புதன், ஜூன் 01, 2016

கடன்வாங்கிப் பார்!!!



கடன்வாங்கிப் பார்!

மரண-பயத்தில்...
உயிரின் ஜனனம் புரியும்!
மனவலி-பயத்தில்...
தவத்தின் மெளனம் புரியும்!
கெளரவ-பயத்தில்...
சுயத்தின் ஆரம்பம்  புரியும்!
கனவு-பயத்தில்...
துயிலின் வீரியம் புரியும்!


கடன்வாங்கிப் பார்!

இழப்பு-பயத்தில்...
வேலையின் முக்கியம் புரியும்!
தவணை-பயத்தில்...
செலவின் நோக்கம் புரியும்!
வெறுங்கை-பயத்தில்...
சேமிப்பின் சூத்திரம் புரியும்!
வெறுமை-பயத்தில்...
ஆடம்பரத்தின் பாதகம் புரியும்!


கடன்வாங்கிப் பார்!

குடும்ப-பயத்தில்...
தந்தையின் மகத்துவம் புரியும்!
சமாளிப்பு-பயத்தில்...
தாயின் சாமர்த்தியம் புரியும்!
தனிமை-பயத்தில்...
உறவின் உன்னதம் புரியும்!
பிறவி-பயத்தில்...
சமூகத்தின் சாராம்சம் புரியும்!


கடன்வாங்கிப் பார்!

"கடன்"-பயத்தில்
புரியாதவை எல்லாம் புரியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக