{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1173}
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
இதுநகத் தக்க துடைத்து
விழியப்பன் விளக்கம்: அன்று, கண்டதும் காதல் கொண்ட கண்களே; இன்று, பிரிந்ததும் விரைவாய் அழுகின்றன! இம்முரண்பாடு, நகைக்கத் தக்க தன்மை உடையது!
(அது போல்...)
அன்று, கண்டதும் கும்பிட்டு ஓட்டுகேட்ட கைகளே; இன்று, வென்றதும் துப்பாக்கியால் கொல்கின்றன! இம்முரண்பாடு, அருவருக்கத் தக்க தன்மை கொண்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக