இதை படிப்போரில் எத்தனை பேர் கீழ்வரும் இரண்டையும் உணர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை! 1. நாம் முதன்-முதலில் பார்த்த ஓர் இடம் (பொருள்/நபர்) நமக்கு நன்றாய் நினைவில்-பதியும்! நாம் முதலில், பார்த்தபோது நம்-மனதில் பதிந்த எண்ணம் அப்படியே இருக்கும் - அங்கு பார்த்த மரம், அந்த தெரு, அதன் புதிய-தன்மை - இப்படி பலவும்! நாளடைவில், நாம் அந்த இடத்திற்கு மிகப்பரிச்சயமாய் ஆகியிருப்போம்! பின்னர், ஓர்நாள் நாம் முதன்-முதலில் கண்ட காட்சி நினைவுக்கு வரும்; அல்லது நீங்களே கூட முயற்சித்து நினைவுபடுத்தலாம்! அதன்பின் அப்படியே "முதலில் பார்த்த" அதே நினைவுகளுடன் பார்க்க முயலுங்கள்; முடியவே முடியாது?! குறைந்தபட்சம், பெரும்பான்மை யானவற்றை நம்மால் மீண்டும் அதே போல் பார்க்க இயலுவதில்லை! (ஓர் தத்துவம்: பின்னர், ஏன் மிக-நெருங்கிய உறவிடம் ஆரம்பத்தில் இருந்தது போலவே, இப்போதும் எதிர்பார்க்கிறோம்???)! ஓர் யதார்த்தம்: அதனால் தான், முதல்-பார்வை (FIRST IMPRESSION) சிறந்ததென நம்பப்படுகிறது!!!
2. நமக்கு மிக-நெருங்கிய ஒருவர் செய்யும் செயல் (குறிப்பாய், அதிக சந்தோசம் அல்லது அதிக துக்கம் கொடுக்கும் ஒன்று!) முன்பே அதுபோல் நடந்ததாய் தோன்றும்! பலநேரங்களில், அப்படி நடந்திருக்க(க்/வும்)கூடும்!! இதில் என்ன ஆச்சர்யம் என்று நினைக்கிறீர்களா? சிலசமயங்களில் அந்த நிகழ்வு அதே வரிசையில் நிகழ்வதாய் உணரக்கூடும்; இது தான் ஆச்சர்யம்! அதே வரிசையில் அந்த நிகழ்வுகள் நடந்தாய் என்-மனதுள் ஓர் காட்சி ஓடும்போது என்னால், உண்மையா/பொய்யா என்று "உண்மையில்" யூகிக்க முடிவதில்லை! இது போல் பலருக்கும், நேருமா? நேர்ந்திருக்கிறதா?? என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு கண்டிப்பாய் அறிவியல்-சார்ந்து ஏதேனும் விளக்கங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால், இந்த நினைவு "இந்த-அளவில்" இருக்கும்போது பிரச்சனை ஏதும் இல்லை; அது அளவைத்தாண்டி நடக்கும்போது தான் அது "உளவியல்" சம்பந்தமான பிரச்சனையை ஆகிறதோ? சரி! இப்போது உங்கள் முறை...
இவை இரண்டையும்; ஓர் முறை உங்களுக்குள் முயன்று பாருங்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக