மறிக்கும் திரியின் "ஒளி"யின்,
முடிவில்; பிறந்திடும் "ஒலி"யில்,
மலர்வதாம் மனமகிழ் தீபாவளி!
மலரட்டும் உங்கள் இ(தய/ல்ல)த்தில்;
அருள்-தீப ஒளி!!
உடையில் மட்டுமேன் புதியது?
உளத்திலும் கூடட்டுமே! எங்கும்
உறவுகள் பலப்படட்டுமே!! ஆங்கே
உண்மை உயிர்த்தெழட்டும்! அதுவே
குறள்-தீப ஒளி!!
பண்டங்கள் தொண்டை தாண்டிடின்
பல்சுவையும் அழிந்திடும்! ஆயின்,
பண்புகள் அண்டை சேர்ந்திடின்;
பல்வளமும் பொழிந்திடும்!! சேரட்டும்
சீர்-தீப ஒளி!!
குணத்தூய்மை பெருகி, "ஒலி-மாசு"
குறையட்டும்! பண்டிகை ஆட்டத்தில்
கொண்டோர் இலாதோரை சேர்ப்பதே;
"கொண்டு-ஆட்டம்" ஆகும்! பெருகட்டும்
சேர்-தீப ஒளி!!
பயனுள்ள "(ஓசோன்)படலம்" வாழட்டும்!
பங்காளிகள் ஒன்றுடன் கூடியே;
பயனற்ற "(வறட்டு)பகை" அழியட்டும்!!
வள(ர்)-தீப ஒளி!!
- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
{www.vizhiyappan.blogspot.com}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக