திங்கள், செப்டம்பர் 10, 2018

குறள் எண்: 1135 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1135}

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

விழியப்பன் விளக்கம்: என்னில் பாதியாய் தொடர்ந்த, குறுவளையல்கள் அணிந்த என்னவளே; பனைமட்டைக் குதிரை ஏறும் நிலையுடன், மாலையில் அனுபவிக்கும் துயரையும் அளித்தாள்!
(அது போல்...)
எம்மின் பிரதிநிதிகளாக வந்த, சிறுபதவிகள் வகித்த அரசியலாரே; பணவீக்க விகிதம் உயரும் நிலையுடன், கொடுங்கோலில் வாழும் சூழலையும் அளித்தனர்!

ஞாயிறு, செப்டம்பர் 09, 2018

குறள் எண்: 1134 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1134}

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

விழியப்பன் விளக்கம்: காமம் எனும் கடுமையான காட்டாறு; நாணம் மற்றும் சிறந்த ஆண்மை எனும் இரண்டு படகுகளையும், அதன் போக்கில் செலுத்தும் வல்லமை உடையது!
(அது போல்...)
கள்ளக்காதல் எனும் தீவிரமான புயல்காற்று; குடும்பம் மற்றும் ஈன்ற பிள்ளைகள் எனும் இரண்டு ஆலமரங்களையும், அதன் திசையில் பிடுங்கியெறியும் தன்மை கொண்டது!

சனி, செப்டம்பர் 08, 2018

குறள் எண்: 1133 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1133}

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

விழியப்பன் விளக்கம்: முன்பு, நாணமுடன் சிறந்த ஆண்மையும் உடையேன்! இன்று, காதலரைப் பிரிந்த காமமுற்றார் ஏறும்; பனைமட்டைக் குதிரையைக் கொண்டிருக்கிறேன்!
(அது போல்...)
அன்று, அரசியலுடன் சிறந்த மக்களாட்சியும் அளித்தனர்! இன்று, மனிதம் மறந்த தீவிரவாதிகள் போல்; காவல்படைத் துப்பாக்கியால் சுடுகின்றனர்!

வெள்ளி, செப்டம்பர் 07, 2018

குறள் எண்: 1132 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1132}

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் விளையும் காம வலியை, தாங்கமுடியாத உடம்பும் உயிரும்; நாணத்தை விலக்கி வைத்துவிட்டு, காமமுற்றார் போல பனைமட்டைக் குதிரையில் ஏறும்!
(அது போல்...)
பொருள்தேடலில் நிகழும் வெளிநாட்டு வாழ்வை, தொடரமுடியாத எண்ணமும் செயலும்; இயல்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பித்துப்பிடித்தார் போல கற்பனை உலகில் உலவும்!

வியாழன், செப்டம்பர் 06, 2018

குறள் எண்: 1131 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1131}

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி

விழியப்பன் விளக்கம்: காதல் பெருகியதால், காமம் மிகுந்து வருந்துவோர்க்கு; பனை மட்டையில் செய்த குதிரையில் ஏறுவதை (மடல் ஏறுதல்) தவிர, அதிக பாதுகாப்பான வலிமை வேறில்லை!
(அது போல்...)
ஊழல் பெருகியதால், வாழ்வு இழந்து தவிப்போர்க்கு; மக்கள் ஆட்சியில் நிகழும் அரசியல் மாற்றம் தவிர, சிறந்த வாழ்வியல் காரணி வேறில்லை!

புதன், செப்டம்பர் 05, 2018

அதிகாரம் 113: காதற்சிறப்பு உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்

1121.  பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
           வாலெயிறு ஊறிய நீர்

           விழியப்பன் விளக்கம்: பணிவானச் சொற்களைப் பேசும், என்னவளின் தூய்மையானப் 
           பற்களுக்கு இடையே ஊறும் உமிழ்நீர்; பாலுடன் தேனும் கலந்ததற்கு இணையாகும்!
(அது போல்...)
           கடினமானப் பணிகளைச் செய்யும், என்னப்பனின் அகன்ற மார்புகளுக்கு இடையே வழியும் 
           வியர்வை; அன்புடன் அருளும் சேர்ந்ததற்கு ஒப்பாகும்!
      
1122.  உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
           மடந்தையொடு எம்மிடை நட்பு

           விழியப்பன் விளக்கம்: உடம்புக்கும்/உயிர்க்கும் இடையேயான உறவு எத்தகையதோ; 
           அதற்கு இணையானதே, எனக்கும்/என்னவளுக்கும் இடையில் இருக்கும் நட்புறவும்!
(அது போல்...)
           நாட்டுக்கும்/மொழிக்கும் இடையேயான உறவு எத்தகையதோ; அதற்கு இணையானதே, 
           எனக்கும்/என்னப்பனுக்கும் இடையில் இருக்கும் அன்புறவும்!
           
1123.  கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
           திருநுதற்கு இல்லை இடம்

           விழியப்பன் விளக்கம்: கருவிழியில் உள்ள கண்மணியே! நான் விரும்பும் அழகு 
           நெற்றியுடைய என்னவளுக்கு, விழியில் பாதுகாப்பான இடமில்லை என்பதால்; நீ 
           வெளியேறுவாயாக!
(அது போல்...)
           என்னகத்தில் இருக்கும் சோம்பலே! நான் சிந்திக்கும் சமூகம் சார்ந்த புரிதல்களை, 
           பதிவுகளாய் பகிர்ந்திட முடியவில்ல என்பதால்; நீ அழிந்தொழிவாயாக!  

1124.  வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
           அதற்கன்னள் நீங்கும் இடத்து

           விழியப்பன் விளக்கம்: தேர்ந்த வாழ்வியல் அணிகலனாகிய என்னவள்; என்னுடன் 
           சேரும்போது, உயிருடன் வாழ்வதற்கு நிகராவாள்! என்னை விட்டு நீங்கும்போது, 
           இறப்பதற்கு நிகராவாள்!
(அது போல்...)
           சிறந்த அரசியல் காரணியான இனவுணர்வு; நல்லாரிடம் சேரும்போது, மக்களாட்சியை 
           வளர்க்கும் உரமாகிறது! நல்லாரை விட்டு நீங்கும்போது, அதையழிக்கும் நஞ்சாகிறது!

1125.  உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
           ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

           விழியப்பன் விளக்கம்: கருணையொளி/போர்க்குணம் இரண்டும் வெளிப்படும் 
           விழிகளுயுடைய என்னவளை; மறந்தால் தானே, நான் மீண்டும் நினைப்பன்? அப்படி 
           மறப்பதை, நானறியேன்!
(அது போல்...)
           ஞானப்பசி/தேடல்குணம் இரண்டையும் வளர்க்கும் திறமுடைய என்குருவை; விலகினால் 
           தானே, நான் மீண்டும் நெருங்க? அப்படி விலகுவதை, நானறியேன்!

1126.  கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
           நுண்ணியர்எம் காத லவர்

           விழியப்பன் விளக்கம்: என்னில் கலந்திட்ட காதலர், என் கண்ணை விட்டு நீங்கார்; நான் 
           கண்ணை இமைத்தாலும், மனம் வருந்தார்! அவர் அத்தகைய தன்மையானவர்!
(அது போல்...)
           என்னை விதைத்திட்ட பெற்றோர், என் வாழ்வை விட்டு நீங்கார்; நான் அவர்களை 
           மறந்தாலும், சாபம் விடார்! அவர் அவ்வளவு அன்பானவர்!

1127.  கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
           எழுதேம் கரப்பாக்கு அறிந்து

           விழியப்பன் விளக்கம்: காதலர் அவர், என் கண்ணில் இருக்கிறார்! ஆதலால், கண்ணிற்கு 
           அழகு ஒப்பனை செய்தால்; கண்ணிலிருந்து மறைவார் என்பதறிந்து, அதைச் செய்யேன்!
(அது போல்...)
           குரு அவர், என் மனதில் இருக்கிறார்! ஆதலால், மனதைச் சிதைக்கும் செயல்களைச் 
           செய்தால்; மனதிலிருந்து மறைவார் எனவுணர்ந்து, அவற்றைச் செய்யேன்!

1128.  நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
           அஞ்சுதும் வேபாக் கறிந்து

           விழியப்பன் விளக்கம்: என் காதலர், நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார்! ஆதலால், சூடான 
           உணவுகளை உண்டால்; அவர் வெப்பமடைவார் எனவறிந்து, அவற்றை உண்ண 
           அஞ்சுகிறேன்!
(அது போல்...)
           என் குரு, என்பதிவுகளில் வெளிப்படுகிறார்! ஆதலால், பொய்யான விடயங்களை 
           எழுதினால்; அவர் கவலைப்படுவார் எனவுணர்ந்து, அவற்றை எழுத மறுக்கிறேன்!

1129.  இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
           ஏதிலர் என்னும்இவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: கண்ணிலுள்ள காதலர், இமைத்தால் மறைவார் என அறிவேன்! 
           எனினும், இமைக்க மறுத்தால்; அன்பற்றவர் என ஊரார் தூற்றுவர் என்பதால்; அவ்வப்போது 
           இமைக்கிறேன்!
(அது போல்...)
           நட்பிலுள்ள நண்பர்கள், விமர்சித்தால் விலகுவர் என அறிவேன்! எனினும், விமர்சிக்க 
           மறுத்தால்; பொறுப்பற்றவர் என மனசாட்சி தண்டிக்கும் என்பதால்; அவ்வப்போது 
           விமர்சிக்கிறேன்!

1130.  உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
           ஏதிலர் என்னும்இவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: என்னவர், என் மனதில் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்! ஆனால், 
           உடலால் மட்டும் பிரிந்திருப்பதைப் பார்க்கும் இவ்வூரார்; என்னை "அன்பற்றவர்" என 
           இகழ்வர்!
(அது போல்...)
           என்பெற்றோர், என் சுயத்தில் எஞ்ஞான்றும் கலந்திருக்கின்றனர்! ஆனால், குடிசையால் 
           மட்டும் பிரிந்திருப்பதை அறியும் என்னூரார்; என்னை “சுயநலவாதி” என சாடுவர்!

குறள் எண்: 1130 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1130}

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்

விழியப்பன் விளக்கம்: என்னவர், என் மனதில் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்! ஆனால், உடலால் மட்டும் பிரிந்திருப்பதைப் பார்க்கும் இவ்வூரார்; என்னை "அன்பற்றவர்" என இகழ்வர்!
(அது போல்...)
என்பெற்றோர், என் சுயத்தில் எஞ்ஞான்றும் கலந்திருக்கின்றனர்! ஆனால், குடிசையால் மட்டும்  பிரிந்திருப்பதை அறியும் என்னூரார்; என்னை “சுயநலவாதி” என சாடுவர்!

செவ்வாய், செப்டம்பர் 04, 2018

குறள் எண்: 1129 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1129}

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்

விழியப்பன் விளக்கம்: கண்ணிலுள்ள காதலர், இமைத்தால் மறைவார் என அறிவேன்! எனினும், இமைக்க மறுத்தால்; அன்பற்றவர் என ஊரார் தூற்றுவர் என்பதால்; அவ்வப்போது இமைக்கிறேன்!
(அது போல்...)
நட்பிலுள்ள நண்பர்கள், விமர்சித்தால் விலகுவர் என அறிவேன்! எனினும், விமர்சிக்க மறுத்தால்; பொறுப்பற்றவர் என மனசாட்சி தண்டிக்கும் என்பதால்; அவ்வப்போது விமர்சிக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 03, 2018

குறள் எண்: 1128 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1128}

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து

விழியப்பன் விளக்கம்: என் காதலர், நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார்! ஆதலால், சூடான உணவுகளை உண்டால்; அவர் வெப்பமடைவார் எனவறிந்து, அவற்றை உண்ண அஞ்சுகிறேன்!
(அது போல்...)
என் குரு, என்பதிவுகளில் வெளிப்படுகிறார்! ஆதலால், பொய்யான விடயங்களை எழுதினால்; அவர் கவலைப்படுவார் எனவுணர்ந்து, அவற்றை எழுத மறுக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

குறள் எண்: 1127 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1127}

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

விழியப்பன் விளக்கம்: காதலர் அவர், என் கண்ணில் இருக்கிறார்! ஆதலால், கண்ணிற்கு அழகு ஒப்பனை செய்தால்; கண்ணிலிருந்து மறைவார் என்பதறிந்து, அதைச் செய்யேன்!
(அது போல்...)
குரு அவர், என் மனதில் இருக்கிறார்! ஆதலால், மனதைச் சிதைக்கும் செயல்களைச் செய்தால்; மனதிலிருந்து மறைவார் எனவுணர்ந்து, அவற்றைச் செய்யேன்!

சனி, செப்டம்பர் 01, 2018

குறள் எண்: 1126 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1126}

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்

விழியப்பன் விளக்கம்: என்னில் கலந்திட்ட காதலர், என் கண்ணை விட்டு நீங்கார்; நான் கண்ணை இமைத்தாலும், மனம் வருந்தார்! அவர் அத்தகைய தன்மையானவர்!
(அது போல்...)
என்னை விதைத்திட்ட பெற்றோர், என் வாழ்வை விட்டு நீங்கார்; நான் அவர்களை மறந்தாலும், சாபம் விடார்! அவர் அவ்வளவு அன்பானவர்!