சனி, அக்டோபர் 01, 2016

குறள் எண்: 0426 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0426}

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவ தறிவு

விழியப்பன் விளக்கம்: உலகில், வாழ்வியல் எவ்வாறு நிகழ்கிறதோ; அவ்வகையில், உலகுடன் ஒன்றி வாழ்வியலை நிகழ்த்துவதே, அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
சமூகத்தில், மக்களின் தேவை எதுவாகிறதோ; அதையொத்து, மக்களுடன் இணைந்து திட்டங்களை வகுப்பதே, மக்களாட்சி ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக