{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1133}
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
காமுற்றார் ஏறும் மடல்
விழியப்பன் விளக்கம்: முன்பு, நாணமுடன் சிறந்த ஆண்மையும் உடையேன்! இன்று, காதலரைப் பிரிந்த காமமுற்றார் ஏறும்; பனைமட்டைக் குதிரையைக் கொண்டிருக்கிறேன்!
(அது போல்...)
அன்று, அரசியலுடன் சிறந்த மக்களாட்சியும் அளித்தனர்! இன்று, மனிதம் மறந்த தீவிரவாதிகள் போல்; காவல்படைத் துப்பாக்கியால் சுடுகின்றனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக