பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053: சுற்றந்தழால்
0521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும்; அவரின் முடிந்த
வாழ்வியலைப் பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
வியக்கும் இயல்பு, மக்களிடம் இருக்கும்.
சுற்றத்தார் கண்ணே உள
விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும்; அவரின் முடிந்த
வாழ்வியலைப் பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும்; அவரின் சிறந்த ஆட்சியை நினைவுகூர்ந்து வியக்கும் இயல்பு, மக்களிடம் இருக்கும்.
0522. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்
விழியப்பன் விளக்கம்: குறையாத அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைத்தால்; அது,
குறையாத வளர்ச்சியுடைய செல்வங்கள் பலவற்றையும் அளிக்கும்.
குறையற்ற ஒழுக்கமுடைய பண்புகள் பலவற்றையும் கொண்டிருக்கும்.
ஆக்கம் பலவும் தரும்
குறையாத வளர்ச்சியுடைய செல்வங்கள் பலவற்றையும் அளிக்கும்.
(அது போல்...)
மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்திற்கு கிடைத்தால்; அக்குடும்பம், குறையற்ற ஒழுக்கமுடைய பண்புகள் பலவற்றையும் கொண்டிருக்கும்.
0523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
விழியப்பன் விளக்கம்: உறவுகள் மற்றும் நட்புகளுடன் இணைந்து வாழாதோரின்
வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.
கோடின்றி நீர்நிறைந் தற்று
விழியப்பன் விளக்கம்: உறவுகள் மற்றும் நட்புகளுடன் இணைந்து வாழாதோரின்
வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.
(அது போல்...)
எண்ணம் மற்றும் செயலை ஒப்பிட்டு ஆராயாதோரின் செயல்பாடு; உயிர்ப்பு இல்லாத
நிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.
0524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
விழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின்
உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வது ஆகும்.
பொதுநலத்தைச் சேர்ப்பது ஆகும்.
பெற்றத்தால் பெற்ற பயன்
விழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின்
உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வது ஆகும்.
(அது போல்...)
ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிரந்தரமான புகழ்; அவரின் எண்ணம் மற்றும் செயலில், பொதுநலத்தைச் சேர்ப்பது ஆகும்.
0525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது மற்றும் இன்மொழியில் பேசுவது -
இரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
சுற்றத்தால் சுற்றப் படும்
விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது மற்றும் இன்மொழியில் பேசுவது -
இரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
நல்லதைச் செய்வது மற்றும் எளிமையாய் இருப்பது - இரண்டையும் பின்பற்றினால்; சிறந்த
தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.
0526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்
விழியப்பன் விளக்கம்: அதீதமாய் கொடையளித்தும்/சினம் இல்லாமலும் இருப்போரை விட;
பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
மருங்குடையார் மாநிலத்து இல்
விழியப்பன் விளக்கம்: அதீதமாய் கொடையளித்தும்/சினம் இல்லாமலும் இருப்போரை விட;
பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
(அது போல்...)
ஓயாமல் உழைத்தும்/சந்தேகம் இல்லாமலும் இருப்போரை விட; அதிக நிம்மதியுடையோர்,
பரந்த சமுதாயத்தில் வேறொருவர் இல்லை.
0527. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
விழியப்பன் விளக்கம்: காக்கையைப் போல், மறைக்காமல் சுற்றத்தை அழைத்துக்
கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும்; குணம் உள்ளவருக்கே, செல்வம் உள்ளதாகும்.
அன்னநீ ரார்க்கே உள
விழியப்பன் விளக்கம்: காக்கையைப் போல், மறைக்காமல் சுற்றத்தை அழைத்துக்
கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும்; குணம் உள்ளவருக்கே, செல்வம் உள்ளதாகும்.
(அது போல்...)
ஆசிரியரைப் போல், மறுக்காமல் மாணாக்கர்களைச் சேகரித்துக் கற்றத்தைப் கற்பித்து
மகிழும்; முனைப்பு உடையவருக்கே, ஞானம் உள்ளதாகும்.
0528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் பொதுவாய் பார்க்காமல், ஒவ்வொருவரின்
தனித்திறனையும் மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பார்த்து, பலரும் மன்னனைச்
சூழ்ந்து வாழ்வர்.
அதுநோக்கி வாழ்வார் பலர்
விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் பொதுவாய் பார்க்காமல், ஒவ்வொருவரின்
தனித்திறனையும் மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பார்த்து, பலரும் மன்னனைச்
சூழ்ந்து வாழ்வர்.
(அது போல்...)
அனைவரையும் பணக்காரராய் பாவிக்காமல், ஒவ்வொருவரின் வசதியையும் கல்வி-
நிறுவனங்கள் உணர்ந்தால்; அதைப் பயன்படுத்தி, பலரும் அந்நிறுவனங்களில் படித்து
முன்னேறுவர்.
0529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்;
பிரிந்து சென்றதற்கான காரணம் சரியற்றதென உணரும்போது, மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன்
விளைவு பாதகமானதென உணர்ந்தால், மீண்டு(ம்) இணைவர்.
0530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
விழியப்பன் விளக்கம்: சுற்றத்திலிருந்து, காரணமின்றி பிரிந்து பின் காரணத்தோடு
வருவோரை; அரசாள்பவர், வேண்டியவற்றைச் செய்துப் பின்னர் பொறுமையாய் ஆராய
வேண்டும்.
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
விழியப்பன் விளக்கம்: சுற்றத்திலிருந்து, காரணமின்றி பிரிந்து பின் காரணத்தோடு
வருவோரை; அரசாள்பவர், வேண்டியவற்றைச் செய்துப் பின்னர் பொறுமையாய் ஆராய
வேண்டும்.
(அது போல்...)
குடும்பத்திலிருந்து, பணத்துக்காக விலகிப் பின் பணத்துக்காக வருவோரை; குடும்பத்தினர்,
மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பின்னர் முழுமையாய் ஆராயவேண்டும்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக