"காரில்" முன்சீட்டில் உட்காருவது குறித்து, அதற்கான போட்டி பற்றி உங்களுக்கு தெரியும். அதில்...
- பெரும்பாலும் பலரும் உட்காருவது - வேடிக்கை பார்ப்பதற்காய் இருக்கும்.
- உடல்பருத்த சிலர் உட்காருவது - செளகர்யம் கருதியாய் இருக்கும்.
- உடல்மெலிந்த சிலர் (இன்னொருவர் உட்கார்ந்தும் கூட இடம் மிகுதியாய் இருக்கும்!) உட்காருவது - தானும் உறங்காது, ஓட்டுனரையும் உறங்கவிடாது பார்த்துக்கொண்டு மற்ற வாகனங்களை கவனித்து பத்திரமாய் செலவதற்காய் இருக்கும்.
இப்போது... (ஆங்!... அதேதான்!!) சாதாரணமாய் "காரில்" முன்சீட்டில் உட்காருவதற்கே இப்படி பலதரப்பட்ட காரணங்களும், முதன்மைத்துவங்களும் இருக்கும்போது...
- ஒருவரின் பங்கும் - ஒவ்வொரு உறவும் சார்ந்தும் மாறுபடும்!/ மாறுபடவேண்டும்!! என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்?
- அவ்வாறே, ஒவ்வொரு உறவையும் பொறுத்து - சில விசயங்களின் முதன்மைத்துவங்களும் மாறுபடும்!/ மாறுபடவேண்டும்!! என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக