ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2018

குறள் எண்: 1120 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1120}

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

விழியப்பன் விளக்கம்: அனிச்சம் பூ/அன்னப்பறவையின் இறகு - இவையிரண்டும் கூட, என்னவளின் பாதங்களுக்கு; நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள, சிறிய முட்களுக்கு நிகரானவை ஆகும்!
(அது போல்...)
ஒருவேளை உணவு/ஓரிரவு தூக்கம் - இவையிரண்டும் கூட, ஆதரவற்றோரின் வாழ்வியலுக்கு; இமய மலையின் மீதேறி, உச்சத்தைத் தொடுவதற்கு இணையானவை ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக