ஞாயிறு, நவம்பர் 03, 2013

படிப்புக்கும், சாதனைக்கும் என்ன சம்பந்தம்???



     ஒவ்வொரு முறையும் என்மகளுடன் - என்னவள் "ஹோம்-வொர்க்" முடிக்க போராடிக்கொண்டு இருக்கும் போதும் - நான் கேட்பது "ஏன் அவளை இப்படி போட்டு படுத்துறாங்க, அவங்க ஸ்கூல்ல?!" என்பது தான். என்னவள் சொல்லும் பதில் "உங்க பொண்ணு மட்டும் கஷ்டப்படல; எல்லாப் பசங்களும்  தான் படிக்கறாங்க!; போட்டி அப்படி இருக்கிறது" என்பது தான். மறுக்கவில்லை! இன்று பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், என்னுடைய "மனதங்கம்" வேறுவிதமானது; இருப்பினும், என்னவள் படும்-பாட்டை அறிந்து அவளுடன் - இப்போதெல்லாம் எதுவும் விவாதிப்பது இல்லை. மேற்கூறிய கேள்வியைக்கூட கேட்பதில்லை! ஆயினும், என்னுள் அந்த கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. "படிப்புக்கும், சாதனைக்கும்/வேலைக்கும் என்ன சம்பந்தம்?" என்பது தான் அந்த கேள்வி! தேவையற்ற/முறையற்ற இந்த போட்டியால் - எந்த நன்மையும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை; குழந்தைகள் "குழந்தைகளாய்" இருக்க-வேண்டியதை தொலைத்துவிட்டதை தவிர!!!

     இந்த கல்வி-முறையை நான் முன்பே பலமுறை பலவிதங்களில் விவாதித்து இருக்கிறேன்; என்னுடைய பார்வையாய் பதிந்தும் இருக்கிறேன். இருப்பினும் - என்மகள் போன்ற குழந்தைகள் படும் இன்னலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! ஓர் குழந்தைகளின் தரம் என்ன? அவர்களின் விருப்பு என்ன?? அவர்களின் ஆற்றல் என்ன??? என்பது போன்ற எந்த சிந்தனையும் இல்லாத "கல்வியல் முறை". எந்த படிப்பு எவருக்கு உகந்தது - என்பது பற்றிய அக்கறை இல்லாத கல்விமுறை. மேலும், இம்மாதிரி ஒருவர் படிக்கும் படிப்புக்கும் அவர் திறமைக்கும்/சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின் ஏன், இந்த வயதிலேயே அவர்களுக்கு இப்படிப்பட்ட கல்விச்சுமையை கொடுக்க வேண்டும்?! பள்ளி-முடித்து, எந்த பிரக்ஞையும் இல்லாமல் - பெருங்கூட்டமாய் சென்று ஒரு குறிப்பிட்ட உயர்-கல்வியை படிப்பது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதற்கு 3 வயதில் ஒரு குழந்தை இந்த பாடுபட வேண்டும்? இவர்களிடம் எனக்கு இருப்பது இந்த ஒரேயொரு கேள்விதான்...

"Bill Gates" அவர்கள் கல்லூரி "டிராப்-அவுட்" என்பது எத்தனை பேருக்கு தெரியும்???     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக