வியாழன், ஆகஸ்ட் 30, 2018

குறள் எண்: 1124 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1124}

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

விழியப்பன் விளக்கம்: தேர்ந்த வாழ்வியல் அணிகலனாகிய என்னவள்; என்னுடன் சேரும்போது, உயிருடன் வாழ்வதற்கு நிகராவாள்! என்னை விட்டு நீங்கும்போது, இறப்பதற்கு நிகராவாள்!
(அது போல்...)
சிறந்த அரசியல் காரணியான இனவுணர்வு; நல்லாரிடம் சேரும்போது, மக்களாட்சியை வளர்க்கும் உரமாகிறது! நல்லாரை விட்டு நீங்கும்போது, அதையழிக்கும் நஞ்சாகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக