பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை
0601. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்
விழியப்பன் விளக்கம்: சோம்பல் என்னும் தூசுத் துகள், தொடர்ந்து சேர்ந்தால்; குடும்பம்
என்னும் அணையாத விளக்கு, ஒளியை இழந்து கெட்டழியும்!
மாசுஊர மாய்ந்து கெடும்
விழியப்பன் விளக்கம்: சோம்பல் என்னும் தூசுத் துகள், தொடர்ந்து சேர்ந்தால்; குடும்பம்
என்னும் அணையாத விளக்கு, ஒளியை இழந்து கெட்டழியும்!
(அது போல்...)
குழப்பம் என்னும் அறியாமைக் காரணி, தொடர்ந்து பெருகினால்; கல்வி என்னும் அழியாப்
புகழ், புரிதலை இழந்து தடம்புரளும்!
0602. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
விழியப்பன் விளக்கம்: தம் குடும்பத்தை, தலைசிறந்த குடும்பமாய் உயர்த்தும் வைராக்கியம்
உடையவர்கள்; சோம்பலை, சோம்பலடையச் செய்யும் ஊக்கமுடன் வாழவேண்டும்!
குடியாக வேண்டு பவர்
விழியப்பன் விளக்கம்: தம் குடும்பத்தை, தலைசிறந்த குடும்பமாய் உயர்த்தும் வைராக்கியம்
உடையவர்கள்; சோம்பலை, சோம்பலடையச் செய்யும் ஊக்கமுடன் வாழவேண்டும்!
(அது போல்...)
தம் சரித்திரத்தை, உலகளாவிய சரித்திரமாய் எழுதிட விரும்பும் தலைவர்கள்;
தீவிரவாதத்தை, தீவிரவாதத்தால் ஒழிக்கும் உறுதியுடன் உழைக்கவேண்டும்!
0603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து
விழியப்பன் விளக்கம்: சோம்பலைத் தன்னுடன் இணைத்து வாழும், அறியாமை
கொண்டோர் பிறந்த குடும்பம்; அவரையும் முந்திக்கொண்டு அழிந்துவிடும்.
கட்சி; அவர்களுக்கு முன்பாகவே சிதைந்துவிடும்.
குடிமடியும் தன்னினும் முந்து
விழியப்பன் விளக்கம்: சோம்பலைத் தன்னுடன் இணைத்து வாழும், அறியாமை
கொண்டோர் பிறந்த குடும்பம்; அவரையும் முந்திக்கொண்டு அழிந்துவிடும்.
(அது போல்...)
ஊழலைத் தம்முள்ளே புதைத்து வலம்வரும், தீயொழுக்கம் உடையோரைக் கொண்டகட்சி; அவர்களுக்கு முன்பாகவே சிதைந்துவிடும்.
0604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இல்லாமல், சோம்பலில் மூழ்கினால்;
அவர்களின் குடும்பம் அழிந்து, குற்றச்செயல்கள் அதிகரிக்கும்
தீயசிந்தனைகள் பெருகும்.
மாண்ட உஞற்றி லவர்க்கு
விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இல்லாமல், சோம்பலில் மூழ்கினால்;
அவர்களின் குடும்பம் அழிந்து, குற்றச்செயல்கள் அதிகரிக்கும்
(அது போல்...)
புனிதமான பொதுநலம் இல்லாமல், சுயநலனில் மூழ்கினால்; அவர்களின் ஆட்சி வீழ்ந்து,தீயசிந்தனைகள் பெருகும்.
0605. நெடுநீர் மறவி மடிதுயி நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
விழியப்பன் விளக்கம்: தாமதம்/மறதி/சோம்பல்/தூக்கம் - இவை நான்கும்; வாழ்க்கையை
அழிக்கும் இயல்புடையோர், விரும்பும் மரக்கலங்களாகும்.
குணமுடையோர், இரசிக்கும் அணிகலன்களாகும்.
கெடுநீரார் காமக் கலன்
விழியப்பன் விளக்கம்: தாமதம்/மறதி/சோம்பல்/தூக்கம் - இவை நான்கும்; வாழ்க்கையை
அழிக்கும் இயல்புடையோர், விரும்பும் மரக்கலங்களாகும்.
(அது போல்...)
பொய்/வஞ்சம்/பேராசை/புறங்கூறல் - இவை நான்கும்; குடும்பத்தைச் சிதைக்கும்குணமுடையோர், இரசிக்கும் அணிகலன்களாகும்.
0606. படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
விழியப்பன் விளக்கம்: நாட்டை ஆளும் ஆட்சியர்களின், அன்பைப் பெற்றவர் எனினும்;
சோம்பலை உடையவர்கள், ஆகச்சிறந்த நன்மைகளை அடைவது சாத்தியமில்லை.
பிள்ளைகள், தலைசிறந்த செயல்களைச் செய்வது அரிதானது.
மாண்பயன் எய்தல் அரிது
விழியப்பன் விளக்கம்: நாட்டை ஆளும் ஆட்சியர்களின், அன்பைப் பெற்றவர் எனினும்;
சோம்பலை உடையவர்கள், ஆகச்சிறந்த நன்மைகளை அடைவது சாத்தியமில்லை.
(அது போல்...)
வருமானம் குவியும் தொழிலதிபர்களின், பிள்ளைகளாய் பிறந்தவர் எனினும்; சுயமற்றபிள்ளைகள், தலைசிறந்த செயல்களைச் செய்வது அரிதானது.
0607. இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இன்றி, சோம்பலை உடையோர்;
இடித்து உரைக்கும், இகழ்ச்சியான சொற்களுக்கு ஆட்படுவர்.
தரமற்ற விமர்சனத்துக்கு உள்ளவர்.
மாண்ட உஞற்றி லவர்
விழியப்பன் விளக்கம்: வலிமையான வைராக்கியம் இன்றி, சோம்பலை உடையோர்;
இடித்து உரைக்கும், இகழ்ச்சியான சொற்களுக்கு ஆட்படுவர்.
(அது போல்...)
உறுதியான அரவணைப்பு இன்றி, உறவை மேற்கொள்வோர்; குடும்பத்தைப் பழிக்கும்,தரமற்ற விமர்சனத்துக்கு உள்ளவர்.
0608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்
விழியப்பன் விளக்கம்: குடிமக்களிடம், சோம்பல் எனும் அழிவுக்காரணி சேர்ந்தால்;
அவர்களின் பகைவர்களுக்கு, அடிமையாய் இருக்குமாறு செய்துவிடும்.
தீக்குணங்களுக்கு, சேவகராய் இருக்குமாறு செய்துவிடும்.
அடிமை புகுத்தி விடும்
விழியப்பன் விளக்கம்: குடிமக்களிடம், சோம்பல் எனும் அழிவுக்காரணி சேர்ந்தால்;
அவர்களின் பகைவர்களுக்கு, அடிமையாய் இருக்குமாறு செய்துவிடும்.
(அது போல்...)
குடும்பத்தாரிடம், ஆதிக்கம் எனும் குற்றக்காரணி சேர்ந்தால்; அவர்களின்தீக்குணங்களுக்கு, சேவகராய் இருக்குமாறு செய்துவிடும்.
0609. குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
விழியப்பன் விளக்கம்: சோம்பலின் ஆளுமையை, மாற்றி முறியடித்தால்; ஆளுமையுள்ள
குடிமக்களின் மனதில், குடிகொண்ட குற்ற உணர்வுகள் கெட்டழியும்.
சிந்தனையில், கலந்திட்ட துரோகச் செயல்கள் மறைந்துவிடும்.
மடியாண்மை மாற்றக் கெடும்
விழியப்பன் விளக்கம்: சோம்பலின் ஆளுமையை, மாற்றி முறியடித்தால்; ஆளுமையுள்ள
குடிமக்களின் மனதில், குடிகொண்ட குற்ற உணர்வுகள் கெட்டழியும்.
(அது போல்...)
பகையின் ஆணிவேரை, அறுத்து அழித்துவிட்டால்; வம்சத்திலுள்ள உறவுகளின்சிந்தனையில், கலந்திட்ட துரோகச் செயல்கள் மறைந்துவிடும்.
0610. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
விழியப்பன் விளக்கம்: உலகத்தைத் தன் பாதத்தால் அளந்தவன், கடந்த எல்லா
பரப்பளவுகளையும்; சோம்பல் இல்லாத அரசாள்பவர், ஒருசேர வாகைசூடுவர்.
இல்லாத பிள்ளைகள், ஒன்றிணைய அடைவர்.
தாஅயது எல்லாம் ஒருங்கு
விழியப்பன் விளக்கம்: உலகத்தைத் தன் பாதத்தால் அளந்தவன், கடந்த எல்லா
பரப்பளவுகளையும்; சோம்பல் இல்லாத அரசாள்பவர், ஒருசேர வாகைசூடுவர்.
(அது போல்...)
வம்சத்தை தம் உழைப்பால் உயர்த்தியோர், அடைந்த எல்லா சிறப்புகளையும்; சுயநலம்இல்லாத பிள்ளைகள், ஒன்றிணைய அடைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக