நல்லவர்களில் "ஓர் வகை!"
நான் உடன் இருந்ததோடு சரி! கத்தி எடுத்து கொடுத்தேன்! அரிவாள் எடுத்து கொடுத்தேன்! ஆனால், கொலை செய்யவே இல்லை! என்னைக் கொலை செய்ய சொன்னார்கள்! ஆனால், நான் மறுத்துவிட்டேன்!
நான் எடுத்து கொடுத்த; கத்தி/அரிவாளைக் கொண்டு, வெட்டியோர் தான் குற்றவாளிகள்! நான் வெட்டவே இல்லை; அதனால், நான் குற்றவாளி இல்லை! அதுபோல், தப்பித்துச் செல்லும் திறமை இல்லாமல், கொலைகாரர்களுக்கு உடந்தையாய் இருந்து; கொலை செய்யப்பட்டோரும் குற்றவாளிகளே!
- குடும்பத்தில்/உறவில்/சமூகத்தில் - இப்படிப்பட்ட ஓர் வகையினரைப் பார்த்திருப்போம்!
- இன்றைய தமிழக "அரசியல் சூழ்நிலை" நாளை மாறும்போது; இவ்வகையான நல்லவர்களை அடையாளம் காண நேரலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல! வாக்காளர்களும், அதில் ஒரு வகையினராய் வாதிடக் கூடும்! 😊
- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக