் வெளியே விடும்போது மணி 23:30! அன்று வியாழக்கிழமை - நாள் முழுதும் விரதம்; உடல் மிகவும் சோர்ந்து விட்டது!! விமான-நிலையத்திற்கு வந்த என் நண்பர் ஒருவர் - என்னை பேருந்து நிலையத்தில் 00:01 மணிக்கு விட்டார்; சிறு-நீர் வேறு முட்டிக்கொண்டு நின்றது! பேருந்து-சீட்டை வாங்கிவிட்டு, நடத்துனரிடம் உணவு வாங்கி (சிறு-நீரையும் விடுதலித்து) வருகிறேன் என்றேன்; அவரோ, வண்டி நிரம்பியதும் - எடுத்துவிடுவோம்; இதுவே கடைசி-வண்டியாய் இருக்கக்கூடும் என்றார். உள்ளேயும்(உணவு) அனுப்பாது; வெளியேயும்(சிறுநீர்) அனுப்பாது அமர்ந்துவிட்டேன். ஒருவாறாய், இரண்டையும் சமாளித்து வீடு சேர்ந்த போது மணி 03:30!! ஆற்றாமையிலும், மனதயற்சியிலும் "விடுமுறையை" வீட்டிலேயே கழித்துவிட்டு, அடுத்த அலுவலக-நாளில் "கத்தார்-தூதரகத்திற்கு" சென்று நேரில் விசாரித்தால் - எந்த வருத்தமுமின்றி "எவரோ ஓர் அலுவலர்" தொலைபேசியில் தவறான-தகவலை கொடுத்துவிட்டதாய் தெரிவித்தனர்...
எவரின் குற்றம் என்பது? இதுதான் விதி என்பதா???!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக