இத்தலையங்கத்தை படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கனிவான-வேண்டுகோள்! அருள்கூர்ந்து தலைப்பை நன்றாக படியுங்கள். ஆம், இது "பார்ப்பனர் சரியா? தவறா??" அல்லது "கடவுள் இருக்கிறாரா? இல்லையா??" என்ற வாதம் அல்ல. நான் இங்கே எடுத்திருக்கும் களம் "பகுத்தறிவு என்பது என்ன?" மற்றும் "பகுத்தறிவு என்பது ஏன் இவ்விரண்டு எதிர்ப்புகளோடு மட்டும் ஆழமாய் தொடர்பு படுத்தி இருக்கிறது?" என்பதே. மிக அண்மையில் பகுத்தறிவு இயக்கம் ஒன்று பார்ப்பனர்களுக்கு எதிராய் நடத்திய நிகழ்வொன்றை தமிழ் நாளிதழில் காண நேர்ந்தது. அதன் சாராம்சம் இதுதான்: ஒரு உணவகத்தின் பெயர் பலகையில் "... பிராமினாள் கபே" என்று இருந்ததாம்; அது சாதீய-சிந்தனையை தூண்டுவது போல் இருந்ததாம். உங்களுக்கு எப்படியோ! எனக்கு இதைப் படித்தவுடன் பலத்த-சிரிப்பு வந்தது; அதன் பின் ஏன் இவர்கள் பிராமிணர்களை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என்ற கேள்வி வந்தது.
முன்போர் தலையங்கத்தில் கூட (மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்) இதுபற்றி இன்னுமோர் அரசியல் கட்சியின் தலைவர் பேசுவதை குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த பார்ப்பனர்-எதிர்ப்பு போன்றே இவர்கள் கொண்டிருக்கும் இன்னுமொரு அங்கவஸ்த்திரம் "கடவுள்-எதிர்ப்பு". இந்த பகுத்தறிவுவாதிகள் "அதி-பெரும்பான்மையில்"; "பார்ப்பனரையும்; கடவுளையும் எதிர்ப்பதை" மட்டுமே பகுத்தறிவின்-பிரதானமாய் கடைபிடித்து வருவது நம்மில் பலருக்கும் தெரியும். இதை தொடர்ந்து யோசித்து வந்ததன் விளைவாய் இரண்டு நாட்கள் முன்பு இந்த பகுத்தறிவுவாதிகளுக்கும்; "இவ்விரண்டு பிரதான எதிர்ப்புகளுக்கும்" உள்ள தொடர்பு எனக்கு புரிந்தது. பின் என்னவளிடம் இது பற்றி கேட்டேன்; அவள் இதுசார்ந்தவற்றிலும், மற்றும் எல்லா பொது-அறிவிலும் அபார அறிவுடையவள். நிறைய படிப்பவள்; அவள் கொடுத்த தகவல்களையும், சிறு குறிப்பாய் இங்கே கொடுத்துள்ளேன். முன்பே எவரும் இப்படி விளக்கி இருக்கின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை.
பார்ப்பனர் எதிர்ப்பு என்பதில் இருந்து துவங்குகிறேன். இங்கே "பிராமினர்" என்பதை விடுத்து "பார்ப்பனர்" என்று உபயோகிப்பதற்கு அந்த பெயர் எனக்கு கொடுக்கும் (முன்பு எவரேனும் கொடுத்திருக்கலாம்!) விளக்கமே, காரணம். பார்ப்பனர் என்ற சொல்லின் ஒருமை "பார்ப்பனன்" அல்லது "பார்ப்பனள்". வந்தனன்/வந்தனள் என்ற சொற்கள் போல் இதை புரிந்துகொள்ளலாம். பார்ப்பனன்/பார்ப்பனள் என்றால் "பார்ப்பவன்/பார்ப்பவள்" என்று பொருள் கொள்ளலாம். அதாவது, கடவுளை பார்ப்பவன்/பார்ப்பவள். அதாவது கோவிலில் இருக்கும் கடவுளை பார்ப்பவன்/பார்த்துக்கொள்பவன். ஆம்! அவர்கள் கடவுளை பத்திரமாய் பார்த்துக்கொள்பவர்கள். கடவுளுக்கு என்ற மொழியாய் அவர்கள் வைத்திருந்தது "சமஸ்கிருதம்"; அந்த மொழியை அவர்கள் கடவுளிடம் உரையாட (பூசை செய்ய) உபயோகித்தனர். வேதம்/மந்திரம் போன்றவைகளையும் அவர்கள் உபயோகித்தனர். அப்படியானால், கடவுளை பார்ப்பது/பாதுகாப்பது அவர்களின் "முக்கிய குலத்தொழில்".
ஆம்! பல-நூற்றாண்டுகளுக்கு முன்பு தொழிலை/குலத்தொழிலை முன்னிறுத்தி தான் எல்லா இனங்களும் வகுக்கப்பட்டன. அப்படியிருக்க, ஏன் பார்ப்பனர்களை மட்டும் சிலர்/பலர் எதிர்க்க ஆரம்பித்தனர்? ஏன் இன்னமும் அவர்களை எதிர்க்கிறார்கள்?? - இதுதான் என்னுள் விளைந்த முதல் கேள்வி? பார்ப்பனன் என்ற சொல்லை ஒரு காலகட்டத்தில் "கடவுளை நேரடியாய் பார்ப்பவன்" அல்லது தாம்-மட்டும் தான் "கடவுளை காண(பார்க்க)முடியும்" என்பதாய் அவர்கள் வரையறுக்க ஆரம்பித்திருக்கக் கூடும். சில இனத்தவர் தரக்குறைவான/தாழ்வான தொழில் புரிபவர்கள்; அவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது. சில இனத்தவர் உள்-பிரகாரம் வரை வரலாம்; சிலர் கடவுள்(சிலை எனக்கூட இருக்கட்டும்!) அருகில் வரை வரலாம். ஆனால், நாங்கள் மட்டும் தான் கடவுளுடன் இருப்போம்; நாங்கள் தான் கடவளுக்கு தேவையானது அனைத்தும் செய்வோம். உங்கள் கோரிக்கைகளை/வேண்டுதல்களை நீங்கள் எங்களிடம்தான் சொல்லவேண்டும்.
இங்கே தான் என்னவள் குறிப்பிட்டதை சொல்ல விழைகிறேன். நான் இன்னமும் பாலகுமாரனின் "உடையார்" படிக்கவில்லை. அதில், அவர் பார்ப்பனர்கள் கோவில்/கடவுள் பராமரிப்பு மட்டுமன்றி பல துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாய் குறிப்பிட்டுள்ளாராம். அதில், மிக முக்கியமானது மருத்துவம்; தங்களுக்கு கிடைத்த ஓலைச்சுவடி மற்றும் பல ஆதாரங்களை படித்து தெரிந்து கொண்டு, மக்கள் முன் "மந்திர ஜபம்" மூலம் மருந்தளிப்பதாய் சொல்வராம். அரசவையிலும் பல முக்கிய பதவிகளில் அவர்களே தொடர்ந்து இருந்தனராம். இருந்த அனைத்து ஆவணங்களையும் அவர்கள் மட்டுமே படிக்கும் திறன் கொண்டிருந்தனராம். மற்றவருக்கு சொல்லிக்கொடுக்க மறுத்தனராம். இது போல் பல விசயங்களை பார்ப்பனர்கள் கற்றறிந்து; அதை தம் இனத்திற்கு மட்டும் சொல்லிகொடுத்து வந்தனராம். அதில், சிலர் மற்ற இனங்களுக்கும் சொல்லிக்கொடுக்க முனைய அதை பார்ப்பனர்கள் தடுக்க; பின் மற்ற இனத்தவர் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற உரிமையை பேச ஆரம்பித்தனராம்.
சரி, இப்போது என் பார்வை. இப்படியான நெருக்கடியான-கட்டுப்பாடுகள் மற்றவர்களை தம் உரிமை பற்றி பேச வைத்திருக்கும். எங்களுக்கும் அந்த மொழி/மந்திரம்/வேதம் சொல்லித் தாருங்கள்; நாங்களும், அதை பயின்று பல தொழில்களையும் செய்கிறோம். அப்போது, எங்களாலும் கடவுளிடம்(கூட) தொடர்பு கொள்ள முடியும் என்று ஆரம்பித்திருக்க வேண்டும். அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்திருக்க வேண்டும்! மனிதன் என்றால் எல்லாரும் மனிதன்; இதில் உயர்வென்ன? தாழ்வென்ன?? என்ற வாதம் வந்திருக்க வேண்டும். சமத்துவம் வேண்டும் என்ற புரட்சி வந்திருக்கவேண்டும். இதைத்தான் நமக்கு இருக்கும் சான்றுகள்: "குருகுலம்" ஒருவருக்கு மட்டுமாய் இருந்தது; அவர்களே அங்கே கோலேச்சினார்கள் போன்ற செய்திகள். எனவே, பார்ப்பனர்களுக்கும்; தரம்குறைந்த வேலைகள் செய்தோருக்குமான இடையில் இருந்தவர்கள் "பார்ப்பனர்" என்றவர்களை எதிர்க்க ஆரம்பித்திருக்க வேண்டும். எந்த சந்தேகமும் இன்றி பார்ப்பனர்கள் செய்தது சரியில்லை தான்.
அவர்களை எதிர்க்கத்தான் வேண்டும்! எப்போது? அந்த காலகட்டத்தில்! ஆம்; எதிர்த்தார்கள். அவர்களை ஒருகட்டத்ததில் முற்றிலும் அடக்கியே விட்டார்கள்/விட்டோம்! சரி! இப்போது அவர்களின் நிலை என்ன? அப்படியா இருக்கிறார்கள்?! பல கோவில்களும் இன்று அரசுடமையாக்கப்பட்டு விட்டது. கோவில்களே எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று கொண்டாடி; அனுமதிக்கமுடியாத பல கட்டுப்பாடுகளையும் செய்தவர்களுக்கு - கோவில் மீதிருந்த பிடியே போய்விட்டது. எங்கள் கிராமத்தில் (எங்கள் தெருவின் கடைசியில்) இருந்த ஒரேயொரு பார்ப்பன குடும்பம் இன்றில்லை! அவர்கள் வீட்டினுள் கூட எவரும் நுழையமுடியாது; ஆனால், எனக்கு அந்த சலுகையுண்டு. ஏனெனில், என்தாத்தா சுற்றியிருந்த பல கிராமங்களுக்கும் சேர்த்து "மணியகாரர்"! அவருடைய செல்வாக்கும்/அதிகாரமும் அவர்கள் வீட்டினுள் கூட நுழைய எனக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், இன்று அந்த "பெரிய பார்ப்பனர்" குடும்பம் இருந்ததற்கான தடமே இல்லை.
அவர்கள் இருந்த வீட்டு-மண்ணை கூட வேறொருவர் வாங்கிவிட்டார். அந்த குடும்பத்தில் எவரும் பெரிதும் படிக்கவில்லை; என்னுடன் படித்த அந்த வீட்டு பெண்ணொருவள் படும் துயரத்தை என்தாயின் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். இதேதான் மற்ற பார்ப்பனர் குடும்பங்களுக்கும் நேர்ந்தது. இன்று பல ஊர்களில் "அக்ரஹாரம்" என்ற அவர்களுக்கே சொந்தமான பகுதியில்; அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயேஉள்ளனர். மற்றவர்கள் போலவேதான் அவர்களும் படிக்கவேண்டும்; அதுவும் "பொது போட்டியில் (OC)" மோதவேண்டும். ஒருகாலத்தில் மற்றவர்களுக்கு இன்னென்ன சலுகைகள் தான் என்று வரையறுத்தவர்களுக்கு இன்று "ஒரு சலுகையும்" இல்லை! என்றோ நிகழ்ந்த ஆணாதிக்கத்தின் விளைவை நாம் அனுபவிக்கிறோம் என்று நான் அடிக்கடி சொல்வது போலவே, இதை எதையும் செய்யாத இவர்கள் அனுபவிக்கிறார்கள். இன்று அவர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது; இன்னுமேன் அவர்களை தண்டிக்க/எதிர்க்க வேண்டும்?! சிந்திப்பீர்...
சரி! உண்மையிலேயே "சாதி"யத்தை; அதாவது, அவர்களின் குலத்தொழிலை எதிப்பதுதான் இவர்கள் இலட்சியமானால்... இன்று அந்த தொழிலே (பரவலாய்)செய்யாதோர்; அந்த சாதியே இல்லையே ஐயா! அதனால் தானே, உணவகம் நடத்துகின்றனர்?! வேறெவரும் சாதிய அடிப்படையில் கடைகளுக்கு பெயரே வைக்கவில்லையா? அவ்வளவு ஏன்யா?! இருக்கிற ""சாதிக்"கட்சிகளை எல்லாம் கலைக்க போராடுங்களேன்! முடியாது.... ஏன்னா அவர்கள் பெருமபான்மையில் கைகோர்ப்பது "இந்த சாதியக்"கட்சிகள் உடன்தான்! ஓட்டு-வங்கி கலைந்துவிடுமே! அப்போ, இப்போதைக்கு "இளிச்சவாயன்" யாரு?! தொழிலும்/சாதியும் இல்லாத "பார்ப்பனன்"! சரி... அவனை (மட்டும்)எதிர்! அடப்பாவிகளா!!... இதுவாய்யா "நம்-முன்னோர்கள்" பாடுபட்டு வளர்த்த "பகுத்தறிவது"? அவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்தது: கடவுளை அடையும் மொழியும் அனைவருக்கும் பொது! எனவே, இதை பகுத்தறிந்து பாருங்கள்; என்ற "எதிர்ப்பய்யா"! அது பகுத்தறிவது! ஆனால், நீங்கள் செய்வது???...
சரி! இங்கே கடவுள்-எதிர்ப்பு எப்படி வந்திருக்கக்கூடும்?! இங்கே மறுக்கப்பட்டது எது? கடவுள்! மறுப்பவன் யார்?? பார்ப்பனன்?? ஓஹோ! அப்படியா?!... சரி! கடவுளே இல்லையடா!! அது மூட நம்பிக்கை... உன் கடவுளுக்கு சக்தி இருந்தா; இப்பவே என்னை சாகடிக்க சொல் பார்ப்போம்! என்று சீண்டியிருக்க வேண்டும். இது மணித இயல்பு! எங்கே ஒருவரின் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ/ஒடுக்கப்படுகிறதோ; அங்கே எதிராளியின் நம்பிக்கை/பலம் கேள்வியாகும்! எதிராளியின் நம்பிக்கையை/பலத்தை அறுத்தெறிய/உடைத்தெறிய முயலப்படும். மிகச்சிறந்த உதாரணம்: கணவன் மேல் கோபமா?! சரி... கணவனின் நம்பிக்கை/பலம் என்ன?!... குழந்தை; சரி! குழந்தையை எடுத்துக்கொண்டு பிறந்த வீடு சொல் - மனம் சொல்லும்! இது மனித இயல்பு!... சரி! மனைவி மேல் கோபமா?! சரி... மனைவியின் நம்பிக்கை/பலம்? அட... "கணவன்"எனும் உறவு! அப்படியா?... "வீட்டை விட்டு வெளியே போடி"என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது?! ஆம்... இதுவும் மனித இயல்பு!!
சரி அய்யா! ஒருவரின் நம்பிக்கையை/பலத்தை அழிப்பது/அறுப்பது தவறில்லையா?! - மனம் கேட்கும்! ஓஹோ... அப்படியா? "அவரு சரியில்லம்மா! கொழந்தைய கொன்னுடுவார் போலிருக்கு!" - மனம் பின்னடைந்து "புத்தி கூச்சமின்றி" பொய் சொல்லும்! மறுபக்கம்: "அவ சரியில்லப்பா! வேறெவனையோ நெனசுக்கிட்டிருக்கா போல!". "குழந்தை/கணவன்" என்ற நம்பிக்கையும்/பலமும் - "பொய்த்து போக" பொய் சொல்வது; அதை பொய்யாய் ஆக்குவது! இங்கேயும் மனிதர்கள் தானே?! சரி... அவனின் ஒரே-நம்பிக்கையான கடவுளை "பொய்" என்று 'சொல்; கடவுள் இல்லையென்று சொல்! அது வெறும் கல்லடா! என்று சொல். இன்னமும் கேட்கவில்லையா?! கடவுளை நம்புவன் மூடன் என்று சொல்; அவர்களின் நம்பிக்கை "மூட நம்பிக்கை" என்று சொல். சொல்...சொல்...சொல்... சொல்லிக்கொண்டே இரு! கணவன்-மனைவி ஒரு நாள் இல்லையென்றாலும்; ஒருநாள் சேர்ந்துவிடுவர் - இருவரும் ஒருவரின் நம்பிக்கையை மற்றவர் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிகொள்ள உடன்படுவர்.
இங்கே... இரண்டு மாறுபட்ட இனங்கள்! கணவன்-மனைவி போல் சேர்ந்து இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. என்னால் உனக்கு ஒன்றுமில்லை; உன்னாலும் எனக்கு ஒன்றுமில்லை - பிறகு நாமேன் ஒன்றுபடவேண்டும்?! சரி... என்னதான் வழி/முடிவு? ஒன்றுமேயில்லை... உன்னால் முடிந்ததை நீ செய்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்!! சரியப்பா... அவர்களால் தான் இன்றைக்கு எதுவும் செய்யவில்லையே?! செய்யும் சூழலிலும் இல்லையே??!! ஆனால்... ஒரு காலத்தில் செஞ்சீங்க இல்ல?! இது தவறில்லையா?!... இல்லையே! - இதுவும் மனித இயல்பு! கணவனோ/மனைவியோ மற்றவரை பார்த்து "ஏன் இப்படி செய்யற?"; பதில் "ஏன்?! அன்னைக்கு நீ செய்யலியா?" - இந்த உறவிற்கு பதில் இல்லாமல் போகலாம். ஆனால்... இந்த இரண்டு இனங்களுக்கு உண்டு! எப்படி?! இவர்களில் ஒருவர் தங்களை "பகுத்தறிபவர்கள்" என்று பறைசாற்றுவோர். அவரிடம்: இன்றைய காலத்தில் "பார்ப்பனர்/கடவுள்" எதிர்ப்பு தவறு என்பது தான் நாம் பகுத்தறிந்து பார்க்கும் போது தெரிகிறதே? அதனால்...
நீங்கள் விட்டுக்கொடுங்களேன்?! இல்லையில்லை... முடியாது!; ஏன்?! இவையிரண்டையும் எதிர்க்கவேண்டும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது!; யார்? எங்கள் முன்னோர்...!; சரி... எப்போது?! ரொம்ப-காலமாவே...; அட! என்னைய்யா இது?! இப்போது தான் அம்மாதிரி எதுவும் இல்லையே; இன்னுமேன் எதிர்ப்பு?!... எங்களுக்கு தெரியாது! சொல்லப்பட்டு இருக்கிறது... செய்வோம்!; அடப்பாவிகளா... "அடி மடியிலேயே" கைய்ய வைக்கறீங்களே?! சூழலுக்கு/நிகழ்வுகளுக்கு ஏற்ப எல்லாவற்றையும் பகுத்தறியவேண்டும் என்பது தானே "மாபெரும் முன்னோர்களின்" எண்ணம்?; இருக்கலாம்... எங்களுக்கு இது மட்டும்தான் தெரியும். அப்போ?! பகுத்தறிவுன்னா என்ன? அதான் சொன்னமே... இவை இரண்டையும் "கண்டிப்பாய்" எதிர்ப்பது! அய்யகோ... இவர்களை என்ன செய்வது? பகுத்தறிவுக்கும் "இவ்விரண்டு எதிர்ப்புகளுக்கும்" உள்ள தொடர்பு கூட தெரியவில்லையே!!... நான் இப்போது; இவர்களுக்கு என்ன சொல்லவேண்டும்?? இதுதான்...

மற்றவர்களின் மூட-நம்பிக்கைகளை எதிர்ப்பது/அழிப்பது இருக்கட்டும்!
உங்களுள் "அதிபயங்கரமான" மூட-நம்பிக்கைகள் "கோவில்(???!!!)" கொண்டுள்ளன!!
அதை முதலில் கவனியுங்கள்!!!
அவர்கள் இருந்த வீட்டு-மண்ணை கூட வேறொருவர் வாங்கிவிட்டார். அந்த குடும்பத்தில் எவரும் பெரிதும் படிக்கவில்லை; என்னுடன் படித்த அந்த வீட்டு பெண்ணொருவள் படும் துயரத்தை என்தாயின் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். இதேதான் மற்ற பார்ப்பனர் குடும்பங்களுக்கும் நேர்ந்தது. இன்று பல ஊர்களில் "அக்ரஹாரம்" என்ற அவர்களுக்கே சொந்தமான பகுதியில்; அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயேஉள்ளனர். மற்றவர்கள் போலவேதான் அவர்களும் படிக்கவேண்டும்; அதுவும் "பொது போட்டியில் (OC)" மோதவேண்டும். ஒருகாலத்தில் மற்றவர்களுக்கு இன்னென்ன சலுகைகள் தான் என்று வரையறுத்தவர்களுக்கு இன்று "ஒரு சலுகையும்" இல்லை! என்றோ நிகழ்ந்த ஆணாதிக்கத்தின் விளைவை நாம் அனுபவிக்கிறோம் என்று நான் அடிக்கடி சொல்வது போலவே, இதை எதையும் செய்யாத இவர்கள் அனுபவிக்கிறார்கள். இன்று அவர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது; இன்னுமேன் அவர்களை தண்டிக்க/எதிர்க்க வேண்டும்?! சிந்திப்பீர்..
பதிலளிநீக்குஅருமை, புரிதலுக்கு நன்றி.
நீக்குஇங்கே... இரண்டு மாறுபட்ட இனங்கள்! கணவன்-மனைவி போல் சேர்ந்து இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. என்னால் உனக்கு ஒன்றுமில்லை; உன்னாலும் எனக்கு ஒன்றுமில்லை - பிறகு நாமேன் ஒன்றுபடவேண்டும்?! சரி... என்னதான் வழி/முடிவு? ஒன்றுமேயில்லை... உன்னால் முடிந்ததை நீ செய்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்!! சரியப்பா... அவர்களால் தான் இன்றைக்கு எதுவும் செய்யவில்லையே?! செய்யும் சூழலிலும் இல்லையே??!! ஆனால்... ஒரு காலத்தில் செஞ்சீங்க இல்ல?! இது தவறில்லையா?!... இல்லையே! - இதுவும் மனித இயல்பு! கணவனோ/மனைவியோ மற்றவரை பார்த்து "ஏன் இப்படி செய்யற?"; பதில் "ஏன்?! அன்னைக்கு நீ செய்யலியா?" - இந்த உறவிற்கு பதில் இல்லாமல் போகலாம். ஆனால்... இந்த இரண்டு இனங்களுக்கு உண்டு! எப்படி?! இவர்களில் ஒருவர் தங்களை "பகுத்தறிபவர்கள்" என்று பறைசாற்றுவோர். அவரிடம்: இன்றைய காலத்தில் "பார்ப்பனர்/கடவுள்" எதிர்ப்பு தவறு என்பது தான் நாம் பகுத்தறிந்து பார்க்கும் போது தெரிகிறதே? அதனால்...
பதிலளிநீக்குநீங்கள் விட்டுக்கொடுங்களேன்?! இல்லையில்லை... முடியாது!; ஏன்?! இவையிரண்டையும் எதிர்க்கவேண்டும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது!; யார்? எங்கள் முன்னோர்...!; சரி... எப்போது?! ரொம்ப-காலமாவே...; அட! என்னைய்யா இது?! இப்போது தான் அம்மாதிரி எதுவும் இல்லையே; இன்னுமேன் எதிர்ப்பு?!... எங்களுக்கு தெரியாது! சொல்லப்பட்டு இருக்கிறது... செய்வோம்!; அடப்பாவிகளா... "அடி மடியிலேயே" கைய்ய வைக்கறீங்களே?! சூழலுக்கு/நிகழ்வுகளுக்கு ஏற்ப எல்லாவற்றையும் பகுத்தறியவேண்டும் என்பது தானே "மாபெரும் முன்னோர்களின்" எண்ணம்?; இருக்கலாம்... எங்களுக்கு இது மட்டும்தான் தெரியும். அப்போ?! பகுத்தறிவுன்னா என்ன? அதான் சொன்னமே... இவை இரண்டையும் "கண்டிப்பாய்" எதிர்ப்பது! அய்யகோ... இவர்களை என்ன செய்வது? பகுத்தறிவுக்கும் "இவ்விரண்டு எதிர்ப்புகளுக்கும்" உள்ள தொடர்பு கூட தெரியவில்லையே!!... நான்
இப்போது; இவர்களுக்கு என்ன சொல்லவேண்டும்?? இதுதான்..
புரிதலுக்கு நன்றிகள் பல, பாலாஜி.
நீக்கு