திங்கள், ஆகஸ்ட் 27, 2018

குறள் எண்: 1121 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1121}

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

விழியப்பன் விளக்கம்: பணிவானச் சொற்களைப் பேசும், என்னவளின் தூய்மையானப் பற்களுக்கு இடையே ஊறும் உமிழ்நீர்; பாலுடன் தேனும் கலந்ததற்கு இணையாகும்!
(அது போல்...)
கடினமானப் பணிகளைச் செய்யும், என்னப்பனின் அகன்ற மார்புகளுக்கு இடையே வழியும் வியர்வை; அன்புடன் அருளும் சேர்ந்ததற்கு ஒப்பாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக