பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 - குற்றங்கடிதல்
0431. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
விழியப்பன் விளக்கம்: குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்"
போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு
உரியதாகும்.
பெருக்கம் பெருமித நீர்த்து
விழியப்பன் விளக்கம்: குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்"
போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு
உரியதாகும்.
(அது போல்...)
சிற்றின்பங்களைப் பெருக்கும், "மது/மாது/சூது" போன்ற போதைகளைத் தவிர்த்த
படைப்பாளியின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
0432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
விழியப்பன் விளக்கம்: கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற
மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
உவகையும் ஏதம் இறைக்கு
விழியப்பன் விளக்கம்: கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற
மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
திருப்தியில்லாத வரவேற்பு, உண்மையற்ற நம்பிக்கை மற்றும் தேவையற்ற துரோகம் -
இம்மூன்றும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
0433. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
விழியப்பன் விளக்கம்: பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்;
பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
கொள்வர் பழிநாணு வார்
விழியப்பன் விளக்கம்: பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்;
பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி,
காரணிகளை அலசுவர்.
0434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை
விழியப்பன் விளக்கம்: குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில்
இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
அற்றந் தரூஉம் பகை
விழியப்பன் விளக்கம்: குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில்
இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி
இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.
0435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன்
தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல்
அழியும்.
வைத்தூறு போலக் கெடும்
விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன்
தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல்
அழியும்.
(அது போல்...)
உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை;
சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.
0436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
விழியப்பன் விளக்கம்: நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர்
குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
என்குற்ற மாகும் இறைக்கு
விழியப்பன் விளக்கம்: நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர்
குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத்
தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?
0437. செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்
விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச்
சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
உயற்பாலது இன்றிக் கெடும்
விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச்
சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம்,
பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.
0438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை;
இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
எண்ணப் படுவதொன் றன்று
விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை;
இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில்,
ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.
0439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது;
அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.
நன்றி பயவா வினை
விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது;
அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல்,நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.
0440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல்
செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது.
ஏதில ஏதிலார் நூல்
விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல்
செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தைமுன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக