திங்கள், அக்டோபர் 31, 2016

குறள் எண்: 0456 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0456}

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

விழியப்பன் விளக்கம்: தூய்மையான மனமுடையவரின் வம்சம், நல்வழியில் பயணப்படும்; தூய்மையான இனத்தைக் கொண்டவரின் செயல்கள், நன்மையளிக்காமல் இருப்பதில்லை.
(அது போல்...)
குறையற்ற ஆட்சியின் நீட்சி, நல்லவர்களால் தொடரப்படும்; குறையற்றத் தொண்டர்களை உடையோரின் கட்சி, வெற்றியடையாமல் இருப்பதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 30, 2016

குறள் எண்: 0455 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0455}

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

விழியப்பன் விளக்கம்: சிந்தனையின் தூய்மை மற்றும் செயலின் தூய்மை - இவையிரண்டும், ஒருவரின் இனத்தின் தூய்மையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
பெற்றோரின் வாய்மை மற்றும் பிள்ளைகளின் வாய்மை - இவ்விரண்டும், அவரின் முன்னோர்களின் வாய்மையைக் கொண்டு வகுக்கப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 29, 2016

குறள் எண்: 0454 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0454}

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

விழியப்பன் விளக்கம்: அறமற்ற சுற்றத்தை உடையவரின் அறிவு, அவரின் மனதைப் பிரதிபலிப்பதாய் தோற்றமளித்து; இறுதியில், அவரின் சுற்றத்தைப் பிரதிபலிப்பதாய் மாறும்.
(அது போல்...)
நேர்மையற்ற சுயத்தை உடையவரின் வசதி, அவரின் உழைப்பை உணர்த்துவதாய் பறைசாற்றி; பின்னர், அவரின் ஊழலை உணர்த்துவதாய் முடியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 28, 2016

குறள் எண்: 0453 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0453}

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் உணர்ச்சி, அவரின் மனநிலையை ஒட்டி இருக்கும்; அதுபோல் ஒருவர் இவ்வகையானவர் என்பது, அவரின் சுற்றத்தையொட்டி  வரையறுக்கப்படும்.
(அது போல்...)
பிள்ளைகளின் செயல்பாடுகள், பெற்றோர்களின் இயல்பை ஒட்டி அமையும்; அதுபோல் ஆட்சியாளர் இத்தகையானவர் என்பது, அவர்களின் தொண்டர்களால் நிர்ணயிக்கப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், அக்டோபர் 27, 2016

குறள் எண்: 0452 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0452}

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

விழியப்பன் விளக்கம்: சேரும் நிலத்தின் தன்மைக்கேற்ப, நீரின் தன்மை வேறுபடும்; அதுபோல் சேரும் இனத்தின் இயல்புக்கேற்ப, மக்களின் அறிவு வேறுபடும்.
(அது போல்...)
ஊற்றப்படும் அச்சின் உருவுக்கேற்ப; உருகிய உலோகம் உருமாறும்; அதுபோல் தத்தம் தலைமையின் தன்மைக்கேற்ப, கட்சியின் செயல்பாடுகள் அமையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், அக்டோபர் 26, 2016

குறள் எண்: 0451 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ் சேராமை; குறள் எண்: 0451}

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

விழியப்பன் விளக்கம்: பேரின்பம் கண்ட உயர்ந்தோர், சிற்றின்பம் நாடும் தாழ்ந்தோர்க்கு அஞ்சுவர்; தாழ்ந்தோரோ, சிற்றின்பம் நாடுவோரைச் சுற்றமாகச் சூழ்வர்.
(அது போல்...)
விவசாயத்தை உயிரெனும் விவசாயிகள், விளைநிலம் அழிக்கும் வியாபாரிகளை எதிர்ப்பர்; வியாபாரிகளோ, விளைநிலத்தை அழிப்போரைப் பங்காளிகளாய் சேர்ப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், அக்டோபர் 25, 2016

அதிகாரம் 045: பெரியாரைத் துணைக்கோடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 - பெரியாரைத் துணைக்கோடல்

0441.  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
           திறனறிந்து தேர்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறநெறிகளை உணர்ந்து, அனுபவ அறிவுபெற்ற மூத்தவர்கள்
           நட்பை; அதன் சிறப்பை உணர்ந்து, ஆராய்ந்து அடையவேண்டும்.
(அது போல்...)
           வாழ்வியலை வகுத்து, தலைமுறையை வளர்த்த மூதாதையர் வரலாறை; அதன் மாண்பை
           உணர்ந்து, முயன்று அறியவேண்டும்.
        
0442.  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
           பெற்றியார்ப் பேணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே 
           தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
           நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; 
           வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.
           
0443.  அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
           பேணித் தமராக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய்
           கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
           நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான
           சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

0444.  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
           வன்மையுள் எல்லாந் தலை

           விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக்
           கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
           நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள்
           அனைத்துக்கும் வழிவகுக்கும்.

0445.  சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
           சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்;
           அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
           பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப்
           பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

0446.  தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
           செற்றார் செயக்கிடந்தது இல்

           விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை
           இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
           சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை;
           தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

0447.  இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
           கெடுக்குந் தகைமை யவர்

           விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையுடைய 
           அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
           குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின் வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும் 
           சிற்றின்பம், ஏதிருக்க முடியும்?

0448.  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
           கெடுப்பா ரிலானுங் கெடும்

           விழியப்பன் விளக்கம்: குறைகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையற்ற 
           அரசாள்வோர்; கெடுப்பதற்கு எவரும் இல்லையெனினும், இயல்பாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
           அறமற்றவற்றைக் களையெடுக்கும் பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; தவறானப் 
           பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.

0449.  முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
           சார்பிலார்க் கில்லை நிலை

           விழியப்பன் விளக்கம்: முதலீடு செய்யாதவர்க்கு, நிரந்தர வருமானமில்லை! அதுபோல், 
           முட்டுத்தூண் போன்ற பெரியோரின் ஆதரவற்றோர்; நிலைத்திருப்பது சாத்தியமில்லை!
(அது போல்...)
           அடித்தளமற்ற கட்டிடத்திற்கு, நீடித்த ஆயுளில்லை! அதுபோல், வடிகால் போன்ற 
           உறவுகளின் துணையில்லாதோர்; மகிழ்ந்திருப்பது சாத்தியமில்லை!

0450.  பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
           நல்லார் தொடர்கை விடல்

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும் பெரியவர் ஒருவரின், உறவைக் கைவிடுதல்;   
           பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
           நல்லாட்சி அளிக்கும் தலைவர் ஒருவரை, ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் 
           செய்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தை உருவாக்கும்.

குறள் எண்: 0450 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0450}

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும் பெரியவர் ஒருவரின், உறவைக் கைவிடுதல்; பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
நல்லாட்சி அளிக்கும் தலைவர் ஒருவரை, ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் செய்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தை உருவாக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், அக்டோபர் 24, 2016

குறள் எண்: 0449 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0449}

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

விழியப்பன் விளக்கம்: முதலீடு செய்யாதவர்க்கு, நிரந்தர வருமானமில்லை! அதுபோல், முட்டுத்தூண் போன்ற பெரியோரின் ஆதரவற்றோர்; நிலைத்திருப்பது சாத்தியமில்லை!
(அது போல்...)
அடித்தளமற்ற கட்டிடத்திற்கு, நீடித்த ஆயுளில்லை! அதுபோல், வடிகால் போன்ற உறவுகளின் துணையில்லாதோர்; மகிழ்ந்திருப்பது சாத்தியமில்லை!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 23, 2016

குறள் எண்: 0448 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0448}

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

விழியப்பன் விளக்கம்: குறைகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையற்ற அரசாள்வோர்; கெடுப்பதற்கு எவரும் இல்லையெனினும், இயல்பாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
அறமற்றவற்றைக் களையெடுக்கும் பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; தவறானப் பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 22, 2016

குறள் எண்: 0447 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0447}

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையுடைய அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின் வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும் சிற்றின்பம், ஏதிருக்க முடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 21, 2016

குறள் எண்: 0446 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0446}

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை; தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

வியாழன், அக்டோபர் 20, 2016

குறள் எண்: 0445 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0445}

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்; அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப் பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

புதன், அக்டோபர் 19, 2016

குறள் எண்: 0444 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0444}

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை

விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக் கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள் அனைத்துக்கும் வழிவகுக்கும்.

செவ்வாய், அக்டோபர் 18, 2016

குறள் எண்: 0443 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0443}

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய் கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

திங்கள், அக்டோபர் 17, 2016

குறள் எண்: 0442 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0442}

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

குறள் எண்: 0441 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0441}

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: அறநெறிகளை உணர்ந்து, அனுபவ அறிவுபெற்ற மூத்தவர்கள் நட்பை; அதன் சிறப்பை உணர்ந்து, ஆராய்ந்து அடையவேண்டும்.
(அது போல்...)
வாழ்வியலை வகுத்து, தலைமுறையை வளர்த்த மூதாதையர் வரலாறை; அதன் மாண்பை உணர்ந்து, முயன்று அறியவேண்டும்.

சனி, அக்டோபர் 15, 2016

அதிகாரம் 044: குற்றங்கடிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 - குற்றங்கடிதல்

0431.  செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
           பெருக்கம் பெருமித நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: 
குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்" 
           போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு 
           உரியதாகும்.
(அது போல்...)
           சிற்றின்பங்களைப் பெருக்கும், "மது/மாது/சூது" போன்ற போதைகளைத் தவிர்த்த 
           படைப்பாளியின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
        
0432.  இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
           உவகையும் ஏதம் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: 
கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற 
           மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
           திருப்தியில்லாத வரவேற்பு, உண்மையற்ற நம்பிக்கை மற்றும் தேவையற்ற துரோகம் - 
           இம்மூன்றும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
           
0433.  தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
           கொள்வர் பழிநாணு வார்

           விழியப்பன் விளக்கம்: 
பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்; 
           பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
           மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி, 
           காரணிகளை அலசுவர்.

0434.  குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
           அற்றந் தரூஉம் பகை

           விழியப்பன் விளக்கம்: 
குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் 
           இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
           சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி 
           இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.

0435.  வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
           வைத்தூறு போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன் 
           தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் 
           அழியும்.
(அது போல்...)
           உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை; 
           சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.

0436.  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
           என்குற்ற மாகும் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: 
நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் 
           குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
           அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் 
           தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?

0437.  செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
           உயற்பாலது இன்றிக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் 

           சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
           சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், 
           பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

0438.  பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
           எண்ணப் படுவதொன் றன்று

           விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; 

           இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
           அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், 
           ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.


0439.  வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
           நன்றி பயவா வினை

           விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது;

           அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
           எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல்,
           நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

0440.  காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
           ஏதில ஏதிலார் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல்

           செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
           எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை
           முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது. 

குறள் எண்: 0440 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0440}

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல் செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது.

வெள்ளி, அக்டோபர் 14, 2016

குறள் எண்: 0439 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0439}

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது; அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல், நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

வியாழன், அக்டோபர் 13, 2016

குறள் எண்: 0438 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0438}

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.

புதன், அக்டோபர் 12, 2016

சேவாக்கின் தனித்தன்மை...

குறள் எண்: 0437 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0437}

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்

விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

செவ்வாய், அக்டோபர் 11, 2016

குறள் எண்: 0436 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0436}

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?
*****

மனவேதனையும் காலுறை-கிழிசலும்...

திங்கள், அக்டோபர் 10, 2016

குறள் எண்: 0435 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0435}

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன் தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் அழியும்.
(அது போல்...)
உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை; சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.
*****

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

குறள் எண்: 0434 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0434}

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

விழியப்பன் விளக்கம்: குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.
*****

சனி, அக்டோபர் 08, 2016

குடும்ப வாழ்வின் புகழ்...

குறள் எண்: 0433 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0433}

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

விழியப்பன் விளக்கம்: பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்; பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி, காரணிகளை அலசுவர்.
*****

வெள்ளி, அக்டோபர் 07, 2016

குறள் எண்: 0432 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0432}

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
திருப்தியில்லாத வரவேற்பு, உண்மையற்ற நம்பிக்கை மற்றும் தேவையற்ற துரோகம் - இம்மூன்றும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
*****

அளவுக்கு அதிமான சுதந்திரத்தின் விளைவு...



வியாழன், அக்டோபர் 06, 2016

குறள் எண்: 0431 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0431}

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

விழியப்பன் விளக்கம்: குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்" போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு உரியதாகும்.
(அது போல்...)
சிற்றின்பங்களைப் பெருக்கும், "மது/மாது/சூது" போன்ற போதைகளைத் தவிர்த்த படைப்பாளியின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
*****