வியாழன், மே 19, 2016

குறள் எண்: 0291 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0291}

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

விழியப்பன் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால்; எந்த ஒரு சொல்லும், தீமைப் பயக்காத வகையில் பேசுவதேயாகும்.
(அது போல்...)
மனிதம் என்பது எதுவெனில்; எந்த ஒரு எண்ணமும், துரோகத்தை விதைக்காத வழியில் சிந்திப்பதேயாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக