(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****
பெண்களுக்கு யார்எதிரி? யுகங்கள் நூறாய்
ஆணாதிக்கம் எனும்திமிரால் மடமை கொண்ட
ஆணாதிக்கம் எனும்திமிரால் மடமை கொண்ட
ஆண்களுமோ; மனம்திருத்தி மகளிர் தம்பேர்
பெருமையையும் முழுவதுமாய் உணர்ந்தார்! இன்றோ;
தூண்களுக்கு ஒப்பாய்பெண் அவள்வேண் டியாய்,
இல்லறங்கள் பெற்றனவாம் அவள்நல் உள்ளம்!
பெண்களேதான் அவர்கட்கு தடைகற் கள்ஆம்;
என்பதுவே என்னுள்ளம் உணர்த்தும் உண்மை!!
பெருமையையும் முழுவதுமாய் உணர்ந்தார்! இன்றோ;
தூண்களுக்கு ஒப்பாய்பெண் அவள்வேண் டியாய்,
இல்லறங்கள் பெற்றனவாம் அவள்நல் உள்ளம்!
பெண்களேதான் அவர்கட்கு தடைகற் கள்ஆம்;
என்பதுவே என்னுள்ளம் உணர்த்தும் உண்மை!!
கணவனவன் இழந்தபெண்ணை வையகம் எங்கும்
"கோவலன்"கள் எவனும்;கீழ் தரமாய் பாரான்!
கண்ணகிகள் அவர்தம்மே அதுபோல் செய்வர்!!
மலர்,பொட்டு இரண்டுமட் டுமா?பெண் கள்தம்
கண்கள்?அல் லவே!என்றேல்; அவர்கள் ஆர்க்கும்
வருமேஇந் நிலை;என்றே உணர்ந்தார் இல்லை??
குணங்கள்அல் லவா?பெண்கள் அவர்கள் கண்கள்
என்றாங்கே உணரவில்லை??? சரியா இஃதும்?

மருமகன்தம் மகளின்பால் காட்டும் பாசம்
எனும்உரத்தின் வீரியம்பல் கிடவேண் டும்பெண்;
மருமகள்தம் மகனிடம்ஓர் உரமும் வேண்டல்
தவறென்றாய்; உரைப்பதுவும் முறையோ? இல்லப்
பெரும்புகழ்சேர் திருவிளக்காம் "புகுந்தாள்" இன்பம்
காப்பதையேன் மறந்துபோனர்? முகங்கள் பல்கொள்
பெருமகள்;தம் மகளவளின் வடிவம் என்றாய்
உணரமறுப் பதேன்?உணர்வீர் பெண்கள் யாரும்!!

அண்ணனிடம் உரிமைகோரும் தங்கை ஆங்கே;
புதுஉறவாம் அண்ணியவள் அவனுள் பங்கும்
கொண்டவள்என் பதைஉணர்தல் மறந்தர்! என்தூண்,
என்கனவன்; என்றென்னும் தமக்கை யாரும்
தூண்வேண்டல் பெண்கள்தம் இயல்பாம் என்றே;
ஏன்உணர்தல் மறந்தர்?யார் உரைப்பர் பெண்கள்
அண்டமே;பெண் குலத்திற்கோர் தடைகள் என்றே?!
புரிந்திடுமோ பெண்ணியத்தை பரிவோர் யார்க்கும்??
பொன்நகைக்காய் புன்னகையை அழித்தல் போலாம்
பெண்ணினங்கள் அழிவதையும் உணர்ந்தார் இல்லை!
துன்பஅம்பும் தொடுக்கும்ஆண் இனங்கள் உண்டாம்;
தந்தையாய்! தமையனாய்!தம் பியாய்!வன் காமம்
தன்னுள்சூழ் மாமனாராய்! கொழுந்தன் என்றோர்
கொடியனாய்!எப் புத்தியற்ற கணவன் என்றாய்;
தன்னிலையில் இருந்திடாத பல,ஆண் கள்சேர்
உலகொன்று உண்டெனினும்; இருப்போர் சிற்றோர்!!!

"குறிஞ்சிபூ"வாய் அங்குமிங்கும் இருத்தல் உண்டாம்;
பூவையர்அண் டம்காப்போர்! "ரோஸ்"பூக் கள்போல்
செறிந்துபூத்தல் என்றாம்?பின் எவர்க்காம்?? "காளான்"
போலெங்கும் முளைத்திருக்கும் மகளிர் "சங்கம்"?
ஆறிடுமோ! பெண்களே,பெண் களுக்குள் ஆக்கும்
இரணங்கள் தரும்இப்பேர் வடுக்கள்? சொல்வீர்;
அறிவையும்;காத் திடும்பெண்கள் யாரும்! நீவிர்
இதைஉணரின் வேண்டிடுமோ? சங்கம் ஏதும்???
பெண்குலத்தை பெண்களேநல் வழியில் போற்றும்
வகைசெய்வீர்! வாழ்க்கைதானே இயல்பாய் மாறும்!
உண்மையில்பின் எவர்சொல்வர்? பெண்கள் யாரும்
நிகரில்லை ஆணுக்கென்று?? எதற்காய் பின்னர்
வேண்டும்முப் பதைஒட்டும் விழுக்கா டுக்காய்
போராட்டம்?! நிரந்தரமாய் வராதோ! நல்ல
பண்பாடும்? உணர்வரோ!நல் இதயம் கொண்ட
பெண்டிரும்?? உணர்தலேயாம் உயர்ந்த உள்ளம்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக